sai yoga centre

Showing posts with label சோமவார விரதம். Show all posts
Showing posts with label சோமவார விரதம். Show all posts

Sunday, December 18, 2011

சிவ விரதம்: சோமவார விரதம்




சிவவிரதங்களுள் முதன்மையானது சோமவார விரதம். அதிலும் அதி சிறப்பானது கார்த்திகை மாத சோமவார விரதம்.முப்பத்து முக்கோடி தேவர்களில் உத்தமமானவர் சிவபெருமான். சக்தி தேவியருள் உத்தமியாய் திகழ்பவள் உமாதேவி.

கார்த்திக்கை சோம வாரத்தில் (திங்கட் கிழமைகளில் பகல் உணவு தவிர்த்து இரவில் மட்டும் உணவு உட்கொண்டு சிவனை பூஜிப்பவர்களுடைய பாவம் தீயிலிட்ட பஞ்சு போல் ஆகிறது. சிவனை அபிஷேகித்து அர்ச்சனை செய்வோர் தம்மோடு தம் முன்னோர்களும் பாவ விமோசனம் பெற வழிசெய்கிறார்கள் என்கிறது கார்த்திகை மகாத்மியம்.
காஷ்மீர் தேசத்தில் ஓர் அந்தணர் இருந்தார். அவர் தன் மகளுக்கு ஒரு மறையவனை மணமுடித்தார். திருமமணான பின்னும் அந்தப் பெண் ஆட்டம் பாட்டம் அலங்காரம் என்று உலக மாயையில் உழன்றாள் கணவனோடு சண்டையிட்டாள். தீய வழிக்குச் சென்றாள். இறுதியில் கணவனையே கொன்றாள்.

நாளடைவில் அவளது அங்கங்கள் தளர்ந்தன அழகு குறைந்து.நோய்வாய்ப்ப்பட்டாள். இறுதியில் உயிர் விட்டாள். நரகம் சென்று துன்பப் பட்டாள். பல்வேறு பிறவிகளை எடுத்து அவள் நாயாகப் பிறந்தாள். அந்த நிலையில் அவள் ஓர் அந்தணன் வீட்டின் வாயிலில் கிடந்த உணவை சாப்பிட்டாள்.

அது கார்த்திகை சோமவார பூஜை செய்து அந்தணன் இட்ட பலி. எனவே அதனை உண்ட நாய்க்கு முன்ஜென்ம நினைவுகள் வந்தன. பேசத் தொடங்கிற்று. அதைப் பார்த்த அந்தணன் வியந்தான். நாயோடு பேச்சுக் கொடுத்தான் எனக்கு பூர்வஜென்ம நினைவு வரக் காரணம் என்ன என்று அந்த நாய் அந்தணனிடம் கேட்டது. அதற்கு அவன், சோமவார பூஜா பலியை உண்டாய் எனவே உனக்கு ஞானம் வந்தது என்றான்

ஞானம் வந்த நாய் சுவாமி நீங்கள்தான் என்னைக் கறையேறற வேண்டும் என்று கேட்டுக் கொண்டது. கருணை மகுந்த அவன் சோமவார பூஜை பலனை நாய்க்குத் தந்தான். பலனைப் பெற்ற நாய் பேரழகி உருவம் எடுத்து செர்க்கம் லோம் சென்றது என்கிறது கார்த்திகை மகாத்மியம்.

சோமவார விரதத்தை காசி போன்ற புண்ணிய தலங்களில் கடைப்பிடித்தால் பலன் அதிகம். மதுரை நகரில் சோமசுந்தரக் கடவுளை வழிபடுவது கோடி மடங்கு புண்ணியம் தரக்கூடியது. சிவபெருமான் உமையோடு கூடியிருப்பதால் சோமன் என்றும் அவனை அழைப்பார்கள். சோமனுக்குரிய வாரம் (வாரம் என்று வடமொழியில் கிழமை என்று அர்த்தம்) சோமவராரம்.

சோமவராத்தில் அமாவாசையும் சேர்ந்து வருவது அமாசோமவாரம் எனப்படும். இது மிகவும் விசேஷம். நீதி நெறிப்படி தேடிய பொருள் கொண்டு சோமவார விரதம் இருந்தால் பலன் அதிகம் என்கிறது திருவிளையாடல் புராணம். கார்த்திகø அல்லது மார்கழி மாதத்தில் சுக்லபட்சத்தில் சோமவார விரதம் தொடங்கலாம். அந்த மாதங்களில் இரு அமாவாசைகள் இருக்கக் கூடாது. ஞாயிற்றுக்கிழமை இரவு உணவைத் தவிர்க்க வேண்டும் வேறு தரையில் உறங்க வேண்டும் திங்கள் காலை சோமசுந்தக் கடவுளை தியானிக்க வேண்டும் நித்திய கடமைகளைச் செய்து முடிக்க வேண்டும்.

விபூதி, வில்வ மரத்தடியில் இருக்கும் மண், தர்ப்பை, பசுஞ்சாணம், எள் ஆகியவற்றை தலையில் வைத்துக் கொண்டு பவித்ரம் (தருப்பையாலான மோதிரம்) தரித்த கையுடன் மனம், வாக்கு, காயம் என்ற மூன்றும் ஒரு நிலையிருக்க இறைவனை தியானித்து, "இவ்வுலகிலுள்ள எல்லா தீர்த்தங்களிலும் முழுகிய பலனை எனக்குத் தர வேண்டும்.
பின்னர் உடல் துவட்டிக்கொண்டு திருநீறு, ருத்ராட்சம் அணிய வேண்டும். வெள்ளை மந்தாரம், முல்லை, மல்லிகைஜாதி, இருவாட்சி, வெண்தாமரை முதலிய வெள்ளை மலர்களையும் வில்வம், அருகு, அட்சதை முதலியவற்றையும் எடுத்துக் கொண்டு கோயிலுக்குச் செல்ல வேண்டும் சிவாகம் முறைப்படி அப்பனையும், அம்மையையும் அர்ச்சித்து வழிபட வேண்டும்.
சோமவார நாளில் இறைவனின் ஆயிரம் திருநாமங்களை கூறி வில்வத்தால் அர்ச்சித்தால் எல்லா பாவங்களும் அகலும், மணப்பேறு, மகப்பேறு, வாக்கு, கல்வி, செல்வம் யாவும் கிட்டும், நோய் நீக்கம், அகால மரண பயமின்மை என எல்லா நற்பலன்களும் தருவது கார்த்திகை சோமவார விதரம்.

Sunday, November 20, 2011

கோடி நன்மை தரும் சோமவாரவிரதம்



இந்த சோமவார விரதத்தை தொடர்ந்து கடைபிடித்தால் சகல விதமான வசதிகள் கிடைக்கும். முன்னோரு காலத்தில் “ஸீமந்தினி“ என்ற அரசகுமாரி, சோமவார விரதத்தை சரியாகவும் முறையாகவும் கடைபிடித்து வந்தள். அவளின் பக்தியை தங்களுக்கு சாதகமாக நினைத்த திருடர்கள் ஸீமந்தினியிடம் “நாங்கள் கணவன் – மனைவி இருவரும், சோமவார விரதம் இருப்பவர்களிடத்தில்தான் உணவு அருந்துவோம். இன்று திங்கட்கிழமை நீங்களோ விரதத்தை சரியாக கடைபிடிப்பவர் என்று ஊர் மக்கள் சொன்னார்கள். அதனால்தான் உங்களை தேடி எங்கள் வயிற்று பசியை போக்க வந்தோம். என்று அப்பாவி முகத்தை வைத்து கொண்டு நயவஞ்சகமாக பேசினார்கள் அந்த இரண்டு கள்வர்கள்.
 பசி என்று வந்தவர்கள், உண்மையான பக்தர்கள் என்று நினைத்து அவர்களுக்கு பாதபூஜை செய்து உணவு படைத்தாள் ஸீமந்தினி. என்ன ஆச்சரியம்… ஆண்களான இருவரும் கணவன் மனைவி போல் நடித்த அந்த திருடர்கள், உண்மையிலேயே இருவரில் ஒருவன் பெண்ணாகவே மாறினான். சோமவாரம் விரதம் இருப்பவர்களின் கையால் சாப்பிட்டால் செய்த பாவங்கள் அனைத்தும் விலகும். சுபிட்சம் ஏற்படும். சோமவாரம் விரதம் இருப்பவர்களை எந்த துஷ்ட சக்திளும் அண்டாது. தீய சக்திகளிடம் இருந்து தப்பிப்பார்கள்.



