சைவர்களின் தலைவனாக வழிபடக்கூடிய கடவுள் வடிவமே சிவன். மும்மூர்த்திகளுள் ஒருவர். முதல்வன் என்றும், மூவரும் அவனே என்றும், மூவரும் அறியாதவர் என்னும் தத்துவத்தை சைவ சித்தாந்தம் கூறுகிறது. சிவன் உருவாய் (நடராசன்), அருவுருவாய் (சிவலிங்கம்), அல்லுருவாய் காட்சிபடுத்தப்படுகிறார்
சிவனின் ஐந்து முகங்கள்
சத்யோ ஜாதம்
வாமதேவம்
அகோரம்
தற்புருடம்
ஈசானம் - இம்முகத்தின் மூலம் ஆகம இரகசியப்பொருளினைக் கேட்டு அறிந்தனர் அறுபத்தாறு முனிவர்கள்.
சிவனின் தோற்றம்
மொகஞ்சதாரோவில் கண்டெடுக்கப்பெற்ற தியானத்திலுள்ள பசுபதி சின்னத்தின் மூலமே சிவவழிபாடு. அப்பகுதியிலேயே முதன்முதலில் சிவவழிபாடு நடைபெற்றிருக்கலாம் என்பது ஆராய்ச்சியாளர்களின் கூற்றாகும்.
சிவனது தனித்துவ அடையாளங்கள்
சிவ பெருமானின் தனித்துவ அடையாளங்களாக கீழ்வருவன கொள்ளப்படுகின்றன.இவ் வடிவங்களையும் இறைவனது குணங்களைனையும் பற்றித் தேவாரப் பதிகங்கள் சிறப்பித்துக் கூறுகின்றன.
நெற்றிக்கண் காணப்படல்.
கழுத்து நீலநிறமாக காணப்படல்.
சடைமுடியில் பிறைநிலாவைக் கொண்டிருத்தல்.
நீண்ட சுருண்ட சடாமுடி
தலையில் கங்கை நதி பாய்ந்து கொண்டிருத்தல்.
உடல் சாம்பல் நிறமாக இருத்தல்.
புலித் தோலினை ஆடையாக அணிந்திருத்தல்.
கழுத்தினைச் சுற்றி பாம்பு காணப்படல்.
கையினில் உடுக்கை,திரிசூலம் தாங்கியிருத்தல்.
நந்தியினை(காளை) வாகனமாகக் கொண்டிருத்தல்.
இடுகாட்டினை வாழ்விடமாக கொண்டிருப்பவர்
சக்தியைப் பாதியாக கொண்டிருத்தல்
சிவனது உருவத்திருமேனி
சிவனின் திருமேனிகள் கீழ்வருமாறு உள்ளன.
சந்திரசேகரர்
உமாமகேஸ்வரர்.
ரிஷபாரூடர்
நடராஜர்
கல்யாணசுந்தரர்
பிட்சாடனர்
காமதகனார்
காலசம்ஹாரமூர்த்தி
திரிபுராந்தகர்
சலந்தரர்.
கஜாசுர சம்ஹாரர்
தக்க்ஷ யக்ஞவதர்.
ஹரியர்த்தர்.
அர்த்தநாரீசுவரர்.
கிராதகர்.
கங்காளர்.
சண்டேச அநுக்கிரஹர்
நீலகணடர்.
சக்ரப்ரதர்.
விக்னப்ரசாதர்.
சோமாஸ்கந்தர்.
ஏகபாதர்.
சுகாசனர்.
தட்சிணாமூர்த்தி.
லிங்கோத்பவர்.
ரிஷபாந்திகர்.
அகோரவீரபத்ரர்.
அகோராஸ்ரமூர்த்தி.
சக்ரதானஸ்வரூபர்.
சிவலிங்கம்.
முகலிங்கேஸ்வரர்.
சர்வஸம்ஹாரர்
ஏகபாத திரிமூர்த்தி.
திரிபாதமூர்த்தி
ஜ்வரஹரேஸ்வரர்.
ஊர்த்துவதாண்டவர்
வராக் ஸம்காரி .
