sai yoga centre

Showing posts with label ஹோமம். Show all posts
Showing posts with label ஹோமம். Show all posts

Friday, April 7, 2017

குழந்தைபாக்கியம்..நீடித்தஆயுள்... திருமணத் தடை நீக்கும் மகத்தான ஹோமங்கள்..!



குழந்தைபாக்கியம்..நீடித்தஆயுள்... திருமணத் தடை நீக்கும் மகத்தான ஹோமங்கள்..!

மனிதராகப் பிறந்தவர்களுக்கு ஐந்து விதமான யக்ஞங்கள் விதிக்கப்பட்டு இருக்கின்றன. அவை பிரம்ம யக்ஞம்; தேவ யக்ஞம்; பித்ரு யக்ஞம்; அதிதி யக்ஞம்; பூத யக்ஞம் ஆகியவைகள் ஆகும்.

பிரம்ம யக்ஞம் என்பது வேத பாராயணம் செய்வது, நாம ஜபம் செய்வது.
தேவ யக்ஞம் என்பது தேவர்களைக் குறித்து ஹோமங்கள் செய்வது.
பித்ரு யக்ஞம் என்பது மறைந்த நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது.
அதிதி யக்ஞம் என்பது வீடு தேடி வருபவர்களுக்கு உணவு தருவது.
பூத யக்ஞம் என்பது காகம் உள்ளிட்ட சகல ஜீவராசிகளுக்கும் உணவு தருவது.
இந்த ஐந்து யக்ஞங்களும் அவசியம் ஒவ்வொருவரும் தங்களால் இயன்ற அளவு செய்யவேண்டும். தேவர்களைக் குறித்து செய்யப்படும் ஹோமங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட பலனைத் தரக்கூடியவை.


எந்த ஒரு ஹோமமாக இருந்தாலும் முதலில் அக்னி வழிபாடு செய்யவேண்டும். அக்னி பகவான் தான் நாம் தேவர்களுக்கு அளிக்கும் ஆஹூதிகளை சூரிய பகவான் உதவியுடன் அந்தந்த தேவர்களிடம் கொண்டு சென்று சேர்க்கிறார். அதேபோல் தேவர்களின் அருளையும் நமக்குப் பெற்றுத் தருகிறார். ஹோமம் செய்த உடனே நமக்கு உரிய பலன் கிடைக்காவிட்டாலும், உரிய காலத்தில் அந்தப் பலன் நமக்குக் கிடைக்கவே செய்யும்.
மனிதர்களாகிய நம் வாழ்க்கையில் எதிர்ப்படும் ஒவ்வொரு பிரச்னைக்கும் தீர்வாக ஒரு ஹோமம் நம் முன்னோர்களால் அருளப்பட்டு இருக்கிறது. இங்கே சில முக்கியமான ஹோமங்களைப் பற்றியும், அந்த ஹோமங்களால் ஏற்படக்கூடும் பலன்களைப் பற்றியும் பார்ப்போம்.
மகா கணபதி ஹோமம்: சகல விதமான காரியத் தடைகளும் விலகி, செய்யும் காரியங்கள் அனைத்திலும் வெற்றி உண்டாகும். saispiritualcenter.org

நவகிரக ஹோமம்: நவகிரகங்களினால் ஏற்படக்கூடிய அனைத்துவிதமான தோஷங்களையும் போக்கி, நன்மைகளைத் தரும்.

லக்ஷ்மி குபேர மகாலக்ஷ்மி ஹோமம்: வறுமை நீங்கி அளவற்ற செல்வம் பெருகும்.
துர்கா ஹோமம்: பகைவர்களால் ஆபத்துகள் ஏற்படாமல் காப்பாற்றும்.

சுதர்சன ஹோமம்: கண் திருஷ்டி, பொறாமை போன்றவைகள் நீங்கும்.

மிருத்யுஞ்சய ஹோமம்: நோய்களில் இருந்து விடுபடவும், நீடித்த ஆயுளும் பெறலாம்.

தன்வந்திரி ஹோமம்: இந்த ஹோமமும் உடல் ஆரோக்கியத்துக்காகச் செய்யப்படுவதுதான்.

சுயம்வர பார்வதி ஹோமம்: திருமணத் தடை விலகி, நல்ல வரன் அமைந்து திருமண வாழ்க்கை அமையும்.

சந்தான கோபால ஹோமம்: குழந்தை பாக்கியம் உண்டாகும்.

லக்ஷ்மி ஹயக்ரீவ ஹோமம்: பிள்ளைகள் கல்வியில் மேன்மை பெறலாம்.

இன்னும் ஒரே பலனைத் தரக்கூடிய பல ஹோமங்களைப் பற்றி நம்முடைய சாஸ்திரங்களில் சொல்லப்பட்டு இருக்கின்றன.

ஒவ்வொரு ஹோமத்துக்குமே சில பிரத்தியேகமான ஹோம திரவியங்களும் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதேபோல் பிரத்தியேகமான சமித்துகளும் சொல்லப்பட்டு இருக்கின்றன. ஹோமத்தை முறைப்படி வேதம் பயின்ற சாஸ்திரிகளைக் கொண்டே செய்யவேண்டும். முழு நம்பிக்கையுடனும் செய்யவேண்டும்.