 வசிஷ்ட மகரிஷி, சோமவாரம் விரதத்தை பல மாதம் கடைபிடித்தால், நல்ல உள்ளம் படைத்த அருந்ததியை திருமணம் செய்தார். வசிஷ்டரை மறந்தாலும் இன்றுவரை அவரின் பத்தினியை யாரும் மறக்கவில்லை – மறக்கவும் முடியாது. அந்த அளவிற்கு, திருமணம் செய்யும் போது வானத்தை பார்த்து “அருந்ததியை பார்“ என்று சொல்லும் வழக்கம் இன்று வரை இருக்கிறது.  
விபு என்ற அரசருக்கு குழந்தை செல்வம் இல்லாமல் வேதனைப்பட்டார். “பல தலைமுறைக்கு சொத்து இருக்கிறது. ஆனால் தலைமுறையில்லையே…“ என்று ஒரு முனிவரிடம் தன் மனகுறையை சொல்லி வேதனைபட்டார். அதை கேட்ட முனிவர் சோமவார விரதத்தின் மகிமையை சொல்லி “அதை நீங்கள் ஏன் கடைபிடிக்கக் கூடாது பிரபு?“ என்றார். சாமியாரின் ஆலோசனை, அந்த சாமியே நேரில் வந்த சொன்னது போல் இருந்தது விபுக்கு.  
 “பட்ட மரம் தலைக்குமா? என்னதான் விரதம் இருந்தாலும் சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும். புழு கூட தங்காத வயிற்றில் எப்படி குழந்தை பிறக்கும்“ என்று விபுவின் மனைவியின் காதுபட பேசினார்கள், உறவினர் உருவில் வ்நத வஞ்சகர்கள். அந்த பேச்சு மனக்கவலையை கொடு்ததாலும், முனிவரின் வார்த்தையை மதித்து சோமவார விரதம் இருந்தார்கள் அரசரும் அரசியும். அதே ஒரு சோமவார நாளில் அரசி கருத்தரித்தாள். அழகான பல பிள்ளைகளை பெற்று மகிழ்ச்சியான வாழ்க்கையை அமைத்து கொண்டார்கள்.
 கீசகன் என்ற அந்தணர், பல இடங்களில் பீச்சை எடுத்து வாழ்ந்து வந்தார். “இறைவனே உலகம் – அவனின்று ஒர் அணுவும் அசையாது. எது தர வேண்டுமோ அதை கடவுள் நிச்சயம் தன் பக்தனுக்கு கொடுப்பார்“ என்ற நம்பிக்கையுடன் சோமாவார விரதம் இருந்து வந்தார். அதன் பலனாக அவருக்கு பி்சசை அளித்தவர்கள் அவரிடமே உதவி கேட்கும் அளவிற்கு செல்வ வசதியோடு வாழ்க்கை அமைந்தது.
 குசேலன் முன்ஜென்மத்தில் இறைவன் கொடுத்த செல்வத்தை யாருக்கும் கொடுக்காமல், தானே அனுபவித்தான். மறுபிறவிலும் கையேந்தும் நிலை வந்ததை போல், மறுபிறவி மேல் அதிக நம்பிக்கையுள்ள கீசகன், “இனி பிறவியே வேண்டாம்.“ என்ற எண்ணத்தில் செல்வத்தை கண் மூடி தானமாக வாரி வாரி கர்ண பிரபு போல் தானம் வழங்கினார் ஏழைகளுக்கு. இதன் பலனால் ஸ்ரீதேவியின் அக்காளையும் – யமபகவானையும் தன்னை நெருங்க விடாமல் விரட்டியடித்தார் கீசகன்.
 தர்ம வீரியன் என்பவன், தனக்கென்று ஒரு சிறுகுடிசை கூட இல்லாமல் வாழ்ந்து வந்தான். அவன் சோமவார விரதம் இருந்து, அதன் பயனால் தனக்கு என்று ஒரு சாம்ராஜ்யத்தையே உருவாக்கி கொண்டான்.
 விரடன் என்ற கள்வன். அவன் எல்லா இடத்திலும் திருடி, தன் வாழ்க்கையை சுபபோகமாக அனுபவித்து வந்தான். ஒருநாள் அரண்மனையிலேயே அவனுடைய கைவரிசையை காட்டி விட்டான். விடுவாரா அரசர்? “ஆட்டை கடித்து மாட்டை கடித்து கடைசியில் மனிதர்களையே கடிப்பது போல், என் அரண்மனையிலேயே வேலையை காட்டிய அந்த திருடனை பிடித்து வாருங்கள்“ என்று ஆணையிட்டார். நான்கு திக்கிலும் காவலர்கள் தேடினார்கள். காவலர்கள் தேடுவதை அறிந்த வீரியன், ஒரு காட்டில் தஞ்சம் அடைந்தான். அங்கு சமைத்த உணவு இல்லாததால் காய் – கனிகளை பறித்து சாப்பிட்டு வந்தான். அந்த சமயம், மகாராஜாவின் மகள் அரண்மனை பாதையை மறந்து பாதை மாறி காட்டுக்கு வழி தெரியாமல் தடுமாறினாள். அதை கண்ட விரடன், “பாவம் பெண் ஒருத்தி வழி தெரியாமல் தவிக்கிறாளே…“ என்று கல்லுக்குள் ஈரம் இருப்பது போல் அந்த திருடனுக்குள்ளும் நல்ல உள்ளம் இருந்ததால், அந்த பெண்ணிடம் விசாரித்து, அவளை அரண்மனைக்கு அழைத்து சென்றான். அரசரிடம் மாட்டினால் தன் உயிர் போவது நிச்சயம் என்பதை தெரிந்தும், அவளின் தந்தையான அரசரின் முன் வந்து நின்றான் திருடன்.
 நடந்ததை விளக்கமாக தன் தந்தையிடம் சொன்னாள் இளவரசி. அதை பொறுமையாக கேட்ட அரசர், “மறப்போம் – மன்னிப்போம் என்ற உயர்ந்த குணம்தான் மனித மனிதகுணம். ஆகவே உன்னை மன்னித்து விடுகிறன். நல்ல வேலை கிடைக்காத காரணமாகதான் திருடினேன் என்றாய். இனி உன் வாழ்க்கையில் வறுமையே அண்டாது. மகாலஷ்மி உன் நிழல் போல் பின் தொடரும் அளவிற்கு தனாதிபதியாக திகழ்வாய். அந்த அளவிற்கு ஒரு அரசு பணியும், பொன்னும் – பொருளும் தருகிறேன்“ என்று பேச்சு பேச்சோடு இல்லாமல் அரசர் செயலிலும் காட்டினார்.
 “கடுகளவு கூட புண்ணியம் செய்யாதவன், மலையளவு பாவ செயலை செய்தவன் அதுவும் சுமங்கலி பெண் என்று கூட பாராமல் மாங்கல்யத்தை பறித்த படுபாதகன் அந்த கள்வன் விரடனுக்கு எப்படி குருட்டு அதிர்ஷ்டம் வந்தது?“ என்ற பேச்சு ஊர் மக்களிடம் புகைக்க ஆரம்பித்தது.
 அதை கேட்ட ஒரு சந்யாசி ஒருவர், “சோம வாரத்தில் மழையில் குளித்து, சமைத்த உணவை அருந்தாமல் காட்டில் கிடைத்த காய் – கனியை சாப்பிட்டு, நடுஜாமத்தில் வில்வ மரத்தின் மேல் ஏறி இலைகளை பறித்து அந்த மரத்தின் கீழ் இருந்த லிங்கத்தின் மேல் தன் பக்தியை செலுத்தி சுபிட்சத்தை கண்டான் அவன். தேன் இனிக்கும் என்று தெரியாமல் சாப்பிட்டாலும் அது இனிக்கதானே செய்யும். அதுபோல், சோமவார விரதத்தை தெரியாமல் விரடன் செய்திருந்தாலும் அதன் பயனாக அவனுக்கு ஏற்றம் ஏற்பட்டது.“ என்றார் சந்யாசி.


