வெள்ளிப் பிள்ளையார் -
செவ்வாய்ப் பிள்ளையார்
செவ்வாய்ப் பிள்ளையார்

அந்தக் கன்று உண்டால்தான் இவன் உண்பான். உறங்கினால் தான் இவன் உறங்குவான். அவ்வளவு பாசம். ஓருநாள் இந்தக் கன்று பள்ளத் தெருவிற்குச் சென்று அங்கு உலர்த்தி வைத்திருந்த நெல்லைத் தின்று விட்டது. பள்ளத்துப் பெண் கழியால் அடிக்க அப்பசுக்கன்று இறந்து விட்டது. செய்தி அறிந்த அவளது கணவன் “ஐயோ” இது அரசகுமாரனின் அருமைக் கன்றாயிற்றே! இறந்தது தெரிந்தால் தங்களைக் கடுமையாகத் தண்டிப்பார்களே என்று அஞ்சி கன்றை வெட்டி அடுக்குப் பானையில் அடைத்து வைத்து விட்டான்.
மாலைவரை கன்று வராததை அறிந்த அரசகுமாரன் கன்று வராவிட்டால் உணவு கொள்ள மாட்டேனென்று பிடிவாதமாகக் கூற அரசன் பணியாட்களை நாலாபுறமும் அனுப்பித் தேடச் செய்தான். அப்பள்ளத்துப் பெண் விநாயகரிடம் மிகுந்த பக்தி பூண்டவள். இந்தத் துன்பத்திலிருந்து தன்னை விடுவிக்குமாறு விநாயகரிடம் வேண்டச் சோதனையிடச் சென்ற காவலர்களுக்கு கன்றை வெட்டிவைத்த பானையில் தாமரைப் பூக்கள் மணம் வீசின. காவலர்கள் மீண்டனர். பள்ளத்துப் பெண் ஓடிவந்து பிள்ளையாரின் திருவடிகளில் வீழ்ந்து கன்றை உயிருடன் எழுப்பிக் கொடுக்குமாறு வேண்ட விநாயகரின் அருளால் கன்று உயிர்பெற்று அரண்மனையை நோக்கி ஓடியது. கன்றெழுந்த நேரமாகிய வெள்ளிக்கிழமை அதிகாலை நான்கு மணிக்கு அப்பெண் நோன்பை அநுட்டித்துப் பிள்ளையாரை வணங்கினாள்.
இதேபோல செவ்வாய்ப் பிள்ளையாருக்கும் ஒரு கதை உண்டு. ஓர் ஊரில் வேளாளன் ஒருவன் இருந்தான். அவனுக்கு ஏழு ஆண்பிள்ளைகளும் ஒரு பெண்ணும் இருந்தனர். மனைவி இறந்து விட்டாள். ஏழ்மை வாட்டியது. தந்தையும் அந்த ஆண்பிள்ளைகளும் கூலிவேலை செய்து நெற்கூலி வாங்கி வருவார்கள். அந்தப்பெண் அந்த நெல்லைக்குற்றி உணவு சமைப்பாள். ஆனால் அவர்களது போதாதகாலம் வாங்கிவரும் கூலிநெல் அனைத்தும் பதராகவும் உமியாகவும் ஆகிவிடும். அரிசி அரைவயிற்றுக் கஞ்சிக்குக்கூட இருக்காது. ஆனால் பொறுமையே உருவமான அப்பெண் உழைக்கும் தந்தைக்கும் சகோதரர்களுக்கும் இருக்கும் உணவை அளித்துவிட்டுத் தான் வடித்த கஞ்சியைக் குடித்துவிட்டு இருந்து விடுவாள்.
இதேபோல செவ்வாய்ப் பிள்ளையாருக்கும் ஒரு கதை உண்டு. ஓர் ஊரில் வேளாளன் ஒருவன் இருந்தான். அவனுக்கு ஏழு ஆண்பிள்ளைகளும் ஒரு பெண்ணும் இருந்தனர். மனைவி இறந்து விட்டாள். ஏழ்மை வாட்டியது. தந்தையும் அந்த ஆண்பிள்ளைகளும் கூலிவேலை செய்து நெற்கூலி வாங்கி வருவார்கள். அந்தப்பெண் அந்த நெல்லைக்குற்றி உணவு சமைப்பாள். ஆனால் அவர்களது போதாதகாலம் வாங்கிவரும் கூலிநெல் அனைத்தும் பதராகவும் உமியாகவும் ஆகிவிடும். அரிசி அரைவயிற்றுக் கஞ்சிக்குக்கூட இருக்காது. ஆனால் பொறுமையே உருவமான அப்பெண் உழைக்கும் தந்தைக்கும் சகோதரர்களுக்கும் இருக்கும் உணவை அளித்துவிட்டுத் தான் வடித்த கஞ்சியைக் குடித்துவிட்டு இருந்து விடுவாள்.