நாம் இப்படி பலன் வேண்டி செய்யும் ஹோமங்களுடன், சாஸ்திரிகளைக் கொண்டு வேத பாராயணம் செய்வது அல்லது வேத பாடசாலை மாணவர்களுக்கு உதவுவது, மறைந்த முன்னோர்களுக்கு முறைப்படி தர்ப்பணம் செய்வது, வீடு தேடி வருபவர்களை உபசரிப்பது, காகம், எறும்பு போன்ற ஜீவராசிகளுக்கு உணவு தருவது போன்றவற்றையும் நம்மால் இயன்ற அளவு செய்து வந்தால் நாமும் நம் சந்ததியினரும் எல்லா விதமான வளங்களுடனும், மன மகிழ்ச்சியுடனும் வாழலாம்.

Monday, February 6, 2012

ஹோம மந்திரங்களும் - ஹோமத்தின் பலன்களும்:

1. ஸ்ரீ சக்தி பஞ்சாக்ஷரீ – சகல யோகமும் சௌபாக்யமும் உண்டாக.
2. சுத்த பஞ்சாக்ஷரீ – மனோரத இஷ்ட காம்யார்த்த அபிலாக்ஷைகள் நிறைவேற.
3. சிவ அஷ்டாக்ஷரீ - ஸர்வ சத்ரு, மிருக, ரோக உபாதிகள் நீங்க.
4. சிவ பஞ்ச தசாக்ஷரீ – அஷ்ட ஐஸ்வர்யப் பிராப்தி அடைய.
5. சிதம்பர பஞ்சாக்ஷரீ – ஞான வைராக்யம், சிவ கடாக்ஷம் பெற.
6. குரு தாரக பஞ்சாக்ஷரீ – ஸகல ஜன வசீகரணம், ராஜாங்க வெற்றி, தேவதா ப்ரீதி உண்டாக.
7. ம்ருத்யுஞ்ஜய த்ரயக்ஷரீ – அகால, அபம்ருத்யு பயம் நீங்க, ஆயுள் விருத்தியடைய.
8. சிதம்பர சபாநடன மந்த்ரம் – அனைத்து பாப தோஷ பரிகாரம், ரக்ஷா பந்தனம்.
9. நீலகண்ட மந்த்ரம் – எதிர்பாராத கொடிய ஆபத்தினின்று மீளல், தவிர்த்துக் கொள்ள.
10. மஹா நீலகண்ட மந்த்ரம் – பூதப்பிரேத பிசாச உபத்ரவம், ஸர்வாரிஷ்டம் நிவாரணம்.
11. த்வனி மந்த்ரம் – மன சாந்தி, சந்தி, சந்துஷ்டி, சிவானந்த அநுபூதி பெற.
12. சிவ காயத்ரீ – நினைவுத்திறன், சமயோசித புத்தி, புதிய யுக்தி, வாக்சாதூர்யம் கூட.
13. மார்கதர்சீ சிவ மந்த்ரம் – பிரயாண சௌகர்யம், எவ்வித ஆபத்துகளும் விபத்துகளும் நேராதிருக்க.
14. ருணமோசன சிவ மந்த்ரம் – கடன் நீங்க, தேவ, பித்ரு ரிஷி கடன் அடைதல், பணவரவு, சேகரிப்பு அதிகரிக்க.
15. பசுபதி காயத்ரீ – ஸகல வித திருஷ்டி விலக, வழக்கில் வெற்றி, குடும்ப மகிழ்ச்சி ஏற்பட.
16. சிவ நவாக்ஷரீ - கார்யா தடைகள், தேக்கநிலை தீர்வு, நிர்வாகத் திறன் கூடுதல், புது முயற்சிகள் பலிதம்.
17. பாசுபதாஸ்த்ரம் – பூதப்பிரேத பிசாச உபத்ரவம், ஸர்வாரிஷ்டம் நிவாரணம், ஆபிசார தோஷம், செய்வினைகள் அகல.
18. ருத்ர காயத்ரீ – பாப தோஷ விமோசனம், நிரந்தர ஜயம்.
19. வித்யாப்ரத சிவமந்த்ரம் – புத்திகூர்மை, மேதா விலாஸம், சொல் வசீகரணம், ஸரஸ்வதி கடாக்ஷம் பெற.
20. உமாமஹேஸ்வர மந்த்ரம் – குடும்ப ஒற்றுமை அன்யோன்யம், மட்டற்ற மகிழ்ச்சி, குதூகலம் பெற.
21. ஆபத்துத்தாரக கௌரீவல்லப மந்த்ரம் – எல்லா ஆபத்துக்களும் தடைகளும் நீங்கி, நிரந்தர ஜயம் உண்டாக.
22. ஸர்வபாபஹர பவ மந்த்ரம் – அனைத்து பாப தோஷங்களும், அனாசார பாதிப்பும் விலகுதல்.
23. ரக்ஷாப்ரத கௌரீ சிவ மந்த்ரம் – சீரான உடல் நலம், முகப்பொலிவு, மறுமலர்ச்சி, ஆரோக்கியம் கூடுதல்.
24. ம்ருத் ஸஞ்சீவினி – அகால, அபம்ருத்யு பயம் நீங்கல், ஆயுள் விருத்தி.
25. பஞ்சதசீ சிவ மந்த்ரம் – ஸகல கார்ய சித்தி, செயற்கரிய செயல் செய்தல், வாழ்வில் ஏற்றம்.
26. சுதர்ஸன மந்த்ரம் – செய்வினை, சத்ருக்களின் தொல்லை, வியாபாரத் தடை நீங்குதல், மனச்சாந்தி அடைய.
27. லக்ஷ்மி ந்ருஸிம்ஹ மந்த்ரம் – பணவரவு, கடன் நிவாரணம், பணப்புழக்கம், குடும்ப மகிழ்ச்சி.
28. சுதர்ஸன நரஸிம்ஹ மந்த்ரம் – எதிரிகள் தொல்லை, வழக்கு வியாஜ்யம், குடும்ப-தொழில் குழப்பங்கள் நீங்க.
29. வாஸுதேவ மந்த்ரம் – வறுமை, கிலேசம், சந்தேகம், தீவினைகள் அகன்று இம்மை மறுமை நலன்கள் கொழிக்க.
30. விஸ்வரூப மந்த்ரம் – சதுர்வித புருஷார்த்தங்கள், மனோபலம், ஜயம், அசைகள் பூர்த்தியாக.
31. கந்தர்வராஜ மந்த்ரம் – தடை நீங்கி திருமணம், குடும்ப சூழ்நிலைச் சிக்கல்கள் நிவர்த்தி, சுப கார்யங்கள் நடைபெற.
32. ஹயக்ரீவ மந்த்ரம் – புத்தியும் சக்தியும் தூண்டப்படுதல், கல்வியில் ஏற்றம், மஹாவித்வத்வம், இனிய சொல் மெய்யுணர்வு.
33. நாமத்ரயம் – அனைத்து பாப விமோசனம், சுமுக சூழ்நிலை ஏற்பட.
34. சுதர்ஸன அபரோ மந்த்ரம் – ரக்ஷா ப்ரதானம், அடிமன பயம் நீங்குதல், மனநிறைவு, நிம்மதி.
35. நரஸிம்ஹ மந்த்ரம் – பணவரவு, கடன் நிவாரணம், பணப்புழக்கம், குடும்ப மகிழ்ச்சி, நோய் வறுமை நீங்கி ஸகல சம்பத்துகள் அடைய.
36. கருட மந்த்ரம் – விஷம், ஸர்ப்ப தோஷம், துஷ்ட மிருக பயம் விலக.
37. மஹா கருட மந்த்ரம் - அதைர்யம், பாபம், விஷக்ரஹ தோஷங்கள், துஷ்டர் பயம் ஆகியன விலக.
38. தன்வந்த்ரீ மந்த்ரம் – முதுமை, நோய், பய உணர்ச்சி அகன்று யௌவனம், தைர்யம், தேகஒளி, தீர்க்காயுஸ், ரோகமின்மை ஏற்பட.
39. கருட காயத்ரீ மந்த்ரம் – தாமதம் நீங்கி எண்ணிய காரியம் முடிதல், சீக்ர கார்யசித்தி பெற.
40. சுதர்ஸன காயத்ரீ மந்த்ரம் – ஞானம், சக்தி, பலம், ஐஸ்வர்யம், வீர்யம், தேஜஸ் பெற்று சௌகர்யம் ஏற்பட.
41. தன்வந்த்ரீ காயத்ரீ மந்த்ரம் – முதுமை, நோய், பய உணர்ச்சி அகன்று யௌவனம், தைர்யம், தேகஒளி, தீர்க்காயுஸ், ரோகமின்மை, மன்மதஸ்வரூபம் ஏற்பட.
42. வித்யா கோபால மந்த்ரம் – வித்யா பிராப்தி, நினைவாற்றல், வாக்குவன்மை, மேதா விலாசம் கூடுதல்.
43. அன்ன கோபால மந்த்ரம் – அன்னபானாதி சம்விருத்தி, தன்னிறைவு பெற.
44. சௌபாக்யலக்ஷ்மீ மந்த்ரம் – லக்ஷ்மி கடாக்ஷம், தாபத்ரய நிவர்த்தி, அஞ்ஞான நிவர்த்தி.
45. க்ஷேத்ர ப்ராப்திகர மந்த்ரம் – பூமி லாபம், குபேர சம்பத்து ஸ்திர லாபம் பெற.
46. க்ஷேத்ர ப்ராப்திகர அபேரா மந்த்ரம் – இந்த்ர பதவி, பொன் விளையும் பூமிக்கு அதிபதி, லோக பிரசித்தி, ஸ்திரத்தன்மை அடைய.
47. த்ருஷ்டி துர்கா மந்த்ரம் – ஸர்வ திருஷ்டி தோஷ பரிகாரம், முன்னேற்றம்.

Tuesday, November 15, 2011

கனகதாரா ஹோமம் (திறமையை வெளிப்படுத்த)

கனகதாரா ஹோமம் (திறமையை வெளிப்படுத்த)

ஒரு மனிதனின் வெற்றிக்கு மூலகாரணமாக இருப்பதே அவனது திறமைதான். ஆனால், சிலர் இதை உள்ளடக்கி வைத்து இருப்பார்கள். கனகதாரா ஹோமம் பரம ஏழையைக் கூட செல்வந்தன் ஆக்கிவிடும் வகையில் அவனுக்குள் புதைந்து கிடக்கும் திறமையை வெளிக்கொண்டு வரும் சக்தியுடையது. 