 சோமவார விரதத்தின் முறை
 “திங்கள்கிழமை விடிய காலையில் எழுந்து குளித்து முடித்த பிறகு, சிவனை முதலில் வணங்கி பிறகு ஆலயதிற்கு சென்று சிவனுக்கு வில்வ இலையிலும் – அம்மனுக்கு குங்குமத்தாலும் அர்ச்சனை செய்ய வேண்டும். அத்துடன் கோயிலுக்கு வரும் அன்பர்களுக்கு உங்களால் முடிந்த உணவை பிரசாதமாக கொடுக்க வேண்டும். ஒரு ஆணுக்கும் – பெண்ணுக்கும் அன்ன தானம் செய்ய வேண்டும். அவர்களை சிவனாகவும் பார்வதிதேவியாகவும் மனதில் நினைக்க வேண்டும். இப்படி முறையாக விரதத்தை கடைபிடித்தால், ஈசனுக்கு பிரியமானவராக மாறுவோம். இதனால் அனைத்து செல்வங்களையும் பெற்று பல்லாண்டு பல்லாண்டு பல கோடியாண்டு இன்னல் இல்லாமல் வாழ்வார்கள்“ என்கிறது கந்த புராணம்.

ஸோமவார விரதம் (ஸாம்ப பரமேச்வர பூஜை



விக்நேச்வர பூஜை :

(மஞ்சள் பிள்ளையார் செய்துவைத்து, கையில் புஷ்பம் அக்ஷதை எடுத்துக்கொண்டு)
 
கணாநாம் த்வா கணபதிகும் ஹவாமஹே  
 கவிம் கவீநாம் உபமச்ரவஸ்தமம்|  
ஜ்யேஷ்ட ராஜம் ப்ரஹ்மணாம் ப்ரஹ்மணஸ்பதே  
 ஆந : ச்ருண்வந்நூதிபிஸ் ஸீத ஸாதநம்||  
 
 அஸ்மிந் ஹரித்ராபிம்பே மஹாகணபதிம் த்யாயாமி  
 மஹா கணபதிம் ஆவாஹயாமி 
 
    மஹாகணாதிபதயே  ஆஸநம்     ஸமர்ப்பயாமி  
 " " அர்க்யம்    " 
 " " பாத்யம்    " 
 " " ஆசமநீயம்    "  
 " " ஔபசாரிகஸ்நாநம்  "  
 " " ஸ்நாநாநந்தரம் ஆசமநீயம் "  
 " " வஸ்த்ரார்த்தம் அக்ஷதாந்  "  
 " " யக்ஞோபவீதார்த்தம் அக்ஷதாந் "  
 " " கந்தாந் தாரயாமி   "  
 " " கந்தஸ்யோபரி அக்ஷதாந்  "  
 " " அலங்கரணார்த்தம் அக்ஷதாந் "  
 " " ஹரித்ரா குங்குமம்  "  
 
    புஷ்பை : பூஜயாமி (புஷ்பம், அக்ஷதையால் மஞ்சள் பிள்ளையாருக்குப் பூஜை செய்யவும்.) 
 
 ஓம் ஸுமுகாய நம: ஓம் தூமகேதவே நம: 
  "   ஏகதந்தாய நம:  "   கணாத்யக்ஷாய நம:  
  "   கபிலாய நம:  "   பாலசந்த்ராய நம:  
  "   கஜகர்ணகாய நம:  "   கஜாநநாய நம:  
  "   லம்போதராய நம:   "   வக்ரதுண்டாய நம:  
  "   விகடாய நம:  "   ச்சூர்ப்ப கர்னாய நம:  
  "   விக்நராஜாய நம:  "   ஹேரம்பாய நம:  
  "   கணாதிபாய நம:  "   ஸ்கந்த பூர்வஜாய நம:  
 
    ஓம் மஹாகணாதிபதயே நம: நாநாவித பரிமள பத்ர புஷ்பாணி ஸமர்ப்பயாமி. 
 
  தூபார்த்தம், தீபார்த்தம் அக்ஷதாந் ஸமர்ப்பயாமி. 
 (வெற்றிலை, பாக்கு, பழம், வெல்லம் நிவேதனம் செய்யவும்.) 
நிவேதந மந்த்ரங்கள் :
ஓம் பூர்புவஸ்ஸுவ: தத்ஸவிதுர்வரேண்யம் பர்கோதேவஸ்ய தீமஹி, தியோ யோ ந: ப்ரசோதயாத் | தேவஸ்வித : ப்ரஸுவ | ஸத்யம் த்வர்த்தேந பரிஷிஞ்சாமி.
அம்ருதமஸ்து அம்ருதோபஸ்தரணமஸி ஸ்வாஹா, ஓம் ப்ராணாய ஸ்வாஹா, ஓம் அபாநாய ஸ்வாஹா, ஓம் வ்யாநாய ஸ்வாஹா, ஓம் உதாநாய ஸ்வாஹா, ஓம் ஸமாநாய ஸ்வாஹா, ஓம் ப்ரஹ்மணே ஸ்வாஹா.
 
 ப்ரஹ்மணிம ஆத்மாம்ருதத்வாய | மஹாகணாதிபதயே  
 குடகண்ட, கதளீபல நிவேதநம் ஸமர்ப்பயாமி. 
 மத்யே மத்யே பாநீயம் ஸமர்ப்பயாமி. (உத்தரணியில் தீர்த்தம் எடுத்து விடவும்) 
 
 அம்ருதாபிதாநமஸி - உத்தராபோசநம் ஸமர்ப்பயாமி (உத்தரணியில் தீர்த்தம்  
 எடுத்து விடவும்)  
 
 தாம்பூலம் ஸமர்ப்பயாமி (உத்தரணியில் தீர்த்தம் எடுத்து தாம்பூலத்தில் விடவும்)  
 (கற்பூரம் ஏற்ற வேண்டும்.) 
 நீராஜநம் ஸமர்ப்பயாமி. 
 நீராஜநாநந்தரம் ஆசமநீயம் ஸமர்ப்பயாமி. (உத்தரணியில் தீர்த்தம் எடுத்து விடவும்) 
 

பிரார்த்தனை :

வக்ரதுண்ட மஹாகாய ஸூர்யகோடி ஸமப்ரப | அவிக்நம் குரு மே தேவ ஸர்வகார்யேஷு ஸர்வதா|| (ப்ரதக்ஷிணமும் நமஸ்காரமும் செய்யவும்) கணபதி ப்ரஸாதம் சிரஸா க்ருஹ்ணாமி (கணபதி ப்ரஸாதத்தை சிரஸில் தரித்துக் கொள்ள வேண்டும்)
ப்ராணாயாமம் :
ஓம்பூ: - ஓம்புவ: - ஓம்ஸுவ: - ஓம்மஹ: - ஓம்ஜந: - ஓம்தப: - ஓம் ஸத்யம் - ஓம் தத்ஸவிதுர் வரேண்யம் - பர்க்கோ தேவஸ்ய தீமஹி - தியோ யோ ந: ப்ரசோதயாத் - ஓமாப: - ஜ்யோதீரஸ: - அம்ருதம் ப்ரஹ்ம - பூப்ர்புவஸ்ஸுவரோம்.

