நான் ஐந்து ஆண்டுகளாக கம்ப்யூட்டர் சென்டர் வைத்து நடத்தி வருகிறேன். என் தொழில் மேலும் உயர என்ன செய்ய வேண்டும்? எப்போது எனக்கு திருமணம் ஆகும்?
& த.அமுதா, தஞ்சாவூர்.நீங்கள் எடுத்துள்ள துறையிலேயே நல்ல முன்னேற்றம் அடைவீர்கள். ஊக்கமோடு உழைத்து நல்ல அந்தஸ்தை பெறுவீர்கள். உங்களுக்கு எப்போதும் ஞாயிற்றுக்கிழமை அதிர்ஷ்டமான நாள். எதிலும் 8ம் எண்ணை விலக்கி விடுங்கள். வாயுக் கோளாறு வராத உணவை எடுத்துக் கொள்ளுங்கள். வரும் டிசம்பர் மாதத்திற்குள் திருமணம் ஆகும். உங்கள் ஊரிலுள்ள மாரியம்மன் கோயிலில் பால்காவடி எடுத்து தினைமாவு, தேன் படைத்து சிறப்பு பூஜை நடத்துங்கள். ‘கற்பூர நாயகியே கனகவல்லி’ என்று தொடங்கும் பாடலை முழுமையாக தினமும் இரு வேளையிலும் பூஜையறையில் பாடி வாருங்கள் (முதல் பாரா மட்டும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது).
கற்பூர நாயகியே கனகவல்லி!
காளி மகமாயி கருமாரியம்மா!
பொற்கோயில் கொண்ட சிவகாமியம்மா!
பூவிருந்தவள்ளி தெய்வானையம்மா! (கற்பூர)
எங்கள் குடும்பம் கடன் தொல்லையால் மிகவும் அவதிப்படுகிறது. வட்டி கட்டி மாளவில்லை. கடன் தொல்லை தீர
பரிகாரம் கூறுங்கள்.
& ச.ரேணுகா.
அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது என்ற ஒரு பழமொழி உண்டு. திருமகளின் திருவருள் கிடைக்க வேண்டுமெனில் நற்காரியங்கள் நிறைய செய்ய வேண்டும். உங்கள் கணவர் நயமாகப் பேச கற்றுக்கொள்ள வேண்டும். காரமான பேச்சால் கடனை அடைக்க முடியாது. உங்கள் பிறப்புபடி பார்த்தாலும் உங்கள் பெயரைக் கொண்டு பார்த்தாலும் கடன்களை சமாளித்து விடுவீர்கள்; கவலை வேண்டாம். 12 செவ்வாய்க் கிழமைகள் முருகன் படத்தை அலங்கரித்து எலுமிச்சம் பழ மாலை அணிவித்து பஞ்சாமிர்தம் நிவேதனம் செய்யுங்கள். கீழேயுள்ள திருநாமங்களை சொல்லுங்கள். கந்தர் அலங்காரத்தில் வரும் 33வது பாடலை 12 முறை பக்தியோடு பாடுங்கள். கடன்கள் அடைபட்டு குடும்பம் முன்னேறும்.
1. அசையாத மலைபோல் அமைந்தவரே
போற்றி போற்றி!
2. உயர்வான திருமேனி படைத்தவரே போற்றி போற்றி!
3. செவ்வரளிப்பூ நிறம் கொண்டவரே போற்றி போற்றி!
4. கனல் போன்ற கண்கள் உடையவரே
போற்றி போற்றி!
5. எதிரிகளை அடக்குபவரே போற்றி போற்றி!
6. அனைத்து தேவராலும் வணங்கப்படுபவரே
போற்றி போற்றி!
7. பெருங்கடனை தீர்ப்பவரே போற்றி போற்றி!
8. தீப மங்கள ஜோதியே போற்றி போற்றி!
9. தூய அம்பல லீலா விநோதனே போற்றி போற்றி!
10. தேவ குஞ்சரி பாலனே போற்றி போற்றி!