மங்கள சமஸ்கரண ஹோமம் (குழந்தை பாக்கியம்)

மங்கள சமஸ்கரண ஹோமம் (குழந்தை பாக்கியம்)

திருமணம் ஆகி நீண்டகாலமாக குழந்தை இல்லாத தம்பதிகள் நடத்த வேண்டிய ஹோமம் மங்கள சமஸ்கரண ஹோமம் ஆகும். குழந்தை பாக்கியம் பெறவும், நம் அனைத்து செயல்களிலும் வெற்றிபெறவும், குடும்பச் சூழலிலிருந்து தப்பி பரிபூரண விடுதலை பெறவும் இந்த ஹோமத்தை நடத்தலாம்

வித்யா ஹோமம் (கல்வியில் மேன்மை)

வித்யா ஹோமம் (கல்வியில் மேன்மை)


மாணவர்கள் கல்வியில் மேன்மை பெறவும், புத்திகூர்மை ஏற்படவும், ஞானம் விருத்தியடையவும், படிப்பில் மட்டும் கவனம் செல்லவும்,  நினைவாற்றல் பெருகவும், உயர்கல்வி வாய்ப்பு கிட்டவும், செய்யும் தொழிலில் முன்னேற்றம் காணவும் வித்யா ஹோமத்தை நடத்த வேண்டும்.

லட்சுமி ஹோமம் (செல்வ விருத்தி)

லட்சுமி ஹோமம் (செல்வ விருத்தி)


சர்வமங்களங்களையும், மேன்மையையும், 16 செல்வங்களையும் அடையவும், நீண்ட நாள் வராதிருந்த பொருள் வந்துசேரவும், ஐஸ்வர்யம் அடைய தடையாக இருக்கும் எதிர்மறை சக்திகள், சாபங் களை நீக்கி செல்வ விருத்திக்கு வழிவகுக்கவும் "லட்சுமி ஹோமம் செய்ய வேண்டும்.

மிருத்தியஞ்ச ஹோமம் (ஆயுள் விருத்தி)

மிருத்தியஞ்ச ஹோமம் (ஆயுள் விருத்தி)

பிறந்தநாளன்று சிவபெருமானுக்காக செய்யப்படும் ஹோமம் மிருத்தியஞ்ச ஹோமம் ஆகும். அகாலமரணத்தை தவிர்ப்பதற்காக இது சிவபெருமானுக்கு அர்ப்பணம் செய்யப்படுகிறது. இந்த ஹோமத்தை செய்தால் ஆயுள் விருத்தியடையும். நீண்டநாட்களாக தொடரும் வியாதிகள் நீங்கும். ஆரோக்கியமான வாழ்வு கிட்டும்.

ஹோமம் நடத்துவதன் பலன் என்ன?

ஹோமங்களில் பல வகை உண்டு. அதில் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு சிறப்பு பலன் இருக்கிறது. பொதுவாக ஹோமங்களை விளை நிலங்களில்தான் நடத்த வேண்டும். அப்படித்தான் பழங்காலத்தில் நடத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக செங்கரும்பு, செவ்வாழை விளைந்த நிலத்தில் ஒரு பகுதியை ஒதுக்கி, பசுவைக் கொண்டு சுத்தப்படுத்தி (அதாவது பசுவை வலம் வரச் செய்தல்), அதன் பின்னர் யாக குண்டம் அமைத்து ஹோமம் செய்வதுதான் முறையானது.

தற்போது சிமெண்ட் அல்லது டைல்ஸ் தரையின் மீது வீடு கட்டுவதற்கு பயன்படுத்தும் மணலைப் பரப்பில், செங்கற்களை அடுக்கி பெயருக்கு ஹோமம் செய்கின்றனர். இதனால் நிச்சயம் முழுப்பலன் கிடைக்காது.

மேலும், இன்றைய சூழலில் ஹோமம் நடத்துவதற்கு வரும் குருமார்கள், கையில் செல்போன் சகிதம் வருகின்றனர். அதில் அழைப்பு வந்தால் பேசிக் கொண்டே மந்திரங்களை ஜெபிக்கின்றனர். இதுவும் சரியான முறை அல்ல. கண்டிக்கத்தக்கது.

ஹோமம் செய்யும் போது குறிப்பிட்ட ஆவர்த்திகளை உச்சரிக்கும் சமயத்தில் 100% கவனம் தேவை. முறையான சமித்துகள் கொண்டு யாகம் செய்யும் போதுதான் முழுமையான பலன் கிடைக்கும்.

இன்றைய தேதியில் முறையாக ஹோமம் செய்யும் குருமார்களை விரல் விட்டு எண்ணி விடலாம். திருவையாறு போன்ற பகுதிகளில் சில வைதீக, ஐதீகக் குடும்பங்கள் இன்றளவும் வசிக்கின்றனர்.

