sai yoga centre

Showing posts with label விரதம். Show all posts
Showing posts with label விரதம். Show all posts

Sunday, December 18, 2011

மகாலட்சுமி விரத மகிமை


வரலட்சுமி விரதத்தை கன்னிப்பெண்களும், ஆண்களும் கூட கொண்டாடலாம் என்று சாஸ்திரம் கூறுகிறது. திருமணமான பெண்கள் தலைநோன்பு நோற்பது மிகவும் விசேஷமாகும். இந்த விரதத்திற்கு ஒரு புராண வரலாறு உண்டு. ஸ்ரீபரமேஸ்வரனும், பார்வதி தேவியும், கயிலை மலையில் சதுரங்கம் விளையாடிக் கொண்டிருந்தனர்.
 
அவர்களது ஆட்டத்திற்கு நடுவராக சித்திரநேமி என்பவன் நியமிக்கப்பட்டிருந்தான். அவன் நியதி தவறி பரமேசுவரன் பக்கமாகவே பேசினான். நடுநிலை தவறிய சித்திரநேமியின் செயல் தேவிக்கு கோபத்தை உண்டாக்கியது. சங்கரி சினங்கொண்டாள். சித்ரநேமியை சபித்தாள். அவன் தேவியின் சாபத்தால் பெருநோய் பிடிக்கப்பட்டான்.
 
சித்ரேநாமி, வரலட்சுமி விரதம் அனுஷ்டித்து நோய் நீங்கியது கண்டு சங்கரி மகிழ்ச்சியடந்தாள். ஒருநாள் சிவனும் பார்வதியும் நவரத்தின மணி பீடத்தில் தேவாதி தேவர்கள், நாரதாதி மகரிஷிகள், குபேரன் முதலிய அஷ்ட திக்கு பாலகர்கள், பூதகணங்கள் புடைசூழ எழுந்தருளியிருந்தனர். வரலட்சுமி விரத மகிமையை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டி, பார்வதி பரமேசுவரனிடம், "சுவாமி! வரலட்சுமி மகிமை அனைவரும் அறியும் வண்ணம் தேவரீர் திருவாள் மலர்ந்து அருள வேண்டும்'' என்று பிரார்த்தித்தார்.
 
சர்வேசுவரனான சிவபெருமான், வரலட்சுமி விரத மகிமையை அனைவருக்கும் விளக்கமாக கூறினார். இங்ஙனம் சிவனருளால் சங்கரியும் மற்ற தேவர்களும் கேட்டு மகிழ்ந்த வரலட்சுமி விரத வைபவத்தை எல்லோரும்  கடைபிடித்து நற்பலன் அடைந்தனர். விரதங்களுள் உத்தமமான வரலட்சுமி விரதம் சகல சௌபாக்கியங்களையும் தருவது. புத்ர பௌத்ராதி அபிவிருத்திகளை ஏற்படுத்தும்படியான மகா சிரேஷ்டமான விரதம்.
 
இந்த விரதத்தை கடைபிடித்து சாபம் நிவர்த்தி பெற்ற சித்ரநேமியைப் போல் சாருமதி என்ற மற்றொரு பெண்ணும் வரலட்சுமி விரத மகிமையால் சகல சௌபாக்கியங்களையும் பெற்றாள். முன்னாளில் குண்டினி புரம் என்ற ஊரில் சாருமதி என்ற ஒரு பெண் வசித்து வந்தாள். இவள் கற்புகடம் பூண்டு ஒழுகி வந்தாள். கணவனையே கண்கண்ட தெய்வமாக வணங்கி வந்தாள்.
 
கடவுள் பக்தியும், பெரியோர்களிடம் பணிவும் கொண்ட சாருமதி, எல்லோராலும் பாராட்டப்பட்டாள். இப்பேர்ப்பட்ட நற்குண நங்கையான சாருமதிக்கு சர்வேசுவரனின் கிருபாகடாட்சம் கிடைத்தது. ஒருநாள் இரவு  சாருமதியின் கனவில் மகாலட்சுமி தோன்றினாள்.. "சாருமதி! சர்வ மங்களம் உண்டாகட்டும். ஆடி மாத பௌர்ணமிக்கு முந்திய வெள்ளியில் என்னை பூஜிப்பாயாக! நாள் உனக்கு சகல வரங்களையும் தந்தது அருளுவேன்'' திருமகள், சாருமதிக்கு விரதம் கடை பிடிக்கும் முறையையும் அருளினார்கள்.
 
சாருமதி கனவு கலைந்து எழுந்தாள். திருமகளின் திருவாய் அமுதத்தை எண்ணி சுகானுபவம் கொண்டாள். சாருமதி தேவி திருமகளைச் சிந்தையிலே கொண்டு தோத்திரம் செய்தாள்.
 
"நமஸ்தே சர்வலோகா நாம் ஜகந்யை புண்யமுர்தயே
சரண்யே த்ரிஜகத் வந்த்யே விஷ்ணு வட்சதலாலய
"ஓம் ஸ்ரீ வரலட்சுமிதேவியே!
தாங்கள் சகல உலகங்களுக்கும் தாயாக எழுந்தருளிரட்சித்துக்கொண்டிருக்கிறீர்கள்.
 
சர்வ ஜனங்களாலும் ஆராதிக்கப்படுகிறீர்கள். ஸ்ரீமந் நாராயணனுடைய வாஸ்து தலத்தில்  வாசம் செய்கிறீர்கள். அப்பேர்ப்பட்ட ஸ்ரீ லட்சுமி தேவியே! தங்களை மனப்பூர்வமாக வணங்குகிறேன்.'' சாருமதி தேவியின் அருள்வாக்கின்படி ஆடியில் தவமிருந்தாள். தோத்திரங்களால் திருமகளின் திருமேனிக்கு திருமஞ்சனம் செய்தாள்.  ஆயிரத்து எட்டு நாமாக்களால் அலங்காரம் செய்தாள்.
 
