sai yoga centre

Tuesday, March 7, 2017

நடக்காததை நடத்திக்காட்டும் நரசிம்ம மந்திரம் !!!



நடக்காததை நடத்திக்காட்டும் நரசிம்ம மந்திரம் !!!

🌹 🌿 🌹 ::::::::::::: 🌿 🌹 🌿 ::::::::::::::::: 🌿 🌹 🌿

நீங்கள் ஒரு முயற்சி எடுக்கிறீர்கள்! என்னவெல்லாமோ செய்து பார்க்கிறீர்கள்.

ஆனால், ஏதோ தடங்கல், இடைஞ்சல் என்று தலை தூக்கி அந்த முயற்சி நிறைவேறாமல் போய்விட்டது. நீங்கள் மனவருத்தத்துடன் இருக்கிறீர்கள்.

அப்படியானால், நீங்கள் சொல்ல வேண்டிய மந்திரம் இதுதான். saispiritualcenter.org

இந்த மந்திரம் நடக்காததையும் நடத்திக்காட்டும் தன்மையுடையது.

யஸ்ப அபவத் பக்தஜன ஆர்த்திஹந்துபித்ருத்வம்
அந்யேஷு அவிசார்ய தூர்ணம்ஸ்தம்பே
அவதார தம் அநந்ய லப்யம்லக்ஷ்மி
ந்ருஸிம்ஹம் சரணம் பிரபத்யே.

இந்த ஸ்லோகத்தைச் சொல்ல முடியாதவர்கள் பொருளைச் சொல்லுங்கள்.

"பக்தியற்றவர்களால் அடைய முடியாதவனே!
தாயின் கர்ப்பத்தில் அவதரித்தால்
தாமதமாகுமென்று தூணில் அவதரித்தவனே!
நினைத்த மாத்திரத்தில் பக்தர்களின்
துன்பத்தைப் போக்குபவனே!
லட்சுமி நரசிம்மனே! fb.com/saispiritualcenter

பித்ரு தோஷம் உள்ளதா என்பதை தெரிந்து கொள்ள கருடப்புராணம் கூறும் எளிய வழிமுறைகள்🌹🌿🌹



பித்ரு தோஷம் உள்ளதா என்பதை தெரிந்து கொள்ள கருடப்புராணம் கூறும் எளிய வழிமுறைகள்🌹🌿🌹

🌿 🌹 🌿 :::::::::::::::::: 🌿 🌹 ::::::::::::::: 🌿 🌹 🌿

நமது குடும்பத்திற்கு பித்ரு தோஷம் இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ள கருடப் புராணம் மிக எளிமையான வழிமுறைகளை தெளிவாக எடுத்துரைத்துள்ளது.

ஒருவர் இறந்த பின்பு அவருக்குரிய பித்ரு கடன்களை முறைப்படி செய்யாதவர்கள் குடும்பத்தில் மனக் கஷ்டம், பணக்கஷ்டம் போன்றவை இருந்து கொண்டே இருக்கும்.

இறந்தவர் ஆன்மா சாந்தியடைய நமது முன்னோர்கள் பல்வேறு வழிமுறைகளை கையாண்டனர்,

இறந்தவுடன் இறந்தவருக்கு செய்ய வேண்டிய பிண்டம் இடுதல், இறந்தவரின் திதி தோறும் அவருக்குரிய கடமைகளை செய்தல், போன்றவற்றை செய்யாமல் இருக்கும் போது இறந்தவரின் ஆன்மா பசி, தாகம் போன்றவற்றால் அவதிப்படும்,

அப்படி அந்த ஆத்மா அவதிப்படும்போது, அந்த அவதியின் கொடூரங்கள் அவரது சந்ததியினரையும் விட்டு வைக்காது,

அவர்களையும் பாதிப்படைய வைக்கும். இதைத்தான் பித்ரு தோஷம் என்று கூறுவார்கள்.

ஒருவன் நல்லவனாகவும், தெய்வ பக்தி மிகுந்தவனாக இருந்து இறந்தால், இறந்தவருக்கு பித்ரு கடன்களை சரியாக செய்யாவிட்டாலும் இறந்தவரின் குடும்பத்திற்கு பித்ரு தோஷம் கண்டிப்பாக ஏற்படும்.