கூர்மஸம்ஹாரி.
மச்சஸம்ஹாரி.
சரபேசர்
பைரவர்.
சார்த்துலஹரி.
லகுளீசர்.
சதாசிவர்.
உமேசர்.
புஜங்கலளிதர்
புஜங்கத்ராசர்.
கங்காதரர்.
கங்காவிசர்ஜனர்
யக்ஞேஸ்வரர்
உக்ரர்
ஆபதோத்தாரணார்
ஷேத்ரபாலர்
கஜாந்திகர்
அச்வாரூடர்
கௌரீவரப்ரதர்
கௌரீலீலா சமன்விதர்
கருடாந்திகர்
பிரம்ம சிரச்சேதர்
ரக்தபிக்க்ஷா ப்ரதானர்
சிஷ்யபாலர்
ஹரிவிரிஞ்சதாரணர்
சந்தியா நிருத்தர்
புகழ் பெற்ற சிவத்தலங்கள்
சைவசமயத்தவர்களது முழுமுதற் கடவுள் சிவனாகும். சிவனை மூலமூர்த்தியாகக் கொண்டு இந்தியா,இலங்கை,நேபாளம் உட்பட பல நாடுகளில் கோயில்கள் பல உண்டு.
சோதி இலிங்கங்கள் உள்ள சிவத்தலங்கள்
இந்தியாவில் அமைந்துள்ள பன்னிரெண்டு சோதி இலிங்கங்களும் அது அமைந்துள்ள இடங்களும் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன. திருவண்ணாமலை (தமிழ்நாடு) அருணாச்சலமே மூல சிவதலம்.
சோமநாதேசுவரர்- சோமநாதம் (குஜராத்)
மல்லிகார்ச்சுனர்-ஸ்ரீசைலம் (ஆந்திரா)
மகா காளேசுவரர்-உஜ்ஜயினி (மத்தியப்பிரதேசம்)
ஓம்காரம் மாமலேசுவரர்- ஓம்காரம் (மத்தியப்பிரதேசம்)
வைத்திய நாதேசுவர்-பரளி (மகாராட்டிரம்)
பீமாநா தேசுவர்- பீமசங்கரம் (மகாராட்டிரம்)
இராம நாதேசுவரர்-இராமேஸ்வரம் (தமிழ்நாடு)
நாக நாதேசுவரர்-நாகநாதம் (மகாராட்டிரம்)
விசுவ நாதேசுவரர்-காசி (உத்திரப்பிரதேசம்)
திரியம்ப கேசுவரர்- திரியம்பகம் (மகாராட்டிரம்)
கேதாரேசுவரர்-இமயம் (உத்திரப்பிரதேசம்)
குருணேசுவரர்-குண்ருனேசம் (மகாராட்டிரம்)
பஞ்சபூத சிவத்தலங்கள்
உலகம் பஞ்ச பூதங்களால் ஆனது. மண், நீர், தீ, வளி,வான், என்பன ஐம்பூதங்கள். இவை பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாயம் என்றும் கூறப்படுகின்றன. இவற்றைப் பற்றித் தெளிவாகவும் நுட்பமாகவும் உணர்ந்த நமது பெரியோர்கள் ஒவ்வொரு பூதத்தின் பெயராலும் ஒரு தலத்தை ஏற்படுத்தி உள்ளனர். அவை பஞ்சபூதத் தலங்கள் எனப்படும்.(அடைப்புக் குறிக்குள் வடமொழிப்பெயர்)
மண் (பிருத்திவித்தலம்) - காஞ்சிபுரம், திருவாரூர், (திரு + ஆர் + ஊர் ; ஆர் = மண்)
நீர் (அப்புத்தலம்) -திருவானைக்கா திருச்சிராப்பள்ளி
தீ (தேயுத்தலம்) - திருவண்ணாமலை
வளி (வாயுத்தலம்)- திருக்காளத்தி
வான் (ஆகாயத்தலம்)- சிதம்பரம்
ஐந்து தாண்டவங்களுக்கான சிவத்தலங்கள்
சிவ பெருமானின் ஐம்பெரும் தாண்டவங்கள் என்று அடையாளம் காட்டப்படும் ஆலயங்களும் அவை இருக்கும் இடங்களும் இவைதான்.