அவர்கள் முறையான உணவுக் கட்டுப்பாடுகளை பின்பற்றுவதுடன், வேதங்களையும் தெளிவாகக் கற்றறிந்துள்ளனர். மழை பொழிந்தாலும், வெயில் அடித்தாலும் எதையும் ஆகம விதிப்படியே செய்யும் பழக்கம் உடையவர்கள். அவர்கள் மூலமாக ஹோமம் செய்யும் போது அதற்கான பலன்கள் மேம்பட்டவையாக இருக்கும்.

பல்வேறு வகையான ஹோமம், யாகங்கள் இருந்தாலும் அவற்றை எல்லாம் விட தியாகமே சிறந்த பலனை அளிக்கும் என முன்னோர்கள் கூறியுள்ளனர். எனவே, யாகத்தை விட தியாகம் தான் வெற்றியைக் கொடுக்கும். 

ஆயுஷ்ய ஹோமம் (குழந்தைகளுக்கு)

ஆயுஷ்ய ஹோமம் (குழந்தைகளுக்கு)

குழந்தை பிறந்த முதலாம் ஆண்டில் நீண்ட ஆயுளுக்காக செய்யப்படும் ஹோமம் "ஆயுஷ்ய ஹோமம் ஆகும். குழந்தைக்கு தொடர் தேக உபாதைகள் இருந்தால் இந்த ஹோமத்தின் மூலம் சரிசெய்துவிடலாம். மருந்தால் குணப்படுத்த முடியாத வியாதிகளைக்கூட தீர்த்துவிடலாம். ஒவ்வொரு மாதமும் கூட குழந்தையின் ஜென்ம நட்சத்திர நாளில் இதைச் செய்து வரலாம்

அவஹந்தி ஹோமம் (விவசாயம்)

அவஹந்தி ஹோமம் (விவசாயம்)

விவசாயத்தில் நல்ல மகசூல் பெறவும், நாடு பசுமைப்புரட்சியில் சிறக்கவும், பொருளாதார முன்னேற்றம் ஏற்படவும், ஆன்மிக வளர்ச்சி ஏற்படவும், "அவஹந்தி ஹோமம் நடத்த வேண்டும்.

கணபதி ஹோமம் (தடைகள் நீங்க)

கணபதி ஹோமம் (தடைகள் நீங்க)


