sai yoga centre

Friday, April 7, 2017

தீட்டு என்பது என்ன?



A) தீட்டு என்பது என்ன?

தீட்டு’ என்கிற சொல் புரிந்துகொள்ளப்படாமலேயே காலங்காலமாக பெரும்பாலானோரால் கையாளப்பட்டு வருகிறது. இது குறித்த உண்மையான அர்த்தமுள்ள பார்வை அனைவருக்கும் தேவை. இறைவழிபாட்டில் விலக்க வேண்டிய தீட்டுக்கள் குறித்து இந்தப் பதிவு தெளிவுபடுத்தும் என நம்பலாம்
தீட்டு என்பது என்ன?
இறைவன் இருக்கும் இடத்தில் இந்தத் தீட்டுகள் ஆகாது!

தீட்டு என்பது, தீண்டத் தகாததைத் தீண்டுவது. தீட்டுடன் இறைவனைக் கும்பிட்டால், இறைவன் ஏற்கமாட்டான் என்பார்கள். தீட்டுப் பட்டால் துடைத்து விடும், தீட்டுக் கூடாது என்பார்கள்.

ஆண், பெண் கலந்தாலும் தீட்டு, குழந்தைகள் பிறந்தாலும் தீட்டு, பெண்கள் மாதவிடாயும் தீட்டு, இறந்தாலும் தீட்டு! இப்படிப் பார்த்தால்,தீட்டில் உருவான நமது உடலே ஒரு தீட்டு தானே! அதனால் தான் இறந்த பிறகு உடலைப் பிணம் என்று பெயர் வைத்துப் பிணத்தைத் தொட்டால் தீட்டு என்பார்கள்.

தீட்டுடைய இந்த உடலை வைத்து, எப்படிக் கடவுளை வழிபட முடியும்? சிந்தித்துப் பாருங்கள். இதுவல்ல உண்மையான தீட்டு. இவை நாம் சுகாதாரமாய் இருப்பதற்கு. இறைவனை பெயரைச் சொல்லி ஏற்படுத்திய ஒழுக்கங்கள். அப்பொழுது தான் பயபக்தியோடு சுத்தமாக இருப்போம் என்பதற்காகத்தான் இவற்றைச் சொன்னார்கள். saispiritualcenter.org

தீட்டு என்பது வேறு, அவை காமம், குரோதம், லோபம், மதம், மாற்சரியம் என்னும் பஞ்சமா பாதங்கள்!

1. காமத் தீட்டு:

காமம் என்பது ஆசை. நாம் எந்தப்பொருள் மீதாகிலும் ஆசை வைத்தால், அந்தப் பொருளின் நினைவாகவே ஆகிவிடுகின்றோம். நம் உள்ளத்தில் எந்த நேரமும், அந்தப் பொருள் மீதே ஞாபகமாக இருப்போம். அதற்காகவே முயற்சிச் செய்வதும், அலைவதுமாக இருப்போம். அந்தப் பொருள் கிடைத்து விட்டால், மனத்தில் சந்தோசம் உண்டாகும். இல்லையென்றால் மனத்தில் சதா வேதனை ஏற்படும். இப்படிப்பட்ட நேரங்களில் இறைவனைப் பற்றிச் சிந்தனை செய்ய முடியாது. இதனால் தான், ஆசைக்கு அடிமை ஆகாதே, அதை தீண்டாதே என்றார்கள்.

2. குரோதத் தீட்டு:

குரோதம் என்பது கோபம். யாராக இருந்தாலும் கோபம் வந்துவிட்டால், முன்னே பின்னே பாராமல், தாய், தந்தையர், சகோதரர்கள், உறவினர்கள் என்றும் சிந்திக்காமல், கொடூரமாகப் பேசுவதும், கேவலமான நிலைக்கு ஆளாவதும் நேர்கின்றன. சிலர் கொலை செய்துவிட்டு ஆயுள்பூராகவும் துன்பம் அனுபவிப்பார்கள். சிலர் தூக்கில் இடப்படுவார்கள். கோபத்தைப்போல் கொடியது உலகத்தில் வேறு எதுவும் இல்லை. கோபத்தால் அழிந்தவர்கள் கோடான கோடிப்பேர்,

கோபம் எழும் பொழுது நம் உடலில் உள்ள எத்தனையோ ஜீவ அணுக்கள் செத்து மடிகின்றன. ஆயுளும் குறைந்து விடுகிறது. கோபத்தால் உணர்ச்சி வசப்பட்டவர்கள் எதையுமே செய்யத் துணிவார்கள். இவர்களால் இறைவனைப் பற்றிச் சிந்தனை செய்ய முடியாது. இதனால் தான் கோபத்திற்கு அடிமை ஆகாதே, அதைத் தீண்டாதே என்பர். குரோதம் என்னும் கோபமே இரண்டாவது தீட்டு.

3. லோபத் தீட்டு:

லோபம் என்பது சுயநலம், பிறரைப் பற்றிச் சிந்திக்காமலும், இரக்கம் என்பதே இல்லாமலும், சுயநலத்துடன் பொருள்களைச் சேர்த்துவைத்து அழகு பார்ப்பதும், கஞ்சத்தனமும், எல்லாவற்றையும் தானே அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணமும், தீய வழியில் பொருள்களைச் சம்பாதிக்கக் கூடிய நோக்கமும், வஞ்சனை செய்து, பிறர் பொருளை அபகரித்துத் தானே வாழ நினைக்கும் குணமும், எப்பொழுதும் தன் பொருள்களைப் பற்றுடன் பாதுகாப்பதும் எல்லாம் சுயநல வேகமே. இப்படிப் பட்ட நேரங்களில் இறைவனைப் பற்றிச் சிந்தனை செய்ய முடியாது. அதனால் தான் சுயநலத்திற்கு அடிமை ஆகாதே, அதைத் தீண்டாதே என்பார்கள் இது லோபம் என்னும் மூன்றாவது தீட்டு.

4. மதத் தீட்டு:

மதம் என்பது கர்வம் (ஆணவம்) ஒருவரையும் மதிக்காது மனதையோடு இருப்பது இது. எதையும் தானே சாதிக்க முடியும் என்ற கர்வமும் இது. தான் என்னும் அகந்தையால் திமிர் பிடித்து அலைவதும் இது. ஆணவ நெறியால் யாவரையும் துன்பப் படுத்தித் தான் மகிழ்ச்சி அடைவதும் இது. இப்படிப்பட்ட நேரங்களில் இறைவனைப் பற்றிச் சிந்தனை செய்ய முடியுமா? இதனால் தான் கர்வத்திற்கு அடிமை ஆகாதே என்பர். அதைத் தீண்டாதே என்பர். கர்வமாகிய மதமே நான்காவது தீட்டு.

5. மாற்சரியத் தீட்டு:

மாற்சரியம் என்பது பொறாமை. பிறர் வாழ்வதைக் கண்டு பொறுக்க முடியாமல் வேதனைப்படுவது இது. எந்த நேரமும் நாம் நல்லபடியில்லையே என்று தன்னையே நொந்து கொள்வதும் இது. எல்லாரும் சுகமாக இருக்கின்றார்களே, இவர்கள் எப்பொழுது கஷ்டப் படுவார்கள், எப்பொழுது செத்துப் போவார்கள் என்பதும் இது.

தான் மட்டும் சுகமாக இருக்கவேண்டும் சாகக் கூடாது என்பதே இவர்கள் எண்ணம். பிறரைப் பார்க்கும் பொழுது தீய எண்ணங்களுடன் பெருமூச்சு விடுவார்கள். தாழ்வு மனப்பான்மையோடு, யாரைப் பார்த்தாலும் சகிக்க முடியாமல் எரிச்சலோடு இருப்பார்கள். இப்படிப் பட்ட நேரங்களில் இறைவனைப் பற்றிச் சிந்தனை செய்ய முடியுமா? இதனால் தான் பொறாமைக்கு அடிமை ஆகாதே, அதைத் தீண்டாதே என்றனர். இதுதான் ஐந்தாவது தீட்டு.

இவை ஐந்தும் மாபெரும் தீட்டுகள். இந்தத் தீட்டுக்களையுடைவர்கள் இறைவனை வழிபட முடியாது. இறைவன் இருக்கும் இடத்தில் இந்தத் தீட்டுகள் ஆகாது.

B) ஶ்ரீராமஜெயம்.....

வலிமை_மிகுந்த_ராமநாமம்

🌼ஸ்ரீ ராமர் மந்திரங்கள்

ஞாயிறு -ஸ்ரீ ராம் ஜெய ராம் ரகு ராம்

திங்கள் -ஸ்ரீ ராம் ஜெய ராம் சிவ ராம்

செவ்வாய் -ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய ராம்

புதன் -ஹரி ராம ஹரி ராம ராம ராம ஹரி ஹரி

வியாழன் -ஜெய ராம சிவ ராம குரு ராம ஜெய ராம்

வெள்ளி -சீதா ராமா ஹனுமந்தா ரமா சீதா ஹனுமந்தா

சனி - ஸ்ரீ ராம் ஜெய ராம் சுந்தர ராம்

தினமும் - ஸ்ரீ ராம் ஜெய ராம் கோதண்ட ராம்

அந்தந்த நாளுக்குரித்தான திவ்யமான இம்
மந்திரங்களை தினமும் பாராயணம் செய்பவருக்கு

🌼ஸ்ரீராமரின் அருள் பரிபூரணமாக
கிட்டும் ,குழந்தைகள் ஜபித்தால்
அவர்களுக்கு பாதுகாப்பு கவசமாக இருக்கும் .

