sai yoga centre

Showing posts with label மந்திரங்கள். Show all posts
Showing posts with label மந்திரங்கள். Show all posts

Friday, April 7, 2017

நரசிம்ம ப்ரபத்தி



நரசிம்ம ப்ரபத்தி
---------------------------
முற்பிறவிகளில் பித்ருக்களைப் பூஜை செய்யாமல் இருந்திருப்பது, தெய்வத்தையும் திருக்கோயில்களையும் நிந்திப்பது,
ஒற்றுமையாக இருந்த குடும்பத்தை கோள் சொல்லிப் பிரிப்பது, வாயில்லா ஜீவன்டளைத் துன்புறுத்துவது போன்ற பாவங்களினால்தான் இத்தகைய துன்பங்கள் மறுபிறவிகளில் ஏற்படுவதாக பாரதத் திருநாட்டை ஆண்ட போஜன் என்ற மன்னன், தனது நீதிநூலில் கூறியுள்ளார்.


தினமும் காலையில் நீராடியபின்பு, கீழ்கண்ட
ஸ்ரீ நரசிம்ம ப்ரபத்தி என்ற ஸ்லோகத்தை
48 தடவை சொல்லி, ஸ்ரீ லட்சுமி நரசிம்மரின்
படத்தை வைத்து பூஜித்து வரவும்.

இந்த அதி அற்புத, மகத்தான சக்திவாய்ந்த ஸ்லோகம் உலகப் பிரசக்தி பெற்ற ஸ்ரீமத் அகோபில மடத்தின் 44 வது பட்டம் அழகிய சிங்கரும் திருவரங்கத்தின் கோபுரத்தை நிர்மாணித்தவருமான ஸ்ரீ முக்கூர் ஸ்வாமிகள் அருளிய சக்தி மிகுந்த ஸ்லோகமாகும் இது, saispiritualcenter.org

உங்கள் துன்பத்தையும் துயரத்தையும் போக்குவதற்கு
இதைவிட சிறந்த பரிகாரம் கிடையாது.

இந்த ஸ்லோக்ததை சொல்லி ஸ்ரீ லட்சுமி நரசிம்மரைப் பூஜித்து பிறகு, காய்ச்சிய பசும்பால் அல்லது வெல்லப் பானகம் நைவேத்தியம் செய்து நீங்களும், உங்கள் குடும்பத்திலுள்ள மற்றவர்களும் அதைப் பிரசாதமாகச் சாப்பிட்டு வரவும். கைமேல் பலனளிக்கும் மகத்தான வீர்யம் வாய்ந்த புண்ணிய ஸ்லோகம் இது.

ஸ்ரீ நரசிம்ம ப்ரபத்தி

1. மாதா ந்ருஸிம்ஹ: பிதா ந்ருஸிம்ஹ:
2. ப்ராதா ந்ருஸிம்ஹ: ஸகா ந்ருஸிம்ஹ:
3. வித்யா ந்ருஸிம்ஹ: த்ரவிணம் ந்ருஸிம்ஹ:
4. ஸ்வாமி ந்ருஸிம்ஹ: ஸகலம் ந்ருஸிம்ஹ:
5. இதோ ந்ருஸிம்ஹ: பரதோ ந்ருஸிம்ஹ:
6. யதோ யதோ யாஹி: ததோ ந்ருஸிம்ஹ:
7. ந்ருஸிம்ஹ தேவாத் பரோ நகஸ்சித்:
8. தஸ்மான் ந்ருஸிம்ஹ சரணம் ப்ரபத்யோ:

தமிழாக்கம்

1. நரசிம்மனே தாய்; நரசிம்மனே தந்தை
2. சகோதரனும் நரசிம்மனே; தோழனும் நரசிம்மனே
3. அறிவும் நரசிம்மனே; செல்வமும் நரசிம்மனே
4. எஜமானனும் நரசிம்மனே; எல்லாமும் நரசிம்மனே
5. இந்த லோகம் முழுவதிலும் நரசிம்மனே; பரலோகத்திலும் நரசிம்மனே
6. எங்கெங்கு செல்கிறாயோ அங்கெல்லாம் நரசிம்மனே
7. நரசிம்மனைக் காட்டிலும் உயர்ந்தவர் ஒருவரும் இல்லை.
8. அதனால் நரசிம்மனே! உம்மை சரணடைகிறேன்.

Tuesday, March 7, 2017

நீங்கள் வேண்டும் வரங்களை எல்லாம் நிறைவேற்றும் சண்முகன் மந்திரம்



நீங்கள் வேண்டும் வரங்களை எல்லாம் நிறைவேற்றும் சண்முகன் மந்திரம்

🌹 🌿 🌹 :::::::::::: 🌿 🌹 🌿 ::::::::::: 🌿 🌹 🌿 🌹

நீங்கள் வேண்டும் வரங்களை எல்லாம் நிறைவேற்றும் இந்த சண்முகன் மந்திரம். பலன் தரும் இந்த மந்திரத்தை தினமும் சொல்லி வந்தால் நினைத்தவை நிறைவேறும்.

சரவண மந்திராக்ஷ ஷட்க ஸ்தோத்திரம்🌹🌿

பவாய பர்காய பவாத்மஜாய
பஸ்மாய மாநாத்புத விக்ரஹாய
பக்தேஷ்ட காமப்ரதகல்பகாய
பகாரரூபாய நமோ குஹாய

பொருள் :🌿🌹

மங்கள வடிவினனும் பாவங்களைப் போக்குகிறவனும் பரமசிவனின் மனதுக்குகந்த புத்திரனும் விபூதியைத் தரித்த பேரழகுத் திருவுரு கொண்டவனும் பக்தர்கள் கோரியவற்றை நிறைவேற்றும் கற்பக விருட்சம் போன்றவனும் ‘ப’ என்ற (சரவணபவ) அட்சரத்தின் வடிவாய்த் திகழ்பவருமான குஹப்பெருமானே, நமஸ்காரம். saispiritualcenter.org

Friday, February 17, 2017

அஷ்டலஷ்மியும் மகிழ்ந்து ஐஸ்வர்யம் தந்திடும் மஹாலக்ஷ்மி அஷ்டகம்



அஷ்டலஷ்மியும் மகிழ்ந்து
ஐஸ்வர்யம் தந்திடும்
மஹாலக்ஷ்மி அஷ்டகம்
இந்திரனால் அருளியது
அனைவரும் படித்து வணங்கி
சகல ஐஸ்வர்யம் பெறுவோம்


மஹாலஷ்மி அஷ்டகம்

நமஸ்தேஸ்து மஹாமாயே
ஸ்ரீபீடே ஸூரபூஜிதே
சங்கசக்ர கதாஹஸ்தே
மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

மாயை வடிவானவளே ஸ்ரீ சக்கரத்தில்
வீற்றிருப்பவளே தேவர்களால்
வழிபடப் பெறுபவளே சங்கு சக்கரம்
கதை இவற்றை கையில் தாங்கியவளே
மஹாலக்ஷ்மியே உன்னை வணங்குகிறேன்
நமஸ்தே கரூடாரூரே
கோலாஸூர பயங்கரி
ஸர்வபாபஹரே தேவி
மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

கருடனை வாகனமாகக் கொண்டவளே கோலாசூரனை நடுங்கச் செய்தவளே
எல்லா பாவங்களையும் அழிப்பவளேமஹாலஷ்மியே
தேவியே உன்னை வணங்குகின்றேன்
ஸர்வஜ்ஞே ஸ்ர்வவரதே
ஸ்ர்வதுஷ்ட பயங்கரி
ஸர்வதுக்கஹரே தேவி
மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