தில்லை(சிதம்பரம்)-ஆனந்த தாண்டவம்.
திருவாரூர்-அசபா தாண்டவம்.
மதுரை-ஞானசுந்தர தாண்டவம்.
அவிநாசி-ஊர்த்தவ தாண்டவம்.
திருமுருகன் பூண்டி-பிரம தாண்டவம்.
ஐந்து மன்றங்களுக்கான சிவத்தலங்கள்
இறைவன் நடராசத் திருமேனி கொண்டு அருட்கூத்து இயற்றுகின்ற தலங்களில் முக்கியமானவை என்று ஐந்தினைக் கூறலாம்.அந்த ஐம்பெரும் மன்றங்கள் அமைந்துள்ள சிவாலயங்கள் (அடைப்புக் குறிக்குள் சபைகள்)
தில்லை(சிதம்பரம்)-பொன் மன்றம் (கனக சபை).
திருவாலங்காடு -மணி மன்றம் (இரத்தின சபை).
மதுரை-வெள்ளி மன்றம் (இராஜ சபை).
திருநெல்வேலி-செப்பு மன்றம் (தாமிர சபை).
திருக்குற்றாலம்-ஓவிய மன்றம் (சித்திர சபை).
சத்த விடங்க சிவத்தலங்கள்
வடமொழியில் "டங்கம்" என்பது உளியைக் குறிக்கும். விடங்கம் என்றால் உளியால் செதுக்கப் பெறாத என்று பொருள். ஏழு திருத்தலங்களில் சிவபெருமான் விடங்கராக வீற்றிருக்கிறார்.அந்த ஏழு திருத்தலங்கள் அமைந்துள்ள இடங்கள்.
திருவாரூர்-வீதிவிடங்கர் (அசபா நடனம்).
திருநள்ளாறு- நகரவிடங்கர் (உன்மத்த நடனம்).
திருநாகைக் காரோணம் என்கிற நாகபட்டிணம்- சுந்தரவிடங்கர் (வீசி நடனம்).
திருக்காறாயில் என்கிற திருக்காரைவாசல்-ஆதிவிடங்கர் (குக்குட நடனம்).
திருக்கோளிலி என்கிற திருக்குவளை-அவனிவிடங்கர் (பிருங்க நடனம்).
திருவாய்மூர்- நீல விடங்கர் (கமல நடனம்).
திருமறைக்காடு என்கிற வேதாரண்யம்- புவனி விடங்கர் (கம்சபாத நடனம்)
முக்தி தரவல்ல சிவத்தலங்கள்
முக்தி தரவல்ல தலங்கள் என்று நான்கு சிவாலய தலங்கள் உள்ளது. அந்த தலங்கள் அமைந்துள்ள இடங்கள்
திருவாரூர்-பிறக்க முக்தி தருவது
சிதம்பரம்-தரிசிக்க முக்தி தருவது
திருவண்ணாமலை-நினைக்க முக்தி தருவது
காசி-இறக்க முக்தி தருவது
தமிழகத்தின் நவ கைலாயங்கள்(சிவதலங்கள்)
தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்திலும் தூத்துக்குடி மாவட்டத்திலும் தாமிரபரணி ஆற்றங்கரையில் இந்த நவ கைலாயங்கள் என அழைக்கப்படும் சிவாலயங்கள் அமைந்திருக்கின்றன. நவ கைலாயங்கள் அமைந்திருக்கும் ஊர்கள்:
பாபநாசம்
சேரன்மகாதேவி
கோடகநல்லூர்
குன்னத்தூர் (திருநெல்வேலி)
முறப்பநாடு
திருவைகுண்டம்
தென்திருப்பேரை
ராசபதி
சேர்ந்தபூமங்கலம்