🌼ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம்
ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம்
ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம்

27 வகையான மனக் கஷ்டங்களும் அவற்றை போக்கும் எளிமையான பரிகார முறைகளும்



A) 27 வகையான மனக் கஷ்டங்களும் அவற்றை போக்கும் எளிமையான பரிகார முறைகளும்

மனிதனாக பிறந்த எல்லோருக்கும் ஏதாவது ஒரு விதத்தில் ஒரு மனச் சஞ்சலம் அல்லது மனதளவில் ஏதாவது ஒரு கஷ்டம் இருந்து கொண்டே இருக்கும். அந்த கஷ்டத்தை ஒரு சில வழிபாட்டு முறைகளின் மூலம் விரட்டி விடலாம், அந்த வகையில் கஷ்டத்தை விரட்டும் பரிகார முறைகளை எளிமையாக தந்துள்ளது நமது ஆன்மிக மலர்.காம் இணையதளம், நீங்களும் பயனடைந்து, மற்றவருக்கும் கூறி அவர்களையும் பயனடைய உதவுங்கள்.

1.வெள்ளிக்கிழமைகளில் நவகிரக சுக்கிரனுக்கு அகல் விளக்கில்கற்கண்டு போட்டு ,அதில் நெய் தீபம் ஏற்றி வழிபட,கணவன்- மனைவி கருத்து வேறுபாடுகள் நீங்கும்.

2.இரண்டு சர்ப்பங்கள் இணைந்தது போல் இருக்கும் நாகராஜா சிலைக்கு, வெள்ளிக்கிழமை காலை [10.30-12.00 ]இராகு காலத்தில், மஞ்சள் குங்குமம் வைத்து, செவ்வரளிப் பூ சாற்றி, அபிசேகம் செய்து, . நெய்தீபம் ஏற்றி ,தம்பதிகள் பெயருக்கு அர்ச்சனை செய்தால்தம்பதிகள்

3.ஒற்றுமையாக,அன்னியோன்யமாக வாழ்வார்கள். குடும்பத்தில் தாங்க முடியாத கஷ்டங்கள் வந்தால், மன அமைதி குறைந்தால் , அருகில் உள்ள ஆலயங்களில் தீபம் ஏற்றி வழிபடுவது ரிஷிகள் சொல்லிய பரிகாரம். saispiritualcenter.org

4.கொடிய கடன் தொல்லைகளுக்கு ஸ்ரீ யோக நரசிம்மரையும்,மற்ற கடன் தொல்லைகளுக்கு ஸ்ரீ லட்சுமி நரசிம்மரையும்வழிபடுவது நல்ல பரிகாரம் ஆகும்.

5.ஸ்ரீநரசிம்மரின் எந்த திருக்கோலத்தை தரிசித்தாலும் கடன் தொல்லைகள், பில்லி, சூனியம், ஏவல்,திருஷ்டி ,திருமண தடை விலகி நன்மை பெறலாம்.

6.ஆலய திரி சூலத்தில் குங்குமம் இட்டு, எலுமிச்சை பழம் குத்தி வழிபட, திருஷ்டி, செய்வினை தோஷம் நீங்கும்.

7.வெள்ளெருக்கு விநாயகரை வீட்டு அறைகளில் கைக்கு எட்டாத உயரத்தில் வைத்து இருந்தால்,ஏதும் பூதகண சேஷ்டைகள் இருந்தால் நின்று விடும்.

8.சக்கரத்தாழ்வார் சந்நிதியில் நெய்தீபம் ஏற்றி12 முறை, 48 நாட்கள் சுற்றி வழிபட தொழில், வழக்குசாதகமாதல், பில்லி, சூனியம்,ஏவல்நீங்கும்.21செவ்வாய்கிழமைகளில் நெய்தீபம் ஏற்றிவழிபட கொடுத்த கடன் வசூல் ஆகும்.

9.கொடுத்த கடன் வசூல் ஆக பைரவர் சந்நிதியில் தொடர்ந்து 8 செவ்வாய் கிழமைகளில் நெய்தீபம் ஏற்றி சகஸ்ர நாம அர்ச்சனை செய்ய வேண்டும்.

10.ஜாதகப்படிசனிபகவானின்பாதிப்புகுறைய,திங்கட்கிழமை களில் சிவபெருமானுக்கு,பால் அபிசேகம் செய்து, அர்ச்சனை செய்ய வேண்டும். சனிக் கிழமைகளில் சனி பகவான் சந்நிதியில்தேங்காய் உடைத்து, இரண்டு மூடிகளிலும்நல்லெண்ணெய் ஊற்றி, எள்ளு முடிச்சு தீபம் ஏற்றவும்.சிவன் கோவிலில் கால பைரவரையும்,விஷ்ணு கோவிலில் சக்கரத்தாழ்வாரை யும்வழிபட செய்வினை தோஷம் நெருங்காது. saispiritualcenter.org

11.‎சிவன்‬ கோவில் வன்னி மரம், வில்வ மரத்தை 21 முறை வலம் வந்து நமது குறைகளைக் கூற,நல்ல பலன் கிடைக்கும். தீர்ப்புகள் சாதகம் ஆகும். இம்மரங்களுக்கு நாம் கூறுவதை கேட்கும் சக்தி உள்ள தாக ஒரு ஐதீகம் உண்டு.

12.பிரதோஷகாலத்தில், ரிஷபா ரூட மூர்த்தியாய்,மகேசனை தேவியுடன் வழிபடுவோர் 1000 அஸ்வமேத யாகங்களை செய்த பலனை பெறுவார்கள். அதிலும் ஈசானிய மூலையில் ஈஸ்வரனுக்கு காட்டப் படும் தீபாரதனையை பார்த்தால்எல்லா நோய்களும், வறுமையும் நீங்கும்.

13.மாதாமாதம் உத்திர நட்சத்திரத்தன்று சிவனுக்கு தொடர்ந்து 11 மாதங்கள் பால் அபிசேகம் செய்தால், விரைவில் திருமணம் நடை பெறும். saispiritualcenter.org

14.கலியுகத்தில் காரிய சித்திக்கு துர்க்கை வழிபாடு அதுவும் இராகு காலத்தில்,செய்வது சிறந்தது. இராகு காலத்தில் கடைசி 1/2 மணி நேரமான அமிர்தகடிகை நேரமே சிறப்பான பரிகார நேரம்.நெய்விளக்கு ஏற்றவும் உகந்த நேரம். ஞாயிற்றுகிழமை மாலை 4.30-6.00 மணிக்குள் துர்க்கை க்கு விளக்கு ஏற்றி வழிபட நாம் வேண்டிய பிராத்தனை கள் நிறைவேறும்.

15.வெள்ளிக்கிழமை காலை 10.30-12.00 இராகு காலத்தில் துர்க்கைக்கு தாமரை தண்டு திரி போட்டு நெய்விளக்கு ஏற்றி வழிபட,தெய்வ குற்றம்,குடும்ப சாபம் நீங்கும். ஹஸ்த நட்சத்திரத்தன்று துர்க்கைக்குசிகப்பு பட்டு துணி சாற்றி, சிகப்பு தாமரையை பாதத்தில் வைத்து 27 எண்ணிக்கை கொண்ட எலுமிச்சை பழ மாலை சாற்றி, குங்கும அர்ச்சனை செய்து, அந்த குங்குமத்தை நெற்றியில் வைத்து வர உடனே திருமணம் நடை பெறும்.

16.சங்கடஹரசதுர்த்தியில் விநாயகருக்கு அருகம் புல் மாலைசாற்றி,அர்ச்சனை செய்து வழிபட ,சங்கடங்கள் தீரும். சங்கடஹரசதுர்த்தியில் விநாயகருக்கு எருக்கம் திரி போட்டு விளக்கு ஏற்றி வழிபடபிள்ளைகள் கல்வியில் முன்னேறுவார்கள்.

17.இரெட்டைப் பிள்ளையாருக்கு ரோகிணி நட்சத்திரத்தன்று சந்தனக் காப்பு செய்து வழிபடகடன் பிரச்சனை தீரும்.

18.செவ்வாய்க்கு அதிபதியான முருகப் பெருமானுக்கு செவ்வாய் தோறும் நெய்விளக்கு ஏற்றி வழிபடமூன்று மாதத்தில் வேலை கிடைக்கும்.

19.விபத்துகளில் இருந்து தப்பிக்க அவிட்ட நட்சத்திரத்தன்று முருகனுக்கு வேலில் எலுமிச்சை சொருகி அர்ச்சனை செய்யவும்.

20.ருத்ராட்சம், சாளக்கிராமம், துளசி,வில்வம் உள்ள இடத்தில் இருந்து சுமார் 10கி.மி தூரத்திற்கு செய்வினை அணுகாது.