எல்லாம் அறிபவளே எல்லா வரங்களையும் தருபவளே
தீயவர்களை அச்சமுற செய்பவளே
துன்பங்களை அழிப்பவளே
மஹாலக்ஷ்மி தேவியே உன்னை
வணங்குகின்றேன்
ஸித்திபுத்திப்ரதே தேவி
புக்திமுக்தி ப்ரதாயினி
மந்த்ரமூர்த்தே ஸதா தேவி
மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

ஆற்றல் விழிப்புணர்வு இன்பம்
மோட்சம் எல்லாம் நல்குபவளே
மந்திர வடிவானவளே
மஹாலக்ஷ்மியே உன்னை வணங்குகின்றேன்
ஸ்தூலஸூஷ்ம மஹாரௌத்ரே
மஹாசக்தி மஹோதரே
மஹாபாப ஹரேதேவி
மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

தூல சூட்சும வடிவானவளே
மிகவும் பயங்கர வடிவானவளே

எல்லையற்ற ஆற்றல் கொண்டவளே
அனைத்தையும் தன்னுள் கொண்டவளே மகாபாவங்களை
அழிப்பவளே மஹாலக்ஷ்மியே
உன்னை வணங்குகின்றேன்
பத்மாஸனஸ்திதே தேவி
பரப்ஹ்ம ஸ்வரூபிணி
பரமேசி ஜகன்மாதா
மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

தாமரை மலரில் வீற்றிருப்பவளே
பரப்பிரம்ம வடிவானவளே
மேலான இறைவியே உலக அன்னையே மஹாலக்ஷ்மியே
உன்னை வணங்குகின்றேன்
ச்வேதாம்பாதரே தேவி
நானாலங்கார பூஜிதே
ஜகத்ஸ்திதே ஜகன்மாதர்
மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

வெண்ணாடை தரித்தவளே
பலவித அலங்காரத்துடன் இருப்பவளே உலகிற்கு ஆதாரமானவளே உலக அன்னையே
மஹாலக்ஷ்மியே உன்னை
வணங்குகின்றேன்
மஹாலக்ஷ்மியஷ்டக ஸ்தோத்ரம்
ய படேத் பக்திமான் நர
ஸர்வஸித்திமவாப்னோதி
ராஜ்யம் ப்ராப்னோதி ஸ்ர்வதா

மகாலக்ஷ்மியைப் பற்றிய இந்த
இந்த எட்டு பாடல்களையும்
பக்தியோடு படிப்பவர்கள்
எல்லா செல்வங்களையும் நன்மைகளும் பெறுவார்கள்
ஏக காலம் படே நித்யம்
மஹாபாப விநாசனம்
த்விகாலம் ய படேந்நித்யம்
தனதான்ய ஸ்மன்வித

தினமும் இந்த அஷ்டகத்தை ஒரு முறை படித்தால் மகாபாவங்கள்
அழியும் இருமுறை படித்தால்
செல்வ வளமும் தான்ய வளமும்
பெருகும்
த்ரிகாலம் ய படேந்நித்யம்
மஹாசத்ரு விநாசனம்
மஹாலஷ்மீர் பவேந்நித்யம்
ப்ரஸன்னா வரதா சுபா

மும்முறை படிப்பவர்களின் எதிரிகள்
என்றென்றும் அழிக்கப்படுவார்கள்
என்றென்றும் மஹாலஷ்மி அவர்களிடம் மகிழ்வுடன் எழுந்தருளி
பதினாறு செல்வங்களையும் தந்து
மகிழ்சியோடு மங்களமும் நல்குவாள்
இதி இந்த்ரக்ருத மஹாலஷ்ம்யஷ்டகம்
ஸம்பூர்ணம்

இந்திரனால் அருளப் பெற்ற
மஹாலக்ஷ்மி அஷ்டகம் நிறைவுற்றது

ஜெயமாம் லக்ஷ்மி ஜெய ஜெய லக்ஷ்மி
மஹாலக்ஷ்மி

Friday, February 3, 2017

மந்திரங்களின் மாபெரும் சக்தியும், மந்திரங்களை சொல்வதால் கிடைக்கும் பயன்களும்



மந்திரங்களின் மாபெரும் சக்தியும்,

மந்திரங்களை சொல்வதால் கிடைக்கும் பயன்களும்


ஆலய வழிபாட்டில் மிக, மிக முக்கியத்துவம்வாய்ந்தது மந்திரங்கள்.


ஒவ்வொருகடவுளுக்கும், ஒவ்வொரு வகையானமந்திரங்கள் உள்ளன. இந்த மந்திரங்களைதெரிந்து கொண்டு உரிய முறையில் உச்சரித்து வழிபாடு செய்யும் போது கடவுள் மனம் மகிழ்ந்து, நமக்குத் தேவையானதை கொடுப்பார்.


அதை விடுத்து ஆலயத்துக்கு சும்மா வெறுமனே சென்று சாமி கும்பிட்டு விட்டு வருவதில் எந்த பிரயோஜனமும் இல்லை.


எனவே அவசியம் மந்திரங்களைத் தெரிந்துகொள்ளுங்கள்.


சரி... மந்திரம் என்றால் என்ன?


மனம் + திறம் = மந்திரம். மனதுக்கு திடம்கொடுப்பதுதான் மந்திரம்.


கடவுள்களின் மூலமந்திரத்தை மீண்டும், மீண்டும் சொல்லும் போது, முதலில் நமது மனது திடப்படும்.


பிறகு அந்த மந்திர ஒலிகள் இடையூறுகளை விலக்கி, இனிய பாதைக்கு உங்களை அழைத்து

செல்லும்.


இந்த உண்மையை நம் முன்னோர்கள் பலஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தெரிந்துகொண்டனர். சரியான மந்திரங்களை உச்சரித்து பலன் பெற்றனர்.


மந்திரங்களில் 7 கோடி உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த மந்திரங்கள் சித்தர்களாலும், மகான்களாலும் இறைவனிடம்இருந்து வரங்களாக பெறப்பட்டவையாகும்.


மந்திரங்கள் பல வகைப்படும். பிரணவ

மந்திரம், காயத்ரி மந்திரம், பீஜாட்சர

மந்திரங்கள், அஷ்ட கர்ம மந்திரங்கள்,

வழிபாட்டு மந்திரங்கள் என்று சொல்லிக் கொண்டே போகலாம்.


சில மந்திரங்களை வீடுகளில் மட்டுமே

உச்சரிக்க வேண்டும். சில

மந்திரங்களைஆலயங்களில் தான் சொல்ல வேண்டும்.


ஒவ்வொரு சன்னதியிலும் உள்ள

மூர்த்தத்துக்கு ஏற்ப மந்திரங்களை சொன்னால் நிச்சயம் பலன் தேடி வரும்.


சில மந்திரங்கள் காடு மற்றும் குகைக்குள் மட்டுமே ஜெபிக்க வேண்டும். சில மந்திரங்கள் திருமணம் ஆனவர்கள் மட்டுமே சொல்ல வேண்டும்.ஆனால் ஆன்மிகத் தகுதி பெறாமல்மந்திரங்களை சொல்லக்கூடாது.


இறைவனிடம் மனதை சரண் அடையச் செய்த ஒவ்வொருவரும் மந்திரங்களை ஜெபிக்கவேண்டும்.


