sai yoga centre

Showing posts with label பஞ்சமுக அனுமன். Show all posts
Showing posts with label பஞ்சமுக அனுமன். Show all posts

Friday, September 21, 2012

பரிபாலிக்கும் பஞ்சமுக அனுமன்







தெளிந்த நல் அறிவு ;தேகத்தில் வலிமையும்
பொலிவுறும் தேஜஸ் பண்பினில் துணிவும்
அச்சமில் இயல்புட்ன் ஆரோக்ய உடலும்
இச்சைகள் அடக்கும் தன்மை இனியசொல் வினயம்
வினையாற்றும் திறமை விவேகம் நிரம்ப வேண்டும்!
அனுமனைத் தியானம் செய்தால் அனைத்துமே சித்தியாகும்!



அஞ்சனை மைந்தா போற்றி ! அஞ்சினை வென்றாய் போற்றி !
அஞ்சினைக் கதிர்பின் சென்று அரு மறையுணர்ந்தாய் போற்றி !
அல்லலைப் போக்கிக் காக்கும் அனுமனை பாடியே போற்றி !
அஞ்ச லென்றருளும் வீரன் அனுமனைப் போற்றுவோமே !!



அனுமனின் ஐந்து முகங்களான ஹயக்ரீவ, வராக, நரசிம்ம, வானர, கருட முகங்களில்ஐந்து திருமுகங்களும் ஒரே வரிசையில் அபூர்வ அமைப்பில்   பக்தர்களின் அனைத்து கோரிக்கைகளையும் ஈடேற்றக்கூடிய வல்லமை மிக்க பஞ்சமுக அனுமன்.
வித்தியாசமான கோலத்தில் அனுமன்



 பகதர் ஒருவருக்கு பஞ்சமுக அனுமனை பிரதிஷ்டை செய்யும்படி அசரீரி மாதிரி கேட்க உடனடியாக அப்படி ஒரு சிலையைத் தேடிப்போனபோது, வித்தியாசமாக ஒரே நேர்க்கோட்டில் ஐந்து முகங்களும் அமைந்த, பக்தர்களைத் தன் ஐந்து முகங்களாலும் பார்க்கிற மாதிரியான அபூர்வமான அமைப்புள்ள இந்த அனுமன்சிலை கிடைத்ததாம் ...

சஞ்சீவி மலையையே தூக்கி வந்த அனுமன், ஏகப்பட்ட தடைகளைத்தாண்டி கோயில் வளர்ந்து மளமளன்னு எல்லாம் நடந்து முடிஞ்சு அனுமன் ஜம் என்று கம்பீரமாக பிரதிஷ்டையாகி கும்பாபிஷேகமும் நடத்திக்கொண்ட அதிசயமும் நடந்திருக்கிறது இந்த கலியுகத்தில் !

 தன் வால் கோட்டையைத் தானே தனக்கு சிம்மாசனமாக அமைத்துக்கொண்ட அனுமன், இந்த கோயிலையும் தன் இருப்பிடமாக தானே அமைத்துக்கொண்டு எழுந்தருளி இருக்கிறார் ...

மூன்றுநிலை ராஜகோபுரம் ராமநாமத்தைச் சொல்லும் அனுமன்போல் கம்பீரமாக நிமிர்ந்து நின்று அழைக்கிறது.

ஜடாரிமுன் பவ்யமாக தலைவணங்கும் பாவத்துடன் ராஜகோபுரத்தின் வழி உள் நுழைய நேர் எதிரே உள்ள சன்னதியில் ஐந்து முகங்கள், பத்துக்கரங்களுடன் அருள்நிறை விழிகளோடு அன்பர்களுக்கு அருளக் காத்திருக்கிறார் அனுமன்.

சின்னஞ்சிறு சன்னதி. பக்தர்களுக்கு எளியவராக சிலை வடிவில் காட்சிதரும் அனுமன் அருட்காட்சி தந்து ஆட்கொள்கிறார்..