வரலட்சுமி பிரத்யலட்மாகி சாருமதிக்கு அஷ்ட ஐஸ்வரியங்களையும் வழங்கினார். சாருமதி வரலட்சுமி விரத மகிமையை மற்றவர்களுக்கும் சொன்னாள். எல்லோரும் ஒன்று சேர்ந்து வரலட்சுமி விரதத்தை கடைபிடித்தனர். அழகாக அலங்கரிக்கப்பட்ட மண்டபத்தில் தாம்பாளத்தில் பச்சரிசி பரப்பி, கலசம் வைத்து கலசத்துள் ஸ்ரீ லட்சுமி தேவியை ஆவாஹனம் செய்து பூஜையைத் தொடங்கினார்.
 
சாருமதியும் தோழியர்களும் ஸ்ரீலட்சுமி தேவியை பூஜித்தார்கள். வரலட்சுமி தேவியின் பேர் அருளால் அனைவரும் பெரும் பேறு பெற்றனர். வரலட்சுமி விரதத்தை ஆரம்பித்து வைத்த சாருமதியை புகழ்ந்து போற்றினர். இந்த விரதத்தை அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான நந்தனார். விக்ரமாதித்த மன்னன் அனுஷ்டித்து சகல சௌபாக்கியங்களையும் பெற்றனர்.
 
ஸ்ரீலட்சுமிக்கு அருகம்புல் மிகவும் விசேஷம். அருகம்புல்லால் அஷ்ட லட்சுமியை பூஜிப்பதால் "நாம் அருகுபோல் வேரூன்றி ஆல்போல் தழைத்து பெருவாழ்வு வாழ்வோம்'' என்பது சான்றோர் வாக்கு! செல்வத்திற்கு அதிதேவதையாக விளங்கும் பிராட்டியாரை சுபலட்சுமி என்றும் ஸ்ரீதேவி என்னும் போற்றி வணங்குவார்.
 
வரலட்சுமி விரதத்தை அப்பண்டிகை தினத்தன்று சந்தியா கால வேளையில் கொண்டாட வேண்டும். வீட்டை நன்றாக மெழுகி மாக்கோலம் இட வேண்டும். விளக்கேற்றி வாசனைப் புகையை வீடெல்லாம் நிறைந்திருக்க செய்ய வேண்டும். கும்ப கலசத்தினுள் பச்சரிசி, எலுமிச்சம்பழம், பொற்காசுகள் ஆகியவற்றை இட வேண்டும்.
 
கும்பத்தை வெண்மையான பட்டு வஸ்திரத்தால் அலங்கரித்து அம்பாளின் முகத்தை அமைக்க வேண்டும். மஞ்சள் சரடை கும்பத்தின் மீது சாத்த வேண்டும். அம்பாளை கிழக்கு முகமாக எழுந்தருளச் செய்ய வேண்டும். நாம் வலது பக்கம் அமர்ந்து பூஜை செய்ய வேண்டும். மஞ்சள் சரடையும் கும்பத்துடன் சேர்த்து பூஜிக்க வேண்டும்.
 
பூக்களாலும், தூப தீபங்களாலும் அம்மனை ஆராதித்து மஞ்சள் சரடை எடுத்து வலது மணிக்கட்டில் பக்தி சிரத்தையுடன் கட்டிக்கொள்ள வேண்டும் நோன்பு சரட்டில் ஒன்பது முடிகள் போட்டு பூவை சேர்த்து மற்றொரு முடி போட வேண்டும். இனிப்பு கொழுக்கட்டை நிவேதனம் செய்து, பாத்யம், அர்க்கியம் முதலிய பதினாறு வகை உபசரணங்களையும் செய்ய வேண்டும். உற்றார் உறவினர்களுக்கு நிவேதனங்கள் கொடுத்த பிறகு தான்.
 
நம் நிவேதனம் உண்ண வேண்டும். அன்று முழுவதும் பகவத் சிந்தனையுடன் அஷ்ட லட்சுமி தோத்திரங்களைச் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும். இரவில் கலசத்தை அரிசி பாத்திரத்துக்கு வைப்பது விசேஷம். அதனால் அன்னபூரணியின் பேரருள் இல்லத்தில் நிரந்திரமாக நிறைந்திருக்கும்! அட்சயமாக இருப்பவள் அம்பாள்! கலசத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட தேங்காயை அதற்கடுத்த வெள்ளிக்கிழமை உடைத்து பாயசம் செய்யலாம்.
 
இவ்விரதத்தை கடை பிடிப்பதால் கர்ம நோய்கள் நீங்கும். நல்ல ஆரோக்கியம் ஏற்படும். திருமணம் நடைபெறும். புத்திரபாக்கியம் உண்டாகும். வரலட்சுமி விரத மகிமையால், நாம் சகல சௌபாக்கியங்களையும் பெற்று அஷ்ட ஐஸ்வர்யத்துடன் வாழலாம்.

செல்வத்தை அளிக்கும் வரலட்சுமி விரதம்



 
செல்வத்தை அளிக்கும் வரலட்சுமியை வரவேற்கும் விதமாக இல்லம்தோறும் செய்யப்படும் பூஜைதான் வரலட்சுமி விரதமாகும். வரலட்சுமி விரதம் கொண்டாடப்படும் நாளன்றுதான் பாற்கடலில் மகாலட்சுமி தோன்றியதாக புராணங்கள் கூறுகின்றன.
 
இந்த மகாலட்சுமியை தனலட்சுமி, தான்ய லட்சுமி, தைரியம் லட்சுமி ஜெயலட்சுமி, வீரலட்சுமி, சந்தான லட்சுமி, கஜலட்சுமி, வித்யாலட்சுமி என்ற எட்டு (அஷ்ட) லட்சுமிகளாக வழிபடுகிறோம். வரலட்சுமி விரதம் அன்று இந்த எட்டு லட்சுமிகளையும் மனதார வேண்டி பூஜித்தால் இல்லத்தில் எப்போதும் செல்வம் நிறைந்திருக்கும்.
 
