உத்தவர் கிருஷ்ணரை நோக்கி, ‘‘இந்த அகங்காரம் தவறு
என்று தெரிகிறது. நான், எனது, என்பதின் நிலையாமையும் தெளிவாக புரிந்து கொள்ள
முடிகிறது. தெரிந்து கொள்ள வேண்டியது ஆத்மாதான் என்பதும் நிச்சயமாகிறது. ஆனாலும்
எங்களால் இந்த அகங்கார தளத்தினின்று மேலே செல்ல இயலவில்லை. அகங்காரத்தை அறுக்க
முடியவில்லை. என்னதான் கிருஷ்ணா செய்வது?’’ என்று மனம் வாடிக்
கேட்டார்.
‘‘உத்தவா! அது மிகவும் எளிது. உன் அகங்காரம் எதனால் ஜீவிக்கிறது என்று உனக்குத் தெரியுமா? முதலில் அந்த அகங்காரம், அதாவது நான் என்று நினைக்கும் எண்ணம், உன்னுடையது என்று உனக்கு யார் சொன்னது? இந்த உலகில் நன்மை எது, தீமை எது, எதை செய்வது தர்மம், எதைச் செய்யாதிருப்பது அதர்மம் என்று பிரித்துப் பிரித்து ஆராயத் தெரிந்து கொள்கிறாயல்லவா?’’
‘‘ஏதோ... உங்கள் அருளால் அது கொஞ்சம் தெரியும்.’’
‘‘நல்லது. இப்படி தேவையில்லாத விஷய வாசனைகளிலிருந்து மனிதர்கள் தங்களைத் தாங்களே விடுவித்துக் கொள்ள முடியும் என்கிற நம்பிக்கை உனக்கு இருக்கிறதல்லவா? நீ உலகத்தில் இருக்கிறாய். ஆனால், அதேநேரம் ஆத்மாவை அறிந்து கொள்ளத்தான் வேண்டும் எனும் விவேகமும் உனக்குள் உண்டாகியிருக்கிறதல்லவா. உன் மனமும் புத்தியும் சதா நேரமும் தத்துவங்களை பிழிந்து அலசி ஆராய்ந்து கொண்டிருக்கிறதல்லவா? இப்படி கொஞ்சம் கொஞ்சமாக தம்மைத்தாமே அகங்கார தளத்திலிருந்து பிரித்து, ஆத்மாவே நான் எனும் நிலையில் ஒருநாள் நிற்பாய்.
பசு முதலான விலங்குகளுக்குள் இருக்கும் ஆத்மா அதன் வாழ்க்கையை நடத்துகிறது. இப்படியிருக்கும் அந்த ஆத்மாதான் மனிதனுக்குள்ளும் குருவாக இருந்து வழி நடத்துகிறது. அந்த குருவே வெளியே மனித உருவம் தாங்கி வருகிறார். ‘நீ உன்னை உடம்பாக எண்ணிக் கொண்டிருக்கிறாயே. அது தவறப்பா. உன் சொரூபமே ஆத்மாதான். அதை நீ அறிந்தாலே எல்லாவற்றையும் அறிந்தவனாகிறாய்’ என்று சொல்கிறார். இப்படி ஆத்மாவான குருவே பிரத்யட்சமாக வெளியேயிருந்து கொண்டு நடத்துகிறார். இவ்வாறு தனது நன்மையை மனிதன் தானே தெரிந்து கொள்கிறான். அகங்காரத்தை உன்னால் விட முடியாது. ஏனெனில் அது உன்னைச் சேர்ந்தது இல்லை. அது வெறும் வாசனைகளின் தொகுப்பு. அவ்வளவுதான். குரு அதை பார்த்துக் கொள்வார்.
மனிதர்கள் உடலோடு இருந்து கொண்டே சாங்கிய சாஸ்திரம் மற்றும் யோக மார்க்கத்தின் மூலம் என்னை அடைகிறார்கள். சில தீரர்களும் சமர்த்தர்களுமான ஞானிகள் என்னை நேரடியாக காண்கின்றனர். உனக்கொன்று சொல்லட்டுமா? ஒற்றைக் கால் பிராணிகள் முதல் ஆயிரம் காலுடைய பூச்சிகள் வரை சிருஷ்டித்திருக்கிறேன். ஏன், கால்களற்ற புழு பூச்சிகளும் உள்ளனவே. ஆனால், என் சிருஷ்டியிலேயே இந்த மனிதன்தான் எனக்கு பிரியமானவன். மனிதனின் புத்திக்கு நான் அகப்படவில்லையென்றாலும் சாஸ்திரங்களாலும் வேதங்களாலும் பல மார்க்கத்தாலும் என்னை இடையறாது தேடி மனிதன் என்னை அடைந்து விடுகின்றான்.’’
உத்தவரிடம் கிருஷ்ணர் சில சமயம் தோழனாக பேசினார். சட்டென்று நான்தான் எல்லாவற்றையும் படைத்தேன் என்று தன்னை பரமாத்மாவாக வெளிப்படுத்தினார். நீ ஆத்மாவை அறிந்து கொள் என்று குருவாக மாறி உபதேசித்தார். மனிதன் என்னதான் மனம், புத்தி என்றிருந்தாலும் கூட இரண்டு கால் பிராணிதானா என்று உத்தவர் மெல்லியதாக வருத்தப்பட்டார். சே, இந்த சரீரத்திற்கு இவ்வளவுதானா மதிப்பு எனும் வைராக்கியம் அவருக்குள் நிலைகொண்டது. கிருஷ்ணரும் இந்த வைராக்கியத்தை கண்டார். அதற்குத் தகுந்தாற்போல விஷயத்தை பேசத் தொடங்கினார்.