அஞ்சுமுக அனுமன் சட்டென விஸ்வரூபம் எடுத்து தன்பார்வையை நம்மீது பதித்து நெஞ்சு முழுவதும் நிறைந்த அஞ்சேல் என்று அபயக்கரம் நீட்டி சிலிர்க்க வைக்கிறார்...

பெரும்பாரமாக இருந்த கஷ்டங்கள் அப்போதே நீங்கி விட்டது போன்று உணர்வு எழ, காற்றின் மகன் வந்து அமர்ந்துவிட்டதில் மனம் லேசாகிறது.


கருடமுகம் பிணி நீக்கும்,
வராகமுகம் செல்வம் அளிக்கும்,
அனுமன் முகம் சகல கிரகதோஷமும் போக்கி எல்லாநலமும் தரும். நரசிம்மமுகம் தீமையைப் போக்கும்.
ஹயக்ரீவர் முகம் கல்வியும், ஞானமும் நல்கும்
என்பதால், வேண்டியதை வேண்டியவாறு அருள்கிறார் அஞ்சிலே ஒன்று பெற்ற அருள் குமரன் அனுமன் ..

சன்னதியை வலம் வந்தால் ஏராளமான மட்டைத் தேங்காய்கள் ஓரிடத்தில் கட்டப்பட்டிருக்கிறது.

அமாவாசைகளில் இங்கு வரும் பக்தர்கள் காரியத்தடைகள் விலகவும், மணப்பேறு, மகப்பேறு வேண்டியும் அனுமனை வழிபட்டுக் கட்டியவையாம் இவை,

ஒவ்வொரு அமாவாசையின்போதும் அதிகரித்து அனுமன் வால்போல் நீண்டு இன்று ஆயிரக்கணக்கினையும் தாண்டியுள்ளதே, இந்த அனுமனின் ஆற்றலுக்கு சாட்சியாக இருக்கிறது. அதிகபட்சம் தொண்ணூறு நாட்களுக்குள் வேண்டுதல் நிறைவேறிவிடுகிறதாம்.

அஞ்சு முகத்துடன் பக்தர்தம் நெஞ்சம் நிறைந்து அருளும் அனுமன், கொஞ்சமும் குறைவிலாது பக்தர்கட்கு அளிக்கிறார் தன் குளிர்வான அருளை.

சென்னை தாம்பரத்தில் இருந்து வேளச்சேரி செல்லும் சாலையில் 6 கி.மீ.யில் உள்ள கௌரிவசக்கத்தில், பழனியப்பா நகரில் இருக்கிறது இந்தப் பஞ்சமுக அனுமன் ஆலயம்.

பிராட்வே மற்றும் தி.நகரிலிருந்து கிழக்கு தாம்பரம் செல்லும் பேருந்துகளில் சென்றும் இத்தலத்தை அடையலாம்.

 வேண்டுதல் எதுவானாலும் சரி... . எல்லாவற்றையும் ஒரே தலத்தில், ஒரே கடவுளிடம் சொன்னால் போதும்; விரைவிலேயே அனைத்தும் ஈடேற்றி சந்தோஷம் தருகிறார்..

சென்னை தாம்பரம் அருகே உள்ள கௌரிவாக்கத்தில் அருளாட்சி செய்கிறார் பஞ்சமுக அனுமன்.



பஞ்சமுக அனுமன் கோயில்களில், அனுமனின் முகங்களான ஹயக்ரீவ, வராக, நரசிம்ம, வானர, கருட முகங்களில் நான்கு முகங்கள் நாற்புறம் நோக்கி இருக்க, மற்றொரு முகம் அவற்றின் மேலமைந்து இருக்கும்.
ஐந்து திருமுகங்களும் ஒரே வரிசையில் அமைந்திருப்பது அபூர்வம்.



காற்று ஈன்ற காவியமே காக்கும் கருணைக் கடலே போற்றி !
கருத்தில் நிறைந்தாய் சொல்லின் செல்வா கழலே போற்றி !