தேவாரப் பாடல் பெற்ற சிவதலங்கள்
இறைவன் பெயர் சிவதலம் இருப்பிடம்
சங்கமேஸ்வரர் திருநணா (பவானி)
அர்த்தநாரீஸ்வரர் திருச்செங்கோடு
பசுபதிநாதர் கருவூர் (கரூர்)
திருமுருகநாதசுவாமி திருமுருகப்பூண்டி
கொடுமுடிநாதர் திருப்பாண்டிக்கொடுமுடி (கொடுமுடி)
அவிநாசியப்பர் திருப்புக்கொளியூர் (அவிநாசி)
விகிர்தநாதேஸ்வரர் வெஞ்சமாக்கூடல்
தீர்த்தபுரீஸ்வரர் திருநெல்வாயில் அரத்துறை
சுடர்கொழுந்தீசர் தூங்கானை மாடம் (பெண்ணாகடம்)
நர்த்தன வல்லபேஸ்வரர் திருக்கூடலையாற்றுர்
திருநீலகண்டர் திருஎருக்கத்தம்புலியூர்
சிவக்கொழுந்தீசர் திருத்திணை நகர்
சோபுரநாதர் திருச்சோபுரம்
அதிகை வீரட்டநாதர் திருவதிகை
திருநாவலேஸ்வரர் திருநாவலூர்
பழமலைநாதர் திருமுதுகுன்றம்
வெண்ணையப்பர் திருநெல்வெண்ணை
வீரட்டேஸ்வரர் திருக்கோவிலூர்
அறையணிநாதர் திருஅறையணிநல்லூர்
இடையாற்று நாதர் திருவிடையாறு
தடுத்து ஆட்கொண்டநாதர் திருவெண்ணைநல்லுர்
சிஷ்டகுருநாதர் திருத்துறையூர்
வடுகூர்நாதர் வடுகூர்
வாமனபுரீஸ்வரர் திருமாணிகுழி
பாடலீஸ்வரர் திருப்பாதிரிப்புலியூர்
சிவலோக நாதர் திருமுண்டீச்சரம்
பனங்காட்டீசர் புறவர் பனங்காட்டூர்
அழகிய நாதர் திரு ஆமாத்தூர்
அருணாசலேஸ்வரர் திருவண்ணாமலை
சொக்கநாதர் திருஆலவாய் (மதுரை)
ஆப்புடையார் திருஆப்பனுர்
பரங்கிரிநாதர் திருப்பரங்குன்றம்
ஏடகநாதேஸ்வரர் திருவேடகம்
கொடுங்குன்றீசர் திருகொடுங்குன்றம்
திருத்தளிநாதர் திருப்புத்துர்
பழம்பதிநாதர் திருப்புனவாயில்
இராமநாதசுவாமி இராமேஸ்வரம் (ஜோதிர்லிங்க ஸ்தலம்)
ஆடானைநாதர் திருவாடானை
காளையப்பர் திருக்கானப்பேர் (காளையார்கோவில்)
பூவணநாதர் திருப்பூவணம்
திருமேனிநாதர் திருச்சுழியல்
குறும்பலாநாதர் குற்றாலம்
நெல்லையப்பர் திருநெல்வேலி
ஏகாம்பரேஸ்வரர் கச்சி ஏகம்பம் (காஞ்சீபுரம்)
திருமேற்றளிநாதர் திருக்கச்சி மேற்றளி
ஓணகாந்தேஸ்வரர் திருஓணகாந்தான்தளி
அநேகதங்கா பதேஸ்வரர் கச்சி அநேகதங்காபதம்
காரை திருநாதேஸ்வரர் கச்சிநெறிக் காரைக்காடு
வாலீஸ்வரர் திருகுரங்கணில் முட்டம்
அடைக்கலம்காத்த நாதர் திருமாகறல்
வேதபுரீஸ்வரர் திருவோத்தூர்
பனங்காட்டீஸ்வரர் திருப்பனங்காட்டூர்
வில்வநாதேஸ்வரர் திருவல்லம்
மணிகண்டேஸ்வரர் திருமாற்பேறு