ஸங்கல்பம் :

அந்தந்த ப்ரதாந பூஜைக்குரிய ஸங்கல்பத்தை அங்கங்கே குறிப்பிட்டதுபோல் செய்யவும்.
விக்நேஸ்வர உத்யாபநம் :
உத்தரணி ஜலத்தால் கையைத் துடைத்துக்கொண்டு, "விக்நேச்வரம் யதாஸ்த்தாநம் ப்ரதிஷ்டா பயாமி; ச்சோபநார்த்தே க்ஷேமாய புநராகமநாய ச" என்று மஞ்சள் பிள்ளையாரை வடக்குப் பக்கமாக நகர்த்த வேண்டும்.

ப்ரதாந பூஜை

பூஜா ஆரம்பம் :

சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம் | ப்ரஸந்ந வதநம் த்யாயேத் ஸர்வ விக்நோப ஸாந்தயே ||
ப்ராணாயாமம் :
ஓம்பூ: - ஓம்புவ: - ஓம்ஸுவ: - ஓம்மஹ: - ஓம்ஜந: - ஓம்தப: - ஓம் ஸத்யம் - ஓம் தத்ஸவிதுர் வரேண்யம் - பர்க்கோ தேவஸ்ய தீமஹி - தியோ யோ ந: ப்ரசோதயாத் - ஓமாபோ: - ஜ்யோதீ ரஸ: - அம்ருதம் ப்ரஹ்ம - பூர்ப்புவஸ் ஸுவரோம்.

ஸங்கல்பம் :

மமோபாத்த ஸமஸ்த துரித க்ஷயத்வாரா ஸ்ரீ பரமேச்வர ப்ரீத்யர்த்தம் சுபே சோபநே முஹூர்த்தே, அஸ்ய ஸ்ரீபகவத: மஹா புர்ஷஸ்ய, ஸ்ரீவிஷ்ணோராஜ்ஞயா ப்ரவர்த்தமாநஸ்ய அத்யப்ரஹ்மண; த்விதீய பரார்த்தே ஸ்ரீச்வேத வராஹகல்பே வைவஸ்வத மந்வந்தரே கலியுகே, ப்ரதமே பாதே, ஜம்பூ த்வீபே, பாரத வர்ஷே, பரதகண்டே, சகாப்தே அஸ்மிந் வர்த்தமாநே வ்யாவஹாரிகே --ப்ரபவாதி ஷஷ்டி ஸம்வத்ஸராணாம் மத்யே-- . . . . . . . . .ஸம்வத்ஸரே . . . . . . . . அயநே. . . . . . . . . ருதௌ. . . . . . . . மாஸே. . . . . . . பக்ஷே. . . . . . . சுபதிதௌ இந்து வாஸர யுக்தாயாம். . . . . . . . நக்ஷத்ரயுக்தாயாம் சுபதிதௌ அஸ்மாகம் ஸகுடும்பநாம் க்ஷேம ஸ்த்தைர்ய வீர்ய விஜய ஆயுராரோக்ய ஐச்வர்யாணாம் அபிவ்ருத்யர்த்தம், தர்மார்த்த காம மோக்ஷ சதுர்வித பல புருஷஅர்த்த ஸித்த்யர்த்தம், ஸாம்ப பரமேச்வர ப்ரஸாத ஸித்த்யர்த்தம், ஸோமவார புண்ய காலே, ஸாம்ப பரமேச்வர பூஜாம் கரிஷ்யே | ததங்கம் கலச் பூஜாம் கரிஷ்யே |
விக்நேச்வர உத்யாபநம் 'யதாஸ்தாநம் ப்ரதிஷ்ட்டாபயாமி' என்று அக்ஷதை சேர்த்து மஞ்சள் பிள்ளையாரை வடக்கு பக்கமாகச் சற்று நகர்த்தவும்.
 
கலச பூஜை :
(கலசத்தை சந்தனம், குங்குமம், அக்ஷதை இவைகளால் அலங்கரித்து) கலசஸ்ய முகே விஷ்ணு : கண்டே ருத்ர : ஸமாச்ரித : | மூலே தத்ர ஸ்திதோ ப்ரஹ்மா மத்யே மாத்ருகணா : ஸ்ம்ருதா: || குக்ஷெள து ஸாகராஸ் ஸர்வே ஸப்த த்வீபா வஸுந்தரா | ருக்வேதோத யஜுர்வேதஸ் ஸாமவேதோஸ் ப்யதர்வண : || அங்கைச்ச ஸஹிதாஸ் ஸர்வே கலசாம்பு ஸமாச்ரிதா : | கங்கே ச யமுநே சைவ கோதாவரி ஸரஸ்வதி || நர்மதே ஸிந்து காவேரி ஜலேஸ்மிந் ஸந்நிதிம் குரு || (என்று ஜபித்து, கலச தீர்த்தம் சிறிதளவு எடுத்து பூஜாத் திரவ்வியங்களையும், தன்னையும் ப்ரோக்ஷணம் செய்து கொள்க.)

கண்டா பூஜை :

ஆகமார்த்தம் து தேவாநாம் கமநார்த்தம் து ரக்ஷஸாம் | கண்டாநாதம் கரோம்யாதௌ தேவதாஹ்வாந லாஞ்ச்சநம்; என்று சொல்லி மணியை அடிக்கவும்.
ஷோடசோபசார பூஜை :
உமயா ஸஹிதம் தேவம் ப்ரஸந்நம் பரமேச்வரம் | அங்காதிரோபித ஸ்கந்த ஹைரம்ப வ்ருஷவாஹநம் || வ்யாக்ரசர்ம பரீதாங்கம் ஹரம் ஸோம விபூஷணம் | த்யாயேத் சதுர்ப்புஜம் தேவம் சந்த்ரமௌளிம் ஸதாசிவம் || அஸ்மிந் பிம்பே ஸாம்ப பரமேச்வரம் த்யாயாமி ஆவாஹயாமி தேவேசம் ஆதி தேவம் ஸநாதநம் | ஸோமேச்வரம் சூலபாணிம் விரூபாக்ஷம் பிநாகிநம் || அஸ்மிந் பிம்பே ஸாம்ப பரமேச்வரம் ஆவாஹயாமி

ப்ராண ப்ரதிஷ்டை :

(அந்தந்த பூஜைக்குரிய தேவதையை விக்ரஹ மூத்தியிலோ, கலசத்திலோ, படம் முதலியவைகளிலோ கீழ்கண்ட வகையில் ப்ராணப்ரதிஷ்டை செய்ய வேண்டும். தேவதா ப்ரதிமை இருந்தால் பஞ்ச கவ்யத்தால் அந்த ப்ரதிமையைச் சுத்தி செய்து ப்ராணப் பிரதிஷ்டை செய்யவேண்டும். படமாக இருந்தால் ப்ராண ப்ரதிஷ்டை மட்டும் செய்ய வேண்டும்.)
 