கணபதி ஹோமம் புதிய தொழில்கள் துவங்கும் போது நடத்தப்படும். உடல், மனம், ஆன்மிக அம்சங்களில் உள்ள தடைகள் நீங்கி வாழ்வில் வெற்றி கிடைக்கும். பொருளாதாரம், படிப்பு, ஆரோக்கியம் போன்ற அம்சங்களில் உள்ள தடைகள் நீங்கும். மற்ற ஹோமங்களை துவக்குவதற்கு முன்பு கணபதி ஹோமம் செய்ய வேண்டும்.
கணபதி ஹோமத்தின் பெருமை: மகாகணபதியின் அருளைப் பெறக் கணபதி ஹோமம் மிகவும் முக்கியமானது. வெள்ளிக்கிழமை, சதுர்த்தி ஆகிய நாட்களில் விடியற்காலையில் ஹோமம் செய்வது விசேஷம். அஷ்டத்திரவியம், தேங்காய்த்துண்டு ஆகியவை அதற்குச் சிறந்த ஹோமத்திரவியங்கள். 1000 தேங்காய்க் கீற்றினால் ஹோமம் செய்ய செல்வம் வளரும். ஸத்துமா, நெல் பொரி, திரிமதுரம் ஆகியவை ஸர்வ வச்யம் நல்கும். திரிமதுரம் கலந்த நெல்பொரி கல்யாண ப்ராப்தியைத் தரும். நெல் கலந்த அன்னம், நெய் ஆகியவை விருப்பத்தை ஈடேற்றும். தேன் தங்கம் தரும். நெய்யில் நனைத்த அப்பம் மந்திர சித்தி, ராஜ வச்யம் தரும். மோதகம் போரில் வெற்றி தரும். மட்டை உரிக்காத தேங்காய் (1 மண்டலம்) மந்திர சித்தி நல்கும். தாமரை செல்வ வளர்ச்சி தரும். வெண்தாமரையால் வாக் சித்தி ஏற்படும். அருகம்புல் குபேர சம்பத்து தரும். மோதகம் நினைத்ததைத் தரும். வில்வ இலை, நெய்யில் நனைத்த சமித் ஆகியவையும் அப்படியே. தேங்காய், அவல் மிளகு ஆகியவை ஸர்வ வசியம் தரும். இவ்வாறு ஹோமத்திற்குரிய ஆகுதிகள் பெருமை சேர்க்க வல்லபை. பலன் தருபவை.
ஹோமம் செய்யும் முறை:
அனுக்ஞை சுக்லாம்பரதரம்....சாந்தயே
ஓம் பூ .... பூர்புஸ்ஸுவரோம்
சங்கல்பம்:
சுபே சோபனே .... பரமேச்வர ப்ரீத்யர்த்தம்
நக்ஷ்த்ரே - ராசௌ ஜாதஸ்ய ஸ குடும்பஸ்ய
÷க்ஷமஸ்தைர்ய வீர்ய விஜய ஆயு: ஆரோக்ய
ஐச்வர்ய அபிவ்ருத்த்யர்த்தம் ஸர்வாரிஷ்ட சாந்த்யர்த்தம்
ஸர்வாபீஷ்ட ஸித்த்யர்த்தம் மஹா கணபதி ஹோமம் கரிஷ்யே.
(தேங்காய் ஒன்றினை உடைத்து, மூங்கில் இலை போல் மெல்லியதாகக் கீறி, வெல்லச் சர்க்கரை, தேன், நெய் ஆகியவை சேர்த்து 8 கீற்றுக்களை ஹோமத்திற்கு வைத்துக் கொள்க. மீதி உள்ளது மஹாகணபதிக்கும் துர்க்கைக்கும் நிவேதனம். கொட்டாங்கச்சிகளை, மூல மந்திரம் ஜபித்துக் கொண்டு அக்னிக்குத் தெற்கிலும், வடக்கிலும் கண்கள் போல வைக்கவும். மட்டைகளை யானையின் துதிக்கை போல் அக்னியின் சுற்றுப்புறத்தில் வைக்கவும்.
எட்டுத்திரவியங்கள் : கொழுக்கட்டை, அவல், பொரி, ஸத்துமா, கரும்புத்துண்டு, தேங்காய்க் கீற்று, எள், வாழைப்பழம் ஆகியவை.
(அருகம்புல்லாலும் ஹோமம் செய்ய வேண்டும்)
1. பூர்ப்புவஸ் ஸுவரோம் என்று அக்னியைப் பிரதிஷ்டை செய்க. (அதற்கு முன், அக்னியைத் தாபிக்க வேண்டிய இடத்தில் அரிசிமாவால் ஒரு சாண் அளவு தரையில் சதுரமாக மண்டலம் செய்து இரு தர்ப்பைகளால் கிழக்கு நோக்கியும், வடக்கு நோக்கியும் முறையே 3 கோடுகள் வரைந்து நீரைத் தொட்டு, தர்ப்பையைத் தென்மேற்கில் போட்டு மறுபடியும் ஜலத்தைத் தொடுக).