ஜலநாதேஸ்வரர் திருஊறல் (தக்கோலம்)
தெய்வநாதேஸ்வரர் இலம்பையங்கோட்டூர்
திரிபுரநாதர் திருவிற்கோலம்
வடாரண்யேஸ்வரர் திருவாலங்காடு
வாசீஸ்வரர் திருப்பாசூர்
ஊண்றீஸ்வரர் திருவெண்பாக்கம்
சிவானந்தேஸ்வரர் திருக்கள்ளில்
ஆதிபுரீசர்# படம்பக்கநாதர் திருவொற்றியூர் (சென்னை)
வலிதாய நாதர் திருவலிதாயம்
மாசிலாமனி ஈஸ்வரர் திருமுல்லைவாயில்
வேதபுரீசர் திருவேற்காடு
கபாலீஸ்வரர் திருமயிலை (சென்னை)
மருந்தீஸ்வரர் திருவான்மியூர் (சென்னை)
விருந்திட்ட ஈஸ்வரர் திருக்கச்சூர் ஆலக்கோவில்
ஞானபுரீஸ்வரர் திருஇடைச்சுரம்
வேதகிரீஸ்வரர் திருக்கழுகுன்றம்
ஆட்சீஸ்வரர் அச்சிறுபாக்கம்
சந்திரசேகர் திருவக்கரை
அரசிலிநாதர் திருஅரசிலி
மாகாளேஸ்வரர் இரும்பை மாகாளம்
நடராஜர் சிதம்பரம்
பாசுபதேஸ்வரர் திருவேட்களம்
உச்சிநாதேசுவரர் திருநெல்வாயல்
பால்வண்ண நாதர் திருக்கழிப்பாலை
சிவலோக தியாகேசர் திருநல்லுர் பெருமணம்
திருமேனிஅழகர் திருமயேந்திரப்பள்ளி
முல்லைவன நாதர் தென்திருமுல்லைவாசல்
சுந்தரேஸ்வரர் திருக்கலிக்காமூர்
சாயாவனேஸ்வரர் திருசாய்க்காடு (சாயாவனம்)
பல்லவனேஸ்வரர் திருபல்லவனீச்சுரம்
சுவேதஆரன்யேஸ்வரர் திருவெண்காடு
ஆரண்ய சுந்தரேஸ்வரர் கீழை திருக்காட்டுப்பள்ளி
வெள்ளடையீசுவரர் திருக்குருகாவூர் வெள்ளடை
பிரம்மபுரீசர் சீர்காழி
சத்தபுரீசுவரர் திருகோலக்கா
வைத்தியநாதர் திருபுள்ளிருக்குவேளூர் (வைத்தீஸ்வரன் கோவில்)
கண்ணாயிரநாதர் திருக்கண்ணார்கோவில் ( குறுமானக்குடி )
கடைமுடிநாதர் திருக்கடைமுடி
மஹாலக்ஷ்மி நாதர் திருநின்றியூர்
சிவலோகநாதர் திருபுன்கூர்
அருட்சோம நாதேஸ்வரர் நீடூர்
ஆபத்சகாயேஸ்வரர் திருஅன்னியூர்
கல்யாணசுந்தரர் திருவேள்விக்குடி
ஐராவதேஸ்வரர் திருஎதிர்கொள்பாடி
அருள்வள்ள நாதர் திருமணஞ்சேரி
வீரட்டேஸ்வரர் திருக்குருக்கை
குற்றம் பொருத்த நாதர் திருக்கருப்பறியலூர்
கோந்தல நாதர் திருக்குரக்குக்கா
மாணிக்கவண்ணர் திருவாளொளிப்புத்தூர்
நீலகண்டேசர் திருமண்ணிப்படிக்கரை
துயரந்தீர்த்தநாதர் திருஓமாம்புலியூர்
பதஞ்சலி நாதர் திருக்கானாட்டுமுல்லூர்
சௌந்தரேசுவரர் திருநாரையூர்
அமிர்தகடேசர் திருக்கடம்பூர்
பசுபதி நாதர் திருபந்தனைநல்லூர்
அக்னீஸ்வரர் திருகஞ்சனூர்