ஆனால் அதன் தாக்கம் சற்று குறைவாக இருக்கும், காரணம், பித்ருக்களுக்கு இறைவனின் ஆசி இருப்பதால் தோஷத்தின் தீவிரம் சற்று குறைவாக இருக்கும்.

ஆனால் ஒருவன் மிக கொடூரமானவனாகவும், அடுத்தவர் மனைவி, அடுத்தவர் சொத்து போன்றவற்றை அபகரித்து, லஞ்சம், திருட்டு போன்ற கொடூரத்தில் ஈடுபடுவானாயின் அவன் இறந்த பிறகு அவனுக்குரிய பித்ரு காரியங்களை அவன் குடும்பம் செய்யாமல் விட்டுவிட்டால் இறந்தவனின் குடும்பத்தினருக்கு மிகப் பெரிய தீங்கு விளையும்,

இறந்தவனுக்கு இறைவனின் ஆசி இல்லாமல், நரக வேதனையில், பசி, தாகம் போன்றவற்றால் அவதிப்பட்டு அல்லல் படுவான் அப்படிப்பட்டன் படும் வேதனையின் தாக்கம் மிகுந்த வீரியம் மிகுந்ததாக இருக்கும்.

அந்த தாக்கம் அவனது குடும்பம், மற்றும் சந்ததியினரையும் மிகவும் கொடூரமாக தாக்கும்.

பித்ரு தோஷம் உள்ளவன் வீட்டில் அதிகம் நடைபெறும் செயல்களைப் பார்ப்போம்.

தான் செய்யும் செயல்களில் அதிகமாக பாவம் உண்டாக்கும் செயலையும், லஞ்சம், லாவணியம் போன்ற கெடுதல் தரக்கூடிய செயல்கள் அதிகம் நடைபெறும்.

குழந்தைகள் பிறந்து பிறந்து இறப்பார்கள்.
சுற்றத்தாரோடு ஒற்றுமையில்லாமல் மனம் வேறுபட்டு வாழ்வதற்கும், குடும்பத்தில் நிம்மதி இன்றி கடைசியில் வெறுமையே ஏற்படும்.

பசுக்களை போஷிக்க முடியாமற் போகும்.
நல்ல நண்பனோடு விரோதிக்க நேர்ந்து நல்ல நட்புகள் ஏற்டாமல் போகும்.

ஹரி பக்தி செய்ய முடியாமல் வாழ்நாள் வீணாவதற்கும் ஜெப ஓமங்களைச் செய்ய முடியாமல் போகும்,

தந்தை தாயாரை இகல்வதும், அவர்களை மதிக்காமல் அவமதிக்கும் செயல்கள் நடைபெறும்.

பணம் மற்றும் சொத்து, பொன் பொருள், பெண் போன்ற காரணங்களால் அயலாரை கொல்ல முயற்சிக்கும் செயலுக்கு மனம் உந்தப்படும்.

இழிந்தோர் செய்யும் தொழிலைச் செய்து பிழைக்க நேரிடும்.

அதர்மங்களையே செய்ய தூண்டும் எண்ணம் மனம் முழுவதும் எழும்.

பிதுர் கர்மங்களை விக்கினத்தால் தடைபட்டு குறைபட்டு போகும்,

புத்திரன் பகைவனைப் போல மாறும் சூழல் ஏற்படும்.

மனைவியுடன் சேர்ந்து வாழ முடியாமல் நெடுநாட்கள் பிரிந்து வாழும் நிலை ஏற்படும்.

மேற்கண்ட கெடுதல் தரக்கூடிய செயல் உங்களுக்கு (உங்கள் இல்லத்தில்) அதிகம் நடைபெறுகிறதா,

இவை எல்லாம் பிரேத ஜென்மத்தை அடைந்தவனால் ஏற்பட்ட விளைவுகளால் தான் என்பதை கருடப் புராணம் கூறுகிறது.

