sai yoga centre

Friday, February 17, 2017

அஷ்டலஷ்மியும் மகிழ்ந்து ஐஸ்வர்யம் தந்திடும் மஹாலக்ஷ்மி அஷ்டகம்



அஷ்டலஷ்மியும் மகிழ்ந்து
ஐஸ்வர்யம் தந்திடும்
மஹாலக்ஷ்மி அஷ்டகம்
இந்திரனால் அருளியது
அனைவரும் படித்து வணங்கி
சகல ஐஸ்வர்யம் பெறுவோம்


மஹாலஷ்மி அஷ்டகம்

நமஸ்தேஸ்து மஹாமாயே
ஸ்ரீபீடே ஸூரபூஜிதே
சங்கசக்ர கதாஹஸ்தே
மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

மாயை வடிவானவளே ஸ்ரீ சக்கரத்தில்
வீற்றிருப்பவளே தேவர்களால்
வழிபடப் பெறுபவளே சங்கு சக்கரம்
கதை இவற்றை கையில் தாங்கியவளே
மஹாலக்ஷ்மியே உன்னை வணங்குகிறேன்
நமஸ்தே கரூடாரூரே
கோலாஸூர பயங்கரி
ஸர்வபாபஹரே தேவி
மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

கருடனை வாகனமாகக் கொண்டவளே கோலாசூரனை நடுங்கச் செய்தவளே
எல்லா பாவங்களையும் அழிப்பவளேமஹாலஷ்மியே
தேவியே உன்னை வணங்குகின்றேன்
ஸர்வஜ்ஞே ஸ்ர்வவரதே
ஸ்ர்வதுஷ்ட பயங்கரி
ஸர்வதுக்கஹரே தேவி
மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

எல்லாம் அறிபவளே எல்லா வரங்களையும் தருபவளே
தீயவர்களை அச்சமுற செய்பவளே
துன்பங்களை அழிப்பவளே
மஹாலக்ஷ்மி தேவியே உன்னை
வணங்குகின்றேன்
ஸித்திபுத்திப்ரதே தேவி
புக்திமுக்தி ப்ரதாயினி
மந்த்ரமூர்த்தே ஸதா தேவி
மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

ஆற்றல் விழிப்புணர்வு இன்பம்
மோட்சம் எல்லாம் நல்குபவளே
மந்திர வடிவானவளே
மஹாலக்ஷ்மியே உன்னை வணங்குகின்றேன்
ஸ்தூலஸூஷ்ம மஹாரௌத்ரே
மஹாசக்தி மஹோதரே
மஹாபாப ஹரேதேவி
மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

தூல சூட்சும வடிவானவளே
மிகவும் பயங்கர வடிவானவளே

எல்லையற்ற ஆற்றல் கொண்டவளே
அனைத்தையும் தன்னுள் கொண்டவளே மகாபாவங்களை
அழிப்பவளே மஹாலக்ஷ்மியே
உன்னை வணங்குகின்றேன்
பத்மாஸனஸ்திதே தேவி
பரப்ஹ்ம ஸ்வரூபிணி
பரமேசி ஜகன்மாதா
மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

தாமரை மலரில் வீற்றிருப்பவளே
பரப்பிரம்ம வடிவானவளே
மேலான இறைவியே உலக அன்னையே மஹாலக்ஷ்மியே
உன்னை வணங்குகின்றேன்
ச்வேதாம்பாதரே தேவி
நானாலங்கார பூஜிதே
ஜகத்ஸ்திதே ஜகன்மாதர்
மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

வெண்ணாடை தரித்தவளே
பலவித அலங்காரத்துடன் இருப்பவளே உலகிற்கு ஆதாரமானவளே உலக அன்னையே
மஹாலக்ஷ்மியே உன்னை
வணங்குகின்றேன்
மஹாலக்ஷ்மியஷ்டக ஸ்தோத்ரம்
ய படேத் பக்திமான் நர
ஸர்வஸித்திமவாப்னோதி
ராஜ்யம் ப்ராப்னோதி ஸ்ர்வதா

மகாலக்ஷ்மியைப் பற்றிய இந்த
இந்த எட்டு பாடல்களையும்
பக்தியோடு படிப்பவர்கள்
எல்லா செல்வங்களையும் நன்மைகளும் பெறுவார்கள்
ஏக காலம் படே நித்யம்
மஹாபாப விநாசனம்
த்விகாலம் ய படேந்நித்யம்
தனதான்ய ஸ்மன்வித

தினமும் இந்த அஷ்டகத்தை ஒரு முறை படித்தால் மகாபாவங்கள்
அழியும் இருமுறை படித்தால்
செல்வ வளமும் தான்ய வளமும்
பெருகும்
த்ரிகாலம் ய படேந்நித்யம்
மஹாசத்ரு விநாசனம்
மஹாலஷ்மீர் பவேந்நித்யம்
ப்ரஸன்னா வரதா சுபா

மும்முறை படிப்பவர்களின் எதிரிகள்
என்றென்றும் அழிக்கப்படுவார்கள்
என்றென்றும் மஹாலஷ்மி அவர்களிடம் மகிழ்வுடன் எழுந்தருளி
பதினாறு செல்வங்களையும் தந்து
மகிழ்சியோடு மங்களமும் நல்குவாள்
இதி இந்த்ரக்ருத மஹாலஷ்ம்யஷ்டகம்
ஸம்பூர்ணம்

இந்திரனால் அருளப் பெற்ற
மஹாலக்ஷ்மி அஷ்டகம் நிறைவுற்றது

ஜெயமாம் லக்ஷ்மி ஜெய ஜெய லக்ஷ்மி
மஹாலக்ஷ்மி

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.