சுமங்கலிப் பெண்கள் இந்த விரதத்தின்போது தாலிக் கயிற்றை வைத்து பூஜை செய்து அதனை அணிந்து கொள்வார்கள். இதனால் அவர்கள் தீர்க்க சுமங்கலியாக இருப்பார்கள். இதேப்போல, திருமணமாகாத கன்னிப்பெண்கள், மங்கல வாழ்க்கை அமைய வேண்டி வரலட்சுமி விரதம் இருந்தால் விரைவில் திருமணமாகி விரும்பியபடி கணவன் அமைவார் என்ற நம்பிக்கை உள்ளது.
 
இந்த வரலட்சுமி விரதத்தை கடைபிடிக்கும் குடும்பத்தில் உள்ள குழந்தைகளுக்கு உயர்ந்த ஞானம் கிட்டும். சுமங்கலிப் பெண்களுக்கு மங்கல வாழ்க்கை அமையும் மாங்கல்ய பாக்கியம் நிலைத்து நீடிக்கும். குடும்பத்திற்கு எட்டுவித ஐஸ்வரியங்கள் உண்டாகும். இந்த விரதம் மேற்கொள்வோர் விரும்பிய நலன்கள் எல்லாம் கிட்டும். கன்னிப்பெண்கள் இந்த விரதம் இருந்தால் விரைவில் திருமணமாகும்.

Tuesday, November 8, 2011

வரலட்சுமி விரதம்

வரலட்சுமி விரதம் என்பது சுமங்கலிப் பெண்கள் செய்யும் மிகச் சிறப்பான பூஜையாகும்.

ஆடி மாதம் சுக்கில பட்சத்தில் பெளர்ணமிக்கு அடுத்து வரும் வெள்ளிக் கிழமையில் இந்த விரதத்தை கடைபிடிக்கலாம்.

கணவன் நலத்தோடும், ஆரோக்கியத்தோடும், செல்வத்தோடும் இருக்கவும், தாலி பாக்கியம் நிலைக்கவும், இல்லத்தில் செல்வம் கொழிக்கவும் இந்த விரதத்தை சுமங்கலிப் பெண்கள் கடைபிடிக்கின்றனர்.

இது ஒரு மங்களகரமான விரதம், மனதிற்கு நிம்மதி தரும், இம்மையும், மறுமையும் நல்ல விதத்தில் அமைய வழி வகுக்கும் விரதமாகும்.

கந்த சஷ்டி விரதம்

கந்தர் சஷ்டி விரதம் என்பது பலராலும் கடைபிடிக்கப்படும் ஒரு விரத முறையாகும்.

அதாவது ஐப்பசி மாதம் சுக்கில பட்சத்துப் பிரதமை முதல் சுஷ்டி வரையிலும் ஆறு நாட்களுக்கு ஸ்ரீ முருகப் பெருமானைக் குறித்து அனுஷ்டிக்கும் விரதமாகும்.

ஆறுபடை வீடுகளிலும், அனைத்து முருகன் கோயில்களிலும் இந்த ஆறு நாட்களிலும் சிறப்பான பூஜைகள் நடைபெறும்.

நாட்கள் தொடர்ந்து விரதம் இருப்பவர்களும், இருக்க முடியாமல் போனவர்களும் கூட மாதந்தோறும் வரும் சுக்கில பட்சத்துச் சஷ்டியில் முருகப் பெருமானை வழிபட்டு விரதம் மேற்கொள்ளலாம்.

சஷ்டியில் விரதமிருந்தால் கருப்பையில் குழந்தை உண்டாகும் என்பது பழமொழி.


வாங்க விரதம் இருக்கலாம்

ஆன்மீகம் என்றும் உள்ளும் புறமும் தூய்மைப்படுத்தும் கருவியாகவே இருக்கிறது. நாம் பயன்படுத்தும் சம்பிரதாயங்கள் சடங்குகளுக்கு பின்புலத்தில் இருக்கும் காரணம் தெரியாமல் பயன்படுத்துவதால் நாளடைவில் அதன் மேல் ஒரு சலிப்பு ஏற்படுகிறது. பக்தியுடனோ அல்லது ஈடுபாட்டுடனோ செய்யாத ஆன்மீக காரியங்கள் பலன்கொடுக்காது. ஒருவர் தான் செய்யும் ஆன்மீக காரியங்களின் தாத்பரியம் தெரிந்தால் தான் அதில் முழுமனதுடன் செய்யமுடியும். மேலும் அடுத்த சந்ததியினருக்கு எடுத்துசொல்ல முடியும்.

நமது கலாச்சாரத்தில் சைவம், வைணவம் மற்றும் சாக்தம் என ஏனைய சித்தாத்தங்கள் இருந்தாலும், அனைத்து முறையிலும் சில சம்பிரதாயங்கள் ஒன்றாவே இருக்கிறது. அத்தகைய சம்பிரதாயங்களில் முக்கியமானது விரதம் இருத்தல் என்பதாகும்.

விரதம் இருப்பது என்றவுடன் உண்ணாமல் இருப்பது என்று மட்டுமே நினைத்துவிடுகிறோம். ஒரு குறிப்பிட்ட நோக்கத்துடன் தனது அவயங்களை செயல்படாமல் வைப்பது விரதம் இருத்தல் என விளக்கலாம்.

பஞ்சபூதங்களின் வடிவமான நமது ஐந்துவிதமான உணர்வு உறுப்புக்களை செயல்படுத்தாமல் இருக்கும் பட்சத்தில் அபரீதமான சக்தி நமக்குள் சுரக்கும். ப்ராணா என அழைக்கப்படும் இந்த சக்தியை கொண்டு நமது ஆன்மீக வாழ்க்கையில் எளிதில் மேம்படலாம்.

உணர்வு உறுப்புக்கள் ஒவ்வொன்றும் பஞ்சபூதத்தின் அடிப்படையாக இருப்பதாக விளக்கினேன் அல்லவா? பஞ்சபூதம் குறிக்கும் உறுப்புகள் என்ன என காண்போம்.