21.பஞ்சகவ்ய கலவையை வாரம் ஒரு முறை வீடுகளில் தெளிக்க ,தோஷம், தீட்டு நீங்கி, லஷ்மி கடாக்ஷ்சம் கிடைக்கும்.பால், தயிர், கோமூத்திரம், சாணம் கலந்தது பஞ்சகவ்ய கலவை. saispiritualcenter.org

22.புத்திர பாக்கியம் இல்லாதோர் 6 தேய்பிறை அஷ்டமிகளி ல் காலபைரவருக்கு சகஸ்ர நாம அர்ச்சனை செய்தால் விரைவில் புத்திர பாக்கியம் கிட்டும்.

23.வியாழக்கிழமைகளில் ஒரு நேரம் விரதம் இருந்து மாலையில் ஆலய தட்சணா மூர்த்திக்கு தொடர்ந்து நெய்விளக்கு ஏற்றி வர ,விரதம் ஏற்ற 192 நாட்களில் கருத்தரிப்பு ஏற்படும் வாய்ப்பு உண்டு.

24.பெருமாள் கோவிலில் உள்ள கருடாழ்வார் சந்நிதியை சுற்றி வந்து நெய்விளக்கு ஏற்றி வழிபடசர்ப்ப தோஷம், கால சர்ப்ப தோஷம் நீங்கும்.

25.வறுமையில் இருப்பவருக்கு தானம் கொடுத்தல், பூஜை நடக்காமலிருக்கும் கோவில்களில் பூஜை நடக்க உதவுதல்,அனாதைப் பிணங்களின் தகனத்திற்கு உதவுதல்- ஆகிய மூன்றும் செய்தால் அசுவமேத யாகம் செய்ததற்குச் சமம். saispiritualcenter.org

26.தொழில் தடை, கணவன்- மனைவிக்கு கருத்து வேறுபாடு நீங்க, வாழ்வில் நலம் பெற, வெளிநாட்டு வேலை முயற்சி வெற்றி பெற, -என்று நல்ல காரியங்கள் நடைபெற பெளர்ணமி தோறும் நடைபெறும் சத்திய நாராயணா பூஜையில் கலந்து கொள்வது நற்பலன் களைத் தரும்.

27.எத்தகைய கிரக தோசமானாலும் தினமும் சுந்தர காண்டத்தில் ஒரு அத்தியாயம் பாராயணம் செய்வது மிக, மிக நன்மை தரும். வாழை தண்டு திரியினால் வீட்டில் தீபம் ஏற்றினால் குலதெய்வ குற்றமும், குலதெய்வ சாபமும் நீங்கும்...

B) ஏவல், பில்லி, சூனியம், செய்வினை நீக்கும் எளிய முறை :

மனிதபிறவி எடுக்கும் ஒவ்வொருவரும் தமது கர்மவினைகளை அனுபவிக்க பிறந்தவர்களே…! நம்முடைய கர்மவினைகளுக்கு ஏற்ப நன்மையோ அல்லது தீமையோ நம் வாழ்வில் நடந்தவண்ணம் இருக்கும். ஒருவருக்கு செய்வினை பாதிப்பு ஏற்படுவதும் அவரது கர்மவினையை பொறுத்ததே. அந்த பாதிப்பிலிருந்து விடுபடுவதும் விடுபடாமல் பிறரால் ஏமாற்றப்படுவதும் அவரது கர்மவினை பலனே.

இக்காலத்தில் பொறாமை, வஞ்சனை கொண்ட மனிதர்கள் தமது எதிரிகளை நேரடியாக எதிர்க்க துணிவில்லாமல் மறைமுகமாக தாக்கி அழிக்கவே ஏவல், பில்லி, சூனியம் மற்றும் செய்வினை இவற்றை செய்கின்றனர். இது நம் நாட்டில் மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. இது எல்லா மதங்களிலும் காணப்படுகிறது. இதற்கு சாதி, மதம், நாடு என்ற பேதம் இல்லை. வெகு சுலபமாக செய்வினை செய்கிறார்கள். ஒருவருக்கு செய்வினை செய்யும் எவரும் நல்ல முறையில் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை. கடவுள் என்ற மாபெரும் சக்தியின் தண்டனையிலிருந்து எவரும் தப்ப முடியாது.

மாந்திரீகம் மூலம் மற்றவர்களுக்கு கெடுதலை உண்டாக்கும் மனிதர்களே இவ்வுலகில் தீய சக்தி ஆவார்கள். அவர்கள் மற்றவர்களைக் காட்டிலும் நன்றாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். ஆனால் இவர்களிடம் மாட்டிக்கொண்டு அவதிபடுபவர்கள் எண்ணிக்கை சொல்லிலடங்காது. இவ்வாறு அவதிபடுபவர்கள் தங்களின் துன்பம் தீர மந்திரவாதிகளை அணுகி தீர்வு பெற நினைக்கின்றனர். ஆனால் 100 க்கு 95 பேர் தீர்வு கிடைக்காமல் அந்த மந்திரவாதிகளின் பிடியில் சிக்கி தங்களின் பணத்தையும், வாழ்வையும், நிம்மதியையும் தொலைக்கின்றனர். அவ்வளவு ஏன் கற்பினை இழந்த பெண்களும் உண்டு.

செய்வினையால் பாதிக்கப்பட்டவர்களில் மகான்களும் உள்ளனர். ஆதிசங்கரர், அருணகிரிநாதர் போன்றோரே இதற்கு சாட்சி. மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் தெய்வத்திற்கே சூனியம் செய்த வரலாறும் உண்டு. பண்டாசூரன் விக்ன யந்திரத்தின் மூலம் சக்தியின் சேனைகளை நோயுற செய்தான். சக்தியால் அவனை வெல்ல இயலவில்லை. தடைகளும், அபசகுணங்களும் ஏற்பட்டன. அதன் பிறகே சக்தி தனது மைந்தனாகிய விநாயக பெருமானை வேண்ட விநாயக பெருமான் அந்த விக்ன யந்திரத்தை கிழித்து கடலில் எறிந்தார். அதன் பின்னரே சக்தி பண்டாசூரனை வதம் செய்தாள்.

இப்படிப்பட்ட செய்வினை, ஏவல், பில்லி, சூனியம், கண்திருஷ்டி மற்றும் பிற தீயசக்திகளும் எதிர்மறை சக்திகளும் அழிந்தோட ஒரு எளிய முறை உண்டு. இதோ அதன் செய்முறை…!

1. வெண்கடுகு 250 கிராம்
2. நாய்க்கடுகு 250 கிராம்
3. மருதாணி விதை 250 கிராம்
4. சாம்பிராணி 250 கிராம்
5. அருகம்புல் பொடி 50 கிராம்
6. வில்வ இலை பொடி 50 கிராம்
7. வேப்ப இலை பொடி 50 கிராம்

மேற்கண்ட பொருட்களை தயார் செய்து கொள்ளவும். இவை அனைத்தும் நாட்டு மருந்து கடைகளில் வெகு எளிதாக கிடைக்கக்கூடியவை. எங்கும் தேடி அலைய வேண்டாம். சாம்பிராணியை மட்டும் பொடி செய்து கொண்டு மீதமுள்ள 6 பொருட்களுடன் சேர்த்து ஒரு கலனில் அடைக்கவும்.

இவ்வாறு தயாரிக்கப்பட்ட பொருட்களின் கலவையை செவ்வாய், வியாழன் மற்றும் ஞாயிறு கிழமைகளில் அடுப்புக்கரி நெருப்பில் தூவி தூபம் போடவும். தி்னமும் செய்தால் தவறில்லை. 48 நாட்களுக்குள் நிச்சயம் பலனுண்டாகும். ஏவல், பில்லி, சூனியம், செய்வினை, எதிர்மறை மற்றும் தீய சக்திகள் அனைத்தும் நிச்சயம் நீங்கும். குடும்பத்தில் அமைதி உண்டாகும். குடும்பத்தின் உறுப்பினர்களிடையே ஒற்றுமை உண்டாகும். லட்சுமி கடாட்சம் உண்டாகும்.

மேற்கண்ட கலவையை நெருப்பில் தூவும் போது கீழே சிந்தாமல் கவனித்துக் கொள்ளவும். ஏனெனில் மேற்கண்ட 7 பொருட்களும் தெய்வத்தன்மை பொருந்தியவை. யார் காலிலும் படக்கூடாது. மேற்கண்ட முறையை பயன்படுத்தி மாந்திரீக கோளாறுகளிலிருந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களை காப்பாற்ற எல்லாம் வல்ல இறைவன் அருள் துணை நிற்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

கந்த் சஷ்டி கவசம் படித்தால் கிடைக்கும் நன்மை என்ன ?



கந்த் சஷ்டி கவசம் படித்தால் கிடைக்கும் நன்மை என்ன

சிவபெருமானே உருவாய் அமைந்த அருள்நிறை திருமுருகப் பெருமானின் தவ வடிவத்தைக் கண்டு மகிழ்ந்த அருட்செல்வர்
திருப்பெருந்திரு தேவராய சுவாமிகள், கந்தப் பெருமான் கோயில் கொண்டுள்ள ஆறுபடை வீடுகளுக்கும் தனித்தனியாக ஆறு கந்தர்
கவசங்களை அருமையாகப் பாடி அருளியுள்ளார். அவற்றில் மிகவும் அருமையானது திருச்செந்தூர் மேவிய திருக்குமரன் கவசம்.