2. அருகில் கும்பத்தில் வருணனை ஆவாகித்துப் பூசை செய்க. அக்னிக்கு வடகிழக்கில் தீபம் வைத்து அதில் துர்க்கை ஆவாஹனம் 16 உபசார பூஜை செய்க.
3. பரிஷேசனம்
அதிதே அநுமன்யஸ்வ அநுமதே அநுமன்யஸ்வ
ஸரஸ்வதே அநுமன்யஸ்வ தேவ ஸவித: ப்ரஸுவ
4. அக்னியில் தியானம் செய்து, ஹோம குண்டத்தின் 8 திசைகளிலும் பூஜை செய்க. (கிழக்கிலிருந்து வரிசையாக ஒவ்வொரு திசையிலும்)
இந்த்ராய நம: அக்னயே நம: யமாய நம:
நிர்ருதயே நம: வருணாய நம: வாயவே நம:
சோமாய நம: ஈசானாய நம: அக்னயே நம: (அக்னியில்)
ஆத்மனே நம: ஸர்வேப்யோ ப்ராஹ்மணேப்யோ நம:
நெய்யில் 15 சமித்தைத் தோய்த்து, அஸ்மின் ஹோம கர்மணி ப்ரஹ்மன் இத்மம் ஆதாஸ்யே என்று கூற, பிரம்மாவானவர், ஓம் ஆதத்ஸ்வ என்று சொல்லியதும், அக்னியில் சேர்க்க. பிரஜாதிபதியை மனதில் நினைத்துக் கொண்டு வடக்கு மூலையிலிருந்து தென் கிழக்காக நெய்யைத் தாரையாக விடுக. எல்லா சமித்துக்களையும் தொடுக. பின்னர் ஸ்வாஹா, ப்ரஜாபதய இதம் ந மம என்று கூறுக. ஸ்வாஹா இந்த்ராய இதம் ந மம (தெற்கிலிருந்து வடகிழக்காக நெய்யை ஊற்றுக). அத ஆஜ்ய பாகோ ஜுஹோதி (வடகிழக்குப் பாதியில்) அக்னயே ஸ்வாஹா, அக்யை இதம் ந மம, என்றும், தென்கிழக்குப் பாதியில் ஸோமாய ஸ்வாஹா, ஸோமாய இதம் ந மம என்றும் நெய்யால் ஹோமம் செய்க. எல்லாத் தோஷங்களுக்கும் பிராயச்சித்தமாக, ஓம் பூர்ப்புவஸ்ஸுவ : ஸ்வாஹா, ப்ரஜாபதய இதம் ந மம என்று நெய் விடுக.
5. அக்னியின் மத்தியில் மகா கணபதியைத் தியானம் செய்க. அஸ்ய ஸ்ரீ மஹா கணபதி மகாமந்த்ரஸ்ய கணக ரிஷி: காயத்ரீச் சந்த : மஹாகணபதிர் தேவதா க்லாம் பீஜம் க்லீம் சக்தி: க்லூம் கீலகம் ஸ்ரீ மஹாகணபதி ப்ரஸாத ஸித்த்யர்த்தே ஹோம விநியோக: (கரநியாஸம், அங்க நியாஸம் செய்க). பூர்ப்புவஸ்ஸுவரோம் என்று திக்பந்தனம் செய்க.
6. தியானம்: பீஜாபூர கதே க்ஷú கார்முகருஜா சக்ராப்ஜ பாசோத்பல வ்ரீஹ்யக்ர ஸ்வவிஷாண ரத்னகலச ப்ரோத்யத் காராம் போருஹ: த் யேயோ வல்லப யா ஸபத்மகரயா ஸ்லிஷ்டோஜ்வலத் பூஷயா விஸ்வோத்பத்தி விபத்தி ஸம்ஸ்தித கரோ விக்நேச இஷ்டார்த்த:
7. பஞ்ச பூஜை:
லம் ப்ருதிவ்யாத்மநே கந்தம் ஸமர்ப்பயாமி
ஹம் ஆகாசாத்மநே புஷ்பம் ஸமர்ப்பயாமி
யம் வாய்வாத்மநே தூபம் ஆக்ராபயாமி
ரம் அக்னியாத்மநே தீபம் தர்சயாமி
வம் அம்ருதாத்மநே அம்ருதம் மகாநைவேத்யம் நிவேதயாமி
ஸம் ஸர்வாத்மநே ஸர்வ உபசார பூஜாம் ஸமர்ப்பயாமி
(பின் கணபதி மூல மந்திரம் ஜபம் செய்க.)
8. நெய்யால் ஹோமம்
ஓம் ஸ்வாஹா ஓம் ஸ்ரீம் ஸ்வாஹா ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்வாஹா ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஸ்வாஹா ஓம் ஸ்ரீம் .... க்லௌம் ஸ்வாஹா
ஓம் ஸ்ரீம் ... .... கம் ஸ்வாஹா ஓம் ஸ்ரீம் .... கணபதயே ஸ்வாஹா ஓம் ஸ்ரீம் .... வரவரத ஸ்வாஹா ஓம் ஸ்ரீம் .... ஸர்வ ஜனம் மே வசம் ஸ்வாஹா ஓம் ஸ்ரீம் .... வசமானய ஸ்வாஹா ஸ்ரீ மகா கணபதயே இதம் ந மம
9. தேங்காய்க் கீற்றால் ஹோமம்
- நக்ஷத்ரே - ராசௌ ஜாதஸ்ய - சர்மண: ஸகுடும் பஸ்ய அனுகூலம் ப்ரயச்ச ப்ரயச்ச, ப்ரதிகூலம் நாசய நாசய, ஸம்பதோ வர்தய, வர்தய, வர்தய, ஸர்வத்ர விஜயம் ப்ரயச்ச ப்ரயச்ச,
