sai yoga centre

Tuesday, November 8, 2011

இந்துக் கடவுள்கள்


இந்து சமயத்தவர் கடவுளைப் பல உருவங்களிலும், பெயர்களிலும் வணங்குகிறார்கள். இவ்வாறு வணங்கப்படும் இந்துக் கடவுள்கள், காலத்துக்குக் காலமும் இடத்துக்கு இடமும், பல வெறுபாடுகளுடன் காணப்படினும், இவை அனைத்தையும் ஒரே நெறிக்குள் அடக்கி வைத்திருப்பது இந்து சமயத்தின் சிறப்பியல்பாகும்.
இந்து சமயத்தின் கடவுற் கொள்கை
இந்து சமயத்தில் இவ்வாறு பல கடவுள்கள் வணங்கப்படுவதன் காரணமாக இது ஒரு பலகடவுட் கொள்கை சார்ந்த சமயம் எனக் கூறப்படுவதுண்டு- எனினும் பல இந்து சமய ஆய்வாளர்கள் இதனை ஏற்றுக்கொள்வதில்லை. ஒரே கடவுளின் பல்வேறு அம்சங்களே பல கடவுள்களாக வணங்கப்படுவதாக அவர்கள் கூறுகிறார்கள். இந்து சமயத்துக்கு அடிப்படையானவையாகக் கருதப்படும் நான்கு வேதங்களில் மிகப் பழமையான ரிக் வேதத்திலிருந்தே இதற்கு சான்றுகள் காட்டப்படுகின்றன.
வேதகாலக் கடவுள்கள்
வேதக்காலக் கடவுள்களுக்கும், தற்காலத்தில் இந்துக்களால் வணங்கப்படும் கடவுள்களுக்கும் இடையில் பெருமளவு வேறுபாடுகள் காணப்படுகின்றன.
உயர் நிலையில் வைத்து வணங்கப்பட்ட பல கடவுள்கள் தற்காலத்தில் அந்நிலையை இழந்துள்ளார்கள். அக்காலத்தில் கீழ் மட்டத்திலிருந்த கடவுள்கள் இன்று உயர்நிலையில் மதிக்கப்படுகிறார்கள்.
வேதங்கள் முப்பத்து மூன்று கடவுள்களைப் பற்றிச் சிறப்பாகக் குறிப்பிடுகின்றன. இவர்களுள், இந்திரன், பிரஜாபதி ஆகிய கடவுள்கள் தவிர, 8 கடவுள்கள் வசுக்கள் எனவும் 11 பேர் உருத்திரர்கள் எனவும் 12 பேர் ஆதித்தர்கள் எனவும் அழைக்கப்படுகிறார்கள்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.