இதுபோன்ற பிரச்சனை தீரவேண்டுமெனில் பித்ரு கடன்களை ஒழுங்காகவும், கடமை தவறாமலும் செய்யுங்கள்,

பித்ரு கடன் என்ன என்பதை கேட்டு அறிந்து அதன்படி உங்கள் பித்ருகளை திருப்தி படுத்தினாலே மேற்கண்ட கெடுதல்களில் இருந்து எளிதாக நீங்கள் தப்பிக்கலாம். saispiritualcenter.org


நீங்கள் வேண்டும் வரங்களை எல்லாம் நிறைவேற்றும் சண்முகன் மந்திரம்



நீங்கள் வேண்டும் வரங்களை எல்லாம் நிறைவேற்றும் சண்முகன் மந்திரம்

🌹 🌿 🌹 :::::::::::: 🌿 🌹 🌿 ::::::::::: 🌿 🌹 🌿 🌹

நீங்கள் வேண்டும் வரங்களை எல்லாம் நிறைவேற்றும் இந்த சண்முகன் மந்திரம். பலன் தரும் இந்த மந்திரத்தை தினமும் சொல்லி வந்தால் நினைத்தவை நிறைவேறும்.

சரவண மந்திராக்ஷ ஷட்க ஸ்தோத்திரம்🌹🌿

பவாய பர்காய பவாத்மஜாய
பஸ்மாய மாநாத்புத விக்ரஹாய
பக்தேஷ்ட காமப்ரதகல்பகாய
பகாரரூபாய நமோ குஹாய

பொருள் :🌿🌹

மங்கள வடிவினனும் பாவங்களைப் போக்குகிறவனும் பரமசிவனின் மனதுக்குகந்த புத்திரனும் விபூதியைத் தரித்த பேரழகுத் திருவுரு கொண்டவனும் பக்தர்கள் கோரியவற்றை நிறைவேற்றும் கற்பக விருட்சம் போன்றவனும் ‘ப’ என்ற (சரவணபவ) அட்சரத்தின் வடிவாய்த் திகழ்பவருமான குஹப்பெருமானே, நமஸ்காரம். saispiritualcenter.org

சாபங்கள் மொத்த‍ம் 13 வகையான சாபங்கள் இருக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?!*



சாபங்கள் மொத்த‍ம் 13 வகையான சாபங்கள் இருக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?!*

1) பெண் சாபம்,
2) பிரேத சாபம்,
3) பிரம்ம சாபம்,
4) சர்ப்ப சாபம்,
5) பித்ரு சாபம்,
6) கோ சாபம்,
7) பூமி சாபம்,
8) கங்கா சாபம்,
9) விருட்ச சாபம்,
10) தேவ சாபம்
11) ரிஷி சாபம்
12) முனி சாபம்,
13) குலதெய்வ சாபம்
அவற்றை ஒவ்வொன்றாக பார்க்கலாம்.

*1) பெண் சாபம் :*

இது எப்படி ஏற்படுகிற தென்றால், பெண்களை ஏமாற்று வதும், சகோதரிகளை ஆதரிக்காமல் இருப்பதாலும், மனைவியைக் கைவிடுவதாலும் வருகிறது.பெண் சாபம் ஏற்பட்டால் வம்சம் அழியும்.

*2) பிரேத சாபம் :*

இறந்த மனிதனின் உடலை வைத்துக்கொண்டு அவரை இழிவாகப் பேசுவதும், அவருடைய உடலைத் தாண்டுவதும், பிணத்தின் இறுதி காரியங்களை செய்யவிடாமல் தடுப்பதும், இறந்தவரை வேண்டியவர்கள் பார்க்க அனுமதி மறுப்பதும் பிரேத சாபத்தை ஏற்படுத்தும்.பிரேத சாபத்தால் ஆயுள் குறையும்.

*3) பிரம்ம சாபம்:*

நமக்கு வித்தை கற்றுக்கொடுத்த குருவை மறப்பது,
வித்தையை தவறாக பயன்படுத்துவது,
மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுக்காமல் ஒரு வித்தையை மறைத்து வைப்பது,இவற்றான காரணங்களால், பிரம்ம சாபம் ஏற்படுகிறது.பிரம்ம சாபத்தால், வித்யா நஷ்டம் அதாவது, படிப்பு இல்லாமல் போகும்.