   ஓம் அஸ்ய ஸ்ரீ ப்ராணப்ரதிஷ்டா மஹாமந்த்ரஸ்ய,  
  ப்ரஹ்ம விஷ்ணு மஹேச்வரா: ரிஷய:, ருக் யஜுஸ் ஸாம  
  அதர்வாணி ச்சந்தாம்ஸி || ஸகல ஜகத் ஸ்ருஷ்டி ஸ்திதி  
  ஸம்ஹார காரிணீ ப்ராண சக்தி: பரா தேவதா | 
 
   ஆம் பீஜம், ஹ்ரீம் சக்தி:, க்ரோம் கீலகம், ப்ராண  
  ப்ரதிஷ்டாபநே விநியோக: 
 
   ஆம் அங்குஷ்ட்டாப்யாம் நம:, ஹ்ரீம் தர்ஜநீப்யாம்  
  நம;, க்ரோம் மத்யமாப்யாம் நம: 
 
   ஆம் அநாமிகாப்யாம் நம:, ஹ்ரீம் கநிஷ்ட்டிகாப்யாம்  
  நம:, க்ரோம் கரதல கரப்ருஷ்ட்டாப்யாம் நம: 
 
  ஆம் ஹ்ருதயாய நம:, ஹ்ரீம் சிரஸே ஸ்வாஹா, க்ரோம் சிகாயை வஷட், 
 ஆம் கவசாய ஹூம், ஹ்ரீம் நேத்ரத்ரயாய வௌஷட், க்ரோம் அஸ்த்ராய பட், பூர்ப்புவஸ் 
 ஸுவரோமிதி திக்பந்த: ||  
 


|| த்யாநம் ||
ரக்தாம்போதிஸ்த்த போதோல்லஸ தருண ஸரோஜாதிரூடா கராப்ஜை: பாசம் கோதண்ட மிக்ஷூத்பவ மளிகுண- மப்யங்குசம் பஞ்சபாணாந் | பிப்ராணாஸ்ருக் கபாலம் த்ரிணயந லஸிதா பீந வக்ஷோ ருஹாட்யா தேவீ பாலார்க்கவர்ணா பவது ஸுக்கரீ ப்ராணசக்தி: ப்ரா ந: || ஓம் ஆம் ஹ்ரீம் க்ரோம் | க்ரோம் ஹ்ரீம் ஆம் | அம் யம் ரம் லம் வம் சம் ஷம் ஸம் ஹம் ளம் க்ஷம் அம் | ஹம்ஸ: ஸோஹம், ஸோஹம் ஹம்ஸ: | அஸ்யாம் மூர்த்தௌ ஜீவஸ்திஷ்ட்டது. அஸ்யாம் மூத்தௌ ஸர்வேந்த்ரியாணி வாங் மநஸ் த்வக் சக்ஷுச் ச்ரோத்ர ஜிஹ்வா க்ராண வாக் பாணி பாத பாயூபஸ்த்தாநி இஹாகத்ய ஸ்வஸ்தி ஸுகம் சிரம் திஷ்ட்டந்து ஸ்வாஹா | (புஷ்பம், அக்ஷதை இவைகளைத் தீர்த்தத்துடன் பிம்பத்தின் மீது விடவும்.) அஸுநீதே புநரஸ்மாஸு சக்ஷு: புந: ப்ராணமிஹ நோ தேஹி போகம் | ஜ்யோக் பச்யேம ஸூர்ய முச்சரந்த மநுமதே ம்ருளயா ந: ஸ்வஸ்தி || ஆவாஹிதோ பவ | ஸ்த்தாபிதோ பவ | ஸந்நிஹிதோ பவ | ஸந்நிருத்தோ பவ | அவகுண்டிதோ பவ | ஸுப்ரீதோ பவ ஸுப்ரஸந்நோ பவ ஸுமுகோ பவ | வரதோ பவ | ப்ரஸீத ப்ரஸீத || ஸ்வாமிந் ஸர்வஜகந்நாத யாவத் பூஜாவஸாநகம் | தாவத் த்வம் ப்ரீதி பாவேந பிம்பேஸ்மிந் ஸந்நிதிம் குரு || என்று ப்ரார்த்தித்து, வாழைப்பழம் போன்ற ஏதாவது ஒன்றை நிவேதநம் செய்யவும். பிறகு கீழ்கண்டதைச் சொல்லி சரட்டைக் கலசத்தின் மீது வைக்கவும். முக்தா வைடூர்ய கசிதம் ஜாம்பூநத பரிஷ்க்ருதம் | ஸிம்ஹாஸநம் மஹாதேவ ஸங்க்ருஹாண ஸுரேச்வர || ஆசநம் ஸமர்ப்பயாமி. ஸர்வதீர்த்த ஸமாநீதம் புஷ்பகந்தைஸ் ஸுவாஸிதம் | பாத்யம் க்ருஹாண தேவேச பக்தப்ரிய நமோஸ்து தே || பாத்யம் ஸமர்ப்பயாமி. கைலாஸ சிகராவாஸிந் ஸுராஸுர ஸுபூஜித | அர்க்யம் க்ருஹாண தேவேச பக்தாநா மபயங்கர || அர்க்யம் ஸமர்ப்பயாமி. நமஸ் துப்யம் த்ரிணயந ஸ்ருஷ்டி ஸ்த்தித்யந்த காரண | க்ருஹாண தேவ தேவேச ஜிதக்ரோத ஜிதேந்த்ரிய || ஆசமநீயம் ஸமர்ப்பயாமி. பயஸா மதுநா தத்நா க்ருதேந ச ததைவ தே | மதுபர்க்கம் ப்ரதாஸ்யாமி தேவதேவ ஜகத்பதே || மதுபர்க்கம் ஸமர்ப்பயாமி. ததிக்ஷீர க்ருதம் சம்போ கதலீ பல ஸம்யுதம் | பார்வதீச நமஸ்துப்யம் க்ராஹ்யம் பஞ்சாம்ருதம் த்வயா || பஞ்சாம்ருதஸ்நாநம் ஸமர்ப்பயாமி. சந்த்ரமௌளே ஜடாஜூட ஸோமஸூர்யாக்நி லோசந | பாஹி மாம் க்ருபயா சம்போ பசூநாம் பதயே நம : || சுத்தோதக ஸ்நாநம் ஸமர்ப்பயாமி. துகூலம் தௌத தவளம் நாநா சித்ரமயம் யுகம் | வஸ்த்ரம் க்ருஹாண பகவந் காலகண்ட நமோஸ்து தே || வஸ்த்ரயுக்மம் ஸமர்ப்பயாமி. காஞ்சநம் ப்ரஹ்மஸூத்ரஞ்ச ராஜதம் சோத்தரீயகம் | தந்துநா மிச்ரிதம் ஸூத்ரம் பவித்ரஞ்ச க்ருஹாண போ: || உபவீதம் ஸமர்ப்பயாமி. ஸ்ரீகந்தம் குங்குமையர் மிச்ரம் கர்ப்பூரேண மநோஹரம் | அந்யைஸ் ஸுகந்திபிர் யுக்தம் க்ருஹாண ஸ்வஜநப்ரிய || கந்தாந் தாரயாமி. அக்ஷதாந் தவளாந் திவ்யாந் அவ்ரணாம்ஸ் திலதண்டுலாந் | அஷ்டமூர்த்தே நமஸ்துப்யம் அக்ஷதாந் ஸங்க்ருஹாண போ: || அக்ஷதாந் ஸமர்ப்பயாமி. கேயூர கடகாதீநி கடிஸூத்ராங்குளீயகை: | நூபுராதிபி ரந்யைச்ச க்ருஹாணாப்ரணம் ப்ரபோ || ஆபரணம் ஸமர்ப்பயாமி. மால்யாநி ச ஸுகந்தீநி மாலதீ குஸுமாநி ச | மயா ஹ்ருதாநி பூஜார்த்தம் புஷ்பாணி ப்ரதிக்ருஹ்யதாம் || புஷ்பாணி ஸமர்ப்பயாமி.