கண் - நெருப்பு
வாய் - நீர்
காது - ஆகாயம்
மூக்கு - மண்
தொடு உணர்வு - காற்று

நமது உணர்வு உறுப்புக்களின் செயலை ஒரு நோக்கத்துடன் தற்காலிகமாக நிறுத்தும் பொழுது அது விரதம் என கூறலாம். நம் உடல் சக்தி அதிகமாக உணர்வு உறுப்புக்கள் மூலம் வீணக்கப்படுகிறது. நாம் அந்த உணர்வு உறுப்புக்களை செயல்பட்டாமல் இருக்கச் செய்தால் அதில் வீணாகும் சக்தி நம்முள்ளே சேமிக்கப்பட்டு ஆன்மீக ஆற்றலா மாற்றம் அடையும்.

காது மற்றும் மூக்கு பகுதிகளின் செயல்பாட்டில் ஆகாயமும் மண்ணும் இருக்கிறது. ஆகாயம் மற்றும் மண்ணின் தொடர்பில்லாமல் நம்மால் ஒரு கணமும் வாழமுடியாது. அதை போலவே இந்த இரு அவயங்களின் செயல்களை நாம்மால் செயற்கையாக நிறுத்த முடியாது.


உறுப்புக்களின் செயலை தற்காலிகமாக நிறுத்தினால் நமக்கு சக்தி கிடைக்குமா எப்படி? என பலர் நினைக்கிறார்கள். மஹாபாரதத்தில் கெளரவர்களின் தாய் காந்தாரி. திருத்ராஷ்டிரனை திருமணம் செய்தபின் தன் கணவன் காணாத இவ்வுலகை நானும் காணமாட்டேன் என தனது கண்களை கட்டிக்கொண்ட பதிவிரதை. அவள் எடுத்த வைராகியமான முடிவு அவளின் சக்தியை நாளாக நாளாக கூட்டி அவளுக்குள் மாபெரும் சக்தியாக அமைந்துவிட்டது.

பாரத போர் சமயத்தில் தனது கண்கள் மூலம் சேமித்த ஆற்றல் அனைத்தும் தனது மகனுக்கு வழங்கி அவனை மாபெரும் சக்தி உள்ளவனாக மாற்ற எண்ணுகிறாள் துரியோதனனின் அன்புத்தாய் காந்தாரி. துரியோதனனை குளித்துவிட்டு நிர்வாணமாக தன்முன் வர சொல்லுகிறார்.

துரியோதனன் குளிக்க செல்லுகையில் ஸ்ரீ கிருஷ்ணர் எதிர்ப்பட்டு, ”என்னப்பா இந்த சமயத்தில் குளிக்கபோகிறாயா?” என கேட்கிறார். தனது தாயின் நோக்கத்தை கூறுகிறான் துரியோதனன். ஸ்ரீ கிருஷ்ணர் புன்னகைத்துவிட்டு நீ வளர்ந்த மனிதன் தாயின் முன் நிர்வாணமாக நிற்கலாமா என கேட்கிறார். குளித்தபின் வாழை இலையை இடுப்பில் தொடை வரை அணிந்து காந்தாரியின் முன் செல்லுகிறான் துரியோதனன். கண்களை திறந்து தனது சக்தியை வழங்கிய காந்தரிக்கு தன்மகன் இடுப்பு பகுதியில் ஆடையுடன் இருப்பதை கண்டு கலங்கினாள். ஸ்ரீ கிருஷ்ணரின் மாய விளையாட்டை புரிந்துகொண்டாள்.

பாரத போரின் இறுதியில் பீமனுக்கும், துரியோதனனுக்கும் கடும் மோதல் ஏற்படும் பொழுது எந்த உறுப்பில் தாக்கினாலும் இறக்காமல் இருந்த துரியோதனன் கடைசியில் தொடைப்பகுதியில் தாக்கியதும் இறந்தான். காரணம் காந்தாரி வழங்கிய சக்தி தொடைபகுதியில் இல்லை. பீமன் உடல் வலிமையில் சிறந்தவன் அவனால் காந்தாரியின் கண் மூலம் பெற்ற ஆற்றலை ஒன்றும் செய்ய முடியவில்லை என்பதே விரத பலனை நமக்கு உணர்த்தும்.

விரதம் இருக்கும் பொழுது மட்டுமே நம் உடலில் இருக்கும் சக்தியையும் நாம் தினமும் வீணாக்கும் சக்தியின் அளவையும் புரிந்துகொள்ள முடியும். விரதம் இருத்தலில் உணர்வு உறுப்புக்களில் முக்கியத்துவம் பெருவது வாய் எனும் உறுப்பு. பிற உணர்வு உறுப்புக்கள் ஒரு செயலை மட்டுமே செய்யும். ஆனால் வாய் மட்டும் இரு செயலை செய்யும். சுவைத்தல் மட்டும் பேசுதல் என இரு செயல்களை தவிர்ப்பதை அனேக விரதங்களின் அடிப்படையாக இருக்கிறது.

சதுர்த்தி,சஷ்டி,ஏகாதசி,பிரதோஷம் ஆகிய திதிகளும், திங்கள் (சோம வாரம்), வியாழன் (குருவாரம்) கிழமைகளில் விரதமும் நமக்கு நன்மையை ஏற்படுத்தும். அன்றைய கோள்களின் நிலை நமது உடலின் சக்தியை மேலும் வலுசேர்க்கும்.

சாப்பிடாமல் விரதம் இருக்கும் முறையை உண்ணாவிரதம் என்றழைத்தோம், தற்சமயம் உண்ணாவிரதம் இருத்தல் என்பது ஏதோ அரசியல் செயலாக மாறிவிட்டது. ஒரு குறிப்பிட்ட நோகத்திற்காக வைராக்கியத்துடன் உணவு சாப்பிடாமல் இருக்கும் தன்மையை இவ்விரதம் சுட்டிகாட்டுகிறது. மஹாத்மா காந்தி வெள்ளையருக்கு எதிர்ப்பு காட்ட நமது சம்பிரதாயத்தை ஒரு ஆயுதமாக் பயன்படுத்தினார். தற்சமயம் அது அரசியலாகிவிட்டது.

நாமும் ஒரு வாழ்க்கையில் மேன்மை அடைய ஒரு லட்சியம் மற்றும் வைராக்கியத்துடன் மாதம் இரு நாளிலோ அல்லது வாரம் ஒரு நாளோ விரதம் இருப்போம் ஆனால் அவை கைகூடும் என்பது சான்றோர்களின் வாழ்க்கை மூலம் அறியலாம்.