*4) சர்ப்ப சாபம்:*

பாம்புகளை தேவையின்றி கொல்வதாலும் அவற்றின் இருப்பிடங்களை அழிப்பதாலும்,சர்ப்ப சாபம் உண்டாகும்.
இதனால், கால-சர்ப்ப தோஷமும் ஏற்பட்டு திருமணத் தடை ஏற்படும்.

*5) பித்ரு சாபம்:*

முன்னோர்களுக்கு செய்யவேண்டிய திதி மற்றும் தர்ம காரியங்களை செய்யாமல் மறப்பதும், தாய்- தந்தை தாத்தா-பாட்டி போன்றோரை உதாசீனப்படுத்துவதும் , அவர்களை ஒதுக்கி வைப்பதும்,பித்ரு சாபத்தை ஏற்படுத்தும்.
பித்ரு சாபம் பாலாரிஷ்ட சாபத்தையும் ஏற்படுத்தி, வம்சத்தில் ஆண் குழந்தை பிறக்காமல் போவது, குழந்தைகள் இறந்துபோவது போன்றவற்றை ஏற்படுத்தும்.

*6) கோ சாபம்:*

பசுவை வதைப்பது, பால் மரத்த பசுவை வெட்டக் கொடுப்பது கன்றுடன் கூடிய பசுவைப் பிரிப்பது , தாகத்தால் பசு தவிக்கும் போது தண்ணீர் கொடுக்காதது போன்ற காரணங்களால் கோ சாபம் ஏற்படும்.இதனால், குடும்பத்திலோ வம்சத்திலோ எவ்வித வளர்ச்சியும் இல்லாமல் போகும்.

*7) பூமி சாபம்:*

ஆத்திரத்தில் பூமியை சதா காலால் உதைப்பதும், பாழ்படுத்துவதும், தேவையற்ற பள்ளங்களை உண்டு பண்ணுவதும், அடுத்தவர் பூமியைப் பறிப்பதும் பூமி சாபத்தை உண்டாக்கும்.பூமிசாபம் நரகவேதனையைக் கொடுக்கும்.

*8) கங்கா சாபம்:*

பலர் அருந்தக்கூடிய நீரை பாழ் செய்வதாலும், ஓடும் நதியை அசுத்தம் செய்வதாலும், கங்கா சாபம் வரும்.
கங்கா சாபத்தால் எவ்வளவு தோண்டினாலும் நீர் கிடைக்காது.

*9) விருட்ச சாபம்:*

பச்சை மரத்தை வெட்டுவதும், கனி கொடுக்கும் மரத்தை பட்டுப்போகச் செய்வதும், மரத்தை எரிப்பதும், மரங்கள் சூழ்ந்த இடத்தை, வீடு கட்டும் மனையாக்குவதும் விருட்ச சாபத்தை ஏற்படுத்தும்.விருட்ச சாபத்தினால், கடன் மற்றும் நோய் உண்டாகும்.

*10) தேவ சாபம்:*

தெய்வங்களின் பூஜையைப் பாதியில் நிறுத்துவது, தெய்வங்களை இகழ்வது போன்ற காரணங்களால், தேவ சாபம் ஏற்படும். தேவ சாபத்தால் உறவினர்கள் பிரிந்துவிடுவர்.

*11) ரிஷி சாபம்:*

இது கலியுகத்தில் ஆச்சார்ய புருஷர்களையும் உண்மையான பக்தர்களையும் அவமதிப்பது போன்றவற்றால் ஏற்படும்.
ரிஷி சாபத்தால், வம்சம் அழியும்.

*12) முனி சாபம்:*

எல்லைதெய்வங்கள், மற்றும் சின்னசின்ன தெய்வங்களுக்கு வழங்க வேண்டிய மரியாதைகளையும் பூஜையையும் மறப்பது முனி சாபத்தை ஏற்படுத்தும்.முனி சாபத்தால் செய்வினைக் கோளாறு எற்படும்.