|| அங்க பூஜா ||

ஹராய நம: பாதௌ பூஜயாமி சங்கராய நம் குல்பௌ " சம்பவே நம: ஜங்கே " சிவாய நம: ஜாநுநீ " அகநாசிநே நம: ஊரூ " ஜகத்பதயே நம: ஜகநம் " ப்ரஜாபதயே நம: மேட்ரம் " ஸர்வாச்ரம பதயே நம: கடிம் " ஸர்வரக்ஷாய நம: நாபிம் " திக்வாஸஸே நம: மத்யம் " பார்வதீசாய நம: பார்ச்வே " உமாபதயே நம: வக்ஷஸ்தலம் " ஜகத்குக்ஷயே நம: குக்ஷிம் " நீலகண்டாய நம: கண்டம் " த்ரிபுராந்தகாய நம: பாஹூந் " தேவதேவாய நம: கராந் " வ்ருஷாங்காய நம: கர்ணௌ " க்ரதுபல ப்ரதாய நம: முகம் " நாகஹாராய நம: நாஸிகே " சந்த்ரார்க்க வஹ்நிநேத்ராய நம: நேத்ராணி " கபாலிநே நம: லலாடம் " ஸோமேச்வராய நம: சிர: " கங்காதராய நம: ஜடா: " சுபதாயிநே நம: ஸர்வாண்யங்காநீ பூஜயாமி || (பிறகு அஷ்டோத்திரத்தால் அர்ச்சனை செய்யவும்)
|| சிவாஷ்டோத்தர சத நாமாவளி ||
ஓம் சிவாய நம: ஓம் மஹேச்வராய நம: " சம்பவே நம: " பிநாகிநே நம: " சசிசேகராய நம: " வாமதேவாய நம: " விரூபாக்ஷாய நம: " கபர்திநே நம: " நீலலோஹிதாய நம: " சங்கராய நம்: (10) " சூலபாணயே நம: " கட்வாங்கிநே நம: " விஷ்ணுவல்லபாய நம: " சிபிவிஷ்டாய நம: " அம்பிகாநாதாய நம: " ஸ்ரீ கண்ட்டாய நம: " பக்தவத்ஸலாய நம: " பவாய நம: " சர்வாய நம: " த்ரிலோகேசாய நம: (20) " சிதிகண்ட்டாய நம: " சிவப்ரியாய நம: " உக்ராய நம: " கபர்திநே நம: " காமாரயே நம: " அந்தகாஸுரஸூதநாய நம: " கங்காதராய நம: " லலாடாக்ஷாய நம: " காலகாலாய நம: " க்ருபாநிதிதயே நம : (30) " பீமாய நம: " பரசுஹஸ்தாய நம: " ம்ருக பாணயே நம: " ஜடாதராய நம: " கைலாஸ வாஸிநே நம: " கவசிநே நம: " கடோராய நம: " த்ரிபுராந்தகாய நம: " வ்ருஷாங்காய நம: " வ்ருஷபாரூடாய நம்: (40) " பஸ்மோத்தூளித விக்ரஹாய நம: " ஸாமப்ரியாய நம: " ஸ்வரமயாய நம: " த்ரயீமூர்த்தயே நம: " அநீச்வராய நம: " ஸர்வஜ்ஞாய நம: " பரமாத்மநே நம: " ஸோமஸூர்யாக்நி லோசநாய நம: " ஹவிஷே நம: " யஜ்ஞமயாய நம: (50) " ஸோமாய நம: " பஞ்சவக்த்ராய நம: " ஸதாசிவாய நம: " விச்வேச்வராய நம: " வீரபத்ராய நம: " கணநாதாய நம: " ப்ரஜாபதயே நம: " ஹிரண்யரேதஸே நம: " துர்தர்ஷாய நம: " கிரீசாய நம: (60) " கிரிசாய நம: " அநகாய நம: " புஜங்கபூஷ்ணாய நம: " பர்காய நம: " கிரிதந்வநே நம: " கிரிப்ரியாய நம: " க்ருத்திவாஸஸே நம: " புராராதயே நம: " பகவதே நம: " ப்ரமதாதிபாய நம: (70) " ம்ருத்யுஞ்ஜயாய நம: " ஸூக்ஷமதநவே நம: " ஜகத்வ்யாபிநே நம: " ஜதக்குரவே நம: " வ்யோமகேசாய நம: " மஹாஸேநஜநகாய நம: " சாருவிக்ரமாய நம: " ருத்ராய நம: " பூதபதயே நம: " ஸ்த்தாணவே நம: (80) " அஹிர்புத்ந்யாய நம: " திகம்பராய நம: " அஷ்டமூர்தயே நம: " அநேகாத்மநே நம: " ஸாத்விகாய நம: " சுத்தவிக்ரஹாய நம: " சாச்வதாய நம: " கண்டபரசவே நம: " அஜாய நம: " பாசவிமோசகாய நம: (90) " ம்ருடாய நம: " பசுபதயே நம: " தேவாய நம: " மஹாதேவாய நம: " அவ்யயாய நம: " ஹரயே நம: " பூஷதந்தபிதே நம: " அவ்யக்ராய நம: " தக்ஷாத்வரஹராய நம: " ஹராய நம: (100) " பகநேத்ரபிதே நம: " அவ்யக்தாய நம: " ஸஹஸ்ராக்ஷாய நம: " ஸஹஸ்ரபதே நம: " அபவர்கப்ரதாய நம: " அநந்தாய நம: " தாரகாய நம: " பரமேச்வராய நம: (108) ஸாம்ப பரமேச்வராய நம:, நாநாவித பரிமளபத்ர புஷ்பாணி ஸமர்ப்பயாமி || என்று சொல்லி புஷ்பம் சேர்க்கவும்.

|| ஏகாதச (11) கலச பூஜை ||

1) சிவாய நம: 2) ருத்ராய நம: 3) பசுபதயே நம: 4) நீலகண்டாய நம: 5) மஹேச்வராய நம: 6) சர்வாய நம: 7) ஈசாநாய நம: 8) பிநாகிநே நம: 9) வ்ருஷபத்வஜாய நம: 10)சங்கராய நம: 11) மஹாதேவாய நம: ||

உத்தராங்க பூஜை :

