sai yoga centre

Saturday, March 19, 2016

தியானம்....



தியானம்....


தியானபயிற்சியால் மனம் ஒருநிலைபடும், மனம் அமைதிகிடைக்கும், பக்தி வளரும், நமது என்னங்கள் ஆழ்நிலை தியானத்தின் மூலம் நிறைவேறும் ஏன் கடவுளின் காட்சிகூட கிடைக்கும். இவையெல்லாம் தியானத்தின் மூலம் கிடைக்கும்.


இன்றைய சூழலில் நமக்கு தியானம் செய்ய நேரம் இல்லை. தியானம் செய்வதற்காக நாம் நேரத்தை ஒதுக்க வேண்டும். தியானம் செய்வதற்கு முன்னாள் நம் மனதை அமைதிபடுத்த வேண்டும். சில பேர் சந்தோஷமாக இருப்பார்கள், சிலபேர் துன்பத்தை அனுபவிப்பார்கள். சந்தோஷமாக இருப்பார்களுக்கு தியானத்தில் மனதை ஒரு நிலைப்படுத்த முடியும்.


துன்பத்தை அனுபவிப்பவர்கள் அவர்களால் மனதை ஒருநிலைபடுத்த முடியாது அவர்களுடைய மனம் கவலையிலோ அல்லது துன்பத்திலோ மூழ்கி இருக்கும் அவ்வளவு எளிதாக மனதை சரி செய்ய முடியாது என்னதான் முயன்றாலும் முடியாது!


தியானம் செய்வதற்கு அரைமணி நேரத்திற்கு முன்னாள் ஸ்ரீராம ஜெயம் மந்திரத்தை 108 முறை சொல்லுங்கள் பிறகு ராமாயண கதையை நினைவு கூர்ந்து பாருங்கள் ஏனெனில் ராமாயணமமும் ஒரு துன்ப கதைதான். ஸ்ரீராமஜெயத்தை ஜெபிக்கும்போது அனுமன் உங்கள் அருகிலேயே இருப்பார் இது சத்தியம்..


அந்த நாராயணனும், மாதா லட்சுமியும் ராமனாகவும் சீதையாகவும் அவதரித்தார்கள் அவர்கள் அனுபவித்த துன்பத்தைவிடவா நாம் துன்பத்தை அனுபவிக்கின்றோம் பரமாத்மாவிற்கே இந்த நிலையென்றால் நாம் ஜீவாத்மா நமக்கெல்லாம் சொல்லவா வேண்டும்.. அனுபவிக்குதான் ஆக வேண்டும்


ஸ்ரீராம ஜெயம் மந்திரத்தை சொன்னால் அனுமன் மட்டும் இல்லை தேவாதி தேவர்களும் முனிவர்களும், ரிஷிகளும் நம்மை துன்பத்தில் இருந்து காப்பார்கள்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.