*13) குலதெய்வ சாபம் :*

இது நமது முன்னோர்கள் பூஜித்த தெய்வத்தை மறக்காமல் இருப்பது.குலதெய்வ சாபத்தால் குடும்பத்தில் ஒரு போதும் மகிழ்ச்சி ஏற்படாமல் போகும்.ஒருவித துக்கம் சூழ்ந்துகொள்ளும்.சாபம் என்பது நல்லவர்களுக்கு வரமாக மாறும்.தீயவர்களை அழிக்கும்.எவ்வளவு வரங்கள் பெற்றாலும், தாங்கள் பெற்ற வரத்தின் பலத்தால், நல்லவர்களை ஒரு போதும் அழிக்க முடியாது.ஆனால், ஆற்றாமல் அழுது பதறிய நெஞ்சிலிருந்து வந்த வார்த்தை சாபமாக மாறினால் எப்பேற்பட்ட வலிமையான மனிதனையும் உரு தெரியாமல் அழித்து விடும்.🍃🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🍃 fb.com/saispiritualcenter   

ஷிர்டி சாய்பாபா வாழ்க்கை சுருக்கம்



ஷிர்டி சாய்பாபா வாழ்க்கை சுருக்கம்

ஷிர்டி சாய் பாபாவின் தாய் தந்தை யாவர்?
சொந்த ஊர் எது ? இவை எதுவும் யாரும்
அறிந்ததில்லை..

சாயி மகான் 1854 ஆம் ஆண்டு, தனது
பதினாறாவது வயதில் ஷீரடிக்கு வருகை
புரிந்தார். அதனால் சில தினங்களில் அவர்
அங்கிருந்து கிளம்பி சென்றார். அவர் எங்கு
சென்றார் என்பதை யாரும் அறியவில்லை..
சில ஆண்டுகள் கழிந்தன. சாந்த் பட்டேல்
என்பவர் ஒருமுறை காட்டு வழியில்
சென்று கொண்டிருந்தபோது, பக்கீர் போல
இருந்த பாபாவை கண்டார். அவரிடம்
இளைப்பாறும்படி பாபா கூறினார்.
அவர்கள் இருவரும் புகைபிடிக்க நெருப்பு
தேவையாக இருந்தது. பாபா தன்
கையிலிருந்த சுத்தியால் நிலத்தை
தோண்ட நெருப்பு வந்தது. பிறகு
கைத்தடியால் பூமியின் மீது அடிக்க
தண்ணீர் வந்தது.
மேலும் சில மாதங்களுக்கு முன் காணமல்
போன சாந்த் பட்டேலின் குதிரை இருக்கும்
இடத்தையும் பாபா சரியாக கூறினார்..
பாபாவின் மகிமையை சாந்த் பட்டேல்
புரிந்து கொண்டார்..

சாந்த் பட்டேல், தன் வீட்டிற்கு அழைத்து
சென்றார். சில நாட்கள் பாபாவை தன்
வீட்லேயே தங்க வைத்து உபசரித்தார்.. சாந்த்
பட்டேல் தன் மைத்துனரின் மகனது திருமண
நிகழ்ச்சிக்காக ஷிர்டி வந்த போது,
பாபாவையும் தன்னுடன் ஷிர்டிக்கு
அழைத்து வந்தார்.

பாபாவின் ஒளிபொருந்திய தோற்றத்தை
கண்ட மஹல்சாபதி என்னும் பூசாரி, அவரை
சாயி என்று அழைத்தார்.
"சாயி" என்றால் பாரசீகத்தில் "சுவாமி"
என்று பொருள். "பாபா" என்றால் இந்தியில் "அப்பா" என்று பொருள்.fb.com/saispiritualcenter

இரண்டும் இணைந்து சாயிபாபா என்ற
திருப்பெயரே நிலைத்து விட்டது..
சாயிபாபா ஷிர்டியிலேயே தங்கிவிட
தீர்மானித்தார். ஷிர்டியில் பழமையான
மசூதி ஒன்று இருந்தது. அதன்
அருகிலுள்ள வேப்ப மரத்தின் அடியில்
பாபா அமர்ந்தார். பாபா அமர்ந்திருந்த
வேப்ப மரத்தின் இலைகளில் அதன் இயல்பு
கசப்பு சுவை மாறியது..
ஷிர்டி மக்கள் பாபாவிடம் நீங்கள் யார் ?
என்று கேட்டார்கள்..