தசாங்கம் குக்குலும் தூபம் ஸுகந்தம் ஸுமநோஹரம் | தூபம் க்ருஹாண தேவேச விரூபாக்ஷ நமோஸ்து தே || தூபம் ஆக்ராபயாமி. ஸாஜ்யம் த்ரிவர்த்தி ஸம்யுக்தம் வஹ்நிநா யோஜிதம் மயா | தீபம் க்ருஹாண தேவேச த்ரைலோக்ய திமிராபஹம் || தீபம் தர்சயாமி. ஷட்ரஸைச்ச ஸமோபேதம் நாநாபக்ஷ்ய ஸமந்விதம் | நைவேத்யம் து மயா தத்தம் க்ருஹாண பரமேச்வர || ஸாம்ப பரமேச்வராய நம:, சால்யந்நம், க்ருதகுள பாயஸம், பலாநி, ஏதத் ஸர்வம் மஹாநைவேத்யம் நிவேதயாமி. ஆசமநீயம் ஸமர்ப்பயாமி. கர்ப்பூர பாடலிர் யுக்தம் ஏலோசீர ஸமந்விதம் | சம்பகோத்பல ஸம்யுக்தம் பாநீயம் ப்ரதிக்ருஹ்யதாம் || பாநீயம் ஸமர்ப்பயாமி. கங்கா யமுநயோஸ் தோயை: சாதகும்பகடைர் ஹ்ருதை: | ஹஸ்த ப்ரக்ஷாளநம் தேவ சுத்யர்த்தம் ப்ரதிக்ருஹ்யதாம் || ஹஸ்தப்ரக்ஷாளநம் ஸமர்ப்பயாமி. பூகீபல ஸமாயுக்தம் நாகவல்லீ தளைர் யுதம் | கர்ப்பூர சூர்ணஸம்யுக்தம் தாம்பூலம் ப்ரதிக்ருஹ்யதாம் || தாம்பூலம் ஸமர்ப்பயாமி. நீராஜநம் மஹாதேவ கோடிஸூர்ய ப்ரகாசக | பக்த்யாஹம் தே ப்ரதாஸ்யாமி ஸ்வீகுருஷ்வ தயாநிதே || மர்ப்பூரநீராஜநம் தர்ஸயாமி. யஸ்யாஜ்ஞபா ஜகத்ஸ்ரஷ்டா விரிஞ்ச: பாலகோ ஹரி: | ஸம்ஹர்த்தா காலருத்ராக்ய: நமஸ்தஸ்மை பிநாகிநே || மந்த்ரபுஷ்பம் ஸமர்ப்பயாமி. நாநாரத்ந ஸமாயுக்தம் வஜ்ரநாள ஸமந்விதம் | முக்தாகேஸர ஸம்யுக்தம் ஸ்வர்ண புஷ்பம் ததாம்யஹம் || ஸ்வர்ணபுஷ்பம் ஸமர்ப்பயாமி. யாநி காநி ச பாபாநி ஜந்மாந்தர க்ருதாநி ச | தாநி தாநி ப்ரணச்யந்தி ப்ரதக்ஷிணபதே பதே || ஸோமேச்வர விரூபாக்ஷ ஸோமரூப ஸதாசிவ | ப்ரதக்ஷிணம் கரோமீச ப்ரஸீத பரமேச்வர || நமஸ்தே ஸர்வலோகேச நமஸ்தே புண்யமூர்த்தயே | நமோ வேதாந்த வேத்யாய சரண்யாய நமோ நம: || ஸாம்ப சிவாய நம:, அநந்தகோடி ப்ரதக்ஷிண நமஸ்காராந் ஸமர்ப்பயாமி. (பஞ்சாக்ஷரஜபம் செய்யவும்.)
அர்க்ய ப்ரதாநம் :
அத்ய பூர்வோக்த - ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம. . . சுபதிதௌ, ஸோமவார புண்யகாலே ஸாம்ப பரமேச்வர பூஜாந்தே அர்க்யப்ரதாநம் உபாயநதாநம் ச கரிஷ்யே || ஸோமவாரே திவா ஸ்த்தித்வா நிராஹாரோ மஹேச்வர | நக்தம் போக்ஷ்யாமி தேவேச அர்ப்பயாமி ஸதாசிவ || ஸாம்பசிவாய நம: இதமர்க்யம், இதமர்க்யம், இதமர்க்யம். நக்தே ச ஸோமவாரே ச ஸோமநாத ஜகத்பதே | அநந்தகோடி ஸௌபாக்யம் அக்ஷய்யம் குரு சங்கர || சாம்பசிவாய நம: இதமர்க்யம், இதமர்க்யம், இதமர்க்யம். நமஸ் ஸோம விபூஷாய ஸோமாயாமித தேஜஸே | இதமர்க்யம் ப்ரதாஸ்யாமி ஸோமோ யச்சது மே சிவம் || ஸாம்பசிவாய நம: இதமர்க்யம், இதமர்க்யம், இதமர்க்யம். ஆகாச திக்சரீராய க்ரஹநக்ஷத்ர மாலிநே | இதமர்க்யம் ப்ரதாஸ்யாமி ஸுப்ரீதோ வரதோ பவ || ஸாம்பசிவாய நம: இதமர்க்யம், இதமர்க்யம், இதமர்க்யம். அம்பிகாயை நமஸ்துப்யம் நமஸ்தே தேவி பார்வதி | அம்பிகே வரதே தேவி க்ருஹ்ணீதார்க்யம் ப்ரஸீத மே || பார்வத்யை நம:, இதமர்க்யம், இதமர்க்யம், இதமர்க்யம். ஸுப்ரஹ்மண்ய மஹாபாக கார்த்திகேய ஸுரேச்வர | இதமர்க்யம் ப்ரதாஸ்யாமி ஸுப்ரீதோ வரதோ பவ || ஸுப்ரஹ்மண்யாய நம:, இதமர்க்யம், இதமர்க்யம், இதமர்க்யம். நந்திகேச மஹாபாக சிவத்யாந பராயண | சைலாதயே நமஸ்துப்யம் க்ருஹ்ணீதார்க்ய மிதம் ப்ரபோ || நந்திகேச்வராய நம:, இதமர்க்யம், இதமர்க்யம், இதமர்க்யம். அநேந அர்க்யப்ரதாநேந பகவாந் ஸர்வாத்மக: ஸர்வம் ஸாம்பசிவ: ப்ரீயதாம். || தத்ஸத் ப்ரஹ்மார்ப்பணமஸ்து || யஸ்ய ஸ்ம்ருத்யா ச நாமோக்த்யா தப: பூஜா க்ரியாதிஷு | ந்யூநம் ஸம்பூர்ணதாம் யாதி ஸத்யோ வந்தே ஸதாசிவம் || ஸோமவார வ்ரதம் பக்த்யா க்ருதம் கல்யாண தாயகம் | ப்ரஸீத பார்வதீநாத ஸாயுஜ்யம் தேஹி மே ப்ரபோ || ஸோமநாதா ஜகத்வந்த்ய பக்தாநா மிஷ்டதாயக | ஆயுஷ்யம் சைவ ஸௌபாக்யம் தேஹாந்தே முக்திதோ பவ || (ப்ராத்தனை செய்து கொள்ளவும்)

உபாயந தாநம் :

ஸாம்பசிவ ஸ்வரூபஸ்ய ப்ராஹ்மணஸ்ய இதமாஸநம் | கந்தாதி ஸகலாராதநை: ஸ்வர்ச்சிதம் || ஸோமேச: ப்ரதிக்ருஹ்ணாதி ஸோமேசோ வை ததாதி ச | ஸோமேசஸ் தாரகோ த்வாப்யாம் ஸோமேசாய நமோ நம: || இதமுபாயனம் ஸதக்ஷிணாகம் ஸதாம்பூலம் ஸாம்பசிவ பூஜா பல ஸாத்குண்யம் காமயமாந: ஸாம்ப பரமேச்வர ஸ்வரூபாய ப்ராஹ்மணாய துப்யமஹம் ஸம்ப்ரததே ந மம || (தீர்த்தம், ப்ரஸாதம் பெற்றுகொள்ளவும்) உமாமஹேச்வர பூஜை முற்றும்

சோமவார விரதம் செய்யும் முறை!




கணேஸாய நம:
சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம்
ப்ரசன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்நோப ஸாந்தயே
குரு பிரம்மா குரு விஷ்ணு குரு தேவோ மஹேஸ்வர
குரு சாக்ஷõத் பரப் பிரம்மம் தஸ்மை ஸ்ரீ குருவே நம :
இந்த விரதத்தை எந்த மாதத்திலும் ஆரம்பிக்கலாம். 16 சோமவாரம் முழு பட்டினி இருந்து சிவதரிசனம் செய்து பின்வரும் கதையை ஒருவரிடம் சொல்லவேண்டும். ஒருவரிடமும் சொல் சந்தர்ப்பம் இல்லை என்றால் சுவாமியின் முன்பும் அல்லது துளசி மாடத்தின் முன்பும் அல்லது பசுமாட்டின் முன்பும் சொல்லலாம். காபி, பால், பழம் முதலியன சாப்பிட்டுக் கொள்ளலாம். உப்பு புளிப்பு கூடாது. மடியாக ஆடை உடுத்தி ஆசாரத்துடன் விரதம் இருக்கவேண்டும். கதை சொல்லும் போது கையில் சிறிது அட்சதை வைத்துக் கொள்ள வேண்டும்

