sai yoga centre

Wednesday, February 19, 2014

எட்டு காலங்கள்

எட்டு காலங்கள் .

விடியலுக்கு முன் 3 மணி முதல் 6 மணி வரை - பிரம்ம முகூர்த்தம்.

அதிகாலை 6 மணி முதல் 7 மணி வரை - தேவர்கள் காலம்.

முற்பகல் 9 மணி முதல் 12 மணி வரை - ரிஷிகளின் காலம்.

நண்பகல் 12 மணி முதல் 3 மணி வரை - பிதுர்க்களின் காலம்.

பிற்பகல் 3 மணி முதல் 6 மணி வரை - சந்தியா காலம்.

முன் இரவு 6 மணி முதல் 9 வரை - பூத காலம்.

நடு இரவு 9 மணி முதல் 12 மணி வரை- பிரேத காலம்.

பின் இரவு 12 மணி முதல் 3 மணி வரை - ராக்ஷச காலம்

பிரம்ம முகூர்த்த காலத்தில்
திதி, நக்ஷத்ரம் சரியில்லாவிட்டாலும் சுபகாரியங்கள் செய்யலாம்.

உதய காலம் தேவர்களுடையதால்
வேளையும், நக்ஷத்ரமும் உகந்ததாய் இருக்க வேண்டும்.

ரிஷிகளின் காலத்தில்
நற்காரியங்கள் செய்ய நல்ல ஓரை, திதி, நக்ஷத்ரம், வேளை அடுத்தபடியாகவும், தேர்ந்து செய்ய வேண்டும்.

பிதுர்க்களின் காலத்தில்
திதியினை பிரதானமாகவும்,நக்ஷத்ரத்தை அடுத்தபடியாகவும் தேர்வு செய்ய வேண்டும்.

சந்தியா காலத்தில்
மனித விருப்பங்கள், கேளிக்கைகள் போன்ற எக்காரியமும் செய்யாது, இறை வழிபாட்டிற்கும், ஜெபம், தவம், போன்றவற்றை மட்டுமே செய்ய வேண்டும்.

நடுப்பகல் சரியாக 12 மணி அல்லது, நடு இரவு சரியாக 12 மணியில் எந்தக் காரியத்தையும் துவங்கவோ, முடிக்கவோ கூடாது.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.