அதற்கு அவர், நானே அல்லா !, நானே
சங்கரன் ! நானே ஸ்ரீ கிருஷ்ணர் ! நானே
அனுமன் ! என்று கூறினார்.
ஆமாம் அவர் இப்பூமியில் இறைஅம்சம்
கொண்டவராகவே அவதரித்தார்..
பல ஆண்டுகள், ஒரு யோகியை போலவே
வாழ்ந்த பாபா, பிச்சை எடுத்தே உண்டார்.
தனது மகிமையால் நோயுற்றவர்களின்
நோயை குணமாக்கினார். பாபாவின்
புகழ் சுற்று வட்டாரங்களில் பரவ
தொடங்கியது. பல ஞானிகள் வந்து
பாபாவை சந்தித்தனர். அவர்கள் பாபாவின்
தெய்வீக தன்மையை தாங்கள் அறிந்ததோடு
அதை உலகிற்கும் எடுத்து கூறினர்.
கங்காகீர் என்னும் கர்வமிக்க ஞானி
பாபாவை சந்தித்து, பாபாவின்
மகிமையை சோதித்தார்.
பாபா தன்
உள்ளங்கையிலிருந்து கங்கையை பெருக
செய்ய, கங்காகீர் தன் தவற்றை உணர்ந்தார்..
பாபா தான் தங்கியிருந்த துவாரகாமாயீ
என்னும் மசூதியில் விளக்குகள் ஏற்றி
வைப்பார். இரு எண்ணெய் வியாபாரிகள்
விளக்கிற்கான எண்ணையை கொடுத்து
வந்தனர்.

ஒருநாள் பாபாவின் ஆற்றலை சோதிக்க
எண்ணிய அவர்கள் எண்ணெய் தர மறுத்தனர்..
பாபா தண்ணீரை ஊற்றி விளக்குகளை
எரித்தார். இந்நிகழ்ச்சியால் பாபாவின்
புகழ் அப்பகுதி முழுவதும் பரவியது.
பாபாவை தேடி பக்தர்கள் வர தொடங்கினர்..
ராதாகிருஷ்ணமாயி என்னும் பெண்மணி
பாபாவின் இருப்பிடத்தை கவனித்து
கொண்டதோடு, உணவும் சமைத்து வந்தார்.
பாபாவை தேடி எத்தனை பக்தர்கள்
வந்தாலும், அவர்கள் அனைவரும் வயிறார
உண்ணும்படி அந்த உணவை பெருக
செய்தார் பாபா..
தெய்வீக மகிமை நிறைந்த பாபா
குழந்தைகளிடம் குழந்தையாகவே நடந்து
கொண்டார்.. சிரிக்க சிரிக்க பேசி
குழந்தைகளை மகிழ செய்தார்..
பாபா பஜனையையும், பாடல்களையும்
விரும்பினார். பக்தர்களிடம்
பஜனைகளையும், பாடல்களையும்
பாடும்படி உற்சாகமூட்டினார்..