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் .... வசமானய ஸ்வாஹா (8 முறை ஹோமம் செய்க).
10. நெய் ஹோமம்
கணானாம் த்வா கணபதிம் ஹவாமஹே ... ஸீத
ஸாதனம் ஸ்வாஹா (8 முறை சொல்லி ஹோமம்)
11. நெல் பொரியால் ஹோமம்
உத்திஷ்ட புருஷ ஹரித பிங்கல லோஹி தாக்ஷ ஸர்வாபீஷ்டம் தேஹி தேஹி தா பய தா பய ஸ்வாஹா (8 முறை ஹோமம்) அக்னிரூபாய ஸ்ரீ மஹாகணபதயே இதம் ந மம.
12. தேங்காய் மூடியால் ஹோமம்
ஜாத வேத ஸே....துரிதாய க்னி: ஸ்வாஹா (இரு முறை)
13. நெய்யில் தோய்த்த அருகம்புல்லால் ஹோமம்
மூல மந்திரத்தால் 8 முறை செய்க.
14. 8 திரவியத்தால் ஹோமம்
ஓம் நமோ வ்ராதபதயே நமோ கணபதயே நம: ப்ரமதபதயே நமஸ்தேஸ்து லம்போதராய ஏக தந்தாய விக்னவிநாசினே சிவஸுதாய ஸ்ரீ வரத மூர்த்தயே நமோ நம: ஸ்வாஹா (8முறை) ஸ்ரீ மஹாகணபதய இதம் ந மம
15. கணேச காயத்ரீ ஜபம் - 10 முறை.
16. கணேச மாலாமந்திரம் சொல்லி ஹோமம்.
17. கணபதி அதர்வசீர்ஷம் சொல்லி ஹோமம்.
18. உத்தராங்கம்
பூ : ஸ்வாஹா அக்யை இதம்
புவ : ஸ்வாஹா வாயவ இதம்
ஸுவ : ஸ்வாஹா ஸுர்யாய இதம்
அஸ்மிந் ஹோம கர்மணி மத்யே ஸம்பாவித ஸமஸ்த தோஷ ப்ராயச்சித்தார்த்தம் ஸர்வ ப்ராயச் சித்தார்த்தம் ஹோஷ்யாமி ஓம் பூர்புவஸ்ஸுவ : ஸ்வாஹா ப்ரஜாபதய இதம் ஸ்ரீ விஷ்ணவே  ஸ்வாஹா விஷ்ணவே பரமாத்மன இதம் நமோ ருத்ராய பசுபதயே ஸ்வாஹா ருத்ராய பசுபதயே இதம் (நீரால் கைகளை நனைக்க)
19. பூர்ணாஹுதி
அஸ்மின் ஹோமகர்மணி பூர்ணாஹுதிம் கரிஷ்யே
பூர்ணாஹுதி தேவதாப் யோ நம: ஸர்வோபசார பூஜாம் ஸமர்ப்பயாமி
மூலமந்திரம் + வெளஷட்
பூர்ணாஹுதிம் உத்தமாம் ஜுஹோதி ஸர்வம் வை பூர்ணாஹுதி : ஸர்வம் ஏவாப்நோதி அதோ இயம் வை பூர்ணாஹுதி : அஸ்யாமேவ ப்ரதி திஷ்டதி
பூர்ணமத : பூர்ணமிதம் பூர்ணாத் பூர்ணம் உதச்யதே.... அவசிஷ்யதே
ப்ரஹ்மார்ப்பணம் ..... ஸமாதி நா
பிராணாயாமம் செய்க.
20. பரிஷேசனம்
அதிதே அன்வமங்ஸ்தா : அநுமதே அன்வமங்கஸ் தா : ஸரஸ்வதே அன்வ மங்ஸ்தா :
தே ஸவித : ப்ராஸாவீ :
வருணாய நம : ஸகலாராதனை : ஸ்வர்ச்சிதம்
21. பிரம்ம உத்வாஸனம்
ப்ரஹ்மன் வரம் தே த தா மி ப்ரஹ்மணே நம:
ஸகல ஆராதனை ஸ்வர்ச்சிதம்
(நான்கு பக்கங்களிலும் உள்ள தர்ப்பைகளை அக்னியில் சேர்க்க).
22. உபஸ்தானம்
ஸ்வாஹா அக்னேர் உபஸ்தானம் கரிஷ்யே அக்னயே நம:
மந்த்ரஹீநம் க்ரியாஹீநம் பக்திஹீநம் ஹுதாசன
யத் து தம் து மயா தேவ பரிபூர்ணம் தத ஸ்து தே
ப்ராயஸ்சித்தானி அசேஷானி தப : கர்ம ஆத்மகானி வை
யாநி தேஷாம் அசேஷாணாம் க்ருஷ்ணாணுஸ்மரணம் பரம் (நமஸ்காரம் செய்க)
அக்னிம் ஆத்மனி உத் வாஸயாமி (இதயத்தில் அஞ்சலி செய்க)
23. ரøக்ஷ
ப்ருஹத் ஸாம க்ஷத்ரப் ருத் வ்ருத் த வ்ருஷ்ணியம்: த்ரிஷ்டு பௌஜ: ஸுபி தம் உக்ர வீரம் இந்த்ர ஸ்தோமேன பஞ்சதஸேன மத்யம் இதம் வாதேன ஸகரேண ரக்ஷ
24. ஸமர்ப்பணம்
குஹ்யாதி குஹ்ய கோப்தா த்வம் க்ருஹாணா ஸ்மத் க்ருதம் ஹவம்
ஸித்தி : பவது மே தே வ த்வத்ப்ரஸதான் மயி ஸ்திரா
ஓம் தத்ஸத் ப்ரஹ்மார்ப்பணம் அஸ்து