ஸர்வ  கல்யாண  தாதாரம் ஸர்வா பத்கந  வாரகம்
அபார  கருணா  மூர்த்திம் ஆஞ்சநேய  நமாம்யஹம்



அஞ்சனா  கர்ப்ப  ஸம்பூதம் குமாரம்  ப்ருஹ்மசாரிணம்
துஷ்டக்ருஹ  வினாஸாய ஹனுமந்த  முபாஸ்மஹே

ஸ்ரீ ராமதூத  மஹாதீர ருத்ரவீர்ய  சமுத்பவ
அஞ்சனா  கர்ப்ப  ஸம்பூத   வாயு  புத்திர  நமோஸ்துதே


அஸாத்ய  ஸாதக  ஸ்வாமிந் அஸாத்யம் தவ கிம்தவ
ராம தூத க்ருபாஷிந்தோ மத்கார்யம் ஸாதய  ப்ரபோ

புத்திர் பலம்  யசோதைர்யம் நிற்பயத்வம்  அரோகதா
அஜாட்யம்  வாக்படுத்வம்ச ஹனுமத் ஸரணாத் /ஸ்மரணாத்  பவேத்  














பக்தரைப் பார்க்கும் அஞ்சுமுக அனுமன்








ஒரு கோயிலுக்கு நீங்கள் போகிறீர்கள். அங்கே முக்கியமாக என்னவெல்லாம் வேண்டுவீர்கள்?