கவசம் என்றால் .. காப்பு, இரும்பால் செய்யப்பட்ட சட்டை, காவல் செய்யும் மந்திரம், உடம்புக்கூடு, காப்பை உண்டாக்கும் மந்திரம்
என்று சொல்லுவார்கள். அந்த முறையில் திருப்பெருந்திரு தேவராய சுவாமிகள் அருள்மிகு திருச்செந்திலாண்டவனான கந்தப் பெருமான் மீது பாடியுள்ள இந்தக் கவசம் இரும்புச் சட்டையைப்போன்று நம்மைக் காக்கும் காவல் மந்திரமாகும். அதனால்தான் அவர்
அருள்தரும் திருமுருகனை அழைத்து, மனித உடம்பின் உறுப்புகளை எல்லாம், "காக்க காக்க" என்று 39 முறைகள் சொல்லிப்
பாடியுள்ளார்.

கந்தர் சஷ்டிக் கவசத்தை ஆறுமுகப் பெருமான் திருமுன் அமர்ந்து நாள்தோறும் படிப்பது நல்லது. அதற்கு அவகாசம் இல்லாதோர்
செவ்வாய்க்கிழமை தோறும் படிப்பது நல்லது. அதற்கும் இயலாதவர்கள் கந்தர் சஷ்டி ஆறு நாட்களிலுமாவது படிப்பது நல்லது.
இதனைப் படிப்பதால் வம்சவிருத்தி, காரிய வெற்றி, நோய் நீக்கம், கிரக தோஷ நிவர்த்தி, அறிவு செல்வ வளர்ச்சி, திருமணம்
கைகூடுதல், பிள்ளைச் செல்வம் போன்ற நன்மைகள் ஏற்படும். அத்தோடு பேய் பிசாசு பயம் நீங்கும். பில்லி சூனியங்கள் அண்டாது.

"கந்தர் சஷ்டிக் கவசத்தை எப்படிப் பாடினால் பயன் கிடைக்கும் ?" என்ற கேள்விக்கு தேவராய சுவாமிகளே அவரது கவசப்பாடலின்
பிற்பகுதியில் சொல்லியுள்ளார். அதாவது தூய்மையான மனத்தோடும் உடலோடும், சந்தேகம் சிறிதுமில்லாத உண்மையான
நம்பிக்கையோடும், கந்தன் கருணையால் எந்தவித சந்தேகமும் இல்லாமல் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் விடாமல் பாடிவருவோர்க்கு
கந்தனின் கருணை .. saispiritualcenter.orgஅருள் .. எளிதில் கிடைக்கும் என்று தேவராயரே தெளிவாக அவரது கவசப்பாடலின் 205ம் அடிமுதல் 210ம்
அடி வரையுள்ள 6 வரிகளில் குறிப்பிடுகிறார். அதில் வரும்" ஒருநாள் முப்பத்து ஆறு உருக்கொண்டு, ஓதியே செபித்து" என்னும்
ஒன்றறை வரியே ஒருசில இறையன்பர்கள் குறைகாணும் சந்தேகத்துக்கு உரியதாகும். "அப்படியானால் ஒரு நாளைக்கு 36 முறை
இந்தக் கந்தர் சஷ்டிக் கவசத்தைப் பாட வேண்டுமா? அப்படி பாடினால்தான் பலன் (அவனது அருள்) கிடைக்குமா?" என்பதே
அவர்களது சந்தேகம்.

இதுவரையில் கந்தர் சஷ்டிக் கவசத்தைப் பாடி பயன் பெற்றவர்கள் யாரும் அதை 36 முறைகள் ஓதியதாக (பாடியதாக)ச்
சொல்லவில்லை அல்லது தெரியவில்லை. அப்படி அன்றாடம் 36 முறைகள்* ஓதுவது இன்றைய வாழ்க்கைச் சூழ்நிலையில்
எல்லோருக்கும் சாத்தியமில்லை என்பதை மறுக்க முடியாது. ஆகையால் எல்லாரும் 36 முறைகள் கந்தர் சஷ்டிக் கவசத்தை ஒவ்வொரு
நாளும் ஓத வேண்டும் என்பது கட்டாயமில்லை. இறையன்பர்கள் அப்படி 36 முறைகள் ஓத முடிந்தால் ஓதலாம். இல்லையேல் காலை,
மாலை இரு வேளைகளும் மனத்தூய்மையோடு கண் மாறாமல் மனம் சிதறாமால் மாமுருகனிடம் மனம் தோய்ந்து உருகியவாறு ஓதித்
திருநீறு அணிந்தால் போதும். எத்தனை முறை எந்தக் கவசத்தை ஓதினோம் என்பதைவிட எப்படி உண்மையான பக்தியோடு
ஓதினோம் என்பதே மிகவும் முக்கியம். இறைவன் கந்தன் நீங்கள் ஓதும் கவசப் பாடலை மட்டுமல்ல, உங்கள் பண்பையும், அவரிடம்
நீங்கள் கொண்டிருக்கும் ஆழ்ந்த உண்மையான பக்தியையும், உங்கள் மனதின் தூய்மையையும் கூடப் பார்த்துத்தான் அவன்
உங்களுக்கு அருள்புரிய வருவான் என்பதை நீங்கள் மனமார உணர வேண்டும்.

"அழுதால் உன்னைப் பெறலாமே" என்பார் திருவாசகம் பாடிய மாணிக்கவாசகப் பெருமான். அதுபோல அவனிடம் போய் உண்மையான
அன்பு .. ஆழ்ந்த பக்திப்பெருக்கினால் .. உங்களைக் காத்து அருள்புரிய வேண்டி அழுதாலே போதும், அவன் உங்களைக் காக்க
ஓடிவருவான். உங்களிடம் தன்னலமில்லாத ஆழ்ந்த முருக தெய்வ பக்தி இருந்தால் நீங்கள் ஒருமுறை ஓதினாலும் ஓடி வருவான்,
கருணையின் கடலாகிய கருணா மூர்த்தி கந்தப் பெருமான். saispiritualcenter.org

வள்ளி தெய்வானையுடன் கூடிய ஆறுமுகப் பெருமான் திருமுன்பு அமர்ந்து இந்தக் கவசத்தைப் படிக்க வேண்டும். பிரமன், திருமால்,
சிவன், சரசுவதி, இலக்குமி, பார்வதி ஆகிய ஆறு சக்திகளும் சேர்ந்து ஒரே சக்தியாக .. சக்திவேல் சண்முகனாக .. விளங்குவதால்,
ஆறுமுகத்துடன் கூடிய திருமுருகன் முன்பு உட்கார்ந்து ஒருமனதோடு இதைப் படிப்பது நல்லது. அதுவே சிறந்த பலனைக்
கொடுக்கக்கூடியது. செவ்வாய், வெள்ளி, சஷ்டி, பரணி (இரவு), கார்த்திகை (காலை), விசாகம் ஆகிய நாட்களில் இந்தக் கவசத்தைச்
சிறப்பாகப் படிக்கவேண்டும். கவச பாராயணத்துக்கு முன்னும் பின்னும், .. சரவணபவ .. என்னும் முருகப் பெருமானின் மூல
மந்திரத்தை .. ஓம் .. சேர்த்து "ஓம் சரவணபவ" என 108 முறைகள் ஓதவேண்டும். அதுதான் பலன்தர வழிசெய்யும்.

கவச பாராயணப் பாடலைக் குறையாகப் பாடக்கூடாது. அதை முழுமையாகப் பாடி முடிக்க வேண்டும். பாராயணத்தின் இடையில்
யாருடனும் பேசுதல் கூடாது. முன்பின் மாறிப் படித்தலாகாது. கவச பாராயணம் பாடி முடித்த பிறகு, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி,
திருப்புகழ், பிள்ளைத் தமிழ், கந்தபுராணம் ஆகிய கந்தர் பஞ்ச புராணங்களிலிருந்து ஒவ்வொரு பாடல் வீதம் முறையே பாட வேண்டும்.
பாராயணம் முடிந்ததும் ஆறுமுகன் திருவுருவத்துக்கு கற்பூர தீபம் ஏற்றி ஓம் வடிவமாகக் காட்டி வணங்க வேண்டும். விரதமிருந்து
புத்திர பாக்கியம் பெற விரும்புவோர் சஷ்டியில் படிப்பதற்கு இந்தக் கவசமே மிகவும் சிறந்தது. இந்தக் கவசம் மேலே சொல்லப்பெற்ற
பலவித நன்மைகளை வாரி வழங்கிக் கொண்டு வரும் கற்பகம் ஆகும்.

நல்லெண்ணெய் விளக்கையே பூசை அறையில் வைத்துக் கொள்ளவேண்டும். கவசங்களைப் பிழையில்லாமல் நன்கு படிக்கப்
பழகிக்கொள்ளவேண்டும். மனத்திற்குள் படிப்பவர்கள் பாதிப் பலனைத்தான் பெறுவார்கள். நன்றாக வாய்விட்டு (இராகம் போடாமல்)
படிக்க வேண்டும். பாடலை மனனம் பண்ணி நூலைப் பாராமலே படிப்பது சிறப்பு. நூலுக்கு பூ வைத்து வணங்கி வழிபட்டுப் பின்பு
படிப்பது மிகவும் சிறப்பாகும்.