நமது உடலின் சக்தியை அதிகமாக செலவிடும் உணர்வு உறுப்பு கண். கண்களை காட்டிலும் அதிகமாக் சக்தியை செலவு செய்யும் உறுப்பு ஜீரண உறுப்புகள். உண்ணாமல் இருந்தால் மயங்கி விழுந்துவிடுவோம் என்ற தவறான எண்ணம் பலருக்கு உண்டு. உண்மையின் சராசரி மனிதன் உண்ணாமல் குறைந்தபட்சம் அறுபது முதல் தொன்னூறு நாள் வாழமுடியும். உங்கள் உடல்வாகுக்கு ஏற்ப மருத்துவரை கலந்துகொண்டு உண்ணா நோன்பு இருங்கள். உலக மதங்கள் எத்தனையோ இருந்தாலும் அதில் ஓர் அடிப்படை ஒற்றுமை உண்டு. அதற்கு சிறந்த உதாரணம் விரதம் எனும் தன்மை. உலகின் அனேக மதங்களில் விரதம் ஒரு புனித சடங்காக கொண்டாடப்படுகிறது.

விரதம் இருக்கும் பொழுது ஏற்படும் முக்கியமான பயன் மனது தனது செயலை மிகவும் குறைவாக செய்து தன்னில் அடங்கிவிடும். மனமற்ற தூய நிலையில் ஆன்மீக முன்னேற்றம் விரைவாக நடக்கும். பால், பழங்களை உண்டு விரதம் இருத்தல் ஒரு வகை. நீர் கூட குடிக்காமல் விரதம் இருப்பது மற்றொரு வகை. நமது உடலின் தன்மை வாழ்க்கை சூழல் பொருத்து விரதம் இருக்க வேண்டும்.

சந்திராம்ச விரதம் என ஒரு வகை விரதம் உண்டு. சந்திரனின் பிறைக்கு ஏற்க சாப்பிடும் விரதம் சந்திராம்ச விரதம். பெளர்ணமி அன்று முழுமைகாக சாப்பிட ஆரம்பித்து படிப்படியாக குறைப்பார்கள். அமாவாசை அன்று ஒன்றும் சாப்பிடாமல் இருப்பார்கள். அமாவாசைக்கு அடுத்தநாள் ஒரு கவளம் என படிப்படியாக உணவை கூட்டுவார்கள். சந்திராம்ச விரதத்தை பொருத்தவாரை மாதம் முழுவதும் விரத தினங்கள்தான்.

யார் எல்லாம் உண்ணா விரதம் இருக்க கூடாது?

• சஷ்டியப்த பூர்த்தி முடித்த முதியவர்கள்
• வியாதியினால் மருந்து உண்பவர்கள்
• கர்ப்பிணிகள்
• பிரம்மச்சாரிகள்
• சன்யாசிகள்

இவர்களை தவிர பிறர் உண்ணா நோன்பு இருக்கலாம் என்கிறது தர்ம சாஸ்திரம். மேலும் சன்யாசிகளுக்கு என்று தனி விரதங்களும் பிரம்மச்சாரிகளுக்கு தனி விரதமும் சாஸ்திரத்தில் உண்டு.

மெளனவிரதம் இருப்பது வாய் எனும் உறுப்பின் மற்றொரு விரதமாகும். மெளவிரதத்தால் நமது உடல் மற்றும் மனது தூய்மை ஆகிறது. மெளனவிரதம் அனைவரும் இருக்க தகுந்த ஒரு விரதம். இதில் யாருக்கும் தடையில்லை. உலகின் சிறந்த மொழி மெளனம். தக்‌ஷ்ணாமூர்த்தி உலகுக்கு அளித்த வேதம். மெளனமாக இருப்பதால் நம்மில் இருக்கும் சக்தியை மிகவும் துல்லியமாக அறியலாம். மெளனவிரதம் இருந்துவந்தால் உங்கள் உள்ளுணர்வு மிகவும் கூர்மையானதாக மாறி உங்களை விழிப்புணர்வாளர்களாக மாற்றும்.

மெளனவிரதம் இருக்கும் பொழுது சிலர் காகிதத்தில் எழுதி காட்டுவார்கள். மனதை ஒருநிலைப்படுத்தும் நோக்கில் இருக்கும் விரதத்திற்கு இது எதிரான செயல். மெளனவிரதம் இருக்கும் காலத்தில் உங்களை ஒரு ஜடப்பொருளாக பாவித்துக்கொள்ளுங்கள். உங்கள் உடல் செயல்படலாம் ஆனால் சைகை மூலமோ, எழுத்து மூலமோ பேசாதீர்கள். அப்பொழுது தான் மெளனவிரதத்தின் பயனை முழுமையாக உணரமுடியும்.

விரதங்களில் வாய்மூலம் அனுஷ்டிக்கும் விரதத்தை பற்றி பார்த்தோம். ப்ராணாயமத்தில் கும்பகம் எனும் செயல் தற்காலிகமான சுவாச விரதம் எனலாம். மேலும் பிரம்மச்சரிய விரதம் தொடு உணர்வுக்கு விரதமாகும்.

ஒரு ஆன்மீகவாதிக்கு வைராக்கியம், அப்யாசம், பக்தி ஆகியவை மிகவும் முக்கியம். தனது எடுத்துக்கொண்ட செயலை எப்பாடுபட்டாவது முடிக்கும் செயல் வைராக்கியம். தனது ஆன்மீக செயல்களை தடையில்லாமல் தினமும் எந்த காரணம் கொண்டும் விடாமல் செய்வது அப்யாசம். ஈஸ்வரனிடத்தில் முழுமையான ஈடுபாட்டுடன் இருப்பது பக்தி. ஆன்மீகவாதியின் லட்சணங்களான இவை விரதம் இருக்கும் பொழுது நம்மில் செயல்படத் தொடங்கும். இறைவனை நினைத்து உண்ணாமல் இருக்கும் பொழுது நம்மில் ஆன்மீக முன்னேற்றம் ஏற்படுவதன் காரணமும் இதுதான்.