ஆண்டவா… என் குடும்பம் எப்போதும் ஒற்றுமையாக இருக்கணும்!
பகவானே… என் பசங்க நல்லா படிச்சு நிறைய மார்க் வாங்கி பாஸ் ஆகணும்!
கடவுளே… எனக்கு கல்யாண பாக்கியம் குடுப்பா…!
ஆயுளும் ஆரோக்கியமும் அளிக்கணும் தாயே!
தெய்வமே… தீவினை எல்லாம் தீய்ஞ்சு போக அருள்புரி!
இப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வேண்டுதல் இருக்கும். அது மட்டுமல்ல, ஒவ்வொரு கோரிக்கையையும் வெவ்வேறு கடவுள்முன் வைப்பீர்கள்.
உங்கள் வேண்டுதல் எதுவானாலும் சரி… வெவ்வேறு கோயிலுக்குப் போக வேண்டாம். எல்லாவற்றையும் ஒரே தலத்தில், ஒரே கடவுளிடம் சொன்னால் போதும்; விரைவிலேயே அனைத்தும் ஈடேறிவிடும்! என்று சொன்னால் உங்களுக்கு எவ்வளவு சந்தோஷமாக இருக்கும்!
அந்த ஆனந்தத்தை நீங்கள் அனுபவித்து உணரவேண்டுமானால், நீங்கள் செல்லவேண்டிய தலம், சென்னை தாம்பரம் அருகே உள்ள கௌரிவாக்கம். அங்கேதான் அருளாட்சி செய்கிறார் பஞ்சமுக அனுமன். பொதுவாக பஞ்சமுக அனுமன் கோயில்களில், அனுமனின் முகங்களான ஹயக்ரீவ, வராக, நரசிம்ம, வானர, கருட முகங்களில் நான்கு முகங்கள் நாற்புறம் நோக்கி இருக்க, மற்றொரு முகம் அவற்றின் மேலமைந்து இருக்கும்.
ஐந்து திருமுகங்களும் ஒரே வரிசையில் அமைந்திருப்பது அபூர்வம். அப்படி ஓர் அபூர்வ அமைப்பில் இத்தலத்தில் காணப்படுபவர்தான் உங்களின் எல்லா கோரிக்கைகளையும் ஈடேற்றக்கூடிய (பஞ்சமுக) அனுமன். இப்படி ஒரு வித்தியாசமான கோலத்தில் இவர் இங்கே கோயில் கொண்டது எப்படி? குடியிருப்புகள் மிகக் குறைவாக இப்பகுதி இருந்த காலகட்டம். இந்து மதத்துக்கு உரிய கோயில்கள் இங்கே குறைவாகவே இருந்தது. அதுவும் வெகுதொலைவு போய் கும்பிடணும். அப்போதான் இப்பகுதியில் வசித்த ஒரு பக்தருக்கு எல்லா வரங்களையும் தரக்கூடிய தெய்வத்துக்கு ஒரு கோயில் கட்டினால் என்ன? அப்படின்னு ஓர் எண்ணம் வந்துச்சு.
அதே நினைவோட, அவர் எப்போதும் வணங்கும் காஞ்சி மாமுனிவரை நினைச்சுகிட்டே உறங்கப்போயிருக்கார். அப்போ அவர் கனவுல பஞ்சமுக அனுமனை பிரதிஷ்டை பண்ணலாம்னு அசரீரி மாதிரி கேட்டிருக்கு உடனடியா அப்படி ஒரு சிலையைத் தேடிப்போனபோது, வித்தியாசமாக ஒரே நேர்க்கோட்டுல, ஐந்து முகங்களும் அமைந்த, பக்தர்களைத் தன் ஐந்து முகங்களாலும் பார்க்கிற மாதிரியான அபூர்வமான அமைப்புள்ள இந்த அனுமன்சிலை கிடைச்சிருக்கு. சிலை வந்தாச்சு. கோயில்கட்ட இடம் பார்த்தாச்சு. அப்புறம் என்ன பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகம் செய்ய வேண்டியதுதான் பாக்கி. இப்படித்தான் அப்பகுதியில் இருந்த நாங்க எல்லோருமே நினைச்சோம். ஆனா, அங்கே கோயில் கட்ட முடியாதபடி பல்வேறு சர்ச்சைகள் வேற்று மதத்தவரால் ஏற்படுத்தப்பட்டு, கோயில் அமைக்க தடைபோட்டுட்டாங்க. ரெண்டு வருஷம் போராடியும் தீர்வு கிடைக்கவே இல்லை. கடைசியில – சஞ்சீவி மலையையே தூக்கிட்டு வந்த அனுமன், நம்ப பாரத்தைத் தாங்க மாட்டாரா என்ன?ன்னு நினைச்சு, அவர்கிட்டேயே பொறுப்பை ஒப்படைச்சுட்டோம். சொன்னா நம்பமாட்டீங்க… அதன்பிறகு மளமளன்னு எல்லாம் நடந்து முடிஞ்சு அனுமன் ஜம் என்று பிரதிஷ்டையாகி கும்பாபிஷேகமும் நடந்துச்சு.