11. அங்காரக கோள் உருவானவரே போற்றி போற்றி!
12. விரும்பியவைகளை கொடுப்பவரே
போற்றி போற்றி!
கந்தர் அலங்காரம்:
முடியாப் பிறவிக் கடலில் புகார் முழுதுங் கெடுக்கு
மிடியாற்படியில் விதனைப்படார் வெற்றிவேற் பெருமான்
அடியார்க்கு நல்லபெருமாள் அவுணர் குலமடங்கப்
பொடியாக்கிய பெருமாள் திருநாமம் புகல்பவரே!
என் மகனுக்கு இதுவரை நிரந்தரமாக எந்த வேலையும் அமையவில்லை. தற்போது வி.ஏ.ஓ தேர்வு எழுதியுள்ளான். எந்தத் துறையில் வேலை கிடைக்கும்?
& ஒரு வாசகர்.
எதிலும் தடங்கல் வரத்தான் செய்யும். உத்யோகத்தை கொடுக்கும் சனி பகவான் சொந்த நட்சத்திரத்தில் இருப்பதால் எண்ணெய் நிறுவனம், சாலைகள் அமைக்கும் துறை, கட்டட சாதனங்கள் வியாபாரம் செய்யும் இடம் போன்றவற்றில் வேலை கிடைத்தால் உங்கள் மகனுக்கு நல்லது. மனக் கட்டுப்பாட்டிற்கு லட்சுமி நரசிம்மர் ஆலயத்தில் பானகம் நிவேதனம் செய்து சிறப்பு பூஜை நடத்துங்கள். நவம்பருக்குப் பிறகு நல்ல வேலை கிடைக்கும். குரு பகவான் 8ல் மறைவதால் குரு பகவானுக்கு வியாழக்கிழமையன்று உங்கள் மகனின் பெயரில் அர்ச்சனை செய்யுங்கள். வியாழன் அன்று சிவாலய தட்சிணாமூர்த்தி சந்நதியில் அமர்ந்து கீழேயுள்ள பாடலை 33 முறை பாடுங்கள். நல்ல பதவி கிட்டும். மேற்கண்ட பரிகாரங்களை உங்கள் மகனுக்காக நீங்களே கூட செய்யலாம். அவர் செய்தால் இன்னும் நல்லது.
மன்னிய திருஅருள் மலையே போற்றி!
என்னையும் ஒருவன் ஆக்கி இரு கழல்
சென்னியில் வைத்த சேவக போற்றி!
தொழுதகை துன்பம் துடைப்பாய் போற்றி!
அழிவிலா ஆனந்த வாரி போற்றி!
அருள் சுரப்பதில் நிலைபேருடைய
மகாமேரு மலையே போற்றி!
என்னையும் தகுதிவாய்ந்தவனாகச் செய்து
உனது பெரிய பாதத்தை என் சிரஸில் வைத்து
என்னை ஆட்கொண்டவனே போற்றி!
உன்னை வந்தடைந்தவர்களுடைய துன்பத்தை
துடைப்பவனே! ஆனந்தக்கடலே போற்றி! போற்றி!
என் மகளுக்கு திருமணமாகி பல பிரச்னைகளால்
விவாகரத்தும் ஆகிவிட்டது. அவளின் எதிர்காலம் எப்படி இருக்கும். மறுமணம் ஆகுமா?
& எம்.சுபாஷ் சந்திரபோஸ், மதுரை.