ஆசைகளை சீர்படுத்துங்கள்

* ஒருவர் தன்னைத் தாழ்த்திக் கொள்வதும், உயர்த்திக் கொள்வதும் அவரவர் மனதைப் பொறுத்தே இருக்கிறது. மனம் தன்னை உயர்த்திக் கொள்ளப் பழகிவிட்டால் இணையில்லாத இன்பநிலையை அடையலாம்.
* உடல் நலம் பாதிக்கப்பட்டாலும், தானே அதனைச் சரிப்படுத்தி மீண்டும் ஆரோக்கியநிலைக்கு வருவதற்கான ஆற்றல் நம் ஒவ்வொருவருக்குள்ளும் இயற்கையாகவே உள்ளது. ஆனால், நாம் தான் அந்த இயல்பை உணர்ந்து செயல்படுவதில்லை.
* மனதை அடக்க நினைத்தால் அலையும். அதே சமயத்தில் அதை அறிய முனைந்தால் அது நமக்கு அடங்கிவிடும். மனம் தான் மனித வாழ்க்கையின் விளைநிலம். 
* தவறான சிந்தனைகளை ஒருபோதும் நம்முள் நுழைய அனுமதிக்கக் கூடாது. அதற்கு மாறாக நல்ல எண்ணங்களை நாமே விரும்பி முயன்று மனதில் இயங்க விட்டுக் கொண்டிருக்க வேண்டும்.
* உண்மையில் எதிரி ஒருவன் நமக்கு இருக்கிறான் என்றால் அது நம் உள்ளத்தில் எழும் ஒழுங்கற்ற எண்ணங்களே. ஒருமுறை நம் மனதிற்குள் தீய எண்ணத்தை அனுமதித்தால் அதை வெளியேற்றுவது அவ்வளவு எளிதான செயல் அல்ல.
* ஆசைகளை அடியோடு ஒழிப்பது அவ்வளவு எளிதான செயல் அல்ல. அதற்கு தேவையும் இல்லை. பதிலாக, நம் உள்ளத்தில் எழும் ஆசைகளைச் சீரமைத்து வளமான வாழ்க்கை வாழ்வதே அறிவுடைமை.
-வேதாத்ரி மகரிஷி