தினமும் ஏதாவது ஒரு மந்திரத்தை 108

தடவை சொல்வது மிகவும் நல்லது. ஆலய பிரகாரங்களில் அமர்ந்து மந்திரங்களைசொல்லும் போது அது நிச்சயம் பல மடங்கு பலன்களை அள்ளித்தரும்.


மந்திரம் என்றதும் நிறைய பேர் என்னவோ... ஏதோ என நினைத்து பயந்து விடுகிறார்கள். சிலர் அது நமக்குஒத்து வராது என்று முயற்சி செய்யாமலே விட்டு விடுகிறார்கள்.


சிலர் எல்லாமந்திரங்களும் சமஸ்கிருதத்தில்தானே

இருக்கிறது. அதை உச்சரிக்க தெரியாது என்று நினைப்பார்கள்.


இப்படியெல்லாம் நினைத்து, மனதைப் போட்டு குழப்பிக்கொண்டு வீணாக கவலைப்பட வேண்டியதில்லை. ஏனெனில் மந்திரங்கள் மிக,மிக எளிமையானவை.


தமிழிலேயே ஏராளமான மந்திரங்கள், பதிகங்கள், பாடல்கள் உள்ளன.


ஓம்கணபதி நமஹ,


ஓம் நமச்சிவாய,


ஓம் நமோநாராயண,


ஓம் சக்தி பராசக்தி,


ஸ்ரீராம ஜெயராம ஜெய ஜெய ராமா


ஓம் சிவ சிவ ஓம்


என்றெல்லாம் சொல்வது மிக, மிக எளிமையான மந்திரங்கள்.


இந்த மந்திரங்களை உச்சரிப்பது போல குலதெய்வத்தின் பெயரையும் மந்திரமாக உச்சரிக்கலாம். இந்த மந்திர உச்சரிப்புக்கு இணையான மகிமை உலகில் வேறு எதுவும் இல்லை.


வாழ்க வளமுடன் என்று சொல்வது கூட

மிகவும் சக்தி வாய்ந்த ஒரு மந்திரமாக

கருதப்படுகிறது.


திருமந்திரம், பெரியபுராணம், கந்த சஷ்டி கவசம், கந்தரலங்காரம் ஆகியவற்றில் உள்ள பாடல்கள் சக்தி வாய்ந்தவை.


பன்னிரு திருமுறைகளில் சகல காரிய சித்தியளிக்கும் மந்திரங்கள் ஏராளமாக

புதைந்து கிடைப்பதை காணலாம்.


செல்வம் வேண்டுமா? உடனே திருமணம் நடைபெற வேண்டுமா? கடன் பிரச்சினை தீர வேண்டுமா? நோய்கள் தீர வேண்டுமா? ஏழ்மையில் இருந்து விடுபட வேண்டுமா? எல்லாவற்றுக்குமே தமிழ் வேத மந்திரங்கள் உள்ளன.


காலையில் படுக்கையில் இருந்து எழும் போதே சிவ... சிவ என்று சொல்லிக் கொண்டே எழுந்திருக்கலாம். அல்லது உங்களுக்கு பிடித்த சாமி பெயரை சொல்லலாம்.


தீராத வியாதிகளால்அவதிப்படு

பவர்கள் ஆலய சன்னதியில் அமர்ந்து திருநீல கண்டப் பதிகத்தின் முதல் திருமுறையைப் பாட நோய்

பஞ்சாக பறந்து விடும்.


சிலருக்கு சனிக்கிரக பாதிப்பு மிகக் கடுமையாக இருக்கும். அத்தகைய பாதிப்புக்குள்ளானவர்கள் திருஞானசம்பந்தர் திருநள்ளாறில் பாடியபதிகத்தை 108 தடவை பாராயணம் செய்தால் பயன் அடையலாம்.


அது போல திருஞான சம்பந்தர்

திருநெடுங்குளம் எனும் தலத்தில் பாடிய இடர்களையும் பதிகத்தை பாடினால் எவ்வளவு பெரிய

தடைகளும் உடைபட்டு விலகி ஓடி விடும்.


திருச்சோற்றுத்துறை எனும் தலத்தில்

திருஞானசம்பந்தர் ஒரு பதிகம் பாடினார். அந்த பதிகத்தை ஜெபித்தால் வசதியான வாழ்வை பெற முடியும்.


அது போல அவர் திருமருகல் எனும் தலத்தில் பாடிய பதிகத்தை ஆலய பிரகாரத்தில் அமர்ந்து படித்தால் உடனே திருமணம் கை கூடி விடும்.


இப்படி நோய்கள் நீங்கவும், கிரக தோஷங்கள் விலகவும் பதிகங்களும், மந்திரங்களும் நிறைய உள்ளன.


அவற்றையெல்லாம் தெரிந்து கொண்டுஜெபித்தால் நிச்சயமாக உரிய பலன்கள் கிடைக்கும்.


பதிகங்களை படிப்பதால் எப்படி பலன் கிடைக்கும் என்று சிலருக்கு சந்தேகம் எழக்கூடும். மந்திரங்கள், பதிகங்களில் உள்ள ஒவ்வொரு சொற்களும் சித்தர்கள்,ஆழ்வார்கள்,

நாயன்மார்களால் சக்தி வாய்ந்த அதிர்வைபெற்றுள்ளன.


இந்த அதிர்வுகள் ஒலி சக்திகளாகும். இந்த அதிர்வுகள் ஒன்று சேரும் போது சக்தி பல மடங்கு அதிகரித்து, நமக்கு பலனைப் பெற்றுத் தரும்.


நோய் தீர்க்கும் தன்வந்த்ரி ஸ்லோகத்தை 27 தடவை சொன்னால் இத்தகைய பலன்களை பெற முடியும்.


ஆதிசங்கரர் சவுந்தர்யலஹரியில் கூறியுள்ள ஒரு மந்திரப் பாடலை பாடினால் எவ்வளவு பெரிய காய்ச்சலும் உடனே நீங்கி விடும்.


ஆஞ்சநேயர் சன்னதியில் வழிபடும்போது ஆஞ்சநேயர் மந்திரத்தை கூறினால் கொடிய நோய்கள் குணமாகும்.


அது போல அனுமன் கவசத்தை ஜெபித்தால் சுறுசுறுப்பாக இருக்கலாம். அம்பாள் சன்னதிகளில் வழிபடும்போது, ரோக நிவரண அஷ்டகத்தை சொல்லலாம்.


மந்திரங்கள், பதிகங்களை படிக்கும் போதோ, சொல்லும் போதோ வாய் விட்டு சொல்வதை விட மனதுக்குள் சொல்வது நல்லது.


நமது புராணங்கள், இதிகாசங்கள், வேதங்கள், உபநிடதங்களில் ஏராளமான மந்திரங்கள் உள்ளன.


திருமந்திரம், கந்தர் அணுபூதி,

கந்தகஷ்டி கவசம் போன்றவற்றில் மந்திரங்கள் மறைந்து கிடக்கின்றன. எனவே மந்திரச் சொற்கள் நிறைந்த பாடல்களை தெரிந்து கொண்டு உள்ளம் உருகப்பாடினால் நிம்மதியான வாழ்வு பெறலாம். அதிலும் ஆலயங்களில் பாடல்களை பாடும் போது நிச்சயம் இரட்டிப்பு பலன் கிடைக்கும்.