மந்திர சக்தி மிக்க கந்தர் சஷ்டிக் கவசத்தை மேலே சொன்ன முறைப்படி நாள்தோறும் பாராயணம் செய்யும் முருக பக்தர்களுக்கு
அவனது திருவருள் கிடைக்கும். பயன் நிச்சயம் உண்டு. நம்பினார் கெடுவதில்லை அது நான்கு மறை தீர்ப்பு. கந்தன்
கைவிடமாட்டான். கட்டாயம் காத்தருள் புரிவான்.

கந்தன் கழலே சரணம் சரணம்.

(இதற்கான வேறு பொருள்:
மு = மூன்று; பத்து (பற்று) = அவையாவன - ஆணவம், கன்மம் (கர்மம்), மாயை; அரு = நீக்கு.
கருத்து - நாம் கந்த சஷ்டிக்கவசத்தை படிக்கும்போது, ஆசைகளையும் மும்மலங்களையும் நீக்கிவிட்டு தெளிந்த மனதுடன் இருக்கவேண்டும் என்பதே!)

கந்த் சஷ்டி கவசம்

கவசம்

குறள் வெண்பா
துதிப்போர்க்கு வல்வினைபோம், துன்பம் போம்.
நெஞ்சில் பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக் கதித்து ஓங்கும்
நிஷ்டையும் கைகூடும்.
நிமலர் அருள் கந்தர் சஷ்டி கவசந் தனை.

காப்பு
அமரர் இடர்தீர அமரம் புரிந்த
குமரன் அடி நெஞ்சே குறி.

நூல்
சஷ்டியை நோக்க சரவணா பவனார்
சிஷ்டருக் குதவும்செங்கதிர் வேலோன்
பாதமிரண்டில் பன்மணிச் சதங்கை
கீதம் பாட கிண்கிணி ஆட
மையல் நடஞ்செய்யும் மயிவாகனனார்.............5

கையில் வேலால் எனைக் காக்கவென்று வந்து
வர வர வேலாயுதனார் வருக
வருக வருக மயிலோன் வருக
இந்திர முதலா எண்திசை போற்ற
மந்திர வடிவேல் வருக வருக............10

வாசவன் மருகா வருக வருக
நேசக் குறமகள் நினைவோன் வருக
ஆறுமுகம் படைத்த ஐயா வருக
நீறிடும் வேலவன் நித்தம் வருக
சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக.........15

சரஹணபவனார் சடுதியில் வருக
ரஹண பவச ரரரர ரரர
ரிஹண பவச ரிரிரிரி ரிரிரி
விணபவ சரஹண வீரா நமோ நம
நிபவ சரஹண நிறநிற நிறன.........20

வசர ஹணப வருக வருக
அசுரர் குடிகெடுத்த ஐயா வருக
என்னை ஆளுக இளையோன் வருக
பன்னிரண்டா யுதம் பாச அங்குசமும்
பரந்த விழிகள் பன்னிரன்டலங்க........25

விரைந்தனைக் காக்க வேலோன்வருக
ஐயும் கிலியும் அடைவு டன்சௌவும்
உய்யொளி சௌவும் உயிர் ஐயும் கிலியும்
கிலியும் சௌவும் கிளரொளி ஐயும்
நிலைபெற் றேன் முன் நிதமும் ஒளிரும் ....30

சண்முகம் நீயும் தணியொளி யொவ்வும்
குண்டலியாம் சிவ குகன்தினம் வருக
ஆறுமுகமும் அணிமுடி ஆறும்
நீறிடு நெற்றியும் நீண்ட புருவமும்
பன்னிரு கண்ணும் பவளச் செவ்வாயும்........35 saispiritualcenter.org

நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும்
ஈராறு செவியில் இலகு குண்டலமும்
ஆறிரு திண்புயத் தழகிய மார்பில்
பல் பூஷணமும் பதக்கமும் தரித்து
நன்மணி பூண்ட நவரத்தின மாலையும்......40

முப்புரி நூலும் முத்தணி மார்பும்
செப்பழகுடைய திருவயிறு உந்தியும்
துவண்ட மருங்கில் சுடரொளி பட்டும்
நவரத்தினம் பதித்த நற்சீராவும்
இருதொடை அழகும் இணை முழந்தாளும்.....45

திருவடி யதனில் சிலம்பொலி முழங்க
செககண செககண செகக ணசெககண
மொகமொக மொகமொக மொகமொக மொகென
நகநக நகநக நகநக நகென
டிகுகுண டிகுடிகு டிகுகுண டிகுகண.....50

ரரரர ரரரர ரரரர ரரர
ரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி ரிரிரி
டுடுடுடு டுடுடுடு டுடுடுடு டுடுடு
டகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு
விந்து வித்து மயிலோன் விந்து.......55

முந்து முந்து முருகவேள் முந்து
என்றனை யாளும் ஏரகச் செல்வ
மைந்தன் வேண்டும் வரமகிழ்ந்து தவும்
லாலா லாலா லாலா வேசமும்
லீலா லீலா லீலா வினோதனென்று .....60

உன்திரு வடியை உருதி என்றெண்ணும்
என்தலை வைத்துன் இணையடி காக்க
என் உயிர்க் குயிராம் இறைவன் காக்க
பன்னிரு விழியால் பாலனைக் காக்க
அடியேன் வதனம் அழகுவேல் காக்க....65

பொடிபுனை நெற்றியை புனிதவேல் காக்க
கதிர்வேல் இரண்டும் கண்ணினைக் காக்க
விதிசெவி இரண்டும் வேலவர் காக்க
நாசிகள் இரண்டும் நல்வேல் காக்க
பேசிய வாய்தனைப பெருகவேல் காக்க.....70

முப்பத திருப்பல் முனைவேல் காக்க
செப்பிய நாவைச் செவ்வேல் காக்க
கன்னமிரண்டும் கதிர்வேல் காக்க
என்னிளங் கழுத்தை இனியவேல் காக்க
மார்பை இரத்தின வடிவேல் காக்க.....75

சேரிள முலைமார் திருவேல் காக்க
வடிவே ளிருதோள் வளம்பெறக் காக்க
பிடரிகளிரண்டும் பெருவேல் காக்க
அழகுடன் முதுகை அருள்வேல் காக்க
பழுபதினாறும் பருவேல் காக்க.....80

வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க
சிற்றிடை அழகுற செவ்வேல் காக்க
நாண் ஆம் கயிற்றை நல்வேல் காக்க
ஆண்பெண்குறிகளை அயில்வேல் காக்க
பிட்டமிரண்டும் பெருவேல் காக்க.....85

வட்ட குதத்தை வல்வேல் காக்க
பணைத்தொடையிரண்டும் பருவேல் காக்க
கணைக்கால் முழந்தாள் கதிர்வேல் காக்க
ஐவிரல் அடியினண அருள்வேல் காக்க
கைக ளிரண்டும் கருணைவேல் காக்க....90

முன்கையிரண்டும் முரண்வேல் காக்க
பின்கையிரண்டும் பின்னவள் காக்க
நாவில் ஸரஸ்வதி நற்றுணை ஆக
நாபிக் கமலம் நல்வேல் காக்க
முப்பால் நாடியை முனை வேல் காக்க....95

எப்பொழுதும் எனை எதில்வேல் காக்க
அடியேன் வசனம் அசைவுள நேரம்
கடுகவே வந்து கனக வேல் காக்க
வரும் பகல் தன்னில் வச்சிரவேல் காக்க
அரையிருள் தன்னில் அனையவேல் காக்க...100

ஏமத்தில் ஜாமத்தில் எதிர்வேல் காக்க
தாமதம் நீக்கி சதுர்வேல் காக்க
காக்க காக்க கனகவேல் காக்க
நோக்க நோக்க நொடியில் நோக்க
தக்கத் தக்கத் தடையறத் தாக்க....105

பார்க்கப் பார்க்கப் பாவம் பொடிபட
பில்லி சூனியம் பெரும்பகை அகல
வல்ல பு தம் வலாஷ்டிகப் பேய்களும்
அல்லற் படுத்தும் அடங்கா முனியும்
பிள்ளைகள் தின்னும் புழக்கடை முனியும்...110

கொள்ளிவாய்ப்பேய்களும் குரலைப் பேய்களும்
பெண்களைத் தொடரும் பிரமராட்சதரும்
அடியனைக்கண்டால் அலறிக்கலங்கிட
இரிசிக் காட்டேரி இத்துன்ப சேனையும்
எல்லினும் இருட்டிலும் எதிர்படும் அண்ணரும்...115 saispiritualcenter.org

கன புசைகொள்ளும் காளியோடனே வரும்
விட்டங் காரரும் மிகுபல பேய்களும்
தண்டியக்காரரும் சண்டாளர்களும்
என்பெயர் சொல்லவும் இடிவிழுந்தோடிட
ஆனை அடியினில் அரும்பாவைகளும்...120