சோமவாரக் கதை
ஒரு ஊரிலே ஒரு கோயில் இருந்தது. அந்தக் கோயில் கோபுரம் மிகவும் பழுதடைந்து இருந்தது. ஆகையால் அவ்வூர் ஜனங்கள் அக்கோயிலில் பூதம், பிசாசுகள் வாசம் செய்கிறது என்று பிரச்சாரம் செய்துவிட்டார்கள். ஆகையால் எவரும் அக்கோயிலுக்குப் போகவில்லை. ஆனால் அது சின்னச் கோயிலாக இருந்தாலும் வாசனையுள்ள பூக்களும் நல்ல மூலிகைகளும் நிறைந்து இருந்தது. அதனால் ஈஸ்வரர், ஈஸ்வரி அங்கு வந்து சதுரங்கம், சொக்கட்டான் முதலியன விளையாடிக் கொண்டும், சத்சங்கம் செய்து கொண்டும் அமைதியாக இருப்பார்கள். ஒரு சமயம் இருவரும் விளையாடுகையில் பார்வதி தேவி ஜெயித்தார். ஈசுவரர் நானே ஜெயித்தேன் என்றார். எனவே மறுபடியும் இருதடவை அவர்கள் விளையாடியும் பார்வதி தேவியே வென்றார். ஆனாலும் ஈசுவரர், நானே வென்றேன் என்றார். உடனே பார்வதி தேவி, தோற்றுவிட்டு நானே வென்றேன் என்று பொய் கூறுகிறீர்களே என்று கூறி கோபித்துக் கொண்டு உட்கார்ந்து விட்டார். ஈசுவரர் சங்கல்பத்தில் அப்பொழுது ஒரு தபோதனர் அங்கு வந்தார். அவரைப் பார்த்த அம்பாள் இந்த பிராமணரிடம் யார் வென்றோம், என்று கேட்போம் என்றார். ஈசுவரரும் அதற்கு சம்மதித்தார். அப்பிராமணர் அருகில் வந்ததும், எங்கள் இருவரில் யார் வென்றார்கள்? என்று கேட்டார்கள். அதற்கு பிராமணர் காதால் கேட்பதைக் காட்டிலும் கண்ணால் காண்பது நன்று என்றவுடன் இருவரும் மறுபடியும் மூன்று தடவை விளையாடினார்கள். மூன்று முறையும் தேவியே ஜெயித்தார். ஆனால் பிராமணர் அம்பாள் ஜெயித்தாலும் ஈசுவரரே ஜெயித்தார் என்று கூறினார். இதைக் கேட்ட தேவி கோபாவேசமாகி துர்க்கையாக மாறி சாதாரண விஷயத்திற்கு பிராமணர் பொய் பேசியதால் பிராமணருக்கு குஷ்டம் ஆகக்கடவது என்று சாபமிட்டார். உடனே அந்த இடத்திலேயே பிராமணருக்கு இரத்தம் ஒழுகி உடம்பு முழுவதும் நாற்றம் எடுத்து சீழ், புழு முதலியன வெளியேறியது. அவ்வியாதியின் கஷ்டம் தாங்காமல் பிதாவிடம் விமோசனம் கேட்டார். அதற்கு பிதா அம்பாள் இட்ட சாபம் இட்டது தான்; அதை மாற்ற முடியாது என்றார். ஆனால் பிதா தன் சங்கல்பத்தினால் சோமவார சமத்காரம் நடத்த நினைத்தார்.
ஈஸ்வரர் இப்படி சொன்னவுடன் பிராமணர் தன் தேக உபாதை தாங்க முடியாமல் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொள்ளலாம் என நினைத்து கிணற்று அருகில் சென்றார். அப்பொழுது ஈசுவரர் சங்கல்பத்தில் அங்கு ஒரு அப்சரஸ்திரி இந்திரலோகம் போய்க்கொண்டிருந்தாள். அவளும் இந்திரன் சாபத்தினால் பூலோகத்தில் அவதாரம் எடுத்து சோமவார விரதம் இருந்து சோமவார சமத்காரத்தினால் சாபம் தீர்ந்து இந்திரலோகம் போய்க் கொண்டிருந்தாள். அவள் கிணற்றில் விழச்சென்ற பிராமணரைப் பார்த்து, சுவாமி தங்களைப் பார்த்தால் மகரிஷி மாதிரி தெரிகிறதே; தற்கொலை செய்து கொண்டால் ஏழு ஜென்மத்திற்கும் பாவமாயிற்றே ! பிராமணராய் இருந்தும் ஏன் கிணற்றில் விழப்போகிறீர்கள்? என்று கேட்டாள். அதற்குப் பிராமணர், பூலோகத்தில் இந்த பாவ உடலை வைத்துக் கொண்டு நான் ஏன் இருக்க வேண்டும் என்றார். அதற்கு அப்சரஸ்திரி 16 சோமவார விரதத்தினால் உங்கள் வியாதி குணமாகிவிடும். ஆனால் எனக்கு அதைப்பற்றி சொல்ல நேரமில்லை. நீங்கள் அருகிலுள்ள விதர்பநகர் சென்றால் அங்கு கிணற்றடியில் இருக்கும் பெண்கள் சோமவார விரத மகிமையைப் பற்றி பேசிக் கொண்டிருப்பார்கள். அவர்களிடம் சென்று குரு, சிஷ்யபாவமாக சோமவார விரத மகிமையைக் கேட்டால் அவர்கள் சொல்வார்கள். அதன்படி சோமவார விரதம் இருந்து வந்தால் உங்கள் வியாதி குணமாகிவிடும், என்று சொன்னாள். அந்த தபோதனர் ஸ்திரியிடம் விடைபெற்று விதர்பநகர் சென்றார். அங்கு கிணற்றடியில் இருக்கும் பெண்களை சிறுபெண்கள் என்றுகூட நினைக்காமல் நமஸ்காரம் செய்து சோமவார விரத மகிமையைப் பற்றி கேட்டார். அவர்கள் எல்லோரும் சோமவார விரதத்தால் தங்களுக்குத் கிடைத்த பலாபலன்களைக் கூறினார்கள். மேற்படி விரதத்தின் மகிமையையும் செய்யும் முறையையும் கூறினார்கள். இந்த கார்த்திகை மாதத்தில் நான்கு முறையும் அடுத்த கார்த்திகை மாதத்தில் நான்கு வருடத்தில் 16 சோமவார முறையும் முடிக்கலாம். ஆவணியில் ஆரம்பித்தும் நான்கு வருடம் விரதம் இருந்து முடிக்கலாம்.


செய்யும் முறை
சிவபூஜை செய்ய வேண்டும். சிவபக்தியுடன் 16 சோமவார விரதம் இருந்து முடிக்கவேண்டும். 16 சோமவாரம் விரதங்கள் முடிந்தபின் மறுநாள் காலையில் 16 லட்டுகள் செய்து கோயிலுக்கு கொண்டுபோய் நைவேத்தியம் செய்து அங்குள்ளவர்களுக்கும் கொடுத்து; தானும் சாப்பிட்டு; ஒரு லட்டை பசு மாட்டிற்குக் கொடுத்து; மீதியை வீட்டிற்குக் கொண்டு வந்து பெரியவர்களுக்கும் கொடுத்து; விளக்கு வைக்கும் நேரம்வரை பூஜை செய்த லட்டை வைத்துக் கொள்ளாமல் எல்லோருக்கும் கொடுத்துவிட வேண்டும். அன்று யாரிடமும் கோபம் கொள்ளக்கூடாது. இப்படிச் செய்தால் எந்தவிதமான கஷ்டமும் இருக்காது என்று அப்பெண்கள் சொல்வதைக் கேட்டுக்கொண்டு வரும் வழியில் ஒரு முதியவளிடமும் சோமவார விரத மகிமையைக் கேட்க அவளும் அப்பெண்கள் கூறியதையே கூறினாள். பிராமணர் இவ்விரதத்தை 2 வருடங்கள் 8 சோமவாரம் செய்தார். விரத மகிமையால் பிராமணரின் வியாதி குணமாகியது. இவ்வாறு சோமவார விரதம் இருப்போருக்கு அவரவர் வேண்டும் பலனை நிச்சயம் தருவார் என்பது உறுதி.

சோமவார விரத லட்டு செய்யும் விதம்
தேவையான பொருட்கள் :
நெய்  1/4 கிலோ
கோதுமை மாவு    1/2 கிலோ
வெல்லம்   400 கிராம்
செய்யும் முறை :
முதலில் கோதுமை மாவை நன்றாக சலித்துக்கொண்ட பிறகு அதை வறுத்து கீழே இறக்கி வைத்துக்கொண்டு காய்ச்சிய நெய், பொடி செய்த வெல்லத்தையும் மாவுடன் நன்றாகக் கலந்து கொண்டு பின் சிறிய சிறிய உருண்டைகளாக லட்டு பிடிக்க வேண்டும்.