சில பதிகங்கள், மந்திரங்களை குறிப்பிட்டஊர்களில் உள்ள ஆலயங்களில் அமர்ந்து

ஜெபிப்பது நல்லது என்று வரையறுக்கப்பட்டுள்ளது.


ஏனெனில் குறிப்பிட்ட தலத்தில், குறிப்பிட்ட மந்திரத்தை உச்சரிக்கும்போது 100

சதவீதம் பலன் கிடைப்பதை அனுபவப்பூர்வமாக உணரலாம்.


சிலமந்திரங்களை ஆலயங்களில் சில செயல்கள் செய்யும் போது உச்சரிக்க வேண்டும். உதாரணத்துக்கு திருநீறு பூசும் போது "ஓம் சிவாய நம" என்று சொல்லிக் கொண்டே பூசவேண்டும்.


அது போல ஒரு செயலை தொடங்கும் போது "ஸ்ரீகணேச பஞ்ச ரத்னம்" எனும் மந்திர வலிமையுள்ள சுலோகங்களை உச்சரித்தால் நமது நற்காரியங்கள் அனைத்தும் தடை இல்லாமல் நிறைவேறும்.


"ஸ்ரீ விஸ்வநாதாஷ்டகம்" எனும் 8 சுலோகங்கள் மந்திர வலிமை பெற்றவை. இந்த சுலோகங்களை திங்கள் தோறும் சிவபெருமான் சன்னதியில் நின்று கூறி வழிபட்டால் வாழ்வில் எதற்கும், எந்த இடையூறும் வராது.


அதிகாலை நேரத்தில் சக்தி தலங்களுக்கு சென்றால் மறக்காமல் "ஆதிசங்கரர் அருளிய கவுரி சத்கம்" பாட வேண்டும்.இந்த மந்திரம் நிம்மதியான வாழ்வைத்

தேடித்தரும்.


வசிஷ்ட முனிவர் சிவநாம மந்திரங்கள் நிறைய எழுதியுள்ளார். அந்த

மந்திரங்களை தினமும் மனதுக்குள் 3 தடவை சொன்னால் போதும், தரித்திரங்கள் ஓடி விடும்.


கந்தபுராணத்தில் வரும் சங்கர சம்ஹிதை மந்திரத்தை சிவாலயத்தில் அமர்ந்து படித்தால் எல்லாவித சுக போகங்களும் தேடி வரும்.


அது போல ஆதிசங்கரர் இயற்றிய ஸாம்ப பரப்பிரம்ம சுலோகத்தை தினமும் ஆலய பிரகாரங்களில் அமர்ந்து படித்து வழிபட்டு வந்தால் அஷ்டமா சித்திகளைப் பெறலாம்.


ப்ருதி வீஸ்வராய ஸ்தோத்திரம் எனும்

மந்திரத்தை சிவாலய கருவறை முன்பு நின்று உச்சரித்தால் குடும்பத்தில் அமைதிஉண்டாகும்.


துர்கா தேவி முன்பு நின்று

ஸ்ரீதுர்கா கவசம் பாடினால் கணவன்-மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். பிரிந்த தம்பதிகள் ஒன்று சேருவார்கள்.


ஸ்ரீசுப்பிரமணிய பஞ்சரத்னம் பாடினால்முருகன் அருள் பெறலாம்.


ஸ்ரீமகாலட்சுமிசன்னதி முன்பு நின்று அவருக்குரிய அஷ்டக மந்திரத்தை கூறினால் நமது பொருளாதார

நிலை உயரும்.


குங்கும பஞ்சதசி என்றொரு மந்திரம் உள்ளது.காஞ்சீபுரம் காமாட்சி அம்மன் ஆலயத்தில்இதை சிறப்பாக செய்வார்கள். இந்தபஞ்சதசியை பாடினால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.


இப்படி ஒவ்வொரு சன்னதிலும் உச்சரிக்க தனி, தனி மந்திரங்கள் உள்ளன. அருளும் பொருளும் பெற அஷ்டலட்சுமி ஸ்தோத்திரம் சொல்ல வேண்டும். சகல கலைகளிலும் சிறக்க சகலகலா வல்லி மாலை சொல்ல வேண்டும்.


இத்தகைய மந்திரங்களில் "காயத்ரி மந்திரம்" உயர்வானது. இது வேதங்களின் தாய் என்று போற்றப்படுகிறது. அது போல "பிரணவ மந்திரம்" (ஓம்) மிக, மிக சக்தி வாய்ந்தது. சூரியனில் இருந்து வெளியாகும் ஓசை "ஓம்" என்று ஒலிப்பதாக சமீபத்தில் நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.


அனைத்து மதங்களிலும் மந்திர உச்சாடனைகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் தருகின்றனர். இஸ்லாத்தில் ஓதுவது, கிருஸ்துவத்தில் ஜெபம் செய்வது, என மட்டுமல்லாமல் பல்லாயிரமாண்டுகளுக்கு முன்பிருந்தே ஹிந்து மத இதிகாசங்களிலிருந்தும், புராணங்களில் இருந்தும் மந்திரங்களின் மகத்துவத்தை ஹிந்துக்கள் புரிந்து, உணர்ந்து உலகிற்கு அளித்துள்ளது இம் மானுடப்பிறப்பு பயன் பெறும் அளப்பறியா மகத்துவம்.

Monday, April 11, 2016

ஓம் நமோ நாராயணாய



ஓம் நமோ நாராயணாய

சிவவாக்கியர் கூறும் மந்திரம் ஓம் நமோ நாராயணாய எனும் எட்டெழுத்து மந்திரம், மனதில் நினைத்துக் கொண்டு நூறு உருப்போட்டால் பஞ்சமாபாதகங்கள் செய்திருந்தாலும் அவை பஞ்சுபோல் மறைந்து விடும்.

அஷ்டாக்ஷரம் என்பது எட்டெழுத்தைக் குறிக்கும்.


ஓம் நமோ நாராயணாய

ஓம் என்பது ஓரெழுத்தாகவும், நம என்பது இரண்டெழுத்தாகவும், நாராயணாய என்பது ஐந்தெழுத்தாகவும் ஆக மொத்தம் எட்டெழுத்தும் சேர்ந்து நாராயண அஷ்டாக்ஷரம் எனப்படும். இதைத் தொடர்ந்து கூறிவர நிறைந்த ஆயுள் கிடைக்கும். எல்லாவித ஆபத்துக்களும் நீங்கும். தீமைகள், துன்பங்கள் தொடராது. முக வசீகரம் கிடைக்கும். எல்லாச் செல்வங்களும் கிட்டும். காலையில் இதை கூறுபவன் இரவில் செய்த பாவத்தை நாசம் செய்கிறான். மாலையில் கூறுபவன் பகலில் செய்த பாவத்தை நாசம் செய்கிறான். உச்சிப்பொழுதில் கூறுபவன் ஐந்துவித மகா பாதகங்கள், உப பாதகங்களிலிருந்து விடுபடுகிறான். எல்லா வேதங்களையும் ஓதிய புண்ணியத்தை அடைகிறான்.

மேற்கூறிய அனைத்தும் நாராயண உபநிஷத்தில் உள்ளவை.

குலந்தரும் செல்வந்தந்திடும் அடியார்
படுதுயராயின வெல்லாம்
நிலந்தரச் செய்யும் நீள்விசும்பருளும்
அருளொடு பெருநிலமளிக்கும்
வலந்தரும் மற்றுந்தந்திடும் பெற்ற
தாயினு மாயினசெய்யும்
நலத்தருஞ் சொல்லை நான் கண்டு கொண்டேன்
நாராயணா வென்னும் நாமம்.