திருக்கோடீஸ்வரர் திருகோடிக்கா
பிராண நாதேஸ்வரர் திருமங்கலக்குடி
செஞ்சடையப்பர் திருப்பனந்தாள்
பாலுகந்த ஈஸ்வரர் திருஆப்பாடி
சத்யகிரீஸ்வரர் திருசேய்ஞலூர்
கற்கடேஸ்வரர் திருந்துதேவன்குடி ( நண்டாங்கோவில் )
சிவயோகிநாத சுவாமி திருவியலூர்
கோடீஸ்வரர் திருக்கொட்டையூர்
எழுத்தறிநாதர் திருஇன்னாம்பர்
சாட்சி நாதேஸ்வரர் திருப்புறம்பியம்
விஜயநாதர் திருவிசயமங்கை
வில்வவனநாதர் திருவைகாவூர்
தயாநிதீஸ்வரர் வடகுரங்காடுதுறை
ஆபத்சகாயநாதர் திருப்பழனம்
ஐயாரப்பர் திருவையாறு
நெய்யாடியப்பர் திருநெய்த்தானம்
வியாக்ர புரீசர் திருப்பெரும்புலியூர்
வஜ்ரதம்ப நாதர் திருமழபாடி
வடமூலநாதர் திருப்பழுவூர்
செம்மேனி நாதர் திருக்கானூர்
சத்யவாகீஸ்வரர் திருஅன்பில் ஆலாந்துறை
ஆம்பிரவன நாதர் திருமாந்துறை
திருமூலநாதர் திருபாற்றுறை
ஜம்புகேஸ்வரர் திருவானைக்கா
ஞீலிவனேஸ்வரர் திருபைஞ்ஜிலி
மாற்றுறை வரதீஸ்வரர் திருப்பாச்சிலாச்சிராமம் (திருவாசி)
மரகதேஸ்வரர் திருஈங்கோய்மலை
ரத்னகிரிநாதர் திருவாட்போக்கி
கடம்பவன நாதேஸ்வரர் திருகடம்பந்துறை
பராய்த்துறை நாதர் திருப்பராய்த்துறை
உஜ்ஜீவ நாதர் திருகற்குடி
பஞ்சவர்னேஸ்வரர் திருமூக்கீச்சரம் (உறையூர்# திருச்சி)
தாயுமானவர் திருச்சிராப்பள்ளி
எறும்பீசர் திருஎறும்பியூர் (திருவெறும்பூர்)
நித்திய சுந்தரர் திருநெடுங்களம்
தீயாடியப்பர் மேலை திருக்காட்டுப்பள்ளி
ஆத்மநாதேஸ்வரர் திருவாலம்பொழில்
புஷ்பவன நாதர் திருபூந்துருத்தி
பிரம்மசிரகண்டீசர் திருக்கண்டியூர்
தொலையாச்செல்வர் திருசோற்றுத்துறை
வேதபுரீசர் திருவேதிகுடி
வசிஷ்டேஸ்வரர் திருதென்குடித்திட்டை
ஆலந்துறை நாதர் திருபுள்ளமங்கை
சக்ரவாகேஸ்வரர் திருசக்கரப்பள்ளி (அய்யம்பேட்டை)
முல்லைவன நாதர் திருக்கருகாவூர்
பாலைவன நாதர் திருப்பாலைத்துறை
கல்யாண சுந்தரேஸ்வரர் திருநல்லூர்
பசுபதீஸ்வரர் ஆவூர் பசுபதீச்சரம்
சிவகொழுந்தீசர் திருசத்திமுற்றம்
தேனுபுரீஸ்வரர் திருபட்டீச்சரம்
சோமேஸ்வரர் பழையாறை வடதளி
கற்பகநாதர் திருவலஞ்சுழி
கும்பேஸ்வரர் திருக்குடமூக்கு (கும்பகோனம்)
நாகேஸ்வரசுவாமி திருக்குடந்தை கீழ்கோட்டம்
காசி விஸ்வநாதர் திருக்குடந்தைக் காரோணம்
சண்பக ஆரண்யேஸ்வரர் திருநாகேஸ்வரம்