‘‘உத்தவா உனக்கு மிகப் பழமையான ஒரு கதையை சொல்கிறேன் கேள். மகா விவேகியான அவதூத ஞானிக்கும் யது மகராஜாவிற்கும் நடந்த உரையாடல் இது. பெரிய விருட்சத்தின் அடியில் பீடத்தின் மீது பிரம்மஞானி அமர்ந்திருந்தார். திகம்பரராகவும் எப்போதும் மிகுந்த சந்தோஷத்தோடும் இருந்தவரை கண்ட யது மகாராஜன், ‘‘குருநாதரே, உடலின் திருப்திக்காகவும் இந்திரியங்களின் இன்பத்திற்காகவும் எங்களைப்போல் அலையாமல் எதுவுமே செய்யாமல் ஆனந்தமாக அமர்ந்திருக்கிறீர்களே. இந்த நுட்பமான ஞானம் தாங்களுக்கு எப்படி உண்டாயிற்று? உலகத்தில் இருந்து கொண்டே எப்படி குழந்தையைப்போல இருக்கிறீர்கள். எதையும் விரும்பாமல் தாங்களால் எப்படி இருக்க முடிகிறது? நாங்களெல்லாம் காமம், லோபம் போன்ற காட்டுத் தீயில் பொசுங்குகிறோம். ஆனால், தாங்களோ கங்கை நீரில் கிடக்கும் யானையைப் போன்று சந்தோஷமாக இருக்கிறீர்கள். உங்கள் உள்ளத்தில் பொங்கும் இடையறாத ஆனந்தத்தின் ஊற்று என்ன?’’ என்று கேட்டான்.
‘‘யது ராஜனே... நீ என்னை குரு என்று அழைத்தாயல்லவா? அந்த குருதான் இதற்கெல்லாம் காரணம். நீ என்னை குரு என்கிறாய். ஆனால், உண்மையில் இந்த ஜகம்தான் எனக்கு குருவாக நின்று போதித்தது. என்னுடைய முதல் குருவாக, பஞ்சபூதங்களில் ஒன்றாக, பூமியை நான் வணங்குகிறேன். எத்தனை கஷ்டம் வந்தாலும் எவ்வளவு சுமையானாலும் எல்லாவற்றையும் தாங்கிக்கொண்டிருக்கிறது பூமி. அதுபோல தீரம் மிக்கவர்கள் எவ்வளவு பெரிய பிரச்னைகள் சூழ்ந்து நின்றாலும் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டுமென்று அது உபதேசித்தது. எப்படி என்று கேட்டேன். அதற்கு பூமி நான்தான் இந்த உலகத்தை தாங்கிக் கொண்டிருக்கிறேன் என்கிற அகங்காரம் தனக்கு இல்லை என்றது. தான் ஒரு கருவி. எம்பெருமானே அதை தாங்குகின்ற சக்தியாக இருக்கிறார் என்று திடமாக கூறியது. அடுத்து வாயுவும் எனக்கு உபதேசித்தது.
மனித சரீரத்தில் ஐந்து விதமாக வாயு சஞ்சரிக்கிறது. பிராணன், அபானன், வியானன், சமானன், உதானன் என்று உள்ளேயும் வெளியேயும் சஞ்சரித்தபடி இருக்கிறது. இருதயத்தை இயக்கும் வாயுவாக எனக்குள் பிராணன் விளங்குகிறது. குதம் என்கிற பின்புறமாக அபானனாக வெளியேறி சுத்தமாக்குகிறது. வயிற்றினுள் எல்லாவற்றையும் ஜீரணித்து சக்தியை பெருக்கி, ரத்தத்தின் சுழற்சியை வியானன் கவனித்துக் கொள்கிறது. உறுப்புகளை சமநிலையாக இயக்குவிக்கும் வாயுவாக சமானன் விளங்குகிறது. சரீரம் கீழே விழும்போது அதாவது உயிர் பிரியும் சமயத்தில், மேல்நோக்கி ஜீவனை உடலிலிருந்து இழுத்துச் செல்லும் வேலையை உதானன் பார்த்துக் கொள்கிறது. சரீரத்தால் உண்டான அனுபவங்களை மனதின் வழியாக சேமிக்கப்பட்ட ஜென்மாந்திர வாசனைகள், ஆசைகள் எல்லாவற்றையும் ஒன்றாக்கி சூட்சும சரீரத்திற்குள் உதானன் செலுத்துகிறது. இந்த ஸ்தூல தேகத்திலிருந்து உதான வாயுவே உயிரையும் சூட்சும, காரண சரீரத்தையும் வெளியேற்றுகிறது. இதைத்தான் உயிர் போகிற சமயத்தில் மேல் சுவாசம் கண்டிருக்கிறது என்பார்கள். இப்படி பிரபஞ்சம் முழுதும் படர்ந்திருக்கிற வாயுவும் எனக்கு குரு. அதனிடமிருந்து நிறைய கற்றேன்’’ என்று அவதூதர், யது மகாராஜனை பார்த்துச் சொன்னார்.
‘‘இதுபோன்று எனக்கு இருபத்து நான்கு குருக்கள் இருக்கின்றனர்’’ என்று அவதூதர் கூறியதை, பகவான் கிருஷ்ணர் விளக்க முனைந்தபோது உத்தவர் பிரமித்துப் போனார்.

No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.