Monday, February 6, 2012

முழுமையான நிறைவான த்யானம்தான் வாழ்வின் உயரிய இன்பங்களை வழங்கும் என நமது சாஸ்திரங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. சரி த்யானத்தின் பொருளை ஆராய்ந்தால் ஆச்சர்யகரமாய் "த்யான நிர்விஷ்யம் மனஹ" என்கிறார்கள், அதாவது எதுவுமற்ற வெறுமையான மனநிலையும் அதையொட்டிய எண்ணங்களும்.
சரி...தியானத்தை அறியாதவர்கள் Material world எனப்படும் வாழ்வியல் இன்பங்களை எப்படி அடைவதாம்? சாமானியர்களும் தங்கள் ஆசைகளையும், இலக்குகளையும் அடைவதற்காகவே பண்டைய மகரிஷிகள் வழங்கிய "சாதனா" எனப்படும் "யந்திர,தந்திர,மந்திர" சாஸ்த்திரங்கள். இவை பற்றிய குறிப்புகள் இந்து சாஸ்திரங்களில் மட்டுமல்லாது பௌத்த, சமண, இஸ்லாமிய, கிருத்துவ மத நூல்களிலும் காணக்கிடைப்பது குறிப்பிடத்தக்கது.

பொதுவில் இவை மனிதகுல மேம்பாட்டிற்காக மட்டுமே உபயோகப்படுத்தவேண்டும் என்பதை அனைத்து மதங்களும் உறுதியாக உணர்த்தியிருக்கின்றனர்.

இந்து மதத்தில் மந்திரம், தந்திரம், யந்திரம் ஆகிய மூன்றும்,மூன்று மார்கங்களாய்(பாதை) சொல்லப்படுகிறது.மந்திரம் என்பது ஞான மார்கமாகவும் , தந்திரம் பக்தி மார்கமாகவும், யந்திரம் கர்மசந்யாச மார்கமாகவும் வகைப்படுத்தப்பட்டுள்ளது.இந்த மூன்றும் ஏதோ ஒருவகையில் சம்பந்தப்படாமல் எந்த ஒரு வழிபாடும் நிறைவாகாது என்றும் சொல்லப்படுகிறது.
இந்து மதத்தில் இறைவன் "வேதமந்த்ர சொரூப நமோ நமோ" என துதிக்கப்படுகிறார்.



தென்னாடுடைய சிவனே போற்றி!
என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி!
என்று சமத்துவத்தைச் சொன்ன தமிழில் மந்திரங்கள் மறைபொருளாக இருந்திருக்க வாய்ப்பில்லை, காலப்போக்கில் அவை மறைக்கப்பட்டதாகவே கருதலாம்."ஊனுடம் பாலயம் உள்ளம் பெருங்கோவில்" என இறைவனை தங்கள் உடலில் கண்ட் சித்தர்கள் கூட இம்மந்திர உச்சாடனங்களை தங்கள் பாடல்களில் விளக்கியுள்ளனர்.

மேலும் விவாதிப்பதற்கு முன், மந்திரமொழி பற்றியும் அதன் அடிப்படைகளையும் தெரிந்து கொள்வோம்.ஒரு எழுத்து உருவாக்கும் ஒலியானது நமது உடலின் எந்த இடங்களின் முய்ற்சியால் உருவாகிறது என்பதை இதுவரை யாராவது கவனித்திருக்கிறீர்களா?, கொஞ்சம் முயற்சித்துப் பாருங்கள் ஆச்சரியமான விடயங்களை உணரமுடியும்.

ஆனால் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நமது முன்னோர்கள் இந்த ஒலிமூலங்கள் நமது உடலில் எங்கு மையம் கொண்டுள்ளது என உணர்ந்து அதை தூண்டும் வகையிலான ஒலிக் குறிப்புகளை உருவாக்கியிருந்தனர்.இந்த சொற்களுக்கு அர்த்தங்கள் ஏதுமில்லை. இவற்றை 'பீஜங்கள்'என்றும், உடலில் ஒலி தோண்றும் இடங்களை 'தானங்கள்' என்றும் கூறுகிறார்கள்

மந்திரங்களின் பொருள் எனப்பார்த்தால், மொழிப்பொருள் மற்றும் ஒலிப்பொருள் என இருவகையாக கொள்ளலாம்.ஒலிப்பொருள்தான் நுட்பமானது. மந்திரங்களை உச்சரிக்கும் முறையை மூன்று வகையாக முறையே, வாயினால் சப்தமாய் உச்சரிப்பதை'வைகரி'என்றும், உதட்டால் உச்சரிப்பதை 'உபான்ஸு' என்றும் மனதால் உச்சரிப்பதை 'மானசீகம்' என்றும் சொல்கிறார்கள்.இதில் மானசீக முறையே அதிக பலனைத் தருமென்ற கருத்தும் உள்ளது.

மானசீகமாய் உச்சரிக்கும்போது மந்திரங்கள், உள்மனதில் ஊடுருவி, உடலெங்கும் பரவி பின் உடலைத்தாண்டி பிரபஞ்சத்தில் அதிர்வுகளை உருவாக்கி உள்மனத்தையும் பிரபஞ்சத்தையும் இனைக்கும் அனுபவத்தை சொல்லித் தெரிவதைவிட உணர்வதே சிறப்பாயிருக்கும். இம்மந்திர அதிர்வுகள் நொடிக்கும் நாலு லட்சம் கிலோமீட்டர் வேகத்தில் பரவுவதாயும் ஒரு குறிப்பு காணக்கிடைக்கிறது.
தேவபாஷை' எனக் கூறப்படும் சமஸ்கிருதத்தில் சொல்லப்படும் மந்திரங்களுக்குத்தான் வலிமை உண்டு எனக்கூறப்படுவதை மறைமலையடிகள் தனது 'சிவஞானபோத ஆராய்ச்சி' என்கிற நூலில்(பக்கம் 112) தக்க ஆதாரங்களுடன் நிராகரித்திருக்கிறார். மந்திரம் என்பது தமிழ்வார்த்தை என்பதை பலர் ஏற்றுக்கொள்வதில்லை. ஆனால் தொல்காப்பியம் முதல் பழந் தமிழ் நூல்களில் இந்த வார்த்தை கையாளப்பட்டிருக்கிறது.மந்திரத்தை மனதின் திறம் என பொருள் கொள்ளலாம்.மனதை உறுதி செய்ய மந்திரம் பயனாகிறது என்பதுதான் மந்திரத்தின் ஆகக்கூடிய பலன் என நான் கருதுகிறேன்.

நமது உடலானது பல நாடிகளால் ஆனதாக சித்தர்கள் குறிப்பிடுகின்றனர்.நாடிகளை வசப்படுத்தினால் எதுவும் சாத்தியமாகுமாம்.சப்த சலனமாய் உச்சரிக்கும் மந்திர ஒலிகள் இந்த நாடிகளைத் தூண்டி உச்சரிப்பவர் மற்றும் கேட்பவரிடம் சலனத்தை உண்டாக்கும் என்கிறார்கள்.மந்திரங்களை உச்சரிக்கும்போது அந்தந்த பீஜங்களுக்கான உடல் உறுப்பின்மீது சித்தத்தை நிறுத்தி தொடர்ந்து கூற அந்த மந்திரங்களுக்கான பலனை பெறலாமாம்.மாறாக 'பதஞ்சலி யோக சூத்திரம்'என்கிற நூலில் மந்திரத்தின் பொருள் தெரியாமல் எத்தனை முறை உச்சரித்தாலும் பயனில்லை என கூறுகிறது.