நமது சாஸ்திரம் பஞ்ச அவயங்களுக்கும் தனித்தனியே விரதங்களை வழங்கி உள்ளது. நமது உணர்வு உறுப்புக்களை சரியான முறையில் பயன்படுத்தினால் அதன் சக்தியையும் படைப்பாற்றலையும் மேம்படுத்தமுடியும். இரைச்சலான ஒரு சந்தையில் ஒருவரை அழைத்தால் அவருக்கு நாம் அழைப்பது கேட்காது, அதே நேரம் அமைதியான ஒரு தோட்டத்தில் இருக்கும் ஒருவரை அழைத்தால் அவருக்கு நமது அழைப்புரியும். அது போல உங்கள் உணர்வு உறுப்புக்கள் சந்தைக்கடை போல பல செயல்களில் ஈடுபடும் பொழுது பரமாத்மாவை அழைத்தால் அவரிடம் நீங்கள் நெருங்க முடியாது. விரதம் மூலம் உங்கள் உடலை மேன்மையாக்குங்கள். உங்கள் உடல் எனும் நந்தவனத்தில் பரமாத்மா நிரந்தரமாக வசம் செய்வார்.

விரதம் 1


பாபத்தினால் உண்டான பிணியை தலைதூக்கவிடாமல் செய்வதற்கு நோன்பு முறைகள் பலவற்றை தந்திருக்கிறது தர்மசாஸ்திரம். நாள், திதி, நட்சத்திரம் முதலானவற்றை மையமாக வைத்து, கிருத்திகை, ஏகாதசி, சஷ்டி என்பன போன்ற விரதங்களை பரிந்துரைத்தது.
உணவுக் கட்டுப்பாட்டுடன் தெய்வத்தை மனதில் இருத்தி வழிபட, பாபம் அகலும் சிறுவர்கள், பெண்கள், முதியோர்கள் ஆகியோருக்கு விரதமே வேள்விக்குச் சமம் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. வரலட்சுமி நோன்பு, காரடையான் நோன்பு, துளசி பூஜை, பஞ்சாட்சர ஜபம் முதலானவை ஒட்டிக் கொண்டிருக்கும் பாபங்களைத் துடைக்க வல்லது.
பிணியின் உச்சகட்டம் தான் பாவத்தின் அடையாளம் தற்கால சூழலில், மருத்துவர்களால் கைவிடப்பட்ட நோய்களும் ஏராளம். பாபம் கண்ணுக்குப் புலப்படாது. ஆனால் நோயைக் கொண்டு பாபத்தை அறிய முடியும். பாபம் இருந்தாலும் இல்லாது போனாலும் விரதங்களை மேற்கொள்வது புத்திசாலித்தனம்.
இருந்தால்............. பாபம் விலகிப் போகும்; இல்லையா? இரட்டிப்பு புண்ணியம் தானே, இதனால் தான், பன்னிரண்டு மாதத்தில் உள்ள விரதங்களை கடைப்பிடிக்க வலியுறுத்துகிறது தர்ம சாஸ்திரம். தினமும் நீராடி, கோயிலுக்குச் சென்று வணங்கி வந்தால் போதுமா? இதில் மன நிறைவு ஏற்படலாம். பாபம் போகாது. இதற்கு விரதங்களே வழிகாட்டுகின்றன.
விரதங்கள் அனைத்துமே புராணங்களில் உண்டு. விரதம் இருந்து தான் கணவனை மீட்டாள் சாவித்திரி. விரதம் மேற்கொண்டு தான் ஆதிசங்கரரைப் பெற்றெடுத்தனர் அவரின் பெற்றோர். பணிவிடையின் பலனாக குந்திதேவிக்கு குழந்தைகள் கிடைத்தனர். ராமரைப் பிரிந்த சீதை, அசோகவனத்தில் விரதமிருந்தாள். ராமருடன் சேர்ந்தாள். தவம் இருந்தே ஈசனை அடைந்தாள் பார்வதிதேவி.
வேதக் கல்வியால் கிடைக்கும் அத்தனை வளமும் நலனும் விரதத்தால் கிடைக்கும் என்கிறது புராணம். தை மாத சூரிய வழிபாடு, மாசி சந்திர வழிபாடு, பங்குனி ராம நவமி, சித்திரை சித்ரபுத்திர வழிபாடு, வைகாசியில் வைகாசி விசாகம். என பண்டிகையும் விரதமுமாக கலந்து தருகிறது புராணம்.
இன்றைய தலைமுறையினருக்கு உணவுக் கட்டுப்பாடு என்பதே கசக்கிறது. விரதத்தால் பாபமும் விலகும். உடலில் பிணியும் அண்டாது. தவிர தெய்வ சிந்தனையும் இருக்க....... முழுப் பலனும் உறுதி என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். எண்ணெய் தேய்த்துக் குளிப்பதும் பேதி மருந்து சாப்பிடுவதும் வழக்கொழிந்துவிட்ட இன்னாளில், விரதங்களே பாதுகாப்பு என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.
உணவிலும் சிந்தனையிலும் மாறுபாடு ஏற்பட மனமே காரணம். பாபங்கள் மனத்தின் வழியே செயல்படுபவை. விரதங்களில் உடலும் உள்ளமும் தூய்மையுறும். எனவே இளமையில் விரதம் மேற்கொள்வது நீண்ட ஆயுளுக்கான அஸ்திவாரம். யோகா, உடற் பயிற்சி போன்றவை தரும் பலனை விரதங்கள் தரவல்லவை. தவிர, மன அமைதியும் தருகிறது விரதம்.
வேதம் ஓதுவோர், மன்னர்கள், வணிகர்கள், உழைப்பாளிகள் முதலானோர் விரதத்தையே நம்பினார்கள். ஆரோக்கியமான உடல் தேவை தான்?! இதற்கு விரதமே சிறந்த வழி!
அத்ரி முனிவரின் புதல்வி அபாலா, கேட்டதை அப்படியே மனதில் பதிய வைக்கும் திறன் கொண்டவள். அத்ரி முனிவர், தன் சீடர்களுக்கு உபதேசிக்கும் போது, அவற்றை போகிற போக்கில் கேட்டவள், தத்துவ விளக்கங்களை உள்வாங்கினாள்; மகா மேதாவி என பேரெடுத்தாள். ஆனாலும் இவளிடம் உள்ள ஒரே குறை............. கர்மவினையால் இவளைப் பீடித்திருந்த தோல் நோய்.
இதனால் உரிய வயது வந்ததும் திருமணம் நடைபெறவில்லை. மணப்பதற்கு எவரும் முன்வரவில்லை. இந்தக் கவலையில் தவிர்த்தார் அத்ரி முனிவர்.
மனிதனிடம் முழுமையைக் காண்பது அரிது. புகழ், பெருமை, செல்வாக்கு என உள்ளவர்களிடம் கூட ஏதேனும் குறை ஒன்று தென்படும். ஏழ்மை, குழந்தையின்மை, ஆயுள் என ஏதேனும் குறை இருக்கும் என்கிறது தர்மசாஸ்திரம்.
