sai yoga centre

Friday, February 7, 2014

ராஜராஜேஸ்வரி ஸ்லோகம்

இந்த மந்திரத்தை ஒரு வளர்பிறை ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் செய்ய வேண்டும். பூஜைக்கு ஸ்ரீ ராஜராஜேஸ்வரியின் திருவுருவப் படத்தைப் பயன்படுத்த வேண்டும். ஒரு வெள்ளி டம்ளரில் காய்ச்சிய பசும்பாலை வைத்து, அதில் 3 முந்திரி பருப்பினையும், கற்கண்டு பொடியைச் சேர்த்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

வழக்கம்போல் நெய் தீபம், தூபம், ஆரத்தி, நைவேத்தியம் என்ற முறையில் பூஜையைச் செய்து முடிக்க வேண்டும். பூஜையின் போது கிழக்கு முகமாக அமர்ந்திருக்க வேண்டும். பூஜை தொடங்கிய நாளில் இருந்து உணவில் பசுநெய் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஒரு ஸ்படிக மாலை கொண்டு கீழ்கண்ட மந்திரத்தை 48 அல்லது 108 முறைகள் ஜபம் செய்ய வேண்டும்.

'ஓம் நம ஷக்தி ரூபாய
ராஜ ராஜேஸ்வரி மம க்ரஹே
புத்ரம் குரு குரு ஸ்வாஹா'

இந்த மந்திரத்தால் ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரியின் திருவருள் நமது உள்ளத்தில் உறைவதன் மூலமாக நமது இல்லத்திலும் நிறைந்து எண்ணியவை நிறைவேறும். அசைவ உணவு சம்பந்தம் கூடாது

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.