மந்திரங்களை தொடர்ந்து உச்சரிப்பதை 'உருவேற்றுதல்' என்பர்.மந்திர சொற்களை குறிப்பிட்ட எண்ணிக்கையில் உருவேற்றினால் உள்ளம் உறுதி பெற்று தான் சொல்வதும் செய்வதும் சாத்தியமாகும் என்கிற நம்பிக்கை தோன்றுகிறது.இந்த நம்பிக்கையே வாழ்வியல் சவால்களை எதிர்கொள்ள உதவுகிறது.

இந்த பீஜங்கள் மற்றும் தானங்களை ஒரு சரியான குருவே உணர்த்தமுடியும்.சித்தர் மரபில் குருவின் மகத்துவம் உயர்வாக கூறப்படுகிறது. திருமூலர் கூட சிவனை வழிபடுவதால் பயனில்லை, சிவனை காட்டும் குருவை வழிபட்டாலே போதுமென கூறுகிறார்.'வெளியே உள்ள குரு நமக்கு உள்ளே உறையும் குருவை காட்டுகிறான்" என்பது சித்தர்களின் தத்துவம்.

தமிழகத்தை பொறுத்த வரையில் 'ஓம்' என்கிற ஓரெழுத்து மந்திரமும். 'சிவாயநம' என்கிற ஐந்தெழுத்து மந்திரமும், 'சரவணபவ' என்கிற ஆறெழுத்து மந்திரமும், வைணவத்தில் 'ஓம் நமோ நாராயணய' என்கிற எட்டெழுத்து மந்திரம்தான் அனைவரும் அறிந்தது.இதைத் தாண்டி எண்ணற்ற மந்திர உச்சாடணங்கள் உள்ளது.
தமிழில் மந்திரங்கள் பெரும்பாலும் சிவன்,சக்தி,சும்ரமணியர்,விஷ்னு இவர்களைச் சார்ந்ததாகவே காணக்கிடைக்கிறது.

இங்கே சிவனைச் சாந்த மந்திரங்களை பார்ப்போம்.சிவனுக்கு ஐந்து முகங்கள் அவையாவன,நான்கு திசைகளுக்கொரு முகம்,ஐந்தாவது முகம் ஆகாயத்தை நோக்கியது.கிழக்கில்'தத்புருஷம்',தெற்கில்'அகோரம்', வடக்கில் 'வாமதேவம்',
மேற்கில்'சித்தியோசம்', உச்சியில்'ஈசானம்'.கருவூரார் எனப்படும் கருவூர் சித்தர் இந்த ஒவ்வொரு முகத்திற்குமான பல மந்திரங்களை அருளியுள்ளார்.

பொதுவில் மந்திரங்களை கைளாளும் முறையாவது, அமைதியான காற்றோட்டமுள்ள இடம் அல்லது கோவில் போன்ற இடங்களில் அமர்ந்து மனதை வெறுமையாக்கி, முதலில் தங்கள் குலதெய்வத்தினை வணங்கி, பின் பெற்றோரையும், குருவினையும் மனதால் துதித்து மூலமந்திரத்தை மனதில் உச்சரிக்க வேண்டும்.முதலில் குறைந்தது 108 அல்லது 1008 முறை விடாது உச்சரித்தல் அவசியம்.

அதன் பின் நேரம் கிடைக்கும் போதெல்லாம் மனதினை ஒரு நிலைப்படுத்தி மந்திரங்களை உச்சரிக்கலாமென்கிறார்கள். எண்ணிக்கை கணக்கிற்காக ஜெப மாலைகளை உயயோகிக்கலாம்.இவ்வாறு தொடர்து உச்சரிக்கும் போது அந்த மந்திரங்கள் நமக்கு சித்திக்கின்றன என்கிறார்கள்.பின் எப்போது தேவையேற்படுகிறதோ அச்சமயத்தில் தேவையான மந்திரங்களை 9 அல்லது 21 தடவை உச்சரிக்க மந்திரம் பலிக்குமாம். இனி மந்திரங்கள்....

தத்புருஷ மந்திரம்
இதன் மூல மந்திரம் 'நமசிவாய' இதை விடாது உச்சரிக்க உச்சாடணம் ஏற்படும். தத்புருஷத்தில் கருவூரார் 25 மந்திரங்களைச் சொல்கிறார், பதிவின் நீளம் கருதி ஐந்தினை தருகிறேன்.




"நமசிவாயம் லங்க நமசிவாய" என உச்சரிக்க மழை பெய்யுமென்கிறார்.
"அலங்கே நமசிவாய நமோ" என உச்சரிக்க புகழ் உண்டாகுமாம்.
"அங் சிவாய நம" என உச்சரிக்க குழந்தைப் பேறு உண்டாகுமாம்.
"ஊங்கிறியும் நமசிவாய நமா" என உச்சரிக்க மோட்சம் கிட்டுமாம்.
"ஓம் நமசிவாய" என உச்சரித்தால் காலனை வெல்லலாம்.அகோர மந்திரம்
இதன் மூல மந்திரம் "நமசிவ",



"சங் கங் சிவாயநமா" என உச்சரிக்க ஜீவனில் சிவத்தைக் காணலாம்.
"மங் மங் மங்" என உச்சரித்தால் உணவை வெறுத்து பசியை துறக்கலாம்.
"வசாலல சால்ல சிவாய நமா" என உச்சரித்தால் மழையில் நனையாமல் செல்லலாம்.
"சரனையச் சிவாய நம" என உச்சரிக்க வானில் பறக்கலாமாம்.
"கேங் கேங் ஓம் நமசிவாயம்" என உச்சரிக்க எல்லோரும் வசியமாவர்.
"ஓங் சருவ நம சிவாய" என உச்சரிக்க மழை உண்டாகும்
வாமதேவ மந்திரம்

"கங்கங்ணங் நிஷர் சிவிங்கம்" என உச்சரித்தால் காமதேவன் அருள் கிட்டுமாம்.
"வங் வங் சிங் சிவாய நம"என உச்சரிக்க உலகின் எப்பாகத்திற்கும் வழி தெரியுமாம்.
"சதா சிவாய நம" என உச்சரிக்க நான்கு வேதத்தின் பொருள் அறியலாம்.
"ஓம் அங்கிஷ ஊங் சிவாயநம" என உச்சரிக்க நினைத்த இடத்தில் மனதினை விரைவாக செய்யலாம்.சத்யோசாத மந்திரங்கள்

"சிவாய ஓம்" என உச்சரிக்க திருமாலில் ஆற்றல் கிட்டும்.
"ஓங் உங் சிவாய ஓம்" என உச்சரிக்க குண்டலினியின் சக்தியை காணலாம்.
"கிருட்டிணன் ஓம் சிவாய நம" என உச்சரிக்க இராவணன் மலையைப் பெயர்த்த பலம் கிட்டும்ஈசான மந்திரங்கள்

"சிமிறியும் ஊங்சிவாய ஊங் அங் நம ஓ" என உச்சரிக்க சிவதத்துவத்தை காணலாம்.
"மங் நங் சிவ சிவாய ஓம்" என உச்சரிக்க நந்தியின் தத்துவத்தை உணரலாம்.
"வங் யங் சிங் ஓம் சிவாய" என உச்சரிக்க எதிரியின் உடல் தனலாகும்.
"சிங் சிங் சிவாய ஓ" என உச்சரிக்க முக்காலத்தையும் உணரலாம்.
"மய நசிவ சுவாக" உச்சரிக்க ஆகாயத்தில் பறந்து செல்லும் சித்தர்களின் ஆசி கிட்டும்.நேரம் கிடைத்தால்/மனமிருந்தால் இவற்றை முயற்சித்துப் பாருங்கள்.
ஓம்நமசிவாய!