பு னை மயிரும் பிள்ளைகள் என்பும்
நகமும் மயிறும் நீண்டமுடி மண்டையும்
பாவைகளுடனும் பலகலசத்துடன்
மனையிற் புதைத்த வஞ்சனை தனையும்
ஒட்டிய செருக்கும் ஒட்டிய பாவையும்....125

காசும் பணமும் காவுடன் சோறும்
ஓதும் அஞ்சனமும் ஒருவழிப் போக்கும்
அடியனைக் கண்டால் அலைந்த குலைத்திட
மாற்றார் வஞ்சகர் வந்து வணங்கிட
கால தூதாள் எனைக் கண்டாற் கலங்கிட....130 saispiritualcenter.org

அஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட
வாய்விட்டலறி மதிகெட்டோட
படியினில் முட்ட பாசக் கையிற்றால்
கட்டுடன் அங்கம் கதறிட க்கட்டு
கட்டி உருட்டு கால்கை முறிய...135

கட்டு கட்டு கதறிடக் கட்டு
முட்டு முட்டு முழிகள் பிதுங்கிட
செக்கு செக்கு செதில் செதிலாக
சொக்கு சொக்குச் சூர்ப்பகைச் சொக்கு
குத்து குத்து கூர்வடிவேலால்....140

பற்று பற்று பகலவன் தணலெரி
தணலெரி தணலெரி தணலது வாக
விடு விடு வேலை வெருண்டது வோட
புலியும் நரியும் புன்னரி நாயும்
எலியும் கரடியும் இனிதொடர்ந் தோட....145

தேளும் பாம்பும் செய்யான் புரான்
கடிவிட விஷங்கள் கடித்துய ரங்கம்
ஏறிய விஷங்கள் எளிதினில் இறங்க
ஒளிப்புஞ் சுளுக்கும் ஒருதலை நோயும்
வாதம் சயித்தியம் வலிப்புப பித்தம்...150

சூலைசயங் குன்மம் சொக்குச்சிரங்கு
குடைச்சல் சிலந்தி குடல்விப் பிருதி
பக்கப் பிளவை படர் தொடை வாழை
கடுவன் படுவன் கைத்தாள் சிலந்தி
பற்குத்து அரணை பருஅ ரை யாப்பும்....155

எல்லாப் பிணியும் எந்தனைக் கண்டால்
நில்லாதோட நீ எனக் கருள்வாய்
ஈரேழ் உலகமும் எனக்கு உறவாக
ஆணும் பெண்ணும் அனைவரும் எனக்கா
மண்ணா ளரசரும் மகிழ்ந்துற வாகவும்...160

உன்னைத் துதிக்க உன் திருநாமம்
சரஹண பவணே சையொளி பவனெ
திரிபுர பவனெ திகழொளி பவனெ
பரிபுர பவனெ பவம் ஒளி பவனெ
அரிதிரு மருகா அமரா பதியைக் ...165

காத்துத் தேவர்கள் கடுஞ்சிறை விதித்தாய்
கந்தா குகனே கதிர்வேலவனே
கார்த்திகை மைந்தா கடம்பா கடம்பனே
இடும்பனை ஏன்ற இனியவேல் முருகா
தணிகா சலனே சங்கரன் புதல்வா....170

கதிகா மத்துறை கதிர்வேல் முருகா
பழனிப் பதிவாழ் பாலகுமாரா
ஆவினன்குடி வாழ் அழகிய வேலா
செந்தின்மா மலையுறும் செங்கல்வராயா
சமரா புரிவாழ் சண்முகத் தரசே...175

காரார் குழலாள் கலைமகள் நன்றாய்
என்நா இருக்க யான் உனைப் பாட
எனைத்தொடர்ந் திருக்கும் எந்தை முருகனை
பாடினே ஆடினேன் பரவசமாக
ஆடினேன் நாடனேன் ஆவினன் பூதியை....180

நேச முடன்யான் நெற்றியில் அணியப்
பாச வினைகள் பற்றது நீங்கி
உன்பதம் பெறவே உன்னருளாக
அன்புட ன் இரஷி அன்னமுஞ் சொன்னமும்
மெத்த மெத்த தாக வேலா யுதனார்...185

சித்திப்பெற் றடியேன் சிறப்புடன் வாழ்க
வாழ்க வாழ்க மயிலோன் வாழ்க
வாழ்க வாழ்க வடிவேல் வாழ்க
வாழ்க வாழ்க மலைக்குரு வாழ்க
வாழ்க வாழ்க மலைக்குற மகளுடன்...190

வாழ்க வாழ்க வாரணத்துவசம்
வாழ்க வாழ்க வறுமைகள் நீங்க
எத்தனை குறைகள் எத்தனை பிழைகள்
எத்தனை யடியேன் எத்தனை செய்தால்
பெற்றவன் நீ குறு பொறுப்பது உன் கடன் ...195 saispiritualcenter.org

பெற்றவள் குறமகள் பெற்றவளாமே
பிள்ளையென் றன்பாய் பிரியமளித்து
மைந்தனென் மீது மனமகிழ்ந்தளிலித்
தஞ்சமென் றடியார் தழைத்திட அருள்செய்
கந்தர் சஷ்டி கவசம் விரும்பிய....200

பாலன் தேவ ராயன் பகர்ந்ததைக்
காலையில் மாலையில் கருத்துடன் நாளும்
ஆசாரத்துடன் அங்கந் துலக்கி
நேச முடன் ஓருநினைவது வாகி
கந்தர் சஷ்டக் கவசம் இதனைச்....205

சிந்தை கலங்காது தியானிப்பவவர்கள்
ஒருநாள் முப்பத் தாறுருக் கொண்டு
ஓதியே செபித்து உகந்து நீறணிய
அஷ்டதி க்குள்ளோர் அடங்கலும் வசமாய்த்
திசைமன்ன ரெண்மர் செயலது அருளுவர்...210 saispiritualcenter.org

மாற்றல ரெல்லாம் வந்து வணங்குவர்
நவகோள் மகிழ்ந்து நன்மை யளித்திடும்
நவமத னெனவும் நல்லெழில் பெறுவர்
எந்தநாளுமீ ரெட்டா வாழ்வார்
கந்தர்கை வேலாம் கவசத்தடியை...215

வழியாற் கான மெய்யாம் விளங்கும்
விழியாற் காண வெருண்டிடும் பேய்கள்
பொல்லாதவரை பொடிபொடி யாக்கும்
நல்லோர் நினைவில் நடனம் புரியும்
சர்வ சத்துரு சங்கா ரத்தடி...220

அறிந்தென் துள்ளம் அஷ்டலட் சிமிகளில்
வீரலட் சுமிக்கு விருந்துண வாகச்
சூரபத்மாவைத் துணித்தகை யதனால் .
இருபபத் தேர்வர்க்கு உவந்தமு தளித்த
குருபரன் பழனிக் குன்றினி லிருக்கும்...225

சின்னக் குழந்தை சேவடி போற்றும்
என்னை தடுத தாட்க்கொள்ள என்றன துள்ளம்
மேவிய வடிவுறும் வேலவ போற்றி
தேவர்கள் சேனாபதியே போற்றி
குறமகள் மனமகிழ் கோவே போற்றி....230

திறமிகு திவ்விய தேகா போற்றி
இடும்பா யுதனே இடும்பா போற்றி
கடம்பா போற்றி கந்தா போற்றி
வெட்சி புனையும் வேளே போற்றி
உயர்கிரி கனக சபைக்கு ஓரரசே....235

மயில்நடமிடுவாய் மலர் அடி சரணம்
சரணம் சரணம் சரஹண பவ ஓம்
சரணம் சரணம் சண்முகா சரணம்...238

ஸ்ரீ கந்தர் சஷ்டி கவசம் முற்றிற்று.

குழந்தைபாக்கியம்..நீடித்தஆயுள்... திருமணத் தடை நீக்கும் மகத்தான ஹோமங்கள்..!



குழந்தைபாக்கியம்..நீடித்தஆயுள்... திருமணத் தடை நீக்கும் மகத்தான ஹோமங்கள்..!

மனிதராகப் பிறந்தவர்களுக்கு ஐந்து விதமான யக்ஞங்கள் விதிக்கப்பட்டு இருக்கின்றன. அவை பிரம்ம யக்ஞம்; தேவ யக்ஞம்; பித்ரு யக்ஞம்; அதிதி யக்ஞம்; பூத யக்ஞம் ஆகியவைகள் ஆகும்.

பிரம்ம யக்ஞம் என்பது வேத பாராயணம் செய்வது, நாம ஜபம் செய்வது.
தேவ யக்ஞம் என்பது தேவர்களைக் குறித்து ஹோமங்கள் செய்வது.
பித்ரு யக்ஞம் என்பது மறைந்த நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது.
அதிதி யக்ஞம் என்பது வீடு தேடி வருபவர்களுக்கு உணவு தருவது.
பூத யக்ஞம் என்பது காகம் உள்ளிட்ட சகல ஜீவராசிகளுக்கும் உணவு தருவது.
இந்த ஐந்து யக்ஞங்களும் அவசியம் ஒவ்வொருவரும் தங்களால் இயன்ற அளவு செய்யவேண்டும். தேவர்களைக் குறித்து செய்யப்படும் ஹோமங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட பலனைத் தரக்கூடியவை.