மகளின் தோல் வியாதியைப் போக்க முடியாமல் கலங்கித் தவித்தார் முனிவர். ஒரு நாள்....... கிருசாச்வர் எனும் ரிஷி. இவரின் ஆஸ்ரமத்துக்கு வந்தார். பணி விடையில் மகிழ்ந்தவர், அபாலாவை திருமணம் செய்ய முன்வந்தார். இதைக் கேட்டு நெகிழ்ந்து போன அத்ரி முனிவர், திருமணத்துக்கு திகதி குறித்தார்.
ஆனால், வாக்கு கொடுத்த கிருசாச்வரின் சிந்தனை மாறிப் போனது. “உடல் நலம் இல்லாதவளுடன் சேர்ந்து அறத்தை நடைமுறைப்படுத்துவது இயலாத காரியம். ஆகவே ஆரோக்கியமானவளை ஏற்க வேண்டும்” என்கிறது சாஸ்திரம். மாறாக அவளை ஏற்றால், அறமும் தாம்பத்தியமும் அறவே அற்றுவிடும்.
அத்ரி முனிவரது மகிழ்ச்சிக்காக தியாகம் செய்வது சரியல்ல என எண்ணிய கிருசாச்வர், வாக்குறுதியை மீறினார். “துன்பப்படுபவரைக் கண்டு அனுதாபம் ஏற்படலாம். அதற்காக குறிக்கோள் இன்றி துன்பச் சுமையை ஏற்பது சரியல்ல. இதனால் அனுதாபத்துக்கு உரியவரின் துன்பம் விடுபடாது. பயனற்ற தியாகம் இது!” எனும் கோணத்தில் செயல்பட்டார் திருசாச்வர்.
இதைப் புரிந்துகொண்ட அத்ரி முனிவர், கோபப்படவில்லை. கிருசாச்வரை திட்டவுமில்லை. என் மகளிடம் உள்ள அன்பும் பாசமும் என்னை தவறு செய்யத் தூண்டியது. நல்ல வேளை....... கிருசாச்வர் காப்பாற்றி விட்டார்” என்று நிம்மதி கொண்டார்.
பெண்ணுக்குப் பாதுகாப்பானவன் தந்தை. இந்த காக்கும் சுமையை பிறரிடம் சுமத்தி தப்பிப்பது அழகல்ல. மகளுக்காக மற்றவரின் வாழ்க்கையை நிர்ப்பந்தப்படுத்துவது அறத்துக்குப் புறம்பானது. எனும் சாஸ்திர நுணுக்கத்தை நன்றாகவே அறிந்திருந்தார் அத்ரி முனிவர். எனவே வாக்கு மீறியதை இயல்பாக எடுத்துக் கொண்டார்.
தாறுமாறான உணவு, தவறாக சிந்த¨னை ஆகியன தரும் பிணியை மருந்தால் அகற்ற இயலும். கர்ம வினையால் உண்டான பிணியை அகற்ற மருந்து உதவாது. முற் பிறவியில் செய்த தவறுகள், இப்போது பிணி வடிவில் தோன்றும். இதைப் போக்க, பரிகார சாந்தி, மருந்து, கொடை, தவம், ஜபம், வேள்வி மற்றும் தேவர்களை வணங்குதல் ஆகியவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும் என்கிறது தர்மசாஸ்திரம்.
செய்த பாவம், உடல் உறுப்புகளையும் மனதையும் விடாப்பிடியாகப் பிடித்துக் கொண்டு துயரப்படுத்தும் என அறிவுறுத்துகிறது வேதம். நோய்க்கான காரணங்களை அலசி ஆராயும் போது, முற்பிறவியிலான பாவத்தையும் ஆராய வேண்டும் என்கிறது ஆயுர்வேதம்.
மகள் அபாலா பிறக்கும் போதே தென்பட்ட நோய் என்பதால், முற்பிறவி பாவம் எனும் முடிவுக்கு வந்தார் அத்ரி முனிவர்: மகளை தவம் செய்யச் சொல்லி வலியுறுத்தினார். அபாலாவும் இந்திரனை வேண்டி தவம் இருந்தாள். ஒரு ?!{, ஆற்றில் இறங்கிய அபாலா, நீரில் மிதந்து வந்த சோமலதை கொடியை எடுத்து பல்லால் கடித்தாள்; சாறை சாப்பிட்டாள்; இந்திரனை எண்ணி தவம் இருந்ததால், சோமரசத்தை ஏற்றதும் அவளுக்கு எதிரே தோன்றினான் இந்திரன்.
விவரம் மொத்தமும் சொன்னாள். மனம் இரங்கிய இந்திரன், தன்னுடைய தேரின் நுகத்தடி ஓட்டை வழியே அவளை உள்ளிழுத்து, அவளிடம் ஒட்டியிருந்த பாபத்தை விலக்கினான். உடனே அழகு மங்கையாகக் காட்சி தந்தாள் அபாலா: மகிழ்ச்சியான வாழ்க்கையும் பெற்றாள்: இப்படி ஒரு கதை உண்டு.
யாகம் வளர்த்து அதில் இந்திரனுக்கு உணவளித்தால், உலக நலன் மற்றும் தன்னுடைய விருப்பம் ஆகியவற்றை அடையலாம் என்கிறது வேதம். இந்த யாகத்துக்கும், ஆண்களுக்கும் தொடர்பு உண்டாம்! வேத சட்ட திட்டத்துக்கு உட்பட்டு செயல்பட வேண்டுமாம்! இதில் இம்மியளவு தவறு நேர்ந்தாலும் வேள்வியின் பயன் வேறு விதமாக மாறிப் போகும் என்று எச்சரிக்கிறது சாஸ்திரம்.
தவம், வேள்வி, பிரார்த்தனை ஆகியவற்றால் மட்டுமே விருப்பத்தை அடையாளம் எனும் நிலையில், பெண்களுக்கும் இடம் அளித்துள்ளது வேதம். இந்திரனுக்குப் பிரியமானது சோமரசம்: இது, இமயமலையில் தென்படும் கொடி இனம். இதை கசக்கிப் பிழிந்தால் சாறு கிடைக்கும். இதனை வேள்வியில் சேர்ப்பார்கள். “சோமலதையின் சாறை இந்திரன் பருகட்டும்.
இதுவே நமக்கு நன்மையைத் தரும்” என்பார்கள். முன்னும் பின்னும் சடங்குகளுடன் நிறைவேற்ற வேண்டிய வேள்வியை சுருக்கி, பல்லால் சோமலதையைக் கடித்து சாறு பிழிந்து, இந்திரனுக்குப் படைத்தாள் அபாலா; அவரும் ஏற்றார். மிக எளிமையாக, வேள்வியின் மையப்பகுதியை மட்டுமே செய்து வேள்விப் பயனையே பெற்றாள்! அவசர கால சூழலில், பொது விதிகளுக்கு அப்பால், உயிரினங்களுக்கு பங்கம் ஏதும் வராமல் பாதுகாக்கிறது வேதம். தனது சட்ட திட்டங்களையும் தளர்த்திக் கொள்ளும். இதற்கு அபாலாவின் செயல்பாடு தான் உதாரணம்!