இதோ இப்போ வரைக்கும் ஏகப்பட்ட தடைகளைத்தாண்டி கோயில் வளர்ந்து கம்பீரமா நிற்குது. இதுக்குக் காரணம், நாங்க யாரும் இல்லை. தன் வால் கோட்டையைத் தானே தனக்கு சிம்மாசனமா அமைச்சுக்கற அனுமன், இந்த கோயிலையும் தன் இருப்பிடமா தானே அமைச்சுகிட்டு எழுந்தருளி இருக்கார் என்பதுதான் உண்மை! என்கிறார் இப்பகுதியில் வசிப்பவரும், சென்னை வானொலி நிலையத்தின் முன்னாள் இயக்குநருமான விஜய திருவேங்கடம். ஒரே ஒரு சன்னதியோடு இருந்த இந்தக் கோயிலில் இன்று விஜய கணபதியும் இடம் பிடித்துக் கொண்டிருக்கிறார்.
அஞ்சனை மைந்தனைப்பற்றிய அரிய விவரத்தினைக் கேட்டபின், நெஞ்சினில் தூய பக்தியோடு கோயிலுக்குள் நுழைகிறோம்.மூன்றுநிலை ராஜகோபுரம் ராமநாமத்தைச் சொல்லும் அனுமன்போல் கம்பீரமாக நிமிர்ந்து நின்று நம்மை அழைக்கிறது. ஜடாரிமுன் பவ்யமாக தலைவணங்கும் பாவத்துடன் ராஜகோபுரத்தின் வழி உள் நுழைகிறோம்.
நேர் எதிரே உள்ள சன்னதியில் ஐந்து முகங்கள், பத்துக்கரங்களுடன் அருள்நிறை விழிகளோடு அன்பர்களுக்கு அருளக் காத்திருக்கிறார் அனுமன். சின்னஞ்சிறு சன்னதி. அதன் முன்னே சென்று நின்றதும், பக்தர்களுக்கு எளியவராக சிலை வடிவில் காட்சிதரும் அனுமன்மீது நம் பார்வை படர்கிறது.
மறுநிமிடம் அந்த அஞ்சுமுக அனுமன் சட்டென விஸ்வரூபம் எடுத்து தன்பார்வையை நம்மீது பதித்து நெஞ்சு முழுவதும் நிறைந்த அஞ்சேல் என்று அபயக்கரம் நீட்ட உடல் சிலிர்க்கிறது. பெரும்பாரமாக இருந்த கஷ்டங்கள் அப்போதே நீங்கி விட்டது போன்று உணர்வு எழ, காற்றின் மகன் வந்து அமர்ந்துவிட்டதில் மனம் லேசாகிறது.
கருடமுகம் பிணி நீக்கும், வராகமுகம் செல்வம் அளிக்கும், அனுமன் முகம் சகல கிரகதோஷமும் போக்கி எல்லாநலமும் தரும். நரசிம்மமுகம் தீமையைப் போக்கும். ஹயக்ரீவர் முகம் கல்வியும், ஞானமும் நல்கும் என்பதால், இவர் சன்னதிமுன் நிற்கும் ஒவ்வொருவரும் அவரவர்க்கு வேண்டியதைக் கேட்கிறார்கள்.
மெதுவாக சன்னதியை வலம் வந்தால் ஏராளமான மட்டைத் தேங்காய்கள் ஓரிடத்தில் கட்டப்பட்டிருப்பதைப் பார்க்க முடிகிறது. அமாவாசைகளில் இங்கு வரும் பக்தர்கள் காரியத்தடைகள் விலகவும், மணப்பேறு, மகப்பேறு வேண்டியும் அனுமனை வழிபட்டுக் கட்டியவையாம் இவை, ஒவ்வொரு அமாவாசையின்போதும் அதிகரித்து அனுமன் வால்போல் நீண்டு இன்று ஆயிரக்கணக்கினையும் தாண்டியுள்ளதே, இந்த அனுமனின் ஆற்றலுக்கு சாட்சியாக இருக்கிறது. அதிகபட்சம் தொண்ணூறு நாட்களுக்குள் வேண்டுதல் நிறைவேறிவிடுகிறதாம்.
அனுமனின் ஒவ்வொரு முகத்திற்கும் உரிய தனிச்சிறப்பாக, வராகஜெயந்தி, நரசிம்மஜெயந்தி, கருடஜெயந்தி, அனுமத்ஜெயந்தி, ஹயக்ரீவ ஜெயந்தி என தனித்தனியே எல்லா விசேஷங்களும் மிகச்சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. தினமும் பிரசாத விநியோகமும் உண்டாம்.
விரைவில் விஜய விநாயகர் இங்கே புதிய சன்னதியில் கோயில் கொள்ளப்போவது தனிச்சிறப்பு.
சென்னை தாம்பரத்தில் இருந்து வேளச்சேரி செல்லும் சாலையில் 6 கி.மீ.யில் உள்ள கௌரிவசக்கத்தில், பழனியப்பா நகரில் இருக்கிறது இந்தப் பஞ்சமுக அனுமன் ஆலயம். பிராட்வே மற்றும் தி.நகரிலிருந்து கிழக்கு தாம்பரம் செல்லும் பேருந்துகளில் சென்றும் இத்தலத்தை அடையலாம்.