மஹாலிங்கேஸ்வரர் திருவிடைமருதூர்
ஆபத்சகாயநாதர் தென்குரங்காடுதுறை
நீலகண்டேஸ்வரர் திருநீலக்குடி
வைகன் நாதர் திருவைகல் மாடக்கோவில்
உமாமஹேஸ்வரர் திருநல்லம்
கோகிலேஸ்வரர் திருக்கோழம்பம்
மாசிலாமனி ஈஸ்வரர் திருவாவடுதுறை
உக்தவேதீஸ்வரர் திருத்துருத்தி (குத்தாலம்)
வேதபுரீஸ்வரர் திருவழுந்தூர்
மயூரநாதர் மயிலாடுதுறை
துறைகாட்டும் வள்ளலார் திருவிளநகர்
வீரட்டேஸ்வரர் திருப்பறியலூர் (பரசலூர்)
சுவர்ணபுரீசர் திருசெம்பொன்பள்ளி
நற்றுணையப்பர் திருநனிபள்ளி (புஞ்ஜை)
வலம்புரநாதர் திருவலம்புரம் (மேலப்பெரும்பள்ளம்)
சங்கருனாதேஸ்வரர் திருதலைச்சங்காடு
தான்தோன்றியப்பர் திருஆக்கூர்
அமிர்தகடேஸ்வரர் திருக்கடவூர்
பிரம்மபுரீஸ்வரர் திருக்கடவூர் மயானம்
திருமேனிஅழகர் திருவேட்டக்குடி
பார்வதீஸ்வரர் திருதெளிச்சேரி (கோயில்பத்து)
யாழ்மூரிநாதர் திருதர்மபுரம்
தர்பாரண்யேஸ்வரர் திருநள்ளாறு
ஐராவதேஸ்வரர் திருக்கோட்டாறு
பிரம்மபுரீசர் அம்பர் பெருந்திருக்கோவில்
மாகாளநாதர் அம்பர் மாகாளம்
முயற்சிநாதேஸ்வரர் திருமீயச்சூர்
சகலபுவனேஸ்வரர் திருமீயச்சூர் இளங்கோவில்
மதிமுத்தீஸ்வரர் திருதிலதைப்பதி
பாம்பு புரேஸ்வரர் திருப்பாம்புரம்
மங்களநாதர் சிறுகுடி
நேத்ரார்பனேஸ்வரர் திருவீழிமிழிலை
அக்னீஸ்வரர் திருவன்னியூர்
சற்குனநாதேஸ்வரர் திருக்கருவிலிக்கொட்டிட்டை
சிவானந்தேஸ்வரர் திருபேணுபெருந்துறை
சித்தி நாதேஸ்வரர் திருநறையூர்
படிக்காசு அளித்த நாதர் அரிசிற்கரைப்புத்தூர்
சிவபுரநாதர் சிவபுரம்
அமிர்தகலேஸ்வரர் திருகலயநல்லூர்
சற்குனலிங்கேஸ்வரர் திருக்கருக்குடி
வாஞ்சிநாதர் திருவாஞ்சியம்
மதுவனேஸ்வரர் நன்னிலம்
பசுபதீஸ்வரர் திருகொண்டீச்சரம்
சௌந்தர்யநாதர் திருப்பனையூர்
வீரட்டானேஸ்வரர் திருவிற்குடி
அக்னீஸ்வரர் திருப்புகலூர்
வர்த்தமானேஸ்வரர் திருப்புகலூர் வர்த்தமானீச்சுரம்
இராமணதேஸ்வரர் இராமனதீச்சுரம்
திருபயற்றுநாதர் திருபயற்றூர்
உத்தராபதீஸ்வரர் திருசெங்கட்டாங்குடி
இரத்தினகிரீஸ்வரர் திருமருகல்
அயவந்தீஸ்வரர் திருச்சாத்தமங்கை
காயாரோகனேஸ்வரர் நாகைக் காரோணம் (நாகப்பட்டினம்)
வெண்ணைலிங்கேஸ்வரர் சிக்கல்
கேடிலியப்பர் திருக்கீழ்வேளூர்
தேவபுரீஸ்வரர் தேவூர்