இப்படியாக இருக்கும் நாளில் தமிழ் மூதாட்டி ஒளவை அந்த வீட்டிற்கு வந்தாள். ஒளவைக்கு நல்ல பசி. வெளித் திண்ணையில் உட்கார்ந்து கொண்டு உணவு கேட்டாள். வீட்டில் உள்ள அப்பெண் உடல்மறைக்க ஆடையில்லாமல் அரையாடையுடுத்தி இருந்தபடியால் வெளியேவர வெட்கப்பட்டு கதவைத் திறந்துவிட்டு ஒளவைக்கு உணவு இல்லையென எப்படிச் சொல்வதென அஞ்சி அழுதாள். அப்பெண்ணின் அழுகுரலைக் கேட்டு உள்ளேவந்த ஒளவையாருக்கு அப்பெண் விபரமனைத்தையும் கூறினாள். ஒளவை தன்னிடமிருந்த அரிசியில் கால்நாழியையும் ஒரு தேங்காயையும் கொடுத்து இதனை வைத்துக்கொண்டு என்னையும் நினைந்து செவ்வாய்ப் பிள்ளையார் வழிபாடு செய். பிறகுபார் உன் அதிர்ஸ்டத்தை என்று கூறிச் சென்றார். ஒளவையின் சொல்லைக் குரு உபதேசமாகக் கொண்டு செவ்வாய்ப் பிள்ளையார் வழிபாடு செய்து செல்வநிலையில் உணர்ந்தாள் அப்பெண்.
இன்றும் பெண்கள் தைச்செவ்வாய், ஆடிச்செவ்வாய் தொடங்கி இத்தனை செவ்வாய் விரதம் இருப்பதென்று தீர்மானித்து இந்த நோன்பைத் தொடங்குவார்கள். பெண்கள் மட்டுமே இதனைக் கைக்கொள்வார்கள். இவர்கள் உரலில் மா இடிப்பது கூட ஆண்களின் செவியில் விழக்கூடாது. ஆடவர்கள் இல்லாத வீட்டில் பெண்கள் ஒன்று கூடி அவரவர்கள் உண்ணும் அளவிற்கேற்ப நெல் கொணர்ந்து பங்கிடுவார்கள். நீராடி தூய்மையாக நெற்குற்றி அரிசியாக்கி அதனை இடித்து மாவாக்கி உப்பிடாமல் தேங்காயைச் சிறுசிறு துண்டுகளாக்கி மாவில் போட்டு இளநீரை ஊற்றி மாவைப் பிசைந்து அடையாக உருண்டைக் கொழுக் கட்டையாகச் செய்து வைக்கோலைப் பரப்பி அதன்மேல் வைத்து வேகவைப்பார்கள்.
ஈனாக் கன்றின் சாணத்தால் பிள்ளையார் பிடித்து புன்கஇலை, புளிய இலைகளைக் கொண்டு பந்தல் அமைத்து அதில் பிள்ளையாரை எழுந்தருளச் செய்து வெற்றிலை பாக்கு பழம் கொழுக்கட்டை அடை முதலியவற்றை நிவேதனம் செய்து செவ்வாய்ப் பிள்ளையார் கதைகூறி நிவேதனத்தை உண்டு பொழுது விடிய நான்கு நாழிகைக்கு முன்பே பூசை செய்த புனித இலை, புன்க இலை இவற்றை அகற்றி விட்டு பிள்ளையாரை வழியனுப்பி மஞ்சள் குங்குமம் அணிந்து குடம் நிறைய நீரோடு வாய் பேசாமல் வீடு செல்வார்கள். அன்று யாருக்கும் தானியமோ காசோ கொடுக்க மாட்டார்கள்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.