எந்த ஒரு ஹோமமாக இருந்தாலும் முதலில் அக்னி வழிபாடு செய்யவேண்டும். அக்னி பகவான் தான் நாம் தேவர்களுக்கு அளிக்கும் ஆஹூதிகளை சூரிய பகவான் உதவியுடன் அந்தந்த தேவர்களிடம் கொண்டு சென்று சேர்க்கிறார். அதேபோல் தேவர்களின் அருளையும் நமக்குப் பெற்றுத் தருகிறார். ஹோமம் செய்த உடனே நமக்கு உரிய பலன் கிடைக்காவிட்டாலும், உரிய காலத்தில் அந்தப் பலன் நமக்குக் கிடைக்கவே செய்யும்.
மனிதர்களாகிய நம் வாழ்க்கையில் எதிர்ப்படும் ஒவ்வொரு பிரச்னைக்கும் தீர்வாக ஒரு ஹோமம் நம் முன்னோர்களால் அருளப்பட்டு இருக்கிறது. இங்கே சில முக்கியமான ஹோமங்களைப் பற்றியும், அந்த ஹோமங்களால் ஏற்படக்கூடும் பலன்களைப் பற்றியும் பார்ப்போம்.
மகா கணபதி ஹோமம்: சகல விதமான காரியத் தடைகளும் விலகி, செய்யும் காரியங்கள் அனைத்திலும் வெற்றி உண்டாகும். saispiritualcenter.org

நவகிரக ஹோமம்: நவகிரகங்களினால் ஏற்படக்கூடிய அனைத்துவிதமான தோஷங்களையும் போக்கி, நன்மைகளைத் தரும்.

லக்ஷ்மி குபேர மகாலக்ஷ்மி ஹோமம்: வறுமை நீங்கி அளவற்ற செல்வம் பெருகும்.
துர்கா ஹோமம்: பகைவர்களால் ஆபத்துகள் ஏற்படாமல் காப்பாற்றும்.

சுதர்சன ஹோமம்: கண் திருஷ்டி, பொறாமை போன்றவைகள் நீங்கும்.

மிருத்யுஞ்சய ஹோமம்: நோய்களில் இருந்து விடுபடவும், நீடித்த ஆயுளும் பெறலாம்.

தன்வந்திரி ஹோமம்: இந்த ஹோமமும் உடல் ஆரோக்கியத்துக்காகச் செய்யப்படுவதுதான்.

சுயம்வர பார்வதி ஹோமம்: திருமணத் தடை விலகி, நல்ல வரன் அமைந்து திருமண வாழ்க்கை அமையும்.

சந்தான கோபால ஹோமம்: குழந்தை பாக்கியம் உண்டாகும்.

லக்ஷ்மி ஹயக்ரீவ ஹோமம்: பிள்ளைகள் கல்வியில் மேன்மை பெறலாம்.

இன்னும் ஒரே பலனைத் தரக்கூடிய பல ஹோமங்களைப் பற்றி நம்முடைய சாஸ்திரங்களில் சொல்லப்பட்டு இருக்கின்றன.

ஒவ்வொரு ஹோமத்துக்குமே சில பிரத்தியேகமான ஹோம திரவியங்களும் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதேபோல் பிரத்தியேகமான சமித்துகளும் சொல்லப்பட்டு இருக்கின்றன. ஹோமத்தை முறைப்படி வேதம் பயின்ற சாஸ்திரிகளைக் கொண்டே செய்யவேண்டும். முழு நம்பிக்கையுடனும் செய்யவேண்டும்.

நாம் இப்படி பலன் வேண்டி செய்யும் ஹோமங்களுடன், சாஸ்திரிகளைக் கொண்டு வேத பாராயணம் செய்வது அல்லது வேத பாடசாலை மாணவர்களுக்கு உதவுவது, மறைந்த முன்னோர்களுக்கு முறைப்படி தர்ப்பணம் செய்வது, வீடு தேடி வருபவர்களை உபசரிப்பது, காகம், எறும்பு போன்ற ஜீவராசிகளுக்கு உணவு தருவது போன்றவற்றையும் நம்மால் இயன்ற அளவு செய்து வந்தால் நாமும் நம் சந்ததியினரும் எல்லா விதமான வளங்களுடனும், மன மகிழ்ச்சியுடனும் வாழலாம்.

நரசிம்ம ப்ரபத்தி



நரசிம்ம ப்ரபத்தி
---------------------------
முற்பிறவிகளில் பித்ருக்களைப் பூஜை செய்யாமல் இருந்திருப்பது, தெய்வத்தையும் திருக்கோயில்களையும் நிந்திப்பது,
ஒற்றுமையாக இருந்த குடும்பத்தை கோள் சொல்லிப் பிரிப்பது, வாயில்லா ஜீவன்டளைத் துன்புறுத்துவது போன்ற பாவங்களினால்தான் இத்தகைய துன்பங்கள் மறுபிறவிகளில் ஏற்படுவதாக பாரதத் திருநாட்டை ஆண்ட போஜன் என்ற மன்னன், தனது நீதிநூலில் கூறியுள்ளார்.


தினமும் காலையில் நீராடியபின்பு, கீழ்கண்ட
ஸ்ரீ நரசிம்ம ப்ரபத்தி என்ற ஸ்லோகத்தை
48 தடவை சொல்லி, ஸ்ரீ லட்சுமி நரசிம்மரின்
படத்தை வைத்து பூஜித்து வரவும்.

இந்த அதி அற்புத, மகத்தான சக்திவாய்ந்த ஸ்லோகம் உலகப் பிரசக்தி பெற்ற ஸ்ரீமத் அகோபில மடத்தின் 44 வது பட்டம் அழகிய சிங்கரும் திருவரங்கத்தின் கோபுரத்தை நிர்மாணித்தவருமான ஸ்ரீ முக்கூர் ஸ்வாமிகள் அருளிய சக்தி மிகுந்த ஸ்லோகமாகும் இது, saispiritualcenter.org

உங்கள் துன்பத்தையும் துயரத்தையும் போக்குவதற்கு
இதைவிட சிறந்த பரிகாரம் கிடையாது.

இந்த ஸ்லோக்ததை சொல்லி ஸ்ரீ லட்சுமி நரசிம்மரைப் பூஜித்து பிறகு, காய்ச்சிய பசும்பால் அல்லது வெல்லப் பானகம் நைவேத்தியம் செய்து நீங்களும், உங்கள் குடும்பத்திலுள்ள மற்றவர்களும் அதைப் பிரசாதமாகச் சாப்பிட்டு வரவும். கைமேல் பலனளிக்கும் மகத்தான வீர்யம் வாய்ந்த புண்ணிய ஸ்லோகம் இது.

ஸ்ரீ நரசிம்ம ப்ரபத்தி

1. மாதா ந்ருஸிம்ஹ: பிதா ந்ருஸிம்ஹ:
2. ப்ராதா ந்ருஸிம்ஹ: ஸகா ந்ருஸிம்ஹ:
3. வித்யா ந்ருஸிம்ஹ: த்ரவிணம் ந்ருஸிம்ஹ:
4. ஸ்வாமி ந்ருஸிம்ஹ: ஸகலம் ந்ருஸிம்ஹ:
5. இதோ ந்ருஸிம்ஹ: பரதோ ந்ருஸிம்ஹ:
6. யதோ யதோ யாஹி: ததோ ந்ருஸிம்ஹ:
7. ந்ருஸிம்ஹ தேவாத் பரோ நகஸ்சித்:
8. தஸ்மான் ந்ருஸிம்ஹ சரணம் ப்ரபத்யோ:

தமிழாக்கம்

1. நரசிம்மனே தாய்; நரசிம்மனே தந்தை
2. சகோதரனும் நரசிம்மனே; தோழனும் நரசிம்மனே
3. அறிவும் நரசிம்மனே; செல்வமும் நரசிம்மனே
4. எஜமானனும் நரசிம்மனே; எல்லாமும் நரசிம்மனே
5. இந்த லோகம் முழுவதிலும் நரசிம்மனே; பரலோகத்திலும் நரசிம்மனே
6. எங்கெங்கு செல்கிறாயோ அங்கெல்லாம் நரசிம்மனே
7. நரசிம்மனைக் காட்டிலும் உயர்ந்தவர் ஒருவரும் இல்லை.
8. அதனால் நரசிம்மனே! உம்மை சரணடைகிறேன்.

Tuesday, March 7, 2017

ராமாயாணத்திலிருந்து கற்க வேண்டியவை



ராமாயாணத்திலிருந்து கற்க வேண்டியவை

ராமன்
தந்தை சொல் தட்டாதவன். சித்தியையும் தாயாக மதித்து நடப்பவன். ஒரு மனைவி சட்ட-திட்டங்கள் இல்லாத காலத்திலும் ஒரு பெண்ணுடன் வாழ விழைந்தவன். படகோட்டியான குகனை மார்போடு அணைத்து இன்றோடு ஐயவரானோம் என்று சொல்லி ஏற்ற தாழ்வு மனிதருள் இல்லை என்று காட்டியவன். மக்கள் சந்தேகம் கொண்டு தன் மனைவியை தவறாக பேசிவிடுவார்களோ என்று அவளை தீக்குளிக்க சொன்னவன். தன் மனைவி தவறு இழைக்காதவள் அதனால் அதிலிருந்து மீண்டு வருவாள் என்று நம்பிக்கை கொண்டவன்.

