sai yoga centre

Friday, February 7, 2014

ஸ்ரீ கர்ப்பரட்சாம்பிகையின் ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி மந்திரம்

திருக்கருகாவூரில் உள்ள ஸ்ரீ கர்ப்பரட்சாம்பிகையின் ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி மந்திரம் மேல் அமைந்த மந்திரம் இது. இந்த மந்திரமும் சந்தான பாக்கிய அனுபவ நலன்களைத் தரக்கூடியதாகும். இதை ஒரு குருபுஷ்ய நட்சத்திரத்தன்றோ (வியாழக்கிழமை வரும் பூச நட்சத்திரம்), பானுபுஷ்ய நட்சத்திரத்தன்றோ (ஞாயிற்றுக்கிழமை வரும் பூச நட்சத்திரத்தன்றோ) ஆரம்பித்துச் செய்ய வேண்டும்.

48 தடவைகள் இந்த மந்திரத்தைத் தினமும் உச்சரித்து வருவதால் அன்னையின் அருள் கிடைத்து சந்தான பாக்கியம் கிடைக்கும். இதற்கும் வெள்ளி டம்ளரில் பசும்பால் நைவேத்தியம் செய்ய வேண்டும். பாலில் அரை ஸ்பூன் அளவு தேன் மட்டும் கலந்து கொள்ளவேண்டும்.

அரச மரத்தில் கிழக்குப் பக்கமாகச் செல்லும் கிளையில் இருந்து ஒரு முழுமையான அரச இலையைப் பறித்து வந்து அதை நீரில் சுத்தமாகக் கழுவிவிட்டு, அதில் சந்தனம் தடவிக் கீழே வைத்து, அதன் மேல் பசும் பாலுள்ள வெள்ளி டம்ளரை வைக்க வேண்டும். ஸ்படிக மாலை கொண்டோ, அல்லது ருத்ராட்ச மாலை கொண்டோ 48 முறை, 108 நாட்களுக்குச் செய்து வர வேண்டும். 

மந்திரம் பூர்த்தியான பிறகு பாலை தம்பதியர் இருவருமே அருந்த வேண்டும். ஒவ்வொரு முறையும் பூஜை பூர்த்தியான பிறகு ஆல இலைகளைச் சேர்த்து வைத்திருந்து 108 ஆனவுடன் அதை ஒரு நதியிலோ அல்லது குளத்திலோ, கடலிலோ விட்டு விட வேண்டும். குழந்தை பிறந்தவுடன் திருக்கருகாவூர் வந்து நேர்த்திக் கடன் செய்வதாக பிரார்த்தனை செய்து கொள்ளவேண்டும்.

ஸ்ரீ கர்ப் பரட்சாம்பிகையின் திருவுருவப் படத்தை பூஜைக்கு வைத்துக் கொள்ள வேண்டும். அதைப் பஞ்சோபசார பூஜையாகவே செய்து முடிப்பதும் விசேஷமாகும். இதற்குரிய மந்திரம் வருமாறு:- 

'ஓம் கர்ப்ப ரட்சாம்பிகையை ச வித்மஹே
மங்கள தேவதாயை ச தீமஹி
தந்நோ தேவி ப்ரஜோதயாத்'

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.