ஏழைகளின் துயரங்களை கண்டு மனம்
பொறாதாவர் பாபா.. ஒரு தாயை போல
ஏழைகளிடம் நடந்து கொண்டார்.
தொழுநோயாளிகள் மீது இரக்கம்
கொண்டிருந்தார். அவர்களது உடலிலுள்ள
புண்களை தன் கையாலேயே கழுவி,
அவர்களுக்கு மருத்துவம் செய்தார்.
பாபா சாஸ்திரங்களையும், ஐயமற கற்று
உணர்ந்திருந்தார். பகவத் கீதை, குர்ஆன்
போன்றவற்றின் சுலோகங்களுக்கு மிக
அற்புதமான விளக்கங்கள் அளித்து
பண்டிதர்களைக்கூட வியப்படைய செய்தார்.
பாபா மதங்களை கடந்து நின்றார்.
துவாரகாமாயீ மசூதியில் பாபா
வீற்றிருந்தார். மக்கள் அவரை சாயி
மகாராஜ் என்று போற்றி கொண்டாடினர்.
பாபா மக்களுக்கு கூறிய பொதுவான
உபதேசம் நிஷ்டா (நம்பிக்கை) வும்,
ஸபூரி (பொறுமை) யும், ஆகும்..
தன்னை நாடி வந்த
நோயாளிகளுக்கெல்லாம் உதி (
விபூதி) யையே, பிரசாதமாக தந்து,
அவர்களின் நோயை நீக்கியவர் பாபா.
வாழ்வில் பொறுமையும், தன் மீது
நம்பிக்கையும் கொண்ட அன்பர்களுக்கு
அவர் எப்போதும் துணை நிற்கிறார்..
துவாரகாமாயீயில் அன்று பாபாவால்
மூட்டப்பட்ட நெருப்பு இன்றும் அணையாமல்
இருக்கிறது. அந்நெருப்பு
குண்டத்திலிருந்து எடுக்கப்படும் உதியே
இன்றும் பக்தர்களின் பிரசாதமாக
விளங்குகிறது. பாபா தன்
பொன்னுடலோடு இப்பூவுலகில் வாழ்ந்த
காலத்தில் எண்ணிலடங்காத அற்புதங்கள்
புரிந்தார்..

சாயிமகான் 1918 ஆம் ஆண்டு அக்டோபர்
மாதம் 18ஆம் நாள் ஸ்தூல உடலை உகுத்தார்.
உதி அளித்து, உபதேசம் செய்து,
பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு அருள்
புரிந்த பாபா, தான் கூறியபடியே தன்
ஸ்தூல உடல் மறைந்த பின்னும் இன்றும்
அருள் புரிந்து வருகிறார்..

அதிர்ஷ்டம் உள்ளவர்களுக்கும், பாவங்கள் நீங்க
பெற்றவர்களுக்கும், சாயியை வழிபடும்
பேறுகிட்டுகிறது.. !.

ஷிர்டி சாயிபாபா அளித்த பதினோரு
உபதேச மொழிகள்:
1. ஷிர்டி ஸ்தலத்தை எவன் மிதிக்கிறானோ.
அவனுடைய துன்பம் ஒரு முடிவை
அடைந்து செளகரியத்தை அடைகிறான்.
2. துவாரகாமாயியை அடைந்த
மாத்திரத்தில் பெரும் துன்பத்திற்கு
உள்ளானவர்களும் மிகுதியான
சாந்தோஷத்தை அடைவார்கள்,
3. இவ்வுலகை விட்ட பிறகும் சர்வ
சக்தியுடன் வேலை செய்வேன்.
4. என்னுடைய மசூதி என் பக்தர்களுக்கு
அனேக ஆசிர்வாதங்களையும்
புத்திமதிகளையும் கொடுக்கும்.
5. என்னுடைய பூத உடல் என்
மசூதியிலிருந்து பேசும்.
6. என்னுடைய மசூதியில்
இருந்துகொண்டே நான் மிகவும்
சுறுசுறுப்பாகவும் தீவிரமாகவும்
இருப்பேன்.
7. என்னிடம் வருபவர்களுக்கும் என்னை
தஞ்சம் அடைபவர்களுக்கும் என்
உபதேசத்திற்காக என்னிடம் தீவிர நம்பிக்கை
உள்ளவர்களுக்கும் நான் எப்பொழுதும்
உயிருடன் இருக்கிறேன்.
8. நீ என்னை அடைந்தால் நான் உன்னை
கடாக்க்ஷிக்கிறேன்.
9. நீ என்பேரில் உன் பளுவை சுமத்தினால்
நான் நிச்சயமாக அதைத் தாங்குவேன்.
10. நீ என் உபதேசத்திற்காகவும்
உதவிக்காகவும் என்னை அடைந்தால்
அவற்றை உடனே நான் உனக்குக்
கொடுப்பேன்.
11. என்னுடைய பக்தர்களுடைய வீட்டில்
ஒருபோதும் தேவை என்பதே இருக்காது. saispiritualcenter,org