ஜாதகத்தில் 2ல் கேதுவும் 8ல் ராகுவும் உள்ளனர். இந்த ஜாதகருக்கு வயது கூடிய திருமணம் செய்வதுதான் நல்லதாகும். சனி பகவான் உச்சமடைந்து தசம கேந்திரம் அடைவதால் வற்றிய கிணறு ஊறுவது போல வாழ்க்கை சிறப்பாக இருக்கும். சூரியன் பலமாக உள்ளபடியால் மறுமணம் நிச்சயம் உண்டு. ஏமாற்றங்கள் மற்றும் எதிர்ப்புகளிலிருந்து விடுபடுவதோடு முன்னேற்றம் நிச்சயம் உண்டு. ஷி.நிகிசீகிஜிஸிமி என தினசரி 300 முறை எழுதி ஆலய அர்ச்சகரிடம் தட்சணையுடன் கொடுத்து குரு பகவானின் பாதத்தில் வைக்கச் சொல்லுங்கள். அந்தணர்களைக் கொண்டு விஷ்ணு சகஸ்ரநாமத்தை குறைந்தது 21 முறையாவது வீட்டிலேயே பாராயணம் செய்யச் சொல்லுங்கள். வியாழக்கிழமையன்று உங்கள் ஊரில் ஷீரடி சாய்பாபா கோயில் இருந்தால் அங்கு சென்று வழிபடச் சொல்லுங்கள். அல்லது வீட்டிலேயே அவர் படத்தை வைத்து வணங்கச் சொல்லுங்கள். வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
திருமணத்திற்கு முன்பு தீவிரமாக அனுமனை உபாசித்து வந்தேன். பிறகு விட்டு விட்டேன். இப்போது மீண்டும் உபாசனையை தொடரலாம் என்று உள்ளேன். அவருக்கு உகந்த நாள், விரத முறை, பிடித்த நிவேதனம், விக்ரகம் வைத்து வணங்கலாமா போன்ற விஷயங்களை விளக்கமாக கூறி உதவுங்கள்.
& ந.சரோஜினி, ஆரணி.
ஒருவன் நல்லவனாக இருந்தால் மட்டும் போதாது. வல்லவனாகவும் இருக்க வேண்டும் என்பதற்கு அனுமனே எடுத்துக்காட்டு. மராட்டிய மன்னன் சிவாஜி தன் வெற்றிக்கு அனுமனே காரணம் என்று பல மலைகளில் இவருக்கு கோயில் கட்டி வழிபட்டான். குழந்தை பாக்கியத்துக்கு வெண்ணெயும் காரிய வெற்றிக்கு வடை மாலையும் அனுமனுக்கு சாத்தி வணங்குவது எப்போதும் பொதுவானதாகும். வெற்றிலை மாலை இவருக்கு மிகவும் பிரியமானதாகும். கன்னிப் பெண்கள், திருமணமாக அனுமனை வேண்டிக் கொண்டு 1008 முறை ஸ்ரீராமஜெயம் எழுதினால் திருமண பாக்கியம் கிட்டும். துளசி மாலை அணிவித்தால் ஏவல், பில்லி, சூன்யம் போன்றவை விலகும். இப்படி அனுமனுக்கென்று பொதுவாக கூறப்பட்டுள்ளதையே நீங்கள் கடைபிடிக்கலாம்.
திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள சோளிங்கர் மற்றும் காஞ்சிபுரத்திலுள்ள திவ்ய தேசங்களில் அருளும் அனுமனை தரிசித்து வாருங்கள். அனுமனுக்கு 135 அடி உயர சிலையை ஆந்திர மாநிலம் விஜயவாடாவிற்கு அருகே ப்ரிட்டாலா என்னும் இடத்தில் அமைத்திருக்கிறார்கள். முடிந்தால் சென்று தரிசியுங்கள். வீட்டில் விக்ரகம் வைத்து வழிபடுவதைவிட படத்தை வைத்து பூஜியுங்கள். வியாழக்கிழமை, சனிக் கிழமைகளில் சனி ஹோரையில் பூஜை செய்ய அனுமனுக்கு உகந்ததாகும். ஆதித்ய ஹ்ருதயம் படியுங்கள்.
அனுமனுக்கு தயிர்சாதம் நிவேதனம் செய்வது
மிகவும் நல்லது. கீழேயுள்ள துதியை எப்போதும் சொல்லிக் கொண்டிருக்கலாம்.
அஸாத்ய ஸாதக ஸ்வாமின்
அஸாத்யம் தவ கிம் வத
ராமதூத க்ருபா ஸிந்தோ
மத் கார்யம் ஸாதயப்ரபோ!
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.