ஓம்நமசிவாய!

மந்திரங்கள் எப்படி செயல்படுகின்றன?

மந்திரங்கள் எப்படி பலன் தருகின்றன?

இந்த வலைப்பூவை இப்போது நீங்கள் வீட்டில்
உள்ள உங்களது மடிக்கணினியிலோ(லேப்டாப்),
அல்லது இணையதள மையத்திலோ(பிரவுசிங்
சென் டரிலோ)வாசிக்கிறீர்கள்.இந்த இடத்தில்
செல்போன் அலைகள் இருப்பது நிஜம்தானே?
அதுவும் இன்று 25.5.2009 10 செல்போன் நிறுவனங்கள்
செல்போன் சேவை தருகின்றன.பி.எஸ்.என்.எல்., டாடா,ரிலையன்ஸ்,ஓடபோன்,ஏர்செல்,ஏர்டெல்,
எம்.டி.எஸ்.,ஆரஞ்சு இவை அனைத்தின் செல்போன்
அலைகள் 24 x 7 என்ற அளவில் பரவிக்கொண்டே
இருக்கின்றன.
அதற்குரிய செல்போன் நாம் வாங்கி
இயக்கத்தில்(on செய்து) வைத்திருந்தால் நமக்கு
மற்றவரின் அழைப்பு வருகிறது.அதே போலத்தான்.
நாம் குழந்தையாக பிறந்தது முதல் 9 கிரகங்களின்
கதிர்வீச்சு நம் மூளையை விண்வெளியிலிருந்து
வந்தடைந்து கொண்டே இருக்கின்றன.
இத்தனாம் வயதில் இது நிகழும் என ஏற்கனவே
முடிவு செய்யப்பட்டுவிட்டது.ஒரு எதிர்பாராத
பிரச்னை அல்லது விபத்திலிருந்து தப்பிப்பதற்கு
மந்திர ஜபம் அல்லது குறிப்பிட்ட சித்தர் வழிபாடு
அல்லது மகான் வழிபாடு அவசியமாகிறது.
ஒரு மந்திரம் உள்ளது.

ஓம் சர்வ சர நமச்சிவய நம(சிவாய அல்ல)

இந்த மந்திரத்தை தொடர்ந்து ஜபித்தால் நமது
வீண் செலவுகள் குறையும் என மகான்கள்
கூறியுள்ளனர்.நாம் தினமும் 30 நிமிடம் நமது
வீடு/அலுவலகம்/மொட்டை மாடியில் காலையிலும்
மாலையிலும் இந்த மந்திரத்தை கிழக்கு அல்லது
வடக்கு நோக்கி ஜபித்துக்கொண்டே இருக்கிறோம்.
என்னாகும்?100 ஆம் நாளிலிருந்து
நமது செலவுகள் குறையும்.வருமானம் மிச்சமாகும்.
எப்படி?
நமது மூளையில் இந்த மந்திர அதிர்வுகள் பதிவாகும்.
அந்த பதிவுகள் நவக்கிரக அலைகளில்
ஒரு பாதிப்பை உருவாக்கும்.நமது தலைக்குமேலே
சுமார் ஆயிரம்கிலோமீட்டர்கள் உயரத்தில் மந்திர
அலைகளுக்கான அடுக்கு உள்ளது.அங்கு
நமது தினசரி ஜபம் 100ஆம்
நாளில் போய் வேலை செய்து நமது
நம்பிக்கையை நிஜமாக்கும்.ஒவ்வொரு
மனிதனும் சுயமாகஉணரமட்டுமே முடியக்கூடிய
விஷயங்களில் ஒன்று இது:

கொலை, கொள்ளை, கற்பழிப்பு,ஏமாற்றுதல்,
பொய் சொல்லுதல் இந்த ஐந்தும் பஞ்சமா பாதகம்
என சாஸ்திரங்கள் கூறுகின்றன.இதனால் ஏற்படும்
பாவங்களால் நமது முன்னேற்றம் தடைபடுகிறது.
இதை நீக்க ஒரு சிவ மகாமந்திரம்:

ஓம் ஆம் ஹ்வும் சவ்ம்

இந்த மந்திரத்தை நாம் ஒரே ஒருமுறை பழமையான
சிவன் கோவிலில் ஜபித்தால் நாம்- அதாவது நமது
கணவன்/மனைவி மற்றும் நமது முன்னோர்களாகிய
நமது அப்பா அம்மா மற்றும் அவர்களின் முன்னோர்கள்
7 தலைமுறைக்கும் சுமார் 267 தம்பதிகள் செய்தபாவங்கள்
உடனே நீங்கிவிடும்.

மந்திரங்கள் உச்சரிப்பதின் மகத்தான பலன்கள்


மனிதனுக்கு உள்ள ஆறாம் அறிவைக் கொண்டு - அடுத்த நிலையை அறிய உணர்வதில் - ஒரு சீரான சப்த அதிர்வுகளுக்கு பெரும் பங்கு உண்டு. இதைப் போன்ற தேவதை வசிய சக்தியை உடையவை - மந்திரங்கள் என்று அழைக்கப் படுகின்றன. 

வேதத்தில் மந்திர சாஸ்திரம் முக்கிய பங்கு வகிக்கிறது. நடைமுறையில் மந்திரசாஸ்திரம் என்றால் தீய விளைவுகளுக்கு பயன்படும் விஷயமாக எண்ணுகிறார்கள். மந்திர சாஸ்திரத்தை சரியான முறையில் பயன்படுத்தினால் சிறந்த நிலையை அடையலாம். யோக சாஸ்திரம் பரமாத்மாவை அடையும் பல வழிகளை கூறுகிறது.

ஹத, ஞான, கர்ம , பக்தி மற்றும் மந்திர யோகம் எனும் ஐந்து பாதைகளைக் கொண்டு ஆன்ம தரிசனம் அடைய முடியும் என யோக சாஸ்திரம் கூறுகிறது. யோக சாஸ்திரத்தில் மந்திர யோகம் ஓர் அங்கம் என்பதின் மூலம் மந்திர சாஸ்திரத்தின் உயர்வை உணரலாம்.



அறியாமை கொண்ட மனதுடன் ஆராய்ந்தால் ஓர் எளிய வார்த்தைக்கு என்ன சக்தி இருக்க முடியும் என எண்ணத் தோன்றும். உண்மையில் மந்திரத்தின் வார்த்தையைக் காட்டிலும் அதை பயன்படுத்தும் விதம் [ப்ரயோகம்] மற்றும் பயிற்சியே [சாதனா] முக்கியம்.

மந்திர உச்சாடனம் செய்யும் பொழுது நமது உடலில் உள்ள 72,000 நாடிகளில் சலனம் ஏற்படுகிறது. பிரபஞ்ச ஆற்றலில் சில விளைவுகளை ஏற்படுத்தும் இந்த சலனம் முடிவில் நாம் அடையவேண்டிய இலக்கை அடைகிறது.
மந்திர ஜெபம் மனதை ஒருமுகப்படுத்துகிறது. மனதில் ஏற்படும் சலனத்தை தெளிவாக்குகிறது.