விரதங்களும் அவற்றின் விளக்கங்களு


விரதமென்பது ஒன்றையே எண்ணி அதில் மனம் நிலைத்திருக்கச் செய்தலாகும். வரிப்பது என்பது விரதம். உணவொழித்திருத்தலும் மிதமாக உண்டலும் தீயன நீக்கி நல்லன உண்டலுமாகிய உணவு நியமமே "விரதம்" என வழங்குகின்றது. இது விரதத்தின் முதற்படியேயல்லாது இதுவே விரதமாகாது. அலையும் மனத்தை அடக்கி நிறுத்தி இறைவன் திருவடியில் நிலைத்திருத்தலே சிறப்பாகும். மனம் பொறிவழி செல்லாது தடுத்தல், புலனொடுக்கம் வாழ்க்கையின் செம்மைக்குத் தேவையானது. பொறிகள் அடங்க வேண்டுமானால் உணவு ஒடுங்க வேண்டும். "அன்னம் அடங்க அஞ்சும் அடங்கும்". இன்று உடல்நலம் பேணும் மருத்துவர்கள்கூட வாரத்தில் ஓரிரு நாட்கள் உணவைத் தவிர்ப்பது நன்மை பயக்கும் என்று கூறுகின்றார்கள். உடலின் மூலமாகத்தான் உத்தமனைத் தேடவேண்டும். உடலின் இன்றியமையாமையைத் திருமூலர்:
"உடம்பினை முன்னம் இழுக்கென் றிருந்தேன்
உடம்பினுக் குள்ளே யுறுபொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில்கொண் டான்என்று
உடம்பினை யானிருந் தோம்புகின்றேனே". என்று கூறுவார்.
விரதங்கள் என்னும் தலைப்பின்கீழ் பிரபல்யமா அனைத்து விரதங்கள் பற்றிய விளங்கங்களும் ஒவ்வொன்றாக வெளிவரும்.


ஆக்கம்: வித்துவான் வசந்தா வைத்தியநாதன்
தொகுப்பு: சோதி

திருவெம்பாவை விரதம்


மார்கழி மாதம் திருவெம்பாவைக்கு முந்திய பத்து நாட்கள் பெண்களால் கைக்கொள்ளப்படும் விரதம் இது. "பாவை நோன்பு" " கார்த் யாயனி விரதம் என்று அழைக்கப்படும் சிவ விரதமாகவும், வைணவ விரதமாகவும் இது போற்றப்படும். மணிவாசகர் திருவண்ணாமலையில் கன்னிப் பெண்கள் அதிகாலையில் எழுந்து ஒருவரையொருவர் துயிலெழுப்பி கூட்டமாகச் சென்று பொய்கையில் நீராடி இறைவன் புகழ்பாடி வழிபடுவதை திருவெம்பாவைப் பாடல்களில் குறிப்பிடுகின்றார். இதனைச் சங்க நூல்கள் "தைந்நீராடல்"என்றும் "அம்பா ஆடல்" என்றும் கூறுகின்றது.
வைணவப் பெண்களும் ஒருவரை ஒருவர் துயிலெழுப்பி நீர்த்துறையில் நீராடி கண்ணனைப்போல உருவம் செய்து கண்ணனே கணவனாக வரவேண்டுமென்று வேண்டி,
நெய், பால் உண்ணாது, மையிட்டெழுதாது, மலரிட்டு முடியாது தீய சொற்களைக் கூறாது ஐயமும் பிச்சையுமிட்டு இவ்விரதத்தை மார்கழி முப்பது நாட்களும் மேற்கொண்டனர் என்று "திருப்பாவை" கிருஸ்ண பாகவதத்திற்கு இயையக் கூறுகின்றது.
திருவெம்பாவையில் கன்னிப் பெண்கள் சிவனடியார்களே தமக்குக் கணவராக வரவேண்டுமென்றும் நாடுமலிய மழைபெய்ய வேண்டும் என்றும் விரும்புவதாகக் குறிப்பிடப்படுகின்றது.