Share this:

பஞ்சமுக அனுமன்






ஓம் ஸ்ரீராமதூதாய,
ஆஞ்சநேயாய,
வாயுபுத்ராய,
மஹாபலாய,
ஸீதாதுக்க நிவாரணாய,
லங்காவிதாஹகாய,
ம்ஹாபலப்ரசண்டாய,
பல்குணஸகாய,
கோலாஹல ஸகல ப்ரஹ்மாண்ட பாலகாய,
ஸப்தஸமுத்ர நிராலங்கிதாய,
பிங்கள்நயநாய,
அமித விக்ரமாய,
ஸூர்யபிம்பஸேவகாய,
துஷ்ட நிராலம்ப க்ருதாய,
ஸஞ்சீவிநீ ஸமாநயந ஸம்ர்த்தாய,
அங்கத லக்ஷ்மணகபிஸைந்ய ப்ராணநிர்வாஹ்காய,
தசகண்ட வித் வம்ஸநாய ராமேஷ்டாய,
பல்குணஸகாசாய,
ஸீதாஸஹித ராம சந்த்ர ப்ரஸாதகாய,
ஷட்ப்ரயோகாங்க பஞ்சமுகி ஹநுமதே நம:

பக்தர்களின் அனைத்து கோரிக்கைகளையும் ஈடேற்றக்கூடிய வல்லமை மிக்க பஞ்சமுக அனுமன்.

அனுமனின் ஐந்து முகங்களான
கருடமுகம் பிணி நீக்கும்,
வராகமுகம் செல்வம் அளிக்கும்,
அனுமன் முகம் சகல கிரகதோஷமும் போக்கி எல்லாநலமும் தரும்,
நரசிம்மமுகம் தீமையைப் போக்கும்,
ஹயக்ரீவர் முகம் கல்வியும், ஞானமும் நல்கும் என்பதால்,
வேண்டியதை வேண்டியவாறு அருள்கிறார் அஞ்சிலே ஒன்று பெற்ற அருள் குமரன் அனுமன்.

கிழக்கு முகம்-ஹனுமார்

(இந்த ஸ்லோகத்தை பாராயணம் செய்து வர பகைவர்களால் ஏற்படும் தொல்லைகள் நீங்கும்)

ஓம் நமோ பகவதே பஞ்ச வதனாய பூர்வகபி முகே
ஸகல சத்ரு ஸம்ஹாரணாய ஸ்வாஹா.

தெற்கு முகம்-நரஸிம்மர்

(இந்த ஸ்லோகத்தை பாராயணம் செய்து வர எல்லாவித பயங்கள், தோஷங்கள், பூத ப்ரேத, துர்தேவதை தோஷங்கள் ஆகியவை நீங்கும்)

ஓம் நமோ பகவதே பஞ்ச வதனாய தக்ஷிண முகே கரால வதனாய நிருஸிம்ஹாய ஸகல பூத ப்ரேத ப்ரமதனாய ஸ்வாஹா.


மேற்கு முகம்-கருடர்

(இந்த ஸ்லோகத்தை பாராயணம் செய்து வர எல்லாவித உடல் உபாதைகள், விஷக்கடி, விஷஜுரங்கள் ஆகியவை நீங்கும்)

ஓம் நமோ பகவதே பஞ்சவதனாய பச்சிம முகே கருடாய
ஸகல விஷ ஹரணாய ஸ்வாஹா.

வடக்கு முகம்- வராஹர்

(இந்த ஸ்லோகத்தை பாராயணம் செய்து வர தரித்திரம் நீங்கி செல்வம் பெருகும்)

ஓம் நமோ பகவதே பஞ்சவதனாய உத்தர முகே ஆதிவராஹாய
ஸகல ஸம்பத் கராய ஸ்வாஹா.


மேல்முகம்-ஹயக்ரீவர்

(இந்த ஸ்லோகத்தை பாராயணம் செய்து வர ஜன வசீகரம், வாக்குபலிதம், கல்வியில் முன்னேற்றம் ஏற்படும்)

ஓம் நமோ பகவதே பஞ்ச வதனாய ஊர்த்வ முகே ஹயக்ரீவாய
ஸகல ஜன வசீகரணாய ஸ்வாஹா.

ஸ்ரீ ஆஞ்சநேயர் துதி

அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி
அஞ்சிலே ஒன்றாறாக ஆரியர்க்காக ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கு கண்டு அயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்று வைத்தான் அவன் நம்மை அளித்துக் காப்பான்.