- ஓம் அகிலாண்ட நாயகியே போற்றி
- ஓம் ஆதிபராசக்தியே போற்றி ஓம்
- அபிராமவல்லியே போற்றி ஓம்
- ஆயிரங்கண்ணியே போற்றி ஓம்
- அம்பிகைத்தாயே போற்றி ஓம்
- ஆசைகளை நிறைவேற்றுவோய் போற்றி
- ஓம் அன்பின் உருவே போற்றி
- ஓம் ஆபத்தைத் தடுப்பாய் போற்றி
- ஓம் ஆனந்தம் அளிப்பாய் போற்றி
- ஓம் அல்லல் தீர்ப்பாய் போற்றி
- ஓம் ஆற்றல் தருவாய் போற்றி
- ஓம் இல்லறம் காப்பாய் போற்றி
- ஓம் இருசுடர் ஒளியே போற்றி
- ஓம் இருளை நீக்குவாய் போற்றி
- ஓம் ஈஸ்வரிதேவியே போற்றி
- ஓம் உமையெனும் அன்னையே போற்றி
- ஓம் உற்சாகம் அளிப்பாய் போற்றி
- ஓம் உண்மையின் பொருளே போற்றி
- ஓம் உன்னதவரம் தருவாய் போற்றி
- ஓம் ஊக்கம் அளிப்பவளே போற்றி
- ஓம் ஊழ்வினை தீர்ப்பாய் போற்றி
- ஓம் என் வழி துணையே போற்றி
- ஓம் ஏக்கம் தீர்ப்பாய் போற்றி
- ஓம் எம்பிராட்டி அம்மையே போற்றி
- ஓம் ஏற்றம் அளிப்பாய் போற்றி
- ஓம் ஜமுகன் துணையே போற்றி
- ஓம் ஐயங்கள் தீர்ப்பாய் போற்றி
- ஓம் ஒளிரும் முகத்தவளே போற்றி
- ஓம் ஓங்காரப் பொருளே போற்றி
- ஓம் கயிலையான் துணைவியே போற்றி
- ஓம் காமாட்சி தேவியே போற்றி
- ஓம் கடாட்சம் தருபவளே போற்றி
- ஓம் காவல் தெய்வமே போற்றி
- ஓம் கண்ணியத்தின் வடிவே போற்றி
- ஓம் கற்பினைக் காப்பாய் போற்றி
- ஓம் கலாவல்லியே போற்றி
- ஓம் கிரிபோல் உயர்ந்தவளே போற்றி
- ஓம் கிலியைத் தீர்ப்பாய் போற்றி
- ஓம் கீர்த்தியைப் தருவாய் போற்றி
- ஓம் கூர்மதி தருவாய் போற்றி
- ஓம் குவலய நாயகியே போற்றி
- ஓம் குமரனின் தாயே போற்றி
- ஓம் குற்றம் பொறுப்பாய் போற்றி
- ஓம் கொற்றவை தெய்வமே போற்றி
- ஓம் கொடுந்துயர் தீர்ப்பாய் போற்றி
- ஓம் கோமதித்தாயே போற்றி
- ஓம் கோள்களை அடக்குவாய் போற்றி
- ஓம் சாமுண்டீஸ்வரியே போற்றி
- ஓம் சந்தோஷம் அளிப்பவளே போற்றி
- ஓம் சாந்த மனம் தருவாய் போற்றி
- ஓம் சக்தித்தாயே போற்றி
- ஓம் சாபம் களைவாய் போற்றி
- ஓம் சிம்ம வாகனத்தவளே போற்றி
- ஓம் சீற்றம் தணிப்பாய் போற்றி
- ஓம் சிறுநகை புரிபவளே போற்றி
- ஓம் சிக்கலைத் தீர்ப்பாய் போற்றி
- ஓம் சுந்தர வடிவழகியே போற்றி
- ஓம் சுபிட்சம் அளிப்பாய் போற்றி
- ஓம் செங்கதிர் ஒளியே போற்றி
- ஓம் சேவடி பணிகிறேன் போற்றி
- ஓம் சோமசுந்தரியே போற்றி
- ஓம் சோதனை தீர்ப்பாய் போற்றி
- ஓம் தண்கதிர் முகத்தவளே போற்றி
- ஓம் தாயே தந்தையே போற்றி
- ஓம் திருவருள் புரிவாய் போற்றி
- ஓம் திரிபுரசுந்தரியே போற்றி
- ஓம் தீங்கினை ஒழிப்பாய் போற்றி
- ஓம் திரிசூலம் கொண்டவளே போற்றி
- ஓம் திசையெட்டும் காப்பாய் போற்றி
- ஓம் தீரம் அளிப்பவளே போற்றி
- ஓம் துர்க்காதேவியே போற்றி
- ஓம் துன்பம் தீர்ப்பாய் போற்றி
- ஓம் துணிவினைத் தருவாய் போற்றி
- ஓம் தூயமனம் கொடுப்பாய் போற்றி
- ஓம் நாராயணியே போற்றி
- ஓம் நலங்கள் அளிப்பாய் போற்றி
- ஓம் நித்யகல்யாணியே போற்றி
- ஓம் நீதியைக் காப்பாய் போற்றி
- ஓம் பகவதிதேவியே போற்றி
- ஓம் பசுபதி நாயகியே போற்றி
- ஓம் பாக்கியம் தருவாய் போற்றி
- ஓம் பிரபஞ்சம் ஆள்பவளே போற்றி
- ஓம் பிழைதனைப் பொறுப்பாய் போற்றி
- ஓம் புகழினை அளிப்பாய் போற்றி
- ஓம் பூஜிக்க அருள்பவளே போற்றி
- ஓம் பொன்னிறத்தாய் போற்றி
- ஓம் போகங்கள் தருவாய் போற்றி
- ஓம் மகிஷாசுரமர்த்தினியே போற்றி
- ஓம் மலைமகள் தாயே போற்றி
- ஓம் மாதங்கி அன்னையே போற்றி
- ஓம் மகமாயி தாயே போற்றி
- ஓம் மாங்கல்யம் காப்பவளே போற்றி
- ஓம் மனக்குறை தீர்ப்பாய் போற்றி
- ஓம் மண்ணுயிர் காப்பாய் போற்றி
- ஓம் வேதவல்லியே போற்றி
- ஓம் வித்தைக்கு அரசியே போற்றி
- ஓம் விளக்கின் ஒளியே போற்றி
- ஓம் வையகம் வாழ்விப்பாய் போற்றி
- ஓம் ஜெயஜெய தேவியே போற்றி
- ஓம் ஜெயங்கள் அளிப்பாய் போற்றி
Sai yoga centre is a online center for meditation, yoga, reiki,healing, prayers, mantra chanting, numerology ,vasthu and yantra website : saiyogacentre.org mobile 8300092002
Thursday, October 25, 2012
அம்மன் 108 போற்றி
Labels:
108 போற்றிகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.