சீதை
வசதியாக வாழ்ந்திருந்தாலும் கணவன் இருக்கும் இடம் சொர்க்கமாக நினைத்து காட்டுக்கு பின் தொடர்ந்தவள்.
தசரதன்பல மனைவிகள் கொண்டவன். கதை எழுதப்பட்ட காலத்தை கொண்டு பார்த்தால் ஒரு மனைவி சட்டம் இல்லாதிருந்திருக்கும். ஒரு மனைவி சட்டம் சமீபத்தில் வந்ததது தான். தன் மகன் மேல் அதிக பாசம் கொண்டிருந்தவன். தன் மனைவியிடம் செய்து கொடுத்த சத்தியம் காக்க உயிர் துறந்தவன்.

லக்ஷமணன்
சகோதர பாசம். சகோதர மதிப்பு. தம்பியுடையான படைக்கு அஞ்சான். அண்ணி தாயுக்கு சமம் என்பதை உணர்த்தியவன். இதற்கு நேர் எதிர் வாலி.தம்பி மனைவியை அபகரித்தவன்.

பரதன்
தாய் செய்தது தவறு என்று எடுத்துக் காட்டியவன். அண்ணனுடைய நாற்காலிக்கு ஆசை படாதவன்.

கைகேயி - முதல் பாதி
தன் கணவனுடைய இன்னொரு மனைவிக்கு பிறந்தவனாக இருந்தாலும் ராமனை தன் மகன் போல் பாவித்தவள். இதிலிருந்து பாடம் கற்றுக் கொண்டால் இன்று சித்தியரால் முதல் மனைவி பிள்ளைகளுக்கு வரும் கஷ்டம் வராது. இரண்டாவது பாதி கைகேயி படி நடக்கக்கூடாது என்பதற்காக ஒரு நேர்மறையான பாத்திரம்.
கூடவே இருந்தவர்கள் என்றாலும் அவர்கள் சொல்வதை அப்படியே கேட்டால் ஆபத்து தான் என்பதை உணர்த்திய பாத்திரம்.

கூனி-மந்தரை
யார் வீட்டில் உண்கிறோமோ அவர்களுக்கு துரோகம் செய்யக்கூடாது

சூர்பனகை
திருமணமான ஆணின் மீது ஆசை கொள்ளக் கூடாத

ராவணன்
இசையில் தேர்ந்தவன். தெய்வ பக்தி கொண்டவன். பிறர் மனை நோக்குதல் பாவம் என்று உணர்த்த ஒரு பாத்திரம். அப்படியே அவளை கடத்தி வந்த தப்பு செய்தாலும் கடைசி வரை அவளை தொடாமல் கண்ணியம் காத்தவன். பாடம் - ஒரு பெண்ணை அவள் விருப்பம் இல்லாமல் தொடக்கூடாது. ஒரு ஹீரோ கதையில் இருந்தால் ஒரு வில்லனும் உண்டு. அதற்கு அடிவகுத்தவை இக்கதைகள். இன்னும் சினிமாவில் இதே தொடர்கின்றன. ராமாயணத்தில் வந்த ஒவ்வொரு வரியையும் வைத்து ஆயிரம் படங்கள் வந்தாயிற்று.

மண்டோதரி
கணவன் தவறான பாதையில் சென்றாலும் கடைசி வரை எப்படியாவது அவனை நேர்வழிக்கு கொண்டு வர முடியும் என்று நம்பியவள். அதில் தோற்று பாடம் கற்பித்தவள்.

கும்பகர்ணன்
தவறே செய்திருந்தாலும் சகோதரன் பக்கம் நின்றவன். சகோரத்துவத்தில் இது ஒரு வகை.லக்ஷமணனுக்கு எந்த வகையிலும் குறைந்தவன் இல்லை.

விபீஷணன்
தவறே செய்திருந்தாலும் தர்மத்தின் பக்கம் நின்றவன். சகோதரத்தில் இதுவும் ஒரு வகை தான். இது துரோகமா என்று வாதிட முடியும். ஆனால் கடைசியில் ராவணன் குலம் தழைத்தது இவனால் தான். தர்மத்தின் பக்கம் நின்றதால் இவன் பரதனுக்கு எந்த வகையிலும் குறைந்தவன் இல்லை.

வாலி
தம்பி மனைவியை தன் மனைவியாக எண்ணுவது தவறு.
சுக்ரீவன்
அண்ணனால் தவறாக எண்ணப்பட்ட ஒரு பாத்திரம். அண்ணன் மகனை இளவரசனாக்கி சகல மரியாதையோடு நடத்தியவன்.
fb.com/saispiritualcenter
அனுமான்
தலைவன் - தொண்டனுக்கு இடையில் இருக்கும் ஒரு அற்புத பந்தம்.சேவையில் உயர்ந்தவன். தன் தலைவன் மீது அசரா நம்பிக்கை கொண்டவன். தன் தலைவனுக்காக எதையும் செய்யத் துணிந்தவன். எதிலும் தன் தலைவனையே கண்டவன்.

புஷ்பகவிமானம்
இன்றைய விமானத்திற்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் வித்திட்ட ஒரு கற்பனை கதை.
வாலியை ராமன் மறைந்திருந்து கொன்றது
நல்ல பட்டிமன்ற தலைப்பு. வாலி ஒரு குரங்கு. ராமன் மனிதன். வேட்டையில் எந்த ஒரு சட்டத்தையும் மீறவில்லை ராமன். ராமன் ஒரு ஹீரோ என்பதால் மறைந்திருந்து கொன்றது சற்று ஜீரணிக்க முடியாமல் இருக்கலாம்.
ராமாயணத்தில் வரும் பல துணைகதைகளும் நல்ல விஷயங்களை சொல்லவே முயன்றிருக்கின்றன.
இறைவனை நம்பாதவர்களுக்கு - ராமாயணத்தை நல்ல கதையாக கருதலாம். அதில் சொன்ன நல்ல கருத்துக்களை எடுத்துக் கொள்ளலாம்.
காலம் காலமாக மக்கள் மனதில் நின்றுவிட்ட கதை. கதையில் அடிப்படை கோளாறு இருந்தால் என்றோ மறைந்து போயிருக்கும். நமக்கு பல சந்தேகங்கள் தோன்றலாம். ஆனால் மூலக்கதை அறியாமல் கேட்டதை வைத்த இந்த கதை வளர்ந்திருக்கிறது. saispiritualcenter.org


பக்தியின் வகைகள்



பக்தியின் வகைகள்

பல்வகையான பக்தியின் மூலம் முக்தியடைந்த அடியார்களின் வரலாற்றிலிருந்து நாம் பக்தியின் மார்க்கங்களை அறியலாம். சாஸ்திரங்களும் கடவுள் மீது நாம் கொள்ள வேண்டிய பக்தியை வகைப்படுத்தியுள்ளன. அவற்றை நாமும் தெரிந்து கொள்வோம்.

ச்ரவணம்: கேட்டல் அதாவது பல நிலைகளில் பல பெரியோர்களின் மூலம் இறைவனைப்பற்றி கேட்டு அறிந்து அவனிடம் பக்தி கொண்டொழுகுவது சரவணம் ஆகும்.

கீர்த்தனம்: இறைவனின் புகழ்பாடும் பொருட்டு கீர்த்தனங்களை உருவாக்கி அதன் மூலம் இறைபுகழ் பாடித் தொழுவது கீர்த்தனம்.

ஸ்மரணம்: இறைவன் நம் மனதை படைத்த பயன் நிறைவேறும் வகையில் எப் போதும் அவனைப்பற்றி நினைத்துருகுவது ஸ்மரணம்

பாதஸேவனம்: இறைவனின் திருவடிகளை விட்டு நீங்காது குற்றமற்ற தூய உணர்வுடன் கைங்கர்யம் செய்தல் பாதஸேவனமாகும்.

வந்தனம்: இந்த சரீரம் இறைவன் கொடுத்தது எனவே உடலோடு என் உள்ளத்தையும் உனக்களித்தேன் எனும்படி கீழே விழுந்து சாஷ்டாங்கமாய் இறைவனை வணங்கி எழுதல்.fb.com/saispiritualcenter

தஸ்யம்: எப்போதும் இறைவனுக்கு தம்மை அடிமையாய் கருதி திருப்பணிவிடை செய்தல் தஸ்யம் ஆகும்.

ஸக்யம்: அடியவன் இறைவனை தம் தோழனாய், தம் அ
ன்பிற்குரியவனாய் கருதி நேசத்துடன் பக்தி செய்வது.

ஆத்ம நிவேதனம்: இந்த ஆத்மாவை அவனுடையது என இறைவனுக்கு அன்னமாய் நிவேதனம் செய்து பூஜிப்பது.saispiritualcenter.org