கலங்கலான நீர் இருக்கும் பாத்திரத்தில் ஒரு நாணயத்தை இடும்பொழுது அனைத்து தூசும் அந்த நாணயம் இருக்கும் இடத்தை அடையும். நீர் தெளிவடையும். எப்பொழுதும் சலனம் கொண்ட நீர் போன்ற மனதில் மந்திர ஜெபம் செய்யும் பொழுது எண்ண அலைகள் மந்திரத்துடன் அடங்கி மனம் தெளிவடையும்.

ஞான யோகிகள் மந்திர ஜெபத்தை ஆதரிப்பதில்லை. ஆத்ம விசாரம் செய்வதை விட்டு மந்திர ஜெபம் செய்வதால் என்ன பலன்? என்பது அவர்களின் கருத்து. மனம் ஒடுங்கியதும், மனதின் மூலத்தைக் காண்பதே மந்திர ஜெபத்தின் நோக்கம். ஞான விசாரத்தின் நோக்கமும் இதுவே. அதனால் தான் யோக முறையில் ஜெபயோகம் முக்கியத்துவம் பெறுகிறது.

ஜெபம் என்றால் தொடர்ந்து உச்சரிப்பது என பொருள்படும். ஜெபம் மற்றும் அஜெபம் என இரு தன்மைகளை கொண்டது, மந்திரஜெபம். தூய்மையான மனதுடன் மந்திரத்தை உச்சரிப்பது மந்திர ஜெபம் எனப்படும். தொடர்ந்து மந்திர ஜெபம் செய்த பின்பு வேறு நடவடிக்கைகள் செய்யும் பொழுது நம்மை அறியாமல் மனம் ஜெபம் செய்து கொண்டிருக்கும். இது அஜெபம். அதாவது சமஸ்கிருத சொல்லான அஜெபம் ஜெபிக்காத ஜெபம் என மொழி பெயர்க்கலாம்.

உலகில் உள்ள அனைத்து மதத்திலும் மந்திர ஜெபம் உண்டு என்பது இதன் சிறப்பை பறைசாற்றும். எனவே மந்திர ஜெபம் சமயங்கள் கடந்த இறைநிலை காட்டும் கருவி எனலாம்.

என்ன மந்திரம் ஜெபிக்கலாம் ?

வேதத்தில் காணப்படும் அனைத்து வாசகங்களும் மந்திரம் என்றே அழைக்கப் படுகிறது. அதில் சக்தி வாய்ந்த சில வார்த்தைகள் இணைவு பெற்று காணப்படுவதால் வேதம் உயர்வான மந்திரம் என அழைக்கப்படுகிறது. இதை தவிர்த்து சில சமஸ்கிருத வாசகங்களுக்கு உள்ள சக்தியை கண்டறிந்த நமது முன்னோர்கள் அவற்றை மந்திரமாக உச்சாடனம் செய்து முக்தி அடைந்தார்கள். இது போன்ற சில வார்த்தைகளுக்கு அர்த்தம் கிடையாது. மந்திரத்திற்கு அர்த்தம் தேவையில்லை. மந்திரத்தின் சக்தியே முக்கியமானது. மந்திரம் பல வகையாக கையாளப்படுகிறது.

பீஜமந்திரம் , தேவதாமந்திரம் , பாராயணம் என இவற்றை எளிமையாக வகைபடுத்தலாம். பீஜமந்திரம் என்பது ஓர் வார்த்தை கொண்டது. முன்பு சொன்னது போல பீஜ மந்திரத்திற்கு அர்த்தம் தேவையில்லை. "பீஜ" என்றால் விதை எனப்படும். ஓர் சிறு வித்தாக ஒலிக்கும். பீஜ மந்திரம் ஒரு மிகப்பெரிய மரம் போன்று வளர்ந்து ஆன்மீக புரட்சியை ஏற்படுத்தும். "ரீம்" எனும் பீஜ மந்திரத்தை உச்சரித்த வண்ணம் பறந்து, தேன் சேகரிப்பதால்தான், தேனியின் எச்சில் கூட புனிதமாக கருதப்படுகிறது.

தேவதா மந்திரம் என்பது குறிப்பிட்ட கடவுளை உருவகப்படுத்தும் மந்திரம். இது சில வரி கொண்டதாக இருக்கும். காயத்ரி மந்திரம் மற்றும் மஹா மந்திரங்கள் இதில் அடங்கும்.

பாராயண மந்திரம் என்பது பல வரிகள் கொண்ட நீண்ட சொற்றொடர்கள் கொண்டது. விஷ்ணு சகஸ்ர நாமம், அஷ்டோ த்ர நாமாவளி, ருத்ரஜெபம் என இதற்கு உதாரணம் கூறலாம். மந்திரத்தை நாமே தேர்ந்தெடுத்து ஜெபம் செய்யலாம் என பலர் கூறுகிறார்கள். ஆனால் சிறந்த குருவின் மூலம் மந்திர தீட்சை பெற்று ஜெபம் செய்வதெ நன்று. இதற்கு பல காரணம் உண்டு.

மந்திரம் உச்சரிக்கும் முறை, அதை உச்சாடனம் செய்யுமிடம், உச்சாடனம் செய்பவரின் தன்மை அறிந்து குரு, தீட்சை அளிப்பதால் மந்திர தீட்சை குருவின் மூலம் பெறுவது சிறந்தது எனக் கூறலாம்.

மந்திரத்தை தவறாக உச்சரிக்க முடியுமா? என உங்களுக்கு சந்தேகம் வரலாம்.

இதற்கு கும்பகர்ணனின் கதையை உதாரணமாக கூறலாம். தனது தவ வலிமையால் பிரம்மனிடம் இறப்பற்ற நிலையை கேட்க கடுமையான தவம் இருந்தான், கும்பகர்ணன். இராவணனின் சகோதரன் இந்த வரத்தைப் பெற்றால் அனைத்து உலகத்திலும் துன்பத்தை விளைவிப்பான் என தேவர்கள் அச்சம் கொண்டனர்.

பிரம்மன் கும்பகர்ணன் முன் தோன்றி "உனக்கு என்ன வரம் வேண்டும் ?" என கேட்டவுடன் "நித்ய தேவத்துவம் " என்று கேட்பதற்கு பதிலாக "நித்ர தேவத்துவம்" என தவறுதலாக கூறினான். இது போன்று தவறுதலாக உச்சரித்ததால் இறவா வரம் பெறுவதற்கு பதிலாக தூங்கும் வரத்தைப் பெற்றான். சில சமஸ்கிருத மந்திரங்கள் சரியாக உச்சாடனம் செய்யவில்லை என்றால் பலன் அளிக்காது. குருதீட்சை அளிக்கும் பொழுது இதை சரியாகப் பயன்படுத்த துணைபுரிவார்.

மேலும் ஒருவரின் தன்மையைப் பொறுத்தும் மந்திரம் வேறுபடும். இதற்கு அதிகாரத்துவம் என்பார்கள். குரு ஒருவனுக்கு இந்த மந்திரம் முக்தி அளிக்குமா என பார்த்து, இதற்கு சரியான அதிகாரியா என பார்த்து தீட்சை அளிப்பார்.