முக்கோண நாதேஸ்வரர் பள்ளியின் முக்கூடல்
வன்மீகி நாதர் திருவாரூர்
அறனெறியப்பர் திருவாரூர் அரநெறி
தூவாய் நாயனார் ஆரூர் பறவையுன்மண்டளி
பதஞ்சலி மனோஹரர் திருவிளமர்
கரவீரநாதர் திருக்கரவீரம்
பிரியாதநாதர் திருப்பெருவேளுர்
ஆடவல்லீஸ்வரர் திருதலையாலங்காடு
கோனேஸ்வரர் திருக்குடவாயில்
செந்நெறியப்பர் திருச்சேறை
ஞானபரமேஸ்வரர் திருநாலூர் மயானம்
சொர்ணபுரீசுவரர் திருக்கடுவாய்க்கரைப்புத்தூர்
ஆபத்சகாயேஸ்வரர் திருஇரும்பூளை (ஆலங்குடி)
பாதாளேஸ்வரர் திருஅரதைப் பெரும்பாழி (ஹரிதுவார மங்கலம்)
சாட்சி நாநர் திருஅவளிவநல்லூர்
பரிதியப்பர் திருப்பரிதிநியமம்
வெண்ணிக்கரும்பர் திருவெண்ணியூர்
புஷ்பவனநாதர் திருப்பூவனூர்
சர்ப்ப புரீஸ்வரர் திருப்பாதாளீச்சரம்
களர்முலைநாதேஸ்வரர் திருக்களர்
பொன்வைத்த நாதேஸ்வரர் திருசிற்றேமம்
மந்திர புரீஸ்வரர் திருவுசத்தானம்
சற்குனநாதேஸ்வரர் திருஇடும்பாவனம்
கற்பகநாதர் திருக்கடிக்குளம்
நீணெறிநாதர் திருத்தண்டலை நீணெறி
கொழுந்தீசர் திருக்கோட்டூர்
வெண்டுறைநாதர் திருவெண்டுறை
வில்வவனேஸ்வரர் திருக்கொள்ளம்புதூர்
ஜகதீஸ்வரர் திருப்பேரெயில்
அக்னீஸ்வரர் திருக்கொள்ளிக்காடு
வெள்ளிமலைநாதர் திருதெங்கூர்
நெல்லிவனநாதேஸ்வரர் திருநெல்லிக்கா
மாணிக்கவண்ணர் திருநாட்டியாத்தான்குடி
கண்ணாயிரநாதர் திருக்காறாயில்
நடுதறியப்பர் திருகன்றாப்பூர்
மனத்துனைநாதர் திருவலிவலம்
கைசின நாதேஸ்வரர் திருகைச்சினம்
கோளிலிநாதர் திருக்கோளிலி
வாய்மூர்நாதர் திருவாய்மூர்
மறைக்காட்டு மணாளர் திருமறைக்காடு (வேதாரண்யம்)
அகஸ்தீஸ்வரர் அகத்தியான்பள்ளி
அமிர்தகடேஸ்வரர் கோடியக்கரை
அட்டவீரட்டானக் கோயில்
சிவபெருமானின் வீரம் குறித்த பெருமைகளைக் குறிப்பிடும் எட்டு கோயில்கள் அட்டவீரட்டானக் கோயில்கள் எனப்படுகின்றன. அவை
திருக்கண்டியூர் - பிரம்மன் சிரத்தைச் சிவன் கொய்தது
திருக்கோவலூர் - அந்தகாசுரனைச் சங்கரித்தது
திருவதிகை - திரிபுரம் எரித்தது
திருப்பறியலூர் - தக்கன் சிரம் கொய்தது
வழுவூர் - யானையை உரித்தது
திருவிற்குடி - சலந்தாசுரனைச் சங்கரித்தது
திருக்குறுக்கை - காமனை எரித்தது.
திருக்கடவூர